Sunday, November 20, 2022

8ல் குரு மறையலாமா..? பணத்தை தருவாரா..? ஆண் வாரிசை கெடுப்பாரா..?

🍁 8ல் குரு மறையலாமா..? பணத்தை தருவாரா..? ஆண் வாரிசை கெடுப்பாரா..?   🍁 #hazan 

கௌரவம் , அந்தஸ்து , சமுதாயத்தில் மதிப்பாக வைத்து இருப்பது, தன பண சேர்க்கை , அபரிவிதமாக பண புழக்கம், கடவுள் பக்தி , இறைவழிபாடு, புண்ணிய காரியங்கள், பூஜை , கடவுள் அனுகிரகம், ஆண் வாரிசு இவற்றை தருபவர் குரு பகவான். 

இத்தகைய குரு பகவான் 8ல் மறையலாமா..? என்றால் 

"  மறைய கூடாது " 

ஒரு இயற்கை சுபரான குரு 8ல் மறைய கூடாது. மறைந்தால் என்ன பலன் இருக்கும் என்பதை கீழே படியுங்கள். #padmahazan 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

தனக்காரகன் குரு எட்டில் மறைய வருமானம் நேரடியாக ஜாதகருக்கு அமையாது, தூர இடங்களில் இடம் பெயர்ந்து பயணம் போய் சம்பாதிக்கும் சூழலை தரும். பிறந்த இடத்தை விட்டு , பூர்வீக இடத்தை விட்டு வேறு ஊருக்கோ , நாட்டிற்க்கோ நகர்த்தி தனம் பணம் தருவார். 

சொந்த ஊரிலே வசிக்கும்படி அமைந்தால் ஜாதகர் தனது வருமானத்தை fixed deposit, சேமிப்பு கணக்கு , mutual fund, தபால் நிலைய சேமிப்பு , மாதிரியான சேமிப்புகளை வைத்து கொள்வார்கள். 

குரு எட்டில் மறைந்து நட்பு ஆட்சி உச்சம் பெற்றவர்கள் மேலே சொன்ன வகையிலான பணச்சேர்க்கை வைத்து இருப்பார்கள். 

பணம் இருக்கும் ஆனால் ஏதாவது ரசீது மாதிரியான பேப்பராக கையில் வைத்து இருப்பது போன்ற நிலையை 8ல் மறைந்த குரு தருவார்.

8ல் குரு மறைந்தவர்களுக்கு , வீடு வண்டி வாகனம் சுக வாழ்விற்கு எந்த குறையும் வராது. 

8ல் மறைந்த குரு 9 பார்வையால் சுக ஸ்தானத்தை பார்த்து வலுபடுத்துவார். 

ஜாதகருக்கு வீடு சிறிய அளவில் அமைந்தாலும் அதில் ஒரு சுத்தமும் தெய்வீக பொருட்கள் நிறைந்தபடியும், வாகனம் சார்ந்த நிறைவான பலனும் கிடைக்கும். சொகுசு காரகன் சுக்ரன் சுப அமைப்பில் லக்னத்திற்கு மறையாமல் ஆட்சி உச்சம் பெற்றால் இந்த அமைப்பு வீடு வாகன யோகத்தை கூடுதலாக கொடுத்து விடும். #padmahazan 

வீடு வண்டி வாகனம் கல்வி சார்ந்த மேன்மை பலனை ஜாதகர் நல்ல விதமாக பெற்றுவிடுவார். 

பெண்களுக்கு குரு எட்டில் மறைய, பெற்ற மகன் குறிப்பிட்ட வயதுக்கு பிறகு தாயை பிரிந்து வேலை தொழில் காரணமாக வெளிநாடு தூர இடங்களில் சம்பாதித்து தாயாருக்கு அனுப்புவார்கள். மகனுக்கு மறைமுக வருமானம் என்னும் ஷோர் மார்கெட் , சூதாட்டம், போன்றவற்றில் ஆர்வத்தை தரும். 

8ல் குரு மறைந்து நட்பு ஆட்சி உச்சமாக இருந்து தசாவும் வந்துவிட்டது என்றால் கண்டிப்பாக மறைமுக வருமானத்தை குரு தசாவில் தருவார். 

எட்டில் மறைந்த குரு தன பாவகமான குடும்ப ஸ்தானத்தை பார்வையிட்டு குடும்ப வாழ்வில் பிரச்சனை பிரிவு இன்றி நிலையான பணபுழக்கத்தை தருவார். 

அதே நிலையில் 

8 ல் மறைந்த குரு சனி இணைவு இருக்க கூடாது, 

8ல் உள்ள குருவை 2 6 11 மிடத்தில் இருந்து சனி பார்வை செய்ய கூடாது, 

8மிட குருவோடு ராகு இணைய கூடாது, 

8மிட குருவோடு தேய்பிறை சந்திரன் இணைய கூடாது. 

8ல் மறைந்த குரு நீசம் , பகை , சம வலுவில் இருக்க கூடாது. 8 மிடம் என்பதே லக்னத்திற்கு முழுமையாக மறையும் வலுஇழக்கும் நிலை, அங்கே இன்னும் வலு குறைந்த பகை நீசம் சமம் பெறுவது போதுமான குரு பலம் இல்லாத நிலையில் இருப்பார்..

மேலே சொன்ன சனி ராகு தேய்பிறை சந்திர தொடர்பை பெற குரு பாதிப்பார், தனம் சார்ந்த மனநிம்மதி இழப்பது, துக்கம், போதுமான பண வரவு இல்லாமல் இருப்பது போன்ற பலனை தருவார்.
#padmahazan 

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால்... 

மேஷம், கடகம் , சிம்மம், விருச்சிகம் , தனுசு, மீனம் லக்னத்திற்கு குரு 8ல் மறைவது அவ்வளவு சிறப்பு கிடையாது. 

மேலே சொன்ன லக்னங்களுக்கு குரு 1 5 9 என்னும் அந்தஸ்து அதிர்ஷ்டம் பாக்கியம் என்னும் வாழ்விற்கு அடிப்படையான மூன்று முக்கிய ஆதிபத்திற்கு அதிபதியாகி வருவதால், 

லக்னத்திற்கு 8ல் மறைவது சிறப்பு கிடையாது, 

மேஷம் கடக லக்னத்திற்கு 8ல் குரு மறைய தந்தை வழியான ஆதரவு குறைவுபடும், தந்தை வழியான சொத்து சார்ந்த அனுபவிப்பதில் தடை தரும், திருமணம் போன்ற சுப நிகழ்வு நடப்பது சார்ந்த பாதிப்பை தரும், சூரியன் நிலையை பொறுத்து சூரியன் பாதித்தால் தந்தை சிறு வயதில் பிரிந்து வாழ்வது போன்ற பலனை தருவார். 

விருச்சிகம் , சிம்ம லக்னத்திற்கு 8ல் குரு மறைய குலதெய்வ வழிபாடு சார்ந்த பாதிப்பும், அதிர்ஷ்ட குறைவும், குழந்தைகள் சார்ந்த ஆதரவு குறையும் 

இதெல்லாம் பாதித்து, மறைமுக வருமானமான வெளிநாட்டு பணம், சேமிப்பில் வைத்த  பணம் சார்ந்த தன புழக்கத்தை எட்டில் மறைந்த குரு தருவார். 

இன்னும் விளங்க சொல்லபோனால் ஐந்தாம் இடம் என்னும் புத்திர ஸ்தானத்தை ராகு கேது நின்று , ஐந்தாம் அதிபதி பகை நீசம் பெற்று, குருவும் எட்டில் மறைந்தால் ஜாதகருக்கு ஆண் வாரிசு இருக்காது அல்லது இருந்தும் நோய் பாதிப்பு, அல்லது ஜாதகர் உடனான பகை பிரச்சனை தந்துவிடும். 

5 மிடம் நன்றாக உள்ளது, ஐந்தாம் அதிபதி நன்றாக உள்ளார் என்னும் நிலையில் சுப பிரிவாக வேலை தொழில் சார்ந்த பிரிவை எட்டில் மறைந்த சுப நிலையில் உள்ள குரு தருவார். 

அதாவது நெருங்கிய ரத்த சொந்தமான குரு பெறும் ஆதிபத்திய உறவையும் , காரக உறவும் ஜாதகருக்கு போதுமான ஆதரவோ , அருகில் இருந்து அனுசரிக்கும் நிலையோ தராமல் குரு தடுத்து, மற்ற உயிரற்ற ஜடவிஷயங்களான நல்ல தனம் பணம் புழங்கத்தை ஜாதகருக்கு கொடுப்பார். #padmahazan 

குரு என்னும் சுப கிரகம் 1 5 9 ல் இருப்பவர்கள் கொஞ்சம் கூடுதலாக புண்ணியம் செய்தவர்கள். 

அது என்ன மாதிரியான பலனை அந்த கூடுதல் புண்ணியம் தரும்..?  என்பதை அடுத்த பதிவில் தொடர்ந்து எழுதுகிறேன். 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851

Saturday, November 19, 2022

குரு புதன் தொடர்பு பலன்

🍁 புதன் குரு தொடர்பு 🍁 #hazan 

குரு + புதன் 

குரு பார்த்த புதன்

சென்ற பதிவில் புதன் சனி தொடர்பிற்கு உண்டான பலன்களை எழுதி இருந்தேன். இந்த பதிவில் புதன் குரு தொடர்பிற்கு உண்டான பலன்களை கீழே சொல்கிறேன். 

🌿புதனோடு குரு இணைவது , 

🌿குருவின் 5 7 9 பார்வையில் புதன் இருப்பது , 

ஆகிய இரண்டு நிலைகளை பற்றி காண்போம் 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

புத்திக்காரகன் புதன் தனக்காரகன் குருவோடு தொடர்பு பெறும் போது, 

ஜாதகரது புத்திசாலிதனம் முழுவதும் தனச்சேர்க்கை பற்றியே இருக்கும். சிந்தனை எண்ணம் அனைத்துமே பணம் தனம் சேர்ப்பது , சுய மரியாதை , பிறர் ஜாதகர் மீது வைக்கும் அந்தஸ்து , ஒழுக்கமான வாழ்வை பற்றியே இருக்கும். 

பணம் சேர்க்கும் திட்டங்களை அதிகபடியாக ஜாதகர் போட்டு வைப்பார். #padmahazan 

புத்திசாலி தனம் முழுவதும் நல்ல விதமாக யாருக்கும் பாதகமோ கெடுதலோ இல்லாதபடி இருக்கும். சுயநலம் இல்லாத பொதுநலத்துடன் கூடிய புத்திசாலி தனம் ஜாதகரிடம் வெளிப்படும். 

இவர்களுக்கு ஜோதிடம் , பூஜை, ப்ரோகிதம்,  சாஸ்திரம், இதிகாசம் , புராணம் , கீர்த்தனை , காயத்ரி மந்திரம், உபாசனை போன்றவை எளிதில் கைகூடும், அவற்றின் மீதான ஆர்வமும் கூடுதலாக அமைந்துவிடும். லக்ன ராசிக்கு ஒன்பதாம் பாவகத்தோடு குரு புதன் இணைவது , குருவோ புதனோ 9 அதிபதி ஆக இருந்து இணைந்து விட்டால் கண்டிப்பாக மேலே சொன்ன ஒன்றில் ஆர்வம் அதிகம் இருக்கும். 

ஜாதகரது பேச்சு, எழுத்து , படைப்பாற்றல் அனைத்தும் உயர்நிலை மக்களால் போற்றபடும், 

பேச்சில் தெய்வீகம் , மரியாதையான வார்த்தைகள் வெளிபடும்.  வாக்கு ஸ்தானம் பாதிக்காத வரை உண்மை மட்டுமே பேசி , பொய் பேசாத குணத்தை கொண்டு இருப்பார்.  #padmahazan 

கோவில் அர்ச்சகர், பூசாரி, கோவில் சம்மந்தப்பட்ட பணி செய்பவர்கள், உயர்நிலை பொறுப்பு வகிப்பவர்கள், ஆலோசனை தரும் நிலையில் உள்ளவர்கள், ஆசிரியர்கள் , வங்கி பணியாளர், வட்டி தொழில் சார்ந்த நண்பர்களை ஜாதகர் பெற்று இருப்பார். நல்ல முறையான நட்பை மரியாதை நிமித்தமாக எளிதில் பெற்றுவிடுவார்கள். 

இவர்களது பேச்சு இயல்பாகவே மற்றவர்களை வாழ்வில் வழிகாட்டும் விதமாகவே இருக்கும், பண்பான வார்த்தைகளால் மற்றவர்களை தன் வசபடுத்தி , தான் சொல்வதை கேட்டால் நல்ல எதிர்காலம் உண்டு என்பதை உணர வைப்பார்கள். 

ஆலோசனை கொடுத்து வழிகாட்டும் விதமாகவே இவர்களது பேச்சும் எழுத்தும் சிந்தனையும் அமையும். #padmahazan 

நண்பர்களாலும் , தாய்மாமனாலும் தன பணம் ஆதரவை பெறுபவர்களாக இருப்பார்கள். 

வியாபார ரீதியிலான வர்த்தகம் நியாயமானதாக அமைத்து கொள்வார்கள், மற்றவர்களது பணம் எனக்கு எதற்கு..? என்று நியாயமான வியாபார யுக்தியை கையாண்டு, நல்ல வாடிக்கையாளர் பெற்று தொழில் வர்த்தக ரீதியாக நல்ல பெயரினை எடுப்பார்கள். 

வங்கி சார்ந்த money management, audit, account, financial management, business guidance, சார்ந்த படிப்பில் ஆர்வமாக இருப்பார்கள். 

பள்ளி கல்லூரி அனைத்திலும் ஆசிரியர்களுக்கு பிடித்த மாணவ மணியாக விளங்குவார்கள் , படிப்பில் கெட்டியாக அதிகபடியான புரிதலை பிறர் துணையின்றி புரிந்து கொள்வார்கள். #padmahazan 

சிலருக்கு ஜோதிடம் , மந்திர சாஸ்திரம், உபாசனை போன்றவற்றை பிறருக்கு கற்று கொடுக்கும் நிலையும் தரும் 

🌿 புதன் குருவால் பார்க்கபடுவது  🌿

புதனோடு குரு இணைவதை விட , குருவால் பார்க்கபட்ட புதன் மேம்பட்ட பலனை தருவார், 

இவர்களது படைப்பாற்றல் , பேச்சு திறன் பலரால் எளிதில் அங்கீகரிக்கப்படும், 

இவர்களது படிப்பு , எதிர்காலம் சார்ந்த தன சேர்க்கை மீதான தெளிவான திட்டத்தை போட்டு வைத்து கொண்டே வாழ்வில் பணம் சேமிப்பார்கள். 
வரவு செலவு கணக்குகளை நேர்த்தியாக கையாண்டு, ஒரு பைசா கூட எங்கே போகிறது வருகிறது என்று கவனிப்பார்கள். கஞ்ச தன்மை வெளிபடாது , ஆயினும் பணம் சார்ந்த நிர்வாகம் சிறப்பாக இருக்கும். #padmahazan 

இவர்கள் பேசும் போது பிறர் , கேட்பவர்கள் வயதில் மூத்தவராகவே இருந்தாலும் மற்றவர்கள் ஏற்று கொள்வார்கள். இவர்கள் சொன்னால் சரியாக இருக்கும் என்ற பேச்சுக்கு மரியாதை கிடைக்கும். 

