Friday, February 25, 2022

விதியை மாற்ற முடியுமா...?

🍁 விதியை மாற்ற முடியுமா..? 🍁 #hazan

பலருக்கு இந்த பதிவு கசக்கும், கொஞ்சம் சர்க்கரையை வாயில் போட்டு கொண்டு படியுங்கள்.

விதியை யாராலும் மாற்ற முடியாது, விதிக்கபட்டது நடந்தே தீரும். கடவுளே ஆனாலும் விதியை மாற்ற முடியாது. கடவுளுக்கு உலக மக்கள் கோடி கணக்கான மக்களின் குறைகளை கேட்டு, குறை தீர்ப்பு முகாம்களை நடத்துவது இல்லை.

அத்தனை மக்களின் குறைகளை கேட்டு அதை நிவர்த்தி செய்வதுதான் கடவுளின் வேலையாக இருந்தால் பின் கர்மா எதற்கு..?

தாய் தந்தை சொல்வதை கேட்காமல் அவர்களுக்கு உயிரோடு இருக்கும் போது செய்ய வேண்டிய கடமைகளை செய்யாமல் இருப்பது,

கணவனையோ மனைவியையோ போட்டு படாய்படுத்துவோம், நமது ஆசைகளை அவர்கள் மீது திணித்து துணையை கஷ்டபடுத்துவோம், உன்னிடம் அது இல்லை இது இல்லை என்று பெரிய பூதாகரத்தை குடும்பத்தில் கொண்டு வருவது,

குழந்தைகளை பெற்று அதற்கு ஒழுக்காக ஒரு வாழ்வை ஏற்படுத்தி தருவது கிடையாமல், அவர்கள் மீதும் தங்களது ஆசையை திணிப்பது,

தொழில் வருமானம் வேலை என்று முன்னேற பலரது காலை வாரிவிடுவது,

அடுத்தவர் பொருளுக்கு ஆசைபட்டு அபகரிப்பது,

நம்புபவரை விட்டுவிட்டு போவது, இன்னும் கொலை கொள்ளை களவு என்று பலவற்றை செய்து,

இதெல்லாம் நமக்கு பதில் வினையாக நடக்கும் போது, நியூட்டன் விதிதான் ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை உண்டு.

நீங்கள் செய்தது மீண்டும் உங்களுக்கு நடக்கும் போது அது அப்போதுதான் மிகப்பெரிய துக்கமாக துயரமாக தெரியும்.

கடவுளிடம் 30 ரூபாய்க்கு விளக்கு ஏற்றி, 300 ரூபாய்க்கு அர்ச்சனை பண்ணி எதை செய்தாலும்...

கடவுள் சிரித்து கொண்டே பார்ப்பார், நீங்களா ஆடாத ஆட்டம் போடுறீங்க, இப்ப படாத பாடு படும் போது என் ஞாபகம் வருது, 30 ரூபாய்க்கு விளக்கை ஏற்றி விட்டால் செய்த பாவம் எல்லாம் அப்படியே போய்விடுமா..? " என்று கடவுள் சிரிப்பார்.

செய்த பாவத்தை அனுபவித்து கழிப்பதுதான் இந்த பிறப்பின் நோக்கமே. மற்றவை எல்லாமே நம் மனதை நாமே ஏமாற்றும் வேலைதான்.

திருமணமே ஆகாமல் இறப்பவர்கள், திருமணம் ஆனாலும் குழந்தை இல்லாமல் இறப்பவர்கள் சிலர் 20 வருடமாக எந்த சாமியும் இறங்கி வந்து என் வேண்டுதலை செய்யவில்லை என்றால் தவறு கடவுளிடம் இல்லை, நம்மிடம் உள்ளது.

85 வயதில் இறக்க வேண்டும் என்பவர் 20 வருடமாக தினமும் கோவில் போய் கடவுளை பார்த்தாலும் போய் சேர வேண்டிய நாளில் இறந்துதான் ஆக வேண்டும். ச்ச... தினமும் நம்மை பார்ப்பவர் இவர், அதனால் இன்னும் ஒரு 10 வருடம் extend பண்ணுவோம்னு கடவுள் மாற்றமாட்டார்.

உங்களது வாழ்வை நீங்கள்தான் தீரமாணித்து கொள்கிறீர்கள், கடவுள் எல்லாம் யாருக்கும் வாழ்வை எழுதுவது இல்லை,

சஞ்சீத கர்மா, ஆகாமிய கர்மா, பிராப்த கர்மா மூன்று மட்டுமே உங்களது வாழ்வை நிர்ணயிக்கிறது. அந்த மூன்றுமே உங்களது ஆசை எண்ணம் செயல்பாட்டாலேயே அமைகிறது.

உலக மக்களின் குறைகளை கஷ்டங்களை கேட்டு அதை மாற்றி அமைப்பது கடவுளின் வேலை கிடையாது. நாம் ஆடும் ஆட்டத்திற்கு நாம்தான் அனுபவித்து போக வேண்டும்.

கடவுளின் வேலை எதுதான் என்றால் பகவத் கீதை, இராமாயணம், மகாபாரதம், கருட புராணம், மற்றும் பையிள், குரான் போற்ற நூல்களின் வழியாக நீங்கள் இப்படிதான் வாழ வேண்டும் என்று அவர்கள் சொல்லி  சென்றதுதான்.

நல்லதை பண்ணுங்க நல்லதே நடக்கும்.
குழந்தை இல்லை என்று பல கோவில்களுக்கு போகும் முன்னர் ஒரு முறை அனாதை ஆஸ்ரமங்களிலோ ஆதரவற்ற குழந்தை காப்பகத்திலோ அவர்களுக்கு தேவைபட்ட துணி, பொருள், படிப்பு செலவு, சாப்பாட்டு செலவை நீங்கள் உங்களால் முடித்த அளவை அவர்களுக்கு கொடுத்தாலே, கோவிலுக்கு போன புண்ணியத்தை விட அதிகமாக உங்களுக்கு கிடைக்கும்.

ஆதரவில்லாத 4 குழந்தை என்றைக்கு எனக்கு சாப்பாடு கொடுத்தவர்களுக்கு நன்றி என்று கடவுளிடம் வேண்டும் போது தானாக உங்களுக்கு வாரிசு கிடