PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
திருமணத்தை நடத்தி வைக்கவும் , முறையான மணவாழ்விற்கு ஜாதகத்தில் வலுவாக இருக்க வேண்டியது ,
களத்திர ஸ்தானம் என்னும் 7 மிடம்,
குடும்ப ஸ்தானம் என்னும் 2 மிடம் ,
புத்திர ஸ்தானம் என்னும் 5 மிடம் ,
அதற்கு அடுத்ததாக குரு சுக்ரன் 3 12 அதிபதி தசா புத்தி நிலைகள்.
இந்த பதிவில் 2 5 7 பாவகத்தை வைத்து முதலில் சுருக்கமாக திருமண தடைக்கான கிரக அமைப்பை காணலாம்.
முதல் கிரக அமைப்பில்...
கடக லக்னம் ரிஷப ராசி...
லக்னத்தில் புத்திர ஸ்தான 5ம் அதிபதி நீசமாகி, 5ல் ராகு இருப்பதும், அந்த ராகுவிற்கு சனியின் 10 ம் பார்வையும் உள்ளது.
அதே அமைப்பு ராசிக்கு ஏழாம் இடமாகி ஏழாம் அதிபதி நீசம். ஏழில் ராகு.
சனி லக்னத்திற்கு எட்டில் ஆட்சி பெற்று வலுத்த தனது கொடிய பார்வையால் சிம்மத்தை குடும்ப பாவகத்தை பார்வை செய்கிறார்.
இந்த அமைப்பு தாமத திருமணத்தை தரும் கிரக நிலைதான்... மற்ற கிரக இருப்பு தசா புத்தி ஏற்ப திருமண வாழ்வில் இன்பமோ துன்பமோ தரும்.
இரண்டாவது கிரக அமைப்பில்...
மிதுன லக்னம் , சிம்ம ராசி.
லக்னத்திற்கு ஏழாம் அதிபதி எட்டில் நீசமாகி பின் 8 10 பரிவர்த்தனையாக உள்ளார்.
லக்ன ஏழாம் இடத்திற்கு செவ்வாய் மற்றும் சனி பார்வை ஒரு சேர உள்ளது.
அதே நிலையில் ராசிக்கு ஏழாம் அதிபதியான சனி எட்டில் மறைந்து இரண்டில் குடும்ப ஸ்தானத்தில் செவ் ராகு சேர்க்கை சனி பார்வையோடு...
இது போன்ற கிரக அமைப்புகள் 28 33 வயதிற்கு மேலே நடக்கும் தசா புத்தி மற்றும் ஜாதகத்தில் களத்திர காரகன் சுக்ரன் பெறும் சுப பாவ தொடர்பை பொறுத்து திருமணத்தை தடை செய்து தாமதபடுத்தியே தரும்.
இளம் வயதிலேயே திருமணத்தை கொடுத்தால் மணவாழ்வில் பிரச்சனை, குடும்ப வாழ்வில் நிம்மதி இழப்பு , போன்ற நிம்மதி இல்லாத சூழலை தந்து போகும்,
சனி எப்போது ஒருவரது ஜாதகத்தில் 2 7 8 பாவகத்தோடு தொடர்பு பெறுகிறரோ அப்போது திருமணம் சார்ந்த முடிவில் பொறுமையும் நிதானமும் அவசியம். அதைதான் சனி விரும்புவார்.
#padmahazan
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
No comments:
Post a Comment