ஒரு கடுமையான சண்டைக்காரரிடம் கூட பேசி தன் கருத்தை புரிய வைத்துவிடுவதில் வல்லவர்கள் புதன் குரு தொடர்பு பெற்றவர்கள். 

புத்தக வாசிப்பு, புத்தகம் சேமித்து வைப்பது, புத்தகங்களுக்கு அதிகபடியாக செலவு செய்வது, புத்தகங்களை பிறருக்கு தானமாக கொடுப்பது, புத்தகங்கள் மீதான மரியாதை அதிகபடியாக கொண்டு இருப்பார்கள்.

கடவுளுக்கு நிகரான பக்தியை இவர்கள் படிப்பு, வாசிப்பு, படைப்பாற்றலுக்கு தருவார்கள். 

இன்னும் விளக்கமாக சொல்லபோனால் புத்திசாலி தனமும் படிப்பும் தரும் சரஸ்வதி  புதனும் , தனத்தை தரும் லெக்ஷ்மி குருவும் இணைந்து இருப்பது, சரஸ்வதியும் லெக்ஷ்மி இணைந்து ஜாதகருக்கு அருள் தருவதை போல சிறப்பான பலனை தரும். #padmahazan 

முழுச்சுபரான குருவும் , சுபரோடு இணைந்த போது சுபராகும் புதனும் இணையும் போது, 

குரு மற்றும் புதன் இருவருமே மேம்பட்ட , படிப்பு புத்திசாலிதனம் வியாபாரம் வழியாக உண்டாகும் தனபண சேர்க்கை கௌரவம் அனைத்தும் சுபமாக அமையும் யோகத்தை தருவார்கள். 

💥💥💥💥💥💥🙂🙂🙂💥💥💥💥💥💥💥

சென்ற புதன் சனி தொடர்பு பற்றிய பதிவு என் ஐடியில் இருக்கும் , படிக்க விருப்பம் உள்ளவர்கள் அவற்றை படித்து கொள்ளலாம்...

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851

Thursday, November 17, 2022

புதன் சனி தொடர்பு

🍁 புதன் சனி தொடர்பு 🍁 #hazan

சனி புதன் இணைவு

சனியின் 3 10 பார்வையில் புதனை இருப்பது,

புதன் சனியை பார்ப்பது, போன்றவற்றிற்கான பலனை பதிவில் காண்போம்.

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851

🌿புதன் சனி இணைவு 🌿

புத்திக்காரகன் புதனும் , கர்ம காரகன் சனியும் நேரடியாக இணைவில் இருக்கும் போது,

ஜாதகரது புத்திசாலிதனம் நிதானத்தை பெற்றுவிடும், மற்றவர்களை விட மெதுவான முடிவுகளை எடுப்பது , கணித திறன் , படிப்பு போன்றவற்றில் ஜாதகர் நிதானத்தையும் பொறுமையையும் கையாளுவார்.

புதன் சனி இணைவை பெற்றவர்கள் கற்பூரம் போல உடனே புரிந்து கொள்ள முடியாமல் போகும் ஆனால் படித்தவற்றை எளிதில் மறக்கமாட்டார்கள். #padmahazan

இவர்களுக்கு படிப்பறிவை விட அனுபவ அறிவு அதிகபடியாக செயல்படும்.

அன்றாடம் நடக்கும் அனுபவங்களில் இருந்து நிச்சயமாக ஒன்றை கற்று கொள்வார்கள்.

நடக்கும் எந்த ஓர் நிகழ்விலும் அனுபவத்தை சேர்த்து வைப்பார்கள். அதன் மூலம் பிறருக்கு பல வழிகாட்டல்களை தருவார்கள்.

புதன் சனி இணைவை பெற்றவர்கள் தம்பி இதை பண்ணுப்பா... எனக்கு இப்படிதான் நடந்தது , நான் இப்படிதான் இந்த வேலையை முடித்தேன் என்று தனக்கு நடப்பதை வைத்து மற்றவர்களுக்கு ஒரு வாய்ப்பை கொடுப்பார்கள்.

நிதானமான படித்தாலும் , கருத்தை அர்த்தத்தை முழுமையாக புரிந்து கொண்டு வருவார்கள்.

உங்கள் குழந்தைகளுக்கு புதன் சனி இணைவு இருந்தால் , மற்ற குழந்தைகளை படிக்கவில்லையே என்ற ஓப்பிட்டு பார்க்க கூடாது, புதன் சனி இணைவு என்றாலே படிப்பது, படிப்பு சார்ந்த வேலைகளை தாமதமாக முடிப்பார்கள். அவர்களிடத்தில் வேகத்தை எதிர்பார்க்க கூடாது.

தாவரவியல், வேளாண்மை படிப்பு, புவியியல், இயந்திரவியல் , பௌதிகம் (இயற்பியல்) , நவீன வேளாண்மை படிப்பு , மகசூல் சார்ந்த ஆராய்ச்சி படிப்பு , political science, economics சார்ந்த படிப்பில் ஆர்வம் இருக்கும்.

வேறு துறையில் இருந்தாலும் கூட மேலே சொன்னவற்றில் தனிபட்ட ஆர்வம் எப்போதும் இருக்கும்.

நிதானத்தை வெளிபடுத்தி பல கோணங்களில் யோசித்து திறமையை காட்டும் கேரம் போர்ட் , செஸ் போர்டு போன்ற விளையாட்டுகளில் அபாரமான நுணுக்கங்களை கற்று வைத்து இருப்பார்கள்.

இவரது பேச்சும், எழுத்தும் கதை கவிதைகள் போன்றவை வெகுஜன மக்களால் உடனடியாக ஏற்று கொள்ள கூடிய விதமாக இருக்கும் , மக்களால் ஆதரிக்க படும் விதமாக அமையும்.

புதன் சனி இணைவை பெற்றவர்கள் பொய்யை கூட நம்பவைத்துவிடும் கில்லாடிகள். #padmahazan

வாழ்விலும் இவர்களது செயல்பாடுகள் இது போல நுணுக்கங்களான முடிவுகளை நிதானமான கையாண்டு வெற்றி பெறுவார்கள்.

இவர்கள் சொந்தமாக தொழில் நடத்தும் சூழல் உண்டாகும் போது அதில் புதுமைகளை கொண்டுவருவாங்க,

வருமானம் சார்ந்த முடிவுகளில் மற்றவர்களை விட வித்தியாசமான சிந்தனை பெற்று இருப்பார்கள்.

தன்னை விட வயதில் மூத்த நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவதில் அதிக விருப்பம் கொண்டு இருப்பார்கள்.

இவர்களது நட்புக்கள் பெரும்பாலும் தொழில் வருமானம் சார்ந்து இருக்கும், நட்பில் பேசும் போதும் இதையே அதிகபடியாக பேசுவார்கள்.

🌿அடுத்ததாக புதனை சனி பார்ப்பதற்கான பலனை காண்போம்.🌿

சனியின் 3 10 பார்வை புதன் மீது இருப்பது என்பது சரியான நல்ல பலனை தராது.

இங்கே புதனின் செயல்பாடுகள் சனி பார்வையால் முடக்கபடும்.

பார்க்கும் சனியின் வலு ஏற்ப படிப்பில் தடை அல்லது படிப்பு மீதான ஆர்வம் இன்மை, போதுமான நினைவுபடுத்தும் திறன் இன்றி மறந்து போகும் நிலை தரும்.

தாய்மாமன் நண்பர்களால் மன அழுத்தம் உண்டாவது, இவர்களால் ஜாதகரது படிப்பும் சிந்தனையும் பாதிக்கபட்டு இருப்பது,

பேப்பர் சம்மந்தப்பட்ட documents, check, DD , ரசீது சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வருவது போன்ற பலன் நடக்கும்.

சிலருக்கு பேச்சில் உறுதி இல்லாமல் , பயந்து பயந்து பேசும் விதமான படபடப்பு தனத்தை கொடுத்துவிடும்.

🌿சனியும் புதனும் நேருக்கு நேராக பார்த்து கொள்ளும் நிலையில் ...🌿

ஜாதகரது பேச்சு சிந்தனை அனைத்தும் சனி கட்டுபடுத்துவார், இங்கே சனி வக்ரமாக தான் புதனை பார்ப்பார்,

ஜாதகரது பேச்சு, படைப்பாற்றல் , சிந்தனை , புத்திசாலி தனம் அனைத்தும் தன்னுடைய சுய தேவையை பூர்த்தி செய்து கொள்ளும் விதமாகவே இருக்கும்.
#padmahazan
அளவுக்கு அதிகபடியான சாதுர்ய பேச்சு , சூட்சம எண்ணத்தை கொடுத்து மற்றவர்களை விட இவரது பேச்சும் புத்தியும் மற்றவர்களை விட தனித்துவமாக வெளிபடும்.

தொழில் வருமான ரீதியாக பலரது நட்பு கிடைக்கும்,

இவர்களது பேச்சு வாடிக்கையாளரையும் சக வியாபாரிகளையும் கவர்ந்து இழுக்கும்.

படிக்கும் பட்டபடிப்பை விட சொந்த தொழில் வருமானத்திற்கு இது மிகவும் ஏற்ற கிரக நிலை.

சிலருக்கு மிக அரிதாக காது , தொண்டை , கழுத்து , நரம்பு மண்டலம்  சார்ந்த குறைபாடு அல்லது பாதிப்பை தந்துவிடும். #padmahazan

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851



Wednesday, November 16, 2022

ரயில்வே அரசு பணிக்கான சூரியன் மற்றும் சனி வலு

🍁 அரசு பணிக்கான சூரியன் வலு 🍁 #hazan 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

நேற்று என் பதிவில் அரசு பணிக்கான கடைநிலை ஊழியராக இருப்பதற்கான சூரியனின் வலு பற்றிய பதிவில் ஒரு உதாரணமாக சிலவற்றை விளக்கி இருந்தேன். 

இன்று ரயில்வே துறையில் அலுவலக பணியில் ஆபிசர் ஆக இருக்க கூடிய ஒரு ஜாதக அமைப்பை உதாரணமாக காண்போம். 

கீழே கொடுக்கபட்டுள்ள கிரக அமைப்பில்...


தனுசு லக்னமும் விருச்சிக ராசியிலும் ஜாதகர் பிறந்து உள்ளார். 

அரசு பணிக்கான காரக கிரகம் ஆட்சி பெற்று லக்னத்தின் பாக்கிய ஸ்தானத்தில் வலுபெற்று உள்ளார்.

கூடுதலாக இங்கே குருவும் இணைந்து சூரியனும் சிம்மமும் கூடுதலாக சுபத்துவபடுத்தபட்ட கிரக நிலையாக உள்ளது.

அதே சிம்ம பாவகம் விருச்சிக ராசிக்கு கர்ம ஸ்தானம் பத்தாம் இடமாகி அங்கே சூரியனும் குருவும்.... #padmahazan 

குறிப்பாக இங்கே குரு அஸ்தங்க படாமல் உள்ளார். தானும் கெடாமல் உள்ளது. 

ராசிக்கு பத்தில் சூரியன் ஆட்சி பெற்று அரசு வேலையை தந்து உள்ளது. 

லக்னத்திற்கு பத்தில் சனி அவருக்கு மிகவும் பிடித்த கன்னி வீட்டில் உள்ளார். 

அந்த சனி பத்தில் இருப்பதாலேயே ஜாதகர் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் அலுவலராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கு சரியாக மத்திம வயதில் தனுசு லக்னத்திற்கு ஆறாம் அதிபதியான வேலையை தரும் சுக்ர தசா வந்ததாலும், சூரியன் நன்றாக இருப்பதாலும், மிக முக்கியமாக லக்னாதிபதி நட்பு வீட்டில் இருந்து குரு தன் வீட்டை தானே பார்த்து லக்னத்தை வலுபடுத்துவதாலும், வேலை கொடுத்து சிறப்பான ஒர் இடத்தில் வைத்து உள்ளது. 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

#padmahazan 

அரசு பணிக்கான சூரியன் வலு

🍁 அரசு பணிக்கான சூரியன் வலு 🍁 #hazan 



PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

மத்திய அரசு ஊழியர்களது குறிப்பாக ரயில்வே துறை கடைநிலை ஊழியர் முதல் அலுவலக ஆபிசர் வரை சிலரது ஜாதகங்கள் பார்க்கும் வாய்ப்பை காலம் எனக்கு ஏற்படுத்தி கொடுத்துள்ளது. 

அதனால் அவர்களது ஜாதகத்தில் சூரியன் வலு எத்தகைய நிலையில் இருக்கும் என்பதை நன்கு அறிவேன். 

அதிலிருந்து ஒரு உதாரணமாக ஒரு கிரக அமைப்பு... 


அரச கிரகமான சூரியன் நீசமாகி வலுஇழந்து உள்ளார் , ஆயினும்,

1). புதனை அஸ்தங்க படுத்தி தன் அரை பாவர் நிலையில் பாவி நிலையை கடந்து உள்ளார், சூரியன் சுப நிலையில் உள்ளார்.

2). சூரியனுக்கு வீடு கொடுத்த சுக்ரனும் செவ்வாயும் பரிவர்த்தனையாக உள்ளார். மறைமுகமாக சூரிய நீசபங்கத்தை பெறுகிறார். 

இந்த வலுஇழந்த நீச சூரியனுக்கு இந்த 2 நிலைகளே போதும், கடைநிலை அரசு பணியில் பணியாற்றுவதற்கு, 

அதற்கு பின் 6 10 மிட வலு, தசா புத்தி ஏற்ப இந்த சூரியன் அரசு பணிக்கு ஜாதகரை தயார்படுத்தி சம்மந்தப்பட்ட தசா புத்தி காலத்தில் வேலையை தருவார்.

பின்குறிப்பு : 

கடைநிலை பணிக்கு இந்த வலு போதும், ஆபிசர் ஆவதற்கு இதைவிட மேம்பட்ட சூரியன் மற்றும் லக்ன வலு தேவை. 

இன்னும் சொல்ல போனால் சூரியன் ஆட்சி உச்சம் பெற்றவர் கூட வெளியே வேலைக்கு வருமானம் இன்றி இருப்பார்கள், கீழே உள்ள நீசபங்கம் பெற்ற சூரியன் ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைக்காத என்ற ஆவலை ஜாதகருக்கு கொடுத்து, அரசுபணியில் அமர வைத்து விடும். 

நீசம் _ தேடல் 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

#padmahazan


Saturday, November 12, 2022

உச்ச கிரகம் எப்போது பலன் தராது

🍁 உச்ச கிரகம் எப்போது தனது உச்ச பலனை தராமல் போகும்..? 🍁 #hazan 

ஒரு கிரகம் உச்சம் பெறுகிறது என்றால் அந்த கிரகம் தான் தர வேண்டிய விஷயத்தை அளவிற்கு அதிகமாக ஜாதகருக்கு கொடுக்க உள்ளது என்பது அர்த்தம். நல்ல பலனோ கெட்ட பலனோ அதிகமாக உச்ச கிரகம் கொடுக்கும். #padmahazan 


அப்படி உச்ச வலுபெற்ற கிரகம் தான் தர வேண்டிய உச்ச பலனை கீழ்கண்ட கிரக அமைப்பில் இழக்கும். நீச கிரகத்தோடு மிக நெருக்கமாக இணைவது, ராகு சனி இணைவு பார்வையில் இருப்பது, அமாவசை சந்திரன் இணைவில் இருப்பது, சூரியனால் அஸ்தங்கம் பெற்று இருக்கும் நிலைகளில் உச்சன் தனது உச்சபலனை பிற கிரகங்களால் இழப்பார்கள். 


கீழே உள்ள ஜாதகர் கடக லக்னம் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்து உள்ளார். தற்போது உச்ச சுக்ர தசா நடப்பில், சுக்ரன் உச்சமாக தோன்றினாலும் நீச புதனோடும், அமாவசை நெருங்கும் சந்திரனோடும் ஒரே டிகிரிகுள் இணைந்து உள்ளார். சுக் சந் புத 14° டிகிரியில். சுக்ரன் பாவரான தேய்பிறை சந்திரனாலும், நீச புதனுக்கு நீசபங்கத்தை கொடுத்தும் தனது உச்ச பலத்தை இழக்கிறார். 

ஜாதகருக்கு சுக்ர தசா சாதாரண ஒரு தசாவாக செயல்படுகிறது. உச்ச சுக்ரன் தரும் ஆடம்பர வீடு, வண்டி, பெண்களால் யோகம் போன்றவை நடப்பில் இல்லை. சுக்ரனுக்கு வீடு கொடுத்த குருவும நீசமாகி நீசனுக்கு வக்ர சனி பார்வையில்.

வீடு கொடுத்தவன் நீசமாகி பாவத்துவம் பெற்று, கடும் பாவியான அமாவசை நெருங்கும் சந்திரன் மற்றும் புதனை சுபத்துவமும் நீசபங்கராஜயோகத்தை கொடுத்த சுக்ரன் தனது வலுவை இழந்து உள்ளார்.

இது போன்ற நிலைகளில் உச்ச கிரகங்கள் தனது உச்ச பலனை பிற கிரகங்களால் இழந்து இருக்கும்.

🤩 #padmahazan 🤩 #உச்சன் #உச்சம் #சுக்ரன் #புதன் #சந்திரன்

குழந்தை பாக்கியம்

🍁 பூர்வபுண்ணியாதிபதி என்னும் 5ம் அதிபதி தரும் குழந்தை பாக்கியம்🍁 #hazan 

எந்த லக்னத்திற்கும் 5ம் அதிபதி லக்னாதிபதிக்கு நட்பு கிரகமாகவே இருக்கும். கஷ்டத்தில் நண்பன் உதவுவது போல லக்னாதிபதியின் நட்பு கிரகமான ஐந்தாம் அதிபதி ஜாதகரை காப்பாற்றும் உறுதுணையாகவே இருப்பார். 

ஐந்தாம் அதிபதி ஒருவரது கடந்த ஜென்ம சுப அசுப நிகழ்வு காரணமாக சேர்த்த பூர்வ புண்ணியத்தின் அளவை குறிப்பார். 

முதல் குழந்தை, ஆண் குழந்தையினால் உண்டாகும் ஆதரவு, வாரிசால் உண்டாகும் பெயர் புகழ் ஜாதகருக்கு எவ்வளவு உண்டாகும் என்பதை குறிக்கும் இடம் ஐந்தாம் இடம். 

ஒருவரது சிந்தனை யோசனை எது மாதிரியாக இருக்கும், பிறரை பற்றிய சிந்தனை கெடுதலாக உள்ளதா நல்லபடியாக என்பதை காட்டுவதும் இதே ஐந்தாம் இடம் மற்றும் அதன் அதிபதியே. #padmahazan 

பூர்வ புண்ணியத்தில் சேர்த்த சுப பலனாக தற்போதைய வாழ்வில் அதிர்ஷ்டமாக இருக்குமா அல்லது பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு பெறுவாரா என்பதை குறிப்பதும் பூர்வ புண்ணியாதிபதியே. 

பொதுவாக ஐந்தில் சுபர்களாக குரு சுக்ரன் புதன் சுபர் சந்திரன் (லக்னத்திற்கு ஏற்ப) ஆட்சி உச்சம் பெறுவது நல்லது. ஆனால் இவர்களோடு சனி ராகு சேர்க்கை பார்வை பெற கூடாது. #padmahazan 

அதே சமயம் 5ம் அதிபதி பாவர்களான சனி செவ்வாய் வரும் போது ஆட்சி பெறாமல் வேறு பாவத்தில் உச்சம் பெறுவது அல்லது நட்பு வலுவோடு அமைவது யோகத்தை தரும். சனி செவ் நின்ற வீடடை கெடுப்பார்கள் என்ற விதிபடி ஐந்தாம் இடத்தை கெடுப்பது ஜாதகருக்கு வாழ்வில் போராட்டத்தை தரும். 

ஐந்தில் குரு சுக்ரன் புதன் இணைந்து இருப்பது பார்ப்பது மிக யோகமான குழந்தை பாக்கியமும் அதிர்ஷ்டமும் பெறுவார்கள். #padmahazan 

ஐந்தில் சனி செவ் ராகு இணைவது பார்ப்பது போன்ற நிலையில் தாமத குழந்தை பாக்கியம் அல்லது குழந்தைகளால் ஆதரவு இல்லாத நிலை போன்ற பலன்கள் இருக்கும். 

ஐந்தாம் அதிபதி எப்போதும் நீசம் ஆக கூடாது, நீசபங்கம் பெற்றால் ஓரளவு நல்ல பலன் இருக்கும். #padmahazan 

அஸ்தங்கம் ராகுவால் கிரகணம் போன்ற நிலையில் இருக்கும் ஐந்தாம் அதிபதி குழந்தை விஷயத்தில் சாதகமற்ற பலனை தருவார்கள். 

5மாதி உச்சம் பெற்றவர்கள் அந்த தசா புத்தி காலத்தில் நன்றாக இருப்பார்கள். நினைத்தது நடக்கும். 

ஐந்தாம் இடம், ஐந்தாம் அதிபதி, குரு என மூன்று நிலையும் ஒரு சேர கெடும் போது குழந்தை பாக்கியம் தடைபடும், இந்த மூன்றும் பலமாக இருக்கும் போது காலத்திலேயே குழந்தை பெற்று அவர்களால் ஆதரவும் பெயர் புகழும் கிடைக்கும். 

🤩 #padmahazan 🤩 #குரு #சுக்ரன் #புதன் #ஐந்தாம்அதிபதி #குழந்தை #பாக்கியம் #சனி #ராகு #கேது

பங்குசந்தை நஷ்டத்தால் கோடிகளில் கடன் கொடுத்த கிரக அமைப்பு

🍁 பங்கு சந்தையில் நஷ்டமாகும் அமைப்பு _ பங்கு சந்தையால் கடன் 10 கோடி பெற்ற ஜாதகம் 🍁 #hazan 

கடந்த முறை பங்குசந்தையில் லாபத்தை பெறும் கிரக அமைப்பை பற்றி எழுதிய பதிவில் அதே பங்கு சந்தையால் நஷ்டமடையும் ஜாதகத்தையும் எழுதுங்க அப்படி என்று பலர் கேட்டு இருந்தீர்கள். இதோ... 

பங்கு சந்தையில் லாபத்தை பெறுவதற்கு 8 12 6 பாவகங்கள் சுப அமைப்பில் தொடர்பு பெற்று சம்மந்தப்பட்ட தசா நடக்கும் போது லாபத்தை பெறலாம். இங்கே 8 12 6 என்ற பாவகங்களில் ஒன்று பாதிக்கும் போது பங்கு சந்தை லாபத்தை தராமல் பெரும் வீழ்ச்சியை தந்து போகும். உதாரண ஜாதகத்தை பாருங்கள். 


இந்த ஜாதகர் மீன லக்னத்தில் பிறந்து லக்னாதிபதியான குரு ஆறில் நட்பு வலுவோடு மறைந்து , 12ல் சஷ்டி திதி அவிட்ட சந்திரன் இருவரும் நேருக்கு நேராக பார்த்து 6 12 பாவகங்களை வலுபடுத்துகின்றனர். 
#padmahazan 

அதே சமயம் பங்கு சந்தைக்கு முக்கியமான 8ம் பாவகத்தை ஆட்சி வக்ரம் பெற்ற சனியும், ஆட்சி பெற்ற செவ்வாயும் ஒரு சேர பார்த்து எட்டாம் இடத்தை வலுஇழக்க வைக்கின்றனர். செவ்வாய்க்கு இங்கே குரு பார்வை இருந்தாலும் அது பங்கு சந்தை ஆர்வத்தை கொடுக்கிறது ஆனால் சனி பார்வை இங்கே 8ல் இருக்க கூடாது. 8ம் இடம் கெட்டு 6 12 வலுத்த அமைப்பில் உள்ளது. 

நடப்பில் இவருக்கு குரு தசா நடக்கிறது. லக்னாதிபதி ஆறில் இருக்கும் 8ம் அதிபதி சுக்ர சாரத்தில் 12 பாவகத்தோடு தொடர்பில் உள்ளார். புத்தி நாதன் விரைய நஷ்ட பாவகத்தில் உள்ளார். 8 12 தொடர்பு கொண்டதால் வெளிநாட்டில் வாழ்ந்து வருகிறார். #padmahazan 

குரு தசா சந்திர புத்தியில் இவருக்கு பங்கு சந்தை வீழ்ச்சியால் 10 கோடி கடனை கொடுத்து இருந்தது. தற்போது செவ்வாய் புத்தி இவருக்கு கடுமையான பண நெருக்கடியை தந்து கொண்டு உள்ளது. அடுத்து ஜென்ம சனியும் வர உள்ளது. 

பங்கு சந்தை என்பது "இருமுனை கூர் கொண்ட கத்தி" . கையாளுவது சவாலான விஷயம். தசா புத்தி கிரக அமைப்பு நன்றாக இருக்கும் பட்சத்தில் யோகமாக இருக்கும். 

#padmahazan #குரு #சந்திரன் #சூரியன் #சுக்ரன் #சனி #செவ்வாய் #பங்குசந்தை #கடன்

குரு சனி தொடர்பு தாமத திருமணமும் புத்திர பாக்கியமும்

🍁 குரு சனி தொடர்பு 🍁 #hazan 

தற்போது கொஞ்சம் பரபரப்பாக முன்பை விட அதிக எண்ணிக்கையிலான ஜாதகங்களை பலன் சொல்லி வருவதால் சில கிரக அமைப்பை நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது.

திருமணம் ஆகவில்லை எப்போது நடக்கும்..? குழந்தை பாக்கியம் எப்போது கிடைக்கும்..? மணவாழ்க்கை பிரிவு எப்போது சரியாகும்..? என்ற கேள்வியை ஜாதகர் கேட்ட உடனே ஜாதகத்தில் குருவைதான் தேடுவேன். குரு பின்வரும் நிலைகளில் இருப்பார்....

1). 1980 ஆண்டுகளில் கன்னி ராசியில் நடந்த குரு சனி இணைவு. ஜாதகருக்கு 40 வயதாலும் திருமணம் சந்ததி விருத்தி குழந்தை விஷயத்தில் தடை தந்து இருக்கும்.

2). 1983 ஆண்டுகளில் துலாத்தில் சனி உச்சமாகி தனுசில் இருக்கும் குருவை தனது மூன்றாம் பார்வையில் கிடுக்குபிடியாக பார்த்து இருப்பார் சனி. இந்த சேர்க்கை கூட அவ்வளவு மோசமானது இல்லை. குரு ஆட்சியாகி இருப்பதால் தர வேண்டியதை சிறு குறையோடு தந்து இருப்பார். 

3). 1985 ஆண்டுகளில் குரு மகரத்தில் நீசமாகி பின் விருச்சிக சனியின் மூன்றாம் பார்வையில் இருப்பது மேலே சொன்னதை விட சற்று கூடுதலான ஆகாத அமைப்பில் இருக்கும். 

இந்த மூன்று நிலைகளில் லக்னத்திற்கு ஐந்து ஏழாம் இட வலுவிற்கு ஏற்ப சில ஜாதகர்களுக்கு இன்றளவும் தசா புத்தி ஏற்ப பிரச்சனை ஆக இருப்பது இந்த குரு சனி தொடர்பாக இருக்கும்.

தாமத திருமணம் குழந்தை பாக்கியம் அல்லது மணவாழ்க்கை பிரச்சனை தருவது இந்த சேர்க்கை பெற்றவர்களே. அதே சமயம் செய்யும் தொழிலில் அளவு கடந்த மேன்மை பெறுபவர்களும் இதே கிரக சேர்க்கை பெற்றவர்களே.

ஒன்று இருந்தால் ஒன்று இருக்காது. அதுதான் வாழ்க்கை. 

#padmahazan #குரு #சனி #மகரம் #துலாம்

சுயநலம் தரும் கிரகங்கள்

🍁 சுய நலம் தரும் கிரகங்கள் 🍁#hazan 

சுயநலம் என்பது தன்னுடைய நலனிற்காக ஒன்றை செய்வது அல்லது தன் நலத்தை மட்டுமே கருத்தில் கொண்டு ஒரு செயலை செய்வது சுற்றி இருப்பவர்கள் பற்றி கவலை படாமல் இருப்பது சுயநலம் 

எவன் எக்கேடு கெட்டா என்ன..? என்பது ஒரு வகை. யாருக்கோ ஏதோ நடக்குது.நமக்கு என்ன? அப்படின்கிறது மற்றொரு வகை. இந்த வித்தியாசம் நன்றாக புரிந்து கொள்வது அவசியம். 

சனி முதன்மை சுயநலமான கிரகம். பிற சுப தொடர்பு இல்லாத வரை அதிகப்படியான சுயநலத்தை தரும். தனக்கு ஆதாயம் வந்தால் மட்டுமே களத்தில் இறங்கி வேலை பார்க்கும் தன்மை தருவது சனி. சுப தொடர்பு பெறும் போது தன் சுயநலத்தை அந்த சுப கிரக வலு ஏற்ப குறைத்து கொள்வார். #padmahazan 

அதனை அடுத்து புதன். புதன் பெயரை பதிவில் பார்த்ததுமே நிறைய பேருக்கு நிச்சயமாக நமட்டு சிரிப்பு வந்து இருக்கும். புதனை பற்றி சொல்லவே வேண்டாம் வியாபாரி தரகர் ஆதாயம் வந்தால் மட்டுமே கைமாற்றி விடுவார். இந்த ஒரு காரகமே போதும். படித்த புத்திசாலியை விட மிக ஆபத்தான ஒரு நபர் யாராகவும் இருக்க முடியாது. புதனை சனி மற்றும் ராகு தொடர்பை ஒரு சேர பெற சுயநலமும் திருட்டு எண்ணமும் மேலோங்கும். 

அதனை அடுத்து சுக்ரன் தான் நன்றாக இருக்கனும் வசதியாக இருக்கனும் என்ற ஒரு விதமான அரை குறை சுயநலம் தருவது சுக்ரன். துணிக்கடை நடத்துபவர்கள் தள்ளுபடி என்ற விதத்தில் விலையை ஏற்றி இறக்கி அடக்கவிலையை விட கூடுதலாக விற்பது சொந்த வீடு வேலை நகை போனறவை மணமக்கள் இடையே சுக்ரன் தரும் அறைகுறை சுயநலம் ஆகும். #padmahazan 

குரு செவ் சூரியன் வளர்பிறை சந்திரன் போன்றவர்களை ஏன் சொல்லவில்லை என்றால் இவர்களுக்கு இயல்பியே பொது நலன் அதிகம் உண்டு. ஏற்ற இறக்கம் இருந்தாலும் பொது நல விரும்பிகளே. 

குரு வழிகாட்டி ஆசிரியர் பொதுநலன் செவ் போலிஸ் ரானுவ வீரர் பொதுநலத்திற்கு தன்னை அர்பணிப்பது. சூரியன் அரசியல் உயர் அதிகாரிகள் அரசியல் உயர் தலைவர்கள் அதிகப்படியான மன அழுத்தத்தை கடந்து அந்த இடத்தில் பொது நலத்திற்காக பணியாற்று வருவார்கள். 

🤩 #padmahazan 🤩 #குரு #சுக்ரன் #புதன் #செவ்வாய் #சூரியன் #சனி

தலைமுறை தலைமுறையாக கௌரவமாக வாழும் கிரக அமைப்பு

🍁 தலைமுறை தலைமுறையாக கௌரவமாக வாழும் கிரக அமைப்பு சிறப்பு பதிவு 🍁 #hazan 

எல்லா ஊரிலும் சிலர் இருப்பார்கள் பாட்டன் விவசாயத்தை பார்த்து சுற்றி இருப்பவர்களிடம் வேலை கொடுத்து ஊரில் மதிக்கதக்க நபராக இருந்து தன் மகனை படிக்க வைப்பார், 

அந்த மகன் படித்து அரசு வேலை அல்லது தொழில் தொடங்கியோ நல்ல அந்தஸ்தை பெற்று 

அவருக்கு பிறந்த மகன் அப்பா தாத்தா வை போல தானும் ஒரு துறையில் மருத்துவராகவோ அதிகாரம் செய்யும் உயர் பணியோ அல்லது அரசியல் தலைவராகவோ வந்து 

அவருக்கு பிறந்த மகனை தனது தந்தை தாத்தா பாட்டனை போல விளங்க வளர்த்து கொடுப்பார். #padmahazan 

அதாவது 4 அல்லது 5 தலைமுறையாக கௌரவமாக வாழ்ந்து வருபவராக இவர்களது தலைமுறை இருக்கும். 


இது போன்ற தலைமுறை தலைமுறையாக சிறந்து விளங்குபவர்கள் ஜாதகங்களை வாங்கி பார்த்தால்... 

லக்ன திரிகோணங்கள் என்னும் 1 5 9 குடைய கிரகங்கள் வலுஇழக்காமல் தங்களுக்குள் பரிவர்த்தனை, ஆட்சி, நட்பு வலுவோடு குரு இணைவு பார்வை பெற்று பகை நீசம் கிரகணம் ஆகாமல் 1 5 9 இடத்தோடு குரு புதன் சுக்ரன் இருப்பார்கள். 

1 5 9 ல் குரு இருக்க வேண்டும் என்ற சூட்சம பதிலும் இதில் அடங்கி உள்ளது. அதாவது குரு பார்வை தாத்தா மகன் பேரன் என்ற அடுத்தடுத்த தலைமுறை அந்தஸ்தை 1 5 9 ல் இருக்கும் போது தருவார். #padmahazan 

1 5 9 ம் இடங்களில் ஏதேனும் ஒன்றில் குரு இருந்தாலே அவர் மற்ற இரு திரிகோண பாவகங்களை பார்த்து சிறப்படைய வைப்பார். 

அதே போல பித்ருக்கள் என்று சொல்லகூடிய முன்னோர்களை மூதாதையர்களை குறிப்பது சூரியன். 

எவர் ஒருவருக்கு லக்ன திரிகோண பாவகங்களான 1 5 9 நல்ல சுப அமைப்பில் இருந்து சூரியன் ராகு கேது சனி தொடர்பு இன்றி நட்பு, ஆட்சி, திக் பலம் போன்ற சுப வலுவோடு இருப்பவர்களுக்கு மூதாதையர் ஆசியும் அனுகிரகமும் நன்றாக அமையும். #padmahazan 

1 5 9 இவற்றில் ஒரு பாவகமோ 2 பாவகமோ பாதிக்கப்பட்டு அல்லது அந்த வீட்டில் ராகு கேது சனி அல்லது அந்த அதிபதி நீசமாகவோ கடுமையான பாவ கிரக பிடியிலோ இருந்தால் பாவக அமைப்பின் படி தாத்தா சிறப்பான அந்தஸ்து கொண்ட நபராக இருப்பார் அவரது மகன் வாழ தகுதி அற்ற பிறரை சார்ந்து வாழ்வது போன்ற நிலையிலும் பேரன் தாத்தாவை போல பெயர் எடுப்பவராகவும் இருப்பார். யார் எப்படி இருப்பார்கள் என்பதை ஜாதகத்தின் 1 5 9 திரிகோண பாவகத்தை வைத்து சொல்லலாம். 

அதே போல 1 5 9 அதிபதியாக சனி வந்தாலும் அவரது வீட்டில் ஆட்சி பெற கூடாது உடல் உழைப்பை அதிகமாக கொண்டு சாதாரண வாழ்வை சனி தருவார். அப்படி சனி ஆட்சி பெற்றால் குரு பார்வை பெற வேண்டும் வேறு விதமான அரசியல் மக்கள் தொடர்பு போன்ற வழியில் தலைமுறையை சிறப்படைய வைப்பார் சனி. #padmahazan 


கீழே உள்ள உதாரண ஜாதகத்தை பாருங்கள். ஜாதகரின் லக்னாதிபதியான செவ் நட்பு வீடான ஐந்தாம் வீட்டில், 5 ம் அதிபதி சூரியன் மற்றொரு நட்பு வீட்டில் இவர்களை எல்லாம் 9 ம் அதிபதி லக்னத்தில் நட்பு வலுவோடு பார்ப்பது யோகமான அமைப்பு. 1 5 9 எல்லாம் தங்களுக்குள் தொடர்பு பெற்று குரு பார்வையோடு விளங்குவது யோகமான அமைப்பு. பாவ கிரகங்கள் 5ல் செவ் 9ல் சூரி இருப்பது கூடாது ஆனாலும் பாக்கியாதிபதி குரு பார்வை அனைத்தும் மாற்றும் விதி விலக்காக உள்ளது. சனி ராகு தொடர்பு இல்லாத 1 5 9 எப்போதும் ஜாதகரை கெடுக்காது. #padmahazan 

இதே அமைப்பு ராசிக்கும் 1 5 9 தொடர்பில் பரிபூராண யோகத்தை தரும் அமைப்பில் உள்ளது. 

இது போன்ற ஜாதகங்களை பெற்றவர்கள் நிச்சயமாக நல்ல கௌரவமாக சமூக அந்தஸ்தை பெற்ற யோகவான்களாகவே வாழ்கை நடத்தி வரும் உன்னத பிறப்பாக இருப்பார்கள். 

🤩 #padmahazan 🤩 #குரு #சூரியன் #செவ் #புதன் #சுக்ரன்.

மூன்றாம் பாவகம் தரும் தொழில் வேலை

🍁 மூன்றாம் பாவகம் தரும் தொழில் வேலை 🍁 #hazan 

மூன்றாம் இடம் _ லக்னத்தில் இருந்து மூன்றாவது ராசியாக வரும் பாவகம். இந்த மூன்றாம் பாவகம் மிதுன ராசியின் இயல்பை வெளிபடுத்தும் பாவகம். பேசுவதை கருத்தை பரிமாறுவதை சிறுதூர பயணத்தை தரும் பாவகம்

ஒருவர் மற்றொருவரிடம் பேசுதல் விஷயங்களை பொருட்களை பரிமாரிகொள்ளுதல் போன்றவற்றை வெளிபடுத்தும் பாவகம்.

தற்போதைய அவசரமான ஓடி கொண்டே இருக்கும் உலகில் பலர் இந்த மூன்றாம் பாவக தொடர்பில் தொழிலை வேலையை செய்து வருகின்றனர்.

தபால்காரர்கள், கொரியரை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சென்று சேர்ப்பவர், உணவு பொருட்களை வீடு வீடாக சென்று டெலிவரி கொடுப்பவர், #padmahazan 

ரேடியோ, DTH, Telephone, mobile phone, wifi gatgets, நெட்வொர்கிங் போன்ற நிறுவனங்களில் பொருட்களை பயனாளர்களிடம் கொண்டு சேர்ப்பது போன்ற தொழிலை செய்பவர்கள்,

மேடை பேச்சு, நடிப்பு, நகைச்சுவை, பாடல், இசை போன்றவற்றை செய்து மக்கள் மத்தியில் பெயர் புகழை பெறுபவர்கள், 

செய்திதாள் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள், அச்சக பணி, பிரிண்டிங், கீபோர்ட் போன்ற விரல்களின் உதவியோடு பணி கொண்டவர்கள், ஊர் ஊராக பணத்தை கொடுத்து பைனான்ஸ் தொழிலில் பணத்தை அலைந்து திரும்ப பெறுபவர்களும். #padmahazan 

 3 இடத்தோடு 2 10ம் இடத்தோடு தொடர்பு பெற்று சுப தொடர்போடு தசா புத்தி நடக்கும் போது தொழிலாக அமைத்து கொள்வார்கள்.

தினமும் 60 கிலோ மீட்டர் வாகனத்தில் பயணப்படுவதும் , இருந்த 10×10 அறையில் ஊர் முழுக்க ரேடியோ வழியாக பலரிடம் நிகழ்ச்சி தொகுப்பாளராக புகழ் பெற்று இருப்பவரும் இதே மூன்றாம் பாவகமே தரும் தொழில்களாகும்.

மூன்றாம் பாவகம் பகுதி 2 தகவல் பரிமாற்றம்

ஒருவரது ஜாதகத்தில் லக்னத்திற்கு மூன்றாவது ராசி ஜாதகர் பிறரோடு கொண்டு இருக்கும் தகவல் பரிமாற்றம், பிறரோடு பேசும் போது அவரது சுபாவம், பொருட்களை கொடுத்து வாங்குவது போன்றவற்றை குறிக்கும் பாவகம். 

இருவரோ மூவரோ பேசி கொள்வது வாக்கு ஸ்தானம். ஒருவர் சொல்ல ஒரு குழுவோ மக்கள் கூட்டமோ கேட்கிறது என்றால் அது மூன்றாம் பாவகத்தில் வரும். #padmahazan 

ஒருவர் அலுவலகத்திலோ அல்லது தொழிலிலோ அல்லது கூட்டு தொழிலிலோ அங்கு இருக்கும் நபர்களோடு எந்த விதமான முறையில் தகவலை பரிமாற்றம் செய்து கொள்வார் என்பதை காட்டும் பாவகம். 

சிலர் ஒரு விஷயத்தை மற்றொருவருக்கு சொன்னால் அதனால் அவருக்கே பிரச்சனை வரும். சாதாரண விஷயத்திற்கு ஊரே கூடி ஜாதகரை ஒரு வழி செய்து விடுவார்கள். #padmahazan 

சிலர் எவ்வளவு பெரிய விஷயத்தை பலருக்கு மத்தியில் பேசினாலும் யாரும் வம்புக்கு வரமாட்டார்கள். நாசுக்காக சொல்லிவிட்டு பகையை பெறாமல் கருத்தை பரிமாற்றி கொள்வார்கள். அதை குறிப்பது இதே மூன்றாம் பாவகம். 

மூன்றில் குரு சுக் புதன் வளர்பிறை சந்திரன் போன்ற முழுக்க முழுக்க சுப கிரக தொடர்பு பெறும் போது அவர்கள் கருத்து பரிமாற்றம் பலரை சென்று சேரும். பிறர் அதை கேட்டு பாராட்டும் பெறுவார்கள். பண்பாக சொல்லி பலர் மனதை ஆள்வார்கள். 

ராகு சனி செவ் போன்ற பாவர்களால் மூன்றாம் இடம் பாதிக்கும் போது ஜாதகர் பரிமாற்றும் விஷயம் ஜாதகருக்கே பிரச்சனையாக வரும். தைரியமாக தடாலடியாக சொல்வார்கள் ஆனால் பின் விளைவு கடுமையாக இருக்கும். #padmahazan 

3ம் அதிபதி 6 8ல் இருப்பது 6 8 அதிபதி 3ல் இருப்பது குறிப்பாக பாவராகி இருப்பது கருத்தால் கலவரத்தை உருவாக்கி இவரும் பாதிக்கபடுவார். 

மேடை பேச்சாளர்கள்,அரசியல் பிரமுகர்கள், தொழில் நடத்தும் பெரும் வணிகர்கள் ஜாதகத்தில் மூன்றாம் அதிபதியும் பாவகமும் சுப கிரக தொடர்பில் இருக்கும். குறிப்பாக 4 7 10 5 9 அதிபதி பாவக தொடர்பில் இருப்பார்கள். மூன்றாம் இடத்தில் சுக்ரன் புதன் குரு ஆட்சி உச்சம் அல்லது நட்பு நிலையிலான பலத்தோடு இருப்பது யோகம். இவர்களது பார்வை 9 இடத்தை பார்த்து மேலும் வளர்க்கும். 

லக்னாதிபதி வலுபெற்று மூன்றாம் இடமும் அதிபதியும் வலுபெற்றவர்கள் சமுதாயத்தில் மதிக்கும் நபராகவும் இவர்களது கருத்து பரிமாற்றம் சமுதாயத்தில் குறிப்பிட்ட அதிர்வலையை உண்டாக்கும் ஆற்றலும் பெற்று இருக்கும். 

#padmahazan #கருத்து #பரிமாற்றம்

Padmahazan SRI VISHNU ASTROLOGY. 
WHATS APP 8300 620 851 

🤩 #padmahazan 🤩

உடல் ஆரோக்கியத்தை தரும் கிரக அமைப்புகள்

🍁 உடல் ஆரோக்கியத்தை தரும் கிரக அமைப்புகள் 🍁 #hazan 

மனிதராக பிறந்த அனைவருமே ஆசைபடுவது திடமான உடல் நோய் நொடி இல்லாத குறைபாடு பாதிக்காத வலுவான உடல் நலம். அனைவருக்கும் அப்படி அமைந்து விடுகிறதா என்றால் இல்லை. 

அவரவர்கள் பிறந்த ஜாதகத்தின் கிரக நிலை ஏற்ப உடல் ஆரோக்கியமும் நோய் தாக்கமும் அமையும். 

ஆரோக்கியமான உடல் பெறுவதற்கு முதலில் லக்னாதிபதி வலுபெற வேண்டும். 

லக்னாதிபதி கிரகம் ஆட்சி உச்சம் நட்பு வலுவோடு லக்ன கேந்திர கோணத்தில் குரு சுக்ர புதன் பார்வை இணைவோடு இருக்க வேண்டும். #padmahazan 

இதற்கு விதி விலக்கு இணைந்த அந்த குருவோ சுக்ரனோ புதனோ ஆறாமதிபதி எட்டாமதிபதி ஆகவும் வரகூடாது. அவர்களே உடல் நலத்தை கெடுப்பார்கள். 

ஆத்ம காரகன் சூரியனும், கட்டுமஸ்தான உடலை தரும் செவ்வாய் பகவானும் ஜாதகத்தில் வலுபெற்று சனி பார்வை ராகு இணைவு இல்லாமல் இருக்க வேண்டும். #padmahazan 

இதறகான விதிவிலக்கு இவர்களும் 6 8ம் அதிபதியாக செவ்வாய் சூரியன் வந்தால் அங்கேயே ஆட்சி பெற கூடாது நோயை தந்து வாட்டி எடுப்பார்கள். வேறு பாவகத்தில் நட்பு வலுவோடு இருக்க வேண்டும். 

மிகவும் முக்கியமாக லக்னத்தில் பாவர்கள் இல்லாமல் இருப்பதும் ஆரோக்கியமான உடலை தரும். 

ஆரோக்கியமான உடலை பெற லக்னம் லக்னாதிபதி சூரியன் செவ்வாய் பாவிகளான சனி ராகு தொடர்பு பெறாமல் இருக்க வேண்டும் என்பதை போல தலைகீழாக நோய் கொண்ட உடலிற்கு இவர்கள் சனி ராகுவால் பாதித்து இருப்பார்கள். 

6 8 இடம் சம்மந்தப்பட்ட தசா புத்தி காலத்தில் ஒருவருக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கும். 

இன்னும் பல விதிகளும் விதி விலக்குகளும் உள்ளது அடுத்தடுத்த பதிவுகளில் எழுதுகிறேன்.

#padmahazan #லக்னம் #லக்னாதிபதி #சூரியன் #செவ்வாய்

12 ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய கடவுள்

🍁 12 ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய கடவுள் 🍁 #hazan 

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் செவ்வாயின் பலத்தை பெறுவதற்கு அந்த முருகனின் ஆசியைப் பெற வேண்டும். முருகனின் ஆசியைப் பெற வேண்டுமென்றால் அந்த சிவனையும் வழிபட வேண்டும். பிரதோஷ வழிபாடு மிகவும் சிறந்தது. 

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் சுக்கிரனின் பலத்தை பெறுவதற்கு அந்த மகா லட்சுமியை வணங்க வேண்டும். மகாலட்சுமியை உங்கள் மனதில் நினைத்துக் கொள்ளும் போது உங்கள் மனதில் இருக்கும் தேவையற்ற எண்ணங்கள் நீங்கி நிம்மதி அடைவீர்கள். 

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் புதனின் பலத்தை பெறுவதற்கு நாராயணனை வழிபட வேண்டும். ‘ஓம் நமோ நாராயணா’ என்று ஒருமுறை நினைத்தால் போதும் உங்கள் சங்கடங்கள் நீங்கி விடும். 

கடகம்
கடக ராசிக்காரர்கள் சந்திரனின் பலத்தை பெற வேண்டுமென்றால் அம்மன் வழிபாட்டில் அதிகமாக ஈடுபட வேண்டும். அந்த சந்திரனை வானில் தரிசிக்கும்போது மனதார வணங்குவது நன்மைதரும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் சூரியனின் பலத்தை பெற வேண்டுமென்றால் சிவனை மனதார வணங்க வேண்டும். சிவ சிவ, ஓம் நமசிவாய என்ற வார்த்தைகளை உச்சரிப்பதன் மூலம் நல்ல பலன்பெறலாம். 

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் புதனின் பலத்தை பெறுவதற்கு நாராயணனை மனதார நினைத்து வழிபட வேண்டும். ‘ஓம் நமோ நாராயணா’ என்னும் மந்திரம் நல்லது

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் சுக்கிரனின் பலத்தைப் பெற மகாலட்சுமியை வணங்குவதன் மூலம் நல்ல பலனை பெறலாம். மகாலட்சுமி வணங்குவதன் மூலம் மன நிம்மதி கிடைக்கும். 

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் செவ்வாயின் பலத்தை பெறுவதற்கு, சிவபெருமானையும் முருகனையும் வழிபடுவது நன்மை தரும். பிரதோஷ வழிபாடு சிறப்பான பலனை கொடுக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் குருவின் பலத்தை பெறுவதற்கு தட்சிணாமூர்த்தியை வணங்க வேண்டும். உங்கள் வேலையில் உங்களுக்கு யார் குருவாக இருக்கிறார்களோ அவர்களுக்கு நல்ல மதிப்பு கொடுத்து நடந்து கொள்ளுங்கள். 

மகரம்
மகர ராசியாளர்கள் சனியின் பலத்தை பெறுவதற்கு சனிபகவானின் குருவான பைரவரை வழிபடுவது சிறப்பான பலனை தரும். சிவபெருமானையும் நினைத்து வழிபடலாம். 

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் சனியின் பலத்தை பெறுவதற்கு சிவபெருமானையும் முருகனையும் வழிபட வேண்டும். பிரதோஷ வழிபாடு நல்ல பலனைக் கொடுக்கும். 

மீனம்
மீன ராசிக்காரர்கள் குருவின் பலத்தை பெறுவதற்கு தட்சிணாமூர்த்தியை வணங்குவது நன்மை தரும். நீங்கள் செய்யும் வேலையில் உங்களுக்கு குருவாக இருப்பவர்களுக்கு நல்ல மதிப்பு தருவது நல்ல பலனைக் கொடுக்கும். 

(இது ஒரு பகிர்வு பதிவு) 

🤩 #padmahazan 🤩

ராகு குரு சனி தசா தரும் கர்ம தொடர்பு

🍁 ராகு குரு சனி தசாக்கள் 🍁 #hazan 

நவகிரகங்களில் ராகு தசா அடுத்து குரு தசாவும் குரு தசா அடுத்து சனி தசாவும் அடுத்தடுத்து வரும். ராகு தசா 18 ஆண்டுகள் குரு தசா 16 ஆண்டுகள் சனி தசா 19 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெறும்.

சூரியனின் கிருத்திகை உத்திரம் உத்திராடம் , சந்திரனின் ரோகிணி அஸ்தம் திருவோணம், செவ்வாயின் மிருகசீரிடம் சித்திரை அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிறந்த நட்சத்திர ஜனனகால தசா இருப்பை பொறுத்து ராகு குரு சனி தசா இளம் வயதிலோ அல்லது மத்திய வயதை கடந்து நடைபெறும். #padmahazan 

53 ஆண்டுகால ராகு குரு சனி தசாவில்... ராகுவின் காரக ரீதியான குடும்பம், பெண், பொண்,பணம், பொருள், அதீத ஆசை, தேடல் சம்மந்தப்பட்ட விஷயத்தில் ராகு தசா கழிப்பார்கள். ஆசை எண்ணம் நிறைவேற்றி கொள்ளுதல் போன்ற விஷயத்தில் உண்மை நேர்மை மீறி நடக்கவும் ராகு செயல்பட வைப்பார். ராகு குரு தொடர்பு பெற நல்லது. 

ராகு தசா 18 ஆண்டுகளுக்கு பிறகான குரு தசாவில் மிகவும் நல்லவங்க, பெரிய மனம் கொண்டவங்க, ராகு கொடுத்தவற்றை அனைத்தும் குரு தசாவில் மரியாதையாக வைத்து கொண்டு மதிப்பு மரியாதையோடு குரு தசாவை கடந்து வருவாங்க... #padmahazan 

குரு தசா 16 ஆண்டுகாலம் முடிந்த பிறகான சனி தசா... ராகு தசாவில் செய்த விஷயங்களுக்கு சனி தசாவில் கெடுபலனை தருவார். அதாவது இளம் வயதில் மத்திம வயதில் ராகுவால் செய்த அனைத்து விஷயத்திற்கும் சுப பாவ தன்மை ஏற்ப சனி தசாவில் பலன் அமையும். அந்த காலத்துல அந்த மனுசன் அந்த மாதிரி பண்ணாரு அதுனாலயே இப்ப இந்த மாதிரி நல்லா இருக்காருனு சொல்றதும் , அந்த காலத்துல அந்த ஆட்டம் ஆடுனாறு அதான் இப்போ இப்படி ஆகிட்டாருனு சொல்ற விஷயம் ராகு தசா அதனை அடுத்த குரு தசா சனி தசாவில் கண் எதிரே பார்க்ககூடிய நிகழ்வாக தரும். 

மேலே சொன்ன அனைத்தும் கிரக காரகத்துவம் சார்த்த கிரகத்தின் இயல்பான குணத்தில் அமைந்தவை. லக்னத்தை சார்ந்த ஆதிபத்தியமான லக்னாதிபதி பூர்வ புண்ணியாதிபதி பாக்கியாதிபதி லாபாதிபதி என கிரகங்கள் பெறும் ஆதிபத்தியம் சம்மந்தப்பட்டவை அல்ல. ஜனனகால ஜாதகத்தில் ராகு குரு சனி பெறும் சுப பாவ தொடர்பு பொறுத்து பலன் மாற்றம் இருக்கும். 

🤩 #padmahazan 🤩

தன் வீட்டை தானே பார்க்கும் சனி தரும் பலன்

🍁 தன் வீட்டை தானே பார்க்கும் சனி 🍁 #hazan 



ஜோதிடத்தில் சொல்லபட்ட விதிகளுள் ஒன்று, " தன் ராசியை தானே பார்க்கும் கிரகம் அந்த ராசியை வலுபெற வைக்கும் " என்பதாகும். 

ஆனால் இந்த விதியில் விதிவிலக்கு தன் வீட்டை பார்க்கும் குரு, சுக்ரன், சுப புதன், சுப சந்திரன் பார்வை மட்டுமே அவர்களது வீட்டை வலுபெற வைக்கும். 

மாறாக பாவிகளான சனி மற்றும் செவ் பார்வை தன் வீட்டை பார்த்தாலும் அது அந்த வீட்டை கெடுக்கவே செய்யும். 


உதாரண ஜாதகத்தை பாருங்கள்.கடக லக்னம், கும்ப ராசி, பூரட்டாதி நட்சத்திரம். லக்னத்தில் சனி ஏழாம் வீட்டை பார்த்து உள்ளார். சனி தனது ஆகாத சந்திரனின் பகை வீட்டில் உள்ளார். ஆயினும் தனது வீடான மகரத்தை பார்த்து உள்ளார். ஏழாமிடத்தை பாதிக்கிறார். 

திருமணமான பிறகு துணைவழியாக பிரச்சனைகளை சந்தித்து வந்து உள்ளார். இறுதியாக பிரிவும் கொடுத்து உள்ளார்.

தன் வீட்டை பார்க்கும் சனி செவ் அந்த வீட்டை பார்வையால் பலவீனபடுத்துவார்கள் என்பதும் ஒரு விதி. குரு சுக்ர போன்ற சுபருக்கே இந்த விதி முழுமையாக பொருந்தும். #padmahazan 

கூடுதலாக இங்கே சனிக்கு குரு சுக் புதன் பார்வை இணைவு கிடைத்து இருந்தால் அசுப தன்மை விலகி தான் பார்வையும் சுபமாகி தன் வீட்டை கெடுக்காமல் நடுநிலையாக (neutral) இருந்து இருப்பார். 

செவ்வாய்க்கும் இது பொருந்தும், சனி முழு பாவி, செவ்வாய் முக்கால் பாவி கால் சுபர், சூரியன் அரை பாவி அரை சுபர், சுக்ரன் கால் பாவி அதாவது முக்கால் சுபர், குரு முழு சுபர். 

#padmahazan #குரு #சனி #புதன் #சுக்ரன் #சூரியன் #கடகம்

கர்மா ஆசையும்

🍁 கர்மாவும் ஆசையும் 🍁 #hazan 

ஓர் ஆன்மா காண வேண்டி நல்ல கெட்ட ஒட்டு மொத்த கர்மாவை குறிப்பது சஞ்சீத கர்மா.

இந்த பிறப்பில் மட்டுமே காண வேண்டிய நல்ல கெட்டதை குறிப்பது ப்ராப்த கர்மா.

இந்த இரண்டும் பிறக்கும் போதே என்ன நடக்கனும் எப்போது நடக்கனும் என்று நிர்ணயிக்கபட்டது. Fixed. 

அதே சமயம் ஆகாமிய கர்மா என்று ஒன்று உள்ளது.

அதான் எல்லாமே fixed ஆக இருந்தாலும் தற்போதைய வாழ்வில் ஆசை காரணமாக நாம் சேர்க்கும் நல்ல கெட்ட கர்மா. 

ஆகாமிய கர்மா மனதின் இயக்கியத்தால் நம்மால் உருவாகுவது.

மனம் எதை குறிக்கிறது சந்திரன் அது நின்ற ராசி.

கர்மா சேர்க்கவோ கழிக்கவோ முதன்மையாக இருப்பது மனதும் சந்திரனுமே. 

லக்னப்படி அமைவது fixed. அது ப்ராபத கர்மா. ராசிப்படி மனதின் ஆசைக் காரணமாக நாமாக அடைவது ஆகாமிய கர்மா.

அனைவரும் அனுபவிக்கும் ஒட்டு மொத்த சஞ்சீத கர்மாவும் ப்ராப்த கர்மாவும் என்றோ ஒரு பிறப்பில் நாம் சேர்த்த ஆகாமிய கர்மாவின் ஒட்டு மொத்த உருவமே.

பதிவு புரிந்தால் பிறருக்கு ஷோர் பண்ணுங்க.

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

🤩 #padmahazan 🤩

நகைச்சுவை குணத்தை தரும் கிரக அமைப்பு

🍁 நகைச்சுவை குணத்தை தரும் கிரக அமைப்பு 🍁 #hazan 

நகைச்சுவை என்றாலே நவகிரகங்களில் நேராக புத பகவானைதான் குறுகுறுனு நாம் பார்க்க வேண்டும். ஏன்னா அவர்தான் நகைச்சுவை உணர்வை ஒருவரது மனதில் பாய்ச்சுபவர்.

மோட்டார் போட்டு பொத பொதனு தண்ணி வர மாதிரி நகைச்சுவை வருமா..? இல்லை குடத்துக்குள்ள டம்பர் ல தண்ணி எடுக்குற மாதிரி நகைச்சுவை வருமா..? என்பதை ஒருவரது ஜாதகத்தில் உள்ள புதனின் வலுவை வைத்து சொல்லி விடலாம். 

புதன் லக்னத்திற்கு 159 லோ 4 7 10லோ நட்பு ஆட்சி உச்சம் பெற்று இருப்பது,

நீசமானாலும் மீனத்தில் குருவோடுவோ சுக்ரனோடுவோ இணைந்து இருப்பது,

சந்திரனின் பார்வையை பெறுவது போன்ற நிலைகளை புதன் பெற்று, 

புதனின் மிதுன கன்னி லக்ன ராசியில் பிறந்தவர்கள். குறிப்பாக ஆண் ராசியான மிதுன அமைப்பில் பிறந்தவர்கள், #padmahazan 

புதனின் ஆயில்யம், கேட்டை, ரேவதியில் ஜென்ம நட்சத்திரமாக, லக்ன நட்சத்திரமாக, அல்லது லக்னாதிபதி நின்ற நட்சத்திரமாக வரும் போதும்,

புதனின் நட்சத்திரமான ஆயில்யம், கேட்டை, ரேவதியில் கிரகங்கள் நின்று தசா புத்தி நடத்துவது போன்ற நிலைகளை பெறுபவர்கள்

லக்னாதிபதி புதனோடு இணைந்து இருப்பது புதனின் பார்வை பெற்று இருப்பது

நகைச்சுவையாளர்களாக அல்லது நகைச்சுவை பேசியே ஒரு கூட்டத்தை தனக்குனு தன்னை சுற்றி ஏற்படுத்தி கொள்பவராக இருப்பார்கள். 

மேலும் புதனின் பிற கிரக இணைவு பார்வை ஏற்ப காமெடி நன்றாகவோ அல்லது பிறரை நகையாடுவது போலவோ இருக்கும்.

🤩 #padmahazan 🤩

விருச்சிக லக்னத்திற்கு குரு தசா யோகம்

🍁 விருச்சிக லக்னத்திற்கு குரு தரும் யோகம் 🍁 #hazan

விருச்சிக லக்ன ராசிக்கு அதிபதியான செவ்வாய் பகவானின் நண்பரான குரு பகவான், விருச்சிக லக்ன ராசிக்கு முழுக்க முழுக்க நன்மை தரவே கடமைபட்டவர்.

விருச்சிக லக்னத்தில் பிறந்த ஒருவருக்கு குரு பகவான் நல்ல வலுவோடு இருந்து, நட்பு ஆட்சி உச்சமாக போன்ற வலுவில் இருப்பது நல்ல பலனை நன்றாக தருவார். 

விருச்சிக லக்னத்தில் ராசியில் பிறந்தவருக்கு

1 என்னும் லக்னமான விருச்சிகத்தில் இருப்பது நற்பெயர் புத்திர பாக்கியம் தெய்வ அனுகூலத்தை கூடுதலாக கொடுத்து நல்ல மணவாழ்வையும் சிறப்பாக கொடுத்து நல்லறமாக இல்லறத்தை வைப்பார். #padmahazan 

2ல் தனுசில் ஆட்சியாக இருப்பது நல்ல பலன் உண்டு, நீடித்த பொருளாதார புழக்கம், தன பண சேர்க்கை தரும் கூடுதலாக கடனையும் தருவார். நல்ல குடும்ப வாழ்வை தருவார்.

5ல் மீனத்தில் ஆட்சியாக இருப்பது அளவு கடந்த அதிர்ஷ்டத்தை பணத்தையும் பொருளையும் வாரி கொடுப்பார்.சில நிலைகளில் ஆண் வாரிசு விஷயத்தில் பிரச்சனை வைப்பார். மூத்த உடன்பிறப்பு, முன்னேற்றம் , வெற்றி போன்றவற்றை கொடுத்து ஜாதகரின் கௌரவத்தை போற்றி வளர்ப்பார்.

6ல் மேஷத்தில் குரு இருப்பது நல்ல வேலை தருவார். கடனில் ஜாதகரை மூழ்க வைத்து தூர தேச வாழ்க்கை கொடுத்து பணத்தை சேர்க்கும் நிலையை தருவார். #padmahazan 

9ல் கடகத்தில் உச்சமாகும் நிலை அபரி விதமான உச்ச நிலையான உயர்நிலை வாழ்வை குரு தருவார், முயற்சிகள் பலிதம் ஆகும், ஆண் வாரிசுகளால் பெயர் புகழ் பெறுவார், பெரும் செல்வந்த வாழ்வை தரும். வக்ரமாக கூடாது. 

10ல் சிம்மத்தில் இருப்பது பணம் பேச்சு மேலாளர் போன்ற கௌரவமான தொழிலை கொடுத்து இருப்பர். நல்ல பணபுழக்கும் கையில் இருக்கும்.

1 2 5 6 9 10 ல் ஆட்சி உச்சம் நட்பு வலுவோடு இருப்பது மிகவும் நல்ல பலனை தருவார். இங்கே இருக்கும் குரு வக்ரமாகி இருக்க கூடாது, சுப பல அளவு குறைவாக இருக்கும். 

மகரத்தில் 3ல் நீசமாவது, கும்பத்தில் சம வலுவோடு இருப்பது, 7 8 11 12ல் பகை பெறுவது சுப பலனை குறைவாக குரு பகவான் விருச்சிக லக்னத்திற்கு தருவார். சராசரியான ஒரு வாழ்வை ஜாதகருக்கு தருவார் இந்த இடங்களில் இருக்கும் குரு. இங்கே வக்ரமாவது பலனை அதிகபடுத்தி தருவார். #padmahazan 

விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு குரு எங்கே இருந்தாலும் சனியோடு இணைவது பார்க்கபடுவது ராகுவோடு இணைவது போன்றவை குருவை பலவீனபடுத்தும், தன பண சேர்க்கை குடும்ப வாழ்க்கை பிரச்சனை தாமத குழந்தை பாக்கியம் அல்லது குழந்தை பெற தடையை தருவார். 

விருச்சிக லக்னத்திற்கு குரு மிக முக்கியமான கிரகம். இயற்கை சுபர் லக்ன யோகராக குருவே வருவது விருச்சிக லக்னத்தார்களுக்கு உள்ளங்கையில் நெல்லி கனி போன்ற கொடுத்து வைத்த பூர்வ ஜென்ம சிறப்பு. ஏன் என்றால் அவரே பூர்வ புண்ணிய அதிபதி.

மேலே சொன்ன அனைத்தும் பிற கிரகங்கள் குருவோடு தொடர்பு பெறுவதை பொறுத்து பலனில் கொஞ்சம் மாற்றம் இருக்கும். 

Padmahazan SRI VISHNU ASTROLOGY 
What's app 8300 620 851 

🤩#padmahazan 🤩 #குரு #விருச்சிகம்

லாப ஸ்தானத்தில் லக்னாதிபதி நிலை

🍁 லாப ஸ்தானத்தில் லக்னாதிபதி நிலை 🍁 #hazan #லக்னாதிபதி #ஸ்தானம் #லாபம்

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

ஜோதிடத்தில் பொதுவாக லாப ஸ்தானத்தில் கிரகங்கள் நிற்பது யோகமென்று சொன்னாலும் லக்னாதிபதி லாப ஸ்தானமான 11ல் நிற்பது பெரும்பாலான லக்னத்திற்கு லக்னாதிபதி வலுஇழந்த நிலையில் இருப்பார். 

மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் போன்ற லக்னத்திற்கு லக்னாதிபதி லாப ஸ்தானத்தில் பகை அல்லது சம வலுவில் இருப்பார்.

 மீன லக்னத்திற்கு லக்னாதிபதி 11ல் நீசமடைவார். ரிஷபம் மற்றும் கடக லக்னத்திற்கு லக்னாதிபதி 11ல் உச்சமடைவார்கள். ரிஷபத்திற்கு 11ல் உச்சமடைவது யோகம். கடகத்திற்கு லக்னாதிபதி பாதக வீட்டில் உச்சமாவதும் சுப பலனில் சற்று கெடுதலும் உண்டு.

ரிஷப லக்னத்தை தவிர பிற லக்னங்களுக்கு லக்னாதிபதி 11ல் நிற்பது பகை அல்லது சமம் பெறுவது லக்னாதிபதி வலுஇழந்த அமைப்பை பெறுவதையே குறிக்கும். லக்னம் பாவர்களால் பாதிக்க லக்னம் பொழிவு இழந்து அந்தஸ்து குறைவு நடுத்தரமான வாழ்க்கை அமைத்துவிடும்.

இருப்பினும் லக்னாதிபதி லாபத்தில் பகை அல்லது சமம் இருப்பதால் ஒரளவு லாபம் முன்னேற்றம் வளர்ச்சி கொடுக்கும்.

இதில் ஒரு விதிவிலக்காக ஒருவர் தொழில் அல்லது வேறு விதமான நிலையில் நல்ல லாபம் வளர்ச்சி முன்னேற்றம் அடைகிறார் அவருக்கு லக்னாதிபதி 11ல் பகை பெற்று தானே உள்ளார் என்று பார்த்தால் அவருக்கு லக்னாதிபதி 11ல் பகை அல்லது சம வலுவில் இருந்தாலும் வலுத்த குரு சுக்ரன் அல்லது தனித்த புதன் பார்வை , வளர்பிறை சந்திரன் பௌர்ணமி சந்திரன் மற்றும் ஒளிபொருந்திய தேய்பிறை சந்திரன் பார்வை இணைவு அதிகமாக பெற்று திருக் பலம் என்ற சுப பார்வை பெற்று வலுபெற்ற நிலையில் இருப்பார். #padmahazan 

மேலும் லக்னாதிபதியாகும் சூரியனோ செவ்வாயோ திக் பலத்தை விட்டு விலகும் பலத்தோடு கூடிய திருக் பலத்தோடு சுப அமைப்பில் லாபத்தில் நின்று இருப்பதும் தசா நடத்துவதும் யோகமான அமைப்பாகும். 

சுப பார்வை சுப இணைவு இல்லாத லாபத்தில் நின்ற லக்னாதிபதியை விட பூர்வ புண்ணிய அதிர்ஷ்டம் ஸ்தானமான ஐந்தில் நட்பு வலுவோடு லாபத்தை பார்க்கும் லக்னாதிபதி நிலை நன்றாக இருக்கும். 

2021 April 22 ல் எழுதிய பதிவு.

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851

🤩 #padmahazan 🤩

சூரிய தசா செய்ய வேண்டிய எளிமையான பரிகாரங்கள்

சூரிய தசா நடப்பவர்கள் & சூரியனின் அனுகிரகம் பெற விரும்புபவர்கள் அன்றாடம் செய்ய வேண்டியவை...

1. அதிகாலை எழுந்து கிழக்கே உதிக்கும் சூரியனை பார்க்க வேண்டும், முடிந்தால் முறையாக சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். 

2). தந்தையாரை மதித்து நடக்க வேண்டும், தந்தை வழி உறவினர்களை மதித்து அவர்களது உறவு முறைகளை நல்லமுறையில் வைத்து கொள்ள வேண்டும்.

3). உணவில் தேன், மூலிகைகளை சேர்ந்து கொண்டு வர வேண்டும். 

4). சிவ பெருமான் கோவில்களுக்கு பிரதோஷ நாட்களில் சென்று வர வேண்டும்.

5). அரசு சார்ந்த நபர்கள் அலுவலர்கள் அலுவலக இடங்களில் நல்ல நட்பை வளர்த்து கொள்ள வேண்டும். 

#padmahazan

ஜோதிடர்களை இயக்கும் ராகு கேது

🍁 ஜோதிடர்களை இயக்கும் ராகு கேது 🍁 #hazan 

ஜோதிடர்கள் அனைவருமே நிச்சயமாக ராகு அல்லது கேது ஒரு கிரக ஆதிக்கத்தில் இருப்பவர்கள் தான். புதன் முதன்மையாக ஜோதிடராக வருவதற்கு காரணமாக இருந்தாலும் இரண்டாம் நிலை உதவும் கிரகமாக ராகு அல்லது கேது இருக்கும். 

இங்கே எந்த கிரகம் வலுவாக அவருக்கு உள்ளதோ அது சார்ந்த நிகழ்வுகள் அவருக்கு பலன் கேட்கும் ஜாதகர்கள் ஜோதிடரை கேட்பார்கள்.

உதாரணமாக ஒரு ஜோதிடருக்கு கேது நன்றாக இருக்கும் பட்சத்தில் அவருக்கு 

கர்மம் செய்ய போவதை உணரும் நிலை,
வீட்டில் உள்ள பில்லி சூன்யம் ஏவல் செய்வினை,
ஒருவருக்கு இருக்கும் பூர்வ ஜென்ம சாபம், கடந்த கால துர் சம்பவங்களை உணர்தல் 

போன்ற கடந்த கால நிகழ்வுகளை பின்னோக்கிய நிகழ்வுகள் மீதான ஈர்ப்புகள் அதிகமாக கொண்டு இருப்பார். கூடுதலாக அவருக்கு வரும் கேள்விகளும் அது போலான கேள்விகளாகவே ஜாதகங்கள் கேட்பார்கள். இது சார்ந்த ஆய்வுகளை புத்தகங்களை குருவே தேடி அலைவார்கள் #padmahazan 

ஒரு ஜோதிடருக்கு ராகு பகவான் நன்றாக இருக்கும் பட்சத்தில் அவருக்கு 

எப்போது வேலை கிடைக்கும்,
எப்போது தொழில் லாபம் தரும்,
எப்ப இவர் வெளிநாடு போவார்,
எப்ப இவர் லட்சங்களை கோடிகளை சம்பாதிப்பார்,
எப்போது இவருங்கு இரண்டாம் திருமணம் நடக்கும்,
எப்போது ஆடம்பரமான வீடு வாகனம் யோகம் இருக்கும் என்ற கலியுக தேவைகளே இவருக்கு ஈர்ப்பாக அமையும்.

இவரிடம் இது போன்ற கேள்விகளே அதிகமாக ஜாதகர்களால் கேட்கபடும். இது போன்ற ஆய்வை புத்தகங்களை குருவை தேடி அலைவார்கள் #padmahazan 

கேது வலுத்த ஜோதிடர், ஆன்மீக கடவுள் சார்ந்த சடங்குகளை ஊக்குவிப்பவராக இருப்பார்.

ராகு வலுத்த ஜோதிடர் கடவுளை வணங்கு அது போதும் என்று மட்டுபடுத்தும் தன்மை கொண்டவராக இருப்பார். 

கடந்த கால நிகழ்வுகளை புட்டு புட்டு வைப்பவர் கேது, எதிர்கால பலனையே கண்ணாக வைத்து பலன் சொல்பவர் ராகு.

நீங்கள் கொடுப்பதை கொடுங்கள் என்று எதிர்பார்ப்பு இல்லாமல் பலன் சொல்பவர் கேது வலுத்த ஜோதிடர்.

இவ்வளவு கொடுத்தால் பலனை சொல்வேன் என்று எதிர்பார்ப்பை கொண்டவர் ராகு வலுத்த ஜோதிடர்.

இவர்களில் யார் சிறந்தவர்கள் என்பது பலன் கேட்க போகும் ஜாதகரின் இயல்பை பொறுத்தது. 

கலியுக வாழ்வை விரும்பும் நபர்களுக்கு ராகு வலுத்த ஜோதிடரும், முன் ஜென்மா கர்மா அறிய ஆவல் கொண்டவர்கள் கேது வலுத்த ஜோதிடரையும் விரும்புவார்கள். 

🤩 #padmahazan 🤩

மருத்துவரா.?. கொலைக்காரரா..? செவ்வாய் தரும் தொழில்

🍁 மருத்துவரா..? கொலைகாரரா..? செவ்வாய் தரும் பலன்கள் 🍁 #hazan 

செவ்வாயும் சனியும் நேருக்கு நேராக ஒருவரை ஒருவர் பார்த்து கொள்வது, இதில் சனி அல்லது செவ்வாய் ஆட்சி உச்சம் போன்று இருப்பது.

செவ்வாயின் 4ம் பார்வையில் சனி இருப்பது, சனியின் 10ம் பார்வையில் செவ்வாய் இருப்பது,

இவர்களது பார்வையில் லக்னாதிபதி இருப்பது, இவர்களது இணைவில் லக்னாதிபதி இருப்பது

லக்னத்தை சனியும் செவ்வாயும் இணைந்தோ பார்த்தோ லக்னத்தை கடுமையாக பாதிப்பது, 

இதில் எங்கேயும் குரு பார்வை இணைவு இல்லாமல் இருப்பது,

மன காரகன் சந்திரன் கடுமையாக பாதிக்கபட்டு இருப்பது, 

போன்ற நிலையில் வரும் 8 12 மிட பாவத்துவ சனி செவ் கிரக அமைப்பு ஜாதகனை கொடும் செயலை செய்ய வைத்து சிறை செல்ல வைக்கும். 

செவ் ராகுவோடு இணைவதும் பொருந்தும்.

மருத்துவரும் செவ்வாய் தான், கொலை செய்பவரும் செவ்வாய்தான். 

ஒரு உயிரை காப்பாற்ற கையில் அறுவை சிகிச்சை கத்தியை எடுத்தால் அவர் குரு சுக்ர சந்திர தொடர்பு பெற்ற செவ்வாய் மருத்துவர்.

ஒரு உயிரை எடுக்க கையில் ஆயுதங்களை எடுத்தால் அவர் சனி ராகு அமாவசை சந்திரன் தொடர்பு பெற்ற செவ்வாய் கொலைகாரர்.

இது போன்ற நிலையில் பாவத்துவ செவ்வாயாக இருக்கும். அதனால் மருத்துவராக வேண்டியவர் கொலைகாரராக மாற்றியது பாவத்துவ செவ்வாய். 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

🤩 #padmahazan 🤩

வெளிநாட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் கிரக நிலை

🍁 வெளிநாட்டில் மிக உயர்ந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஜாதக அமைப்பு 🍁 #hazan 



PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

வெளிநாட்டு வாழ்க்கை என்பது சிலரது கனவாக இருக்கும். சிலர் வெளிநாட்டில் இருக்கும் மிக உயர்ந்த கட்டுமானங்களை பார்க்கும் போது அங்கே ஒரு வீடு வாங்க முடியாத என்ற எண்ணம் பல வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு மனதில் தோன்றும் அப்படிபட்ட வெளிநாட்டில் சொந்தமாக மிக உயர்ந்த அடுக்குமாடி குடி இருப்பில் ( highly raised apartments) வீடு வாங்குவதற்கான கிரக அமைப்பை இந்த பதிவில் காண்போம். #padmahazan 

ஒருவருக்கு மறைவு ஸ்தானம் என்னும் எட்டாமிடமும் சுக ஸ்தானம் வீட்டை குறிக்கும் நான்காம் இடமும் சுக்ரனும் சுப தொடர்பில் தங்களுக்குள் தொடர்பு பெறும் போது தூர இடங்களில் தூர தேசங்களில் வீடு சொந்தமாக வாங்க முடியும். 

கீழே கொடுக்கபட்டுள்ள உதாரண ஜாதகத்தை பாருங்கள். 


ஜாதகர் சிம்ம லக்னத்தில் பிறந்துள்ளார்.

8ம் இடமான மீனத்தில் சுக்ரன் உச்ச வலுவில் அதிக ஒளி அமைப்பில் இருந்து, 4ம் அதிபதியான செவ்வாயும் 8ல் தனது நட்பு வீட்டில் உச்ச சுக்ரனோடு இணைந்து உள்ளார்.

இந்த சுக் செவ் இணைவை 8ம் அதிபதி குரு தனது நட்பு வீட்டில் விருச்சிகத்தில் இருந்து 5ம் பார்வையாக இவர்களை பார்க்கிறார்.

மேலும் இங்கே உச்ச சுக்ரன் இணைவிலும் நட்பு பெற்ற குருவின் பார்வையிலும் சிம்ம லக்ன யோகாதிபதி செவ்வாய் அதிக சுபத்துவமாக 8ல் உள்ளார். #padmahazan 

கூடுதலாக இங்கே செவ்வாயும் குருவும் பரிவர்த்தனை அமைப்பில் உள்ளார்கள். மறைமுகமாக குருவும் சுக்ரனும் ஆட்சி பெற்ற யோக நிலை. 

இங்கே உள்ள 4 8 பரிவர்த்தனையும், சுக்ரன் மற்றும் 4ம் அதிபதி செவ்வாய் மறைவு ஸ்தான குருவின் பார்வையில் 8 என்னும் மறைவில் இருப்பது...

இந்த ஜாதகருக்கு வெளிநாட்டில் வருமானத்தை கொடுத்து, சொந்தமாக அடுக்குமாடி குடியிருப்பில் தனக்கு என ஒரு சொந்த வீட்டை கொடுத்தும் உள்ளது.

எவர் ஒருவருக்கு 4 8 சுக்ரன் போன்றவை முழுக்க முழுக்க சுப தொடர்பில் உள்ளதோ அவர்கள் தூர இடங்களில் வீடு வாங்கும் யோகத்தை கிரகங்கள் தரும்.

மேலே குறிப்பிட்ட இந்த கிரகங்கள் சனி பார்வையோ ராகு கேது இணைவோ ஏதும் இல்லாமல் யோக பங்கம் இல்லாத ஒரு அமைப்பில் உன்னதமாக உள்ளது.

நீசம் பகை கிரகணம் இல்லாத சிறப்பான யோகத்திற்கு உதாரணம். 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 
#padmahazan

நீசபங்கத்தை தரும் சந்திர கேந்திரம்

✨சந்திரகேந்திரம் நீசபங்கம்✨

 #hazan #நீசபங்கம் #சந்திரன்

✨ஜோதிடத்தில் சூரிய அடுத்து பூமிக்கு அருகே இருக்கும் ஒளி மூலமாக விளங்குவது சந்திரன்.

✨சந்திரன் சூரியனின் ஒளியினை பிரதிபலிக்கும் தன்மை இருப்பதால் சந்திரன் நின்ற ராசிக்கு கேந்திரத்தில் நிற்கும் கிரகங்கள் வலுபெறும்.

✨சூரிய ஒளியை சந்திரனின் உதவியோடு கிரகங்கள் பெற்று வலுபெறும் நிலை. சரி எல்லா நிலைகளிலும் சந் கேந்திர வலிமையானதா..? நிச்சயமாக இல்லை. 

✨முதலில் சந் வலிமையாக இருக்க வேண்டும். 

✨சந்திரன் முழு வட்டத்தில் அரை வட்டம் மேல் இருக்க வேண்டும்.

✨சூரியனின் 4 10 இடத்தில் இருக்க வேண்டும்.

✨பௌர்ணமி அமைப்பில் இருப்பது முதல் தர அமைப்பு சந்திர கேந்திரமாகிவிடும். #padmahazan 

✨அதற்கு நேர் எதிராக அமாவாசை நிலைகளில் சந்திரனின் கேந்திரத்திற்கு வலிமை இருக்காது.

✨இந்த மாதிரி நிலைகளில் சந்திரன் கேந்திரத்தில் ஒரு கிரகம் நீசபங்கம் பெறும் என நினைப்பது தவறாக அமையும். 

✨முதலில் ஒளி பொருந்திய சந்திரனே நீசபங்கம் பெற வைக்க முடியும். ஒளி அற்ற மங்கிய சந்திரன் நீசபங்கம் பெற வைக்க முடியாது. 

✨மேலும் சந்திரன் பிற பாவர்கள் சனி ராகு சேர்க்கை பார்வை இல்லாமல் இருப்பதும் மிகமிக்கியம். #padmahazan 

✨அப்படி வலுஇல்லாத சந்திரன் கேந்திரத்தில் ஒரு கிரகம் நீசபங்கம் பெற்ற மாதிரி செயல்பட்டால் அந்த கிரகம் வேறுவிதமான பலத்தை வேறொரு வழியில் பெற்று இருக்கும். எகா திக் திருக் பலத்தை.

✨நான் பிடித்த முயலிற்கு மூன்று கால் என்று விதிவிலக்கு தெரியாமல் குழம்ப வேண்டாம். 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

2021 APRIL 9 அன்று எழுதிய பதிவு...

🤩 #Padmahazan 🤩

சுக்ரன் தரும் யோகம்

சுக்ரன் #hazan 

✨சுக்ரன் லக்னம் ராசி நட்சத்திரம் பிறந்தவர்கள்...
✨ லக்ன அல்லது சந்திரன் கேந்திர திரிகோணத்தில் ஆட்சி உச்சம் பெற்றவர்களின் பண்புகள்... Padmahazan 

✨சுக்ரன் என்றாலே சுகவாழ்வு ஆடம்பரம் பெண்கள் குறிப்பவர். 

✨வாழ்க்கை வாழ்வதற்கே என்ற மனநிலை கொடுக்கும் கிரகம்.

✨அழகான ஆடைகளையும் , விலைஉயர்ந்த வாகனம் வாங்க வைப்பது ...அழகான வீட்டை கட்டுவது... Padmahazan 

✨தன்னை அழகாக காட்டி கொள்வது, பிறர் அழகை ரசிப்பது...

✨சங்கீதம் இசை பாடல் இவற்றின் மீது ஆர்வம் எப்போதும் எதையாவது பாடுவது...

✨இன்பமான மனநிலை விரும்புவது...  
Padmahazan 

✨மனைவி காதலி இவர்கள் மீதான அன்பு...

✨இவற்றை கொடுப்பது சுக்ரனே.

✨கேது தசா வரை ஜாதகர் ஒரு மாதிரி இருந்து... சுக்ரன் தசாவில் முழுமையாக மாறுவார்...Padmahazan 

✨சுக்ர தசா வரும் வரை சாதாரண நடிகர் நடிகைகள் இருந்து தசா வந்ததும் முண்ணனியாகி மக்களை பெரிய அளவில் அழகால் ஈர்க்க வைப்பது இதே சுக்ரன். 

✨என்னங்க எனக்கு சுக்ரன் நல்லா இருக்கார் வீடு வண்டி வாகனம் மனைவி அமையவில்லை என்றால் தனிநபர் ஜாதகத்தில் அவரின் இருப்பு வலுவிற்கு ஏற்ப பலன் அமையும்.

🤩 #Padmahazan 🤩

8 april 2020ல் எழுதிய பதிவு... (அதாவது முழு ஊரட‌ங்கு காலம் )

வெளிநாட்டில் சிறைவாசம் அனுபவிக்கும் கிரக அமைப்பு & சொந்த தொழிலுக்கான கிரக நிலை

🍁 வெளிநாட்டு சிறைவாசம் & சொந்த தொழிலுக்கான கிரக அமைப்பு 🍁 #hazan 



ஜோதிடத்தில் சொல்லபட்ட கடுமையான கெடுபலனை தரும் பாவகங்கள் 6 8 12 இடங்கள். ஷோர் மார்க்கெட் போன்ற ஊக வியூக வருமானம், வெளிநாட்டு வாழ்வு போன்ற சுப பலனும், சிறைவாசம் தீராத நோய் உயிர் கண்டம் போன்ற அசுப பலனும் தன்னுள் வைத்து இருப்பதே இந்த 6 8 12 மறைவு ஸ்தானங்கள். 

6 8 12 நல்ல பலனை தருமா..? கெடு பலனை தருமா..? என்பது அவரவர்கள் ஜாதகத்தில் அந்தந்த பாவகங்கள் பெறும் சுபத்துவம் பாவத்துவம் பொறுத்து பலன் அமையும். 

கீழே கொடுக்கபட்டுள்ள ஜாதகத்தை பாருங்கள். 

ஜாதகர் தனுசு லக்னத்தில் பிறந்து உள்ளார். விருச்சிக ராசி அனுச நட்சத்திரம். தற்போது நடப்பில் சூரிய தசா சுக்ர புத்தி. 

இவரது ஜாதகத்தில் 8 மிட அதிபதியான சந்திரன் 12மிடத்தில் அமாவசை திதியில் நீசம் பெற்று பின் வீடு கொடுத்த நீச செவ்வாயோடு 8 12 பரிவரத்தனை பெற்று விடுகிறார். 

12மிட நீச செவ்வாய் சனியின் நேரடி பார்வையும், ராகுவோடு நீச இணைவில் இணைந்து நீச சந்திரனோடு பரிவர்த்தனை பெறுகிறார். செவ்வாய் இங்கே கடுமையான பாவத்துவமாக உள்ளார். 12மிடமும் அதன் அதிபதியும் பாவத்துவம் பெறுகிறது

நீச பரிவர்த்தனை பெற்ற சந்திர செவ்வாய் விபரீத ராஜயோகம் என்னும் நிலையிலும் வந்துவிடுகிறார்கள். 

தனுசு லக்ன ஜாதகருக்கு சுக்ர தசா வந்தால் சுக்ரன் ஜாதகனை எங்கே கவிழ்ந்து விடலாம் என்றே நேரம் பார்த்து கொண்டு இருப்பார். 

சுக்ரன் நேரடியாக நீச செவ்வாய், ஆட்சி பெற்ற சனியின் பார்வையில் தசா நடத்தி வருகிறார். சுக்ரனும் பாவத்துவமாக உள்ளார். 

சுக்ர தசா ராகு புத்தி ஜாதகரை வெளிநாட்டிற்கு அழைத்து சென்று சிறு சிறு குற்றங்களை செய்ய வைத்து, ஜாதகரை சிறிது காலம் சிறையில் வைத்து பின் மீண்டும் தாய்நாடு நகர்ந்தி விட்டது. 

நடப்பில் இவருக்கு சூரிய தசா சமையல் அடுப்பு சார்ந்த உற்பத்தி தொழிலை செய்ய வைத்து உள்ளது. 

அடுத்து வரும் சந்திர தசாவும் தொழில் ஸ்தான அதிபதியான புதனோடு இணைந்து இருப்பதால் அடுப்பு சம்மந்தப்பட்ட தொழிலில் நன்றாக இருப்பார். பெரிய யோகத்தை செய்துவிடாது ஆனாலும் வாழ்வை நகர்த்தி செல்லும் போதுமான வருமானத்தை தொடர்ந்து சந்திர தசா நிச்சயமாக தரும்.
இங்கே 8 12ம் இடம் மற்றும் அதிபதிக் குரு அல்லது சுக்ர பார்வையோ இணைவோ இருந்து இருக்குமானால் ஜாதகர் வெளிநாட்டில் சிறை என்ற நிலை வந்து இருக்காது. 

8 12ம் இடங்கள் சுபத்துவமாக குரு சுக்ர தொடர்பை பெறுகிறதோ இல்லையோ நிச்சயமாக சனி செவ் அமாவசை நிலை நீச பாவியர் தொடர்பை இணைவை பரிவர்த்தனையை பெற கூடாது. 

சம்மந்தப்பட்ட 6 8 12மிட தசாவில் ஜாதகரை வாட்டி எடுக்கும், தசா வராத வரை ஜாதகர் நன்றாக இருப்பார். 

6 8 12 என்பது இருமுனை கூர் கொண்ட கத்தி போன்ற பாவகங்கள். கொஞ்சம் பாவத்துவமாக மாறினாலும் அது ஜாதகரையே பதம்பார்த்துவிடும். 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

பின்குறிப்பு : சனி கேது இணைவு சூட்சம வலுத்தானே பின் எப்படி சனி பார்வை இங்கே கெடுதல் தரும் என்றால் கேதுவோடு சனியோ செவ்வாயோ இணைந்து அங்கே செவ்வாய் அல்லது சனி பார்வை இருக்க பாவத்துவமே மேலோங்கி இருக்கும். மாறாக சூட்சம வலு செயல்படாது என்று இவற்றை கோட்பாடாக கொடுத்த திரு. ஜோதிட கலையரசு ஆதித்ய குருஜி பின்னாளில் சூட்சம வலு பற்றி புரிதலை அதிகபடுத்தும் போது சொன்ன நுணுக்கம்.

🤩 #padmahazan 🤩

பித்ரு தோசம்

🍁 பித்ரு தோசம் 🍁 #hazan 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

சூரிய சந்திர இரு ஒளி கிரகங்களோடு இருள் சாயா கிரகங்கள் ராகு கேது இணைவது பித்ரு தோசத்தை குறிக்கும்.

1).சூரியன் + ராகு இணைவு,
2).சந்திரன் + ராகு இணைவு,
3).சூரியன் + கேது இணைவு,
4).சந்திரன் + கேது இணைவு, 
5). சூரியன்+சந்திரன் +ராகு இணைவு,
6). சூரியன்+சந்திரன்+கேது இணைவு, 

போன்றவை இதை குறிக்கும்.

சூரியனின் உண்டாக கூடிய ஒரு மனிதன் தன்னை தானே யார் என்று உணர்தல், தன் திறனை வெளிபடுத்துதல், தந்தை வழி ஆதரவு, தந்தையால் உண்டாக கூடிய சுப நிகழ்வுகள் போன்றவையும் 

சந்திரனால் நல்ல மனநிலை, ஆரோக்கியமான உடல்தேகம், நேர்மறையான எண்ணம், நல்ல சாப்பாடு கிடைப்பது, பிறருக்கு நல்ல உணவை கொடுப்பது, தாயாரால் உண்டாகும் ஆதரவு, தாயார் வழியால் உண்டாகும் சுப நிகழ்வுகள் போன்றவையும் 

ராகு கேதுக்களோடு சூரிய சந்திர கிரகங்கள் இணைவதால் ஜாதகருக்கு தாமதமாகி கிடைப்பது, அல்லது கிடைக்காமலேயே போவது போன்ற நிலையை தரும். 

அதாவது சூரியன் கெட்டவர்கள் தன்னுள் இருக்கும் திறமையை குணத்தை வெளிபடுத்த முடியாமல் திறன் இருந்தும் முயற்சி முன்னேற்றம் இல்லாமல் இருப்பதும், 

சந்திரன் ராகு கேதுவால் கெட்டவர்கள் குழப்பமான மனதோடு, சாப்பாட்டு பிரச்சனை, தாயார் வழி மன சங்கடங்களை அனுபவிப்பவராக இருப்பார்கள்.

இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் மூதாதையர்களுக்கு, பூர்வ ஜென்மத்தில் பெற்றவருக்கு செய்ய வேண்டிய சுப நிகழ்வுகளை ஆதரவை வளர்த்த பிறகு கொடுக்காத பிள்ளைகளுக்கு இந்த கிரக அமைப்பு கர்மாவின் காரணமாக அமைந்து விடுகிறது. 

இந்த இணைவுகள் பெற்றவர்கள் தாய் தந்தைக்கு செய்ய வேண்டிய கடமைகளை ஆதரவுகளை வாழ்நாள் முழுவதும் செய்து வருவதும், மூதாதையர் செய்ய வேண்டிய வழிபாடுகள் செய்வதும் அவசியம்.

எனக்கு சூரிய கேது சேர்க்கை உள்ளது, சந்திரன் ராகு சேர்க்கை உள்ளது என் தாய் தந்தை நன்றாக தான் உள்ளார்கள் என்றால் அது உங்களின் ஆளுமை, மனது சார்ந்த தாக்கத்தை கொடுத்து கொண்டு இருக்கும். 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

🤩 #padmahazan 🤩

விஷ்ணு பக்தி தரும் புதன்

🍁 விஷ்ணு பக்தியை தரும் புதன் 🍁 #hazan 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

புதனின் மிதுன கன்னி லக்னம் பிறப்பவர்கள்,

மிதுன கன்னி ராசி பிறப்பவர்கள்,

புதனின் ஆயில்யம் கேட்டை ரேவதி நட்சத்திரங்களில் பிறந்தவர்கள்,

புதனின் ஆயில்யம் கேட்டை ரேவதி லக்ன புள்ளியை பெற்றவர்கள்,

புதன் லக்ன ராசிக்கு கேந்திர கோணத்தில் வலுவாக ஆட்சி உச்சம் நட்பு நீசபங்கம் நீசபங்கராஜயோகம் , 

புதனின் ஆயில்யம் கேட்டை ரேவதித்தில் கிரகங்கள் நின்று தசா புத்தி நடத்தும் நிலையில்...

ஒருவருக்கு விஷ்ணு அவதாரங்கள் மீதான அளவு கடந்த பக்தியும் அன்பும் வெளிபடும். 

இதில் எவ்வளவுக்கு எவ்வளவு அவர் ஜாதகத்தில் புதன் தொடர்பில் உள்ளதோ அவ்வளவுக்கு விஷ்ணு பக்தனாக ஜாதகர் இருப்பார்.

உதாரணமாக ஒருவர் விருச்சிக லக்னத்தில் பிறந்து கேட்டை நட்சத்திரத்தில் லக்னம் நின்று, ராசி மீனத்தில் ரேவதியில் நின்று, புதன் லாப ஸ்தானத்தில் உச்சமாகிட, 

லக்ன புள்ளி மற்றும் நட்சத்திரம் இரண்டும் புதனின் ரேவதி கேட்டை யில் இருக்கும்.

புதன் ராசிக்கு ஏழில் புதன் உச்சமாகி, லக்னத்திற்கு ஐந்தை பார்ப்பார்.

இந்த ஜாதகர் நிச்சயமாக விஷ்ணு பக்தராக இருப்பார்.

இதே அமைப்பில் ஒன்பதில் குரு ஆயில்யம் நட்சத்திரத்தில் நின்று தசா வந்தால் ஜாதகர் விஷ்ணு ஆலயங்களில் அர்ச்சகர், கோவில் பணியில் இருப்பவர், அல்லது புதிய விஷ்ணு ஆலய திறப்பது அது சார்ந்த சேவை செய்வது போன்ற நிலையை தரும்.

புதன் _ கணிதன்_ முக்காலத்தை உணர்பவன்_கிருஷ்ணர் _ மஹா விஷ்ணு 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

🤩 #padmahazan 🤩

வெளிநாட்டில் லட்சங்களில் சம்பளம் வாங்க வைக்கும் ராகு தசா

🍁 லட்சத்தில் சம்பளம் வாங்கும் பன்னாட்டு ஐபோன் நிறுவன ஊழியர் ஜாதகம் 🍁

#hazan 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

பலருக்கு கனவாக இருப்பது, உயர்ந்த நிலையில் வேலை என்பதுவாக இருக்கும். அதிகபடியான சம்பளம் என்பதுவாக இருக்கும். இது அனைவருக்கும் கிடைக்குமா..? என்றால் அது பலருக்கு அமைவது இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அப்படி அமைந்த ஜாதகத்தை இந்த பதிவில் காண்போம்.

இந்த ஜாதகர் வெளிநாட்டில் உலக அளவில் தனது பொருட்களை விற்கும் ஒரு electronic device தயாரிப்பு நிறுவனத்தில் வெளிநாட்டிலேயே தங்கி வேலை பார்த்து வருகிறார். இவரது மாத சம்பளம் லட்சங்களை தாண்டும்.


ஜாதகர் பிறந்தது, கடக லக்னம் மேஷ ராசி கிருத்திகை நட்சத்திரம். #padmahazan 

இவரது லக்னாதிபதியான சந்திர பகவான் வளர்பிறையில் எந்த விதமான பாவியர் தொடர்பும் இன்றி தனித்து தனது நண்பரான செவ்வாய் வீட்டில் ஜீவன ஸ்தானத்தில் இருக்கிறார். ஜாதகருக்கு நீடித்த ஜீவனமும் வருமானமும் வேலை பார்க்கும் இடத்தில் தனி கௌரவமும் இருக்கும் என்று தெளிவாகின்றது 

நான் என் பதிவுகளில் மீண்டும் மீண்டும் சொல்லும் லக்னாதிபதி வலுத்தவர்கள் யோக வாழ்வை பெறுபவர்கள். இது போல பாவர் தொடர்பு இன்றி லக்னாதிபதி இருப்பது மிகப்பெரிய யோகம் என்று எழுதி வருகிறேன்.

இவருக்கு லக்னத்தை தனித்த சுக்ரன் பார்த்து லக்னமும் வலு பெறுகிறது. 

இவருக்கு உத்தியோக ஸ்தானத்தில் தன ஸ்தான அதிபதி பரிவர்த்தனை பெற்று 2 6 பரிவர்த்தனையாக சூரியனும் குருவும் தங்களுக்குள் பரிவர்தனை பெறுகின்றனர்.
#padmahazan 

இந்த லக்னத்தின் யோகாதிபதி செவ்வாயும் பாக்கியாதிபதி குருவும் தன ஸ்தானத்தில் ராகுவோடு சேர்க்கை பெறுகின்றனர். பொதுவாகவே குரு செவ்வாய் இருவரும் கடக லக்னத்திற்கு தர்ம கர்மாதிபதி யோகத்தை தருவார்கள். 

ஜாதகருக்கு 2000 ஆண்டில் ஆரம்பித்த ராகு தசா எட்டாமிட கேது சாரம் பெற்று தர்மகர்மாதிபதிகளான குரு செவ் சேர்க்கை பெற்று 2002 முதல் 2020 வரை ராகு தசா நடத்தி உள்ளார்.

ஜாதகரை வெளிநாட்டு பன்னாட்டு நிறுவனத்தில் உயர்ந்த உத்தியோக முன்னேத்தை கொடுத்து இருக்கிறார் இந்த ராகு. 

ராகுவிற்கு வீடுகொடுத்த சூரியனும் பரிவர்த்தனை மூலம் ஆட்சி வலுவோடு 6ல் உத்தியோக ஸ்தானத்தில் உள்ளார். 

இரண்டில் உள்ள குரு பகவான் 6மிடம் 8 மிடத்தை பார்வை செய்வதும், 12ம் அதிபதி புதன் 6ல் இருந்து 2ம் அதிபதி சூரியனோடு இணைந்து 12மிடத்தை பார்த்து வலுபெற வைப்பதும்.
#padmahazan 

 நடப்பில் இருந்த குருவோடு இணைந்த ராகு தசா ஜாதகரை தூர தேசமான வெளிநாட்டில் நல்ல தன பண சேர்க்கையை கொடுத்து உள்ளது.

தற்போது ஜாதகருக்கு குரு தசா நடப்பில் உள்ளது சுக்ர சாரம் பெற்ற குரு 6 8 மிடங்களை பார்த்து பரிவர்த்தனை பெற்று 6மிட சுப பலனை தரும் நிலையில் உள்ளார். குரு தசாவும் வேலை சார்ந்த யோகத்தை தரும்.

கடக லக்னத்தில் பிறந்த ஒருவருக்கு செவ்வாயோடு தொடர்பு பெற்ற எந்த தசாவும் யோகத்தை வழங்கும். கூடுமானவரை ஜாதகனை யோகம் செய்யாமல் போகாது. 

ஜாதகத்தில் லக்னம் லக்னாதிபதி வலுத்து, இந்த லக்னத்திற்கு யோகத்தை தரும் குரு பார்வை பெற்ற சூரிய தசா, அதன் பின் லக்னாதிபதி சந்திர தசா, பின் ராஜயோகாதிபதி செவ்வாய் தசா, அதனை அடுத்த குரு செவ் இணைந்த ராகு தசா, தற்போது பரிவர்த்தனை குரு தசா இவருக்கு லக்னாதிபதியான சந்திரனின் நண்பர்களது தசா அமைப்பு அடுத்தடுத்து இவருக்கு வந்தது யோகம். 
#padmahazan 

மாறாக இங்கே சனி தசா புதன் தசா கேது தசா சுக்ர தசா வந்து இருந்தால் ஜாதகர் இவ்வளவு பெரிய உத்தியோக உயர்நிலை பெற்று இருக்க முடியாது. நல்ல வேலையில் இருந்து இருப்பார் ஆனால் இவ்வளவு பெரிய யோகத்தை பெற்று இருக்க மாட்டார்.

லக்னம் லக்னாதிபதி வலுத்து எங்கேயும் பாவர்களான சனி ராகு செவ் தொடர்பு லக்னம் லக்னாதிபதி பெறாமல் 10 2 6 12 மிடம் வலுபெற்று பெரும் தன பண சேர்க்கை பெற்ற யோக ஜாதகம் இது.

இறுதியாக இந்த ஜாதகர் மேற்கத்திய நாட்டில் ஐபோன் நிறுவனத்தில் டெக்னாலஜி சம்மந்தப்பட்ட வேலையில் உள்ளார்.

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

#padmahazan

நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..?

🍁 நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..? 🍁 #hazan  ⚡️ஓர் கிரகம் நீச வீட்டில் ஓர் கிரகம் இருந்தாலே அது ஏதோ ஓர் வகை நீசபங்கம் பெற்று விட்டது முடிவ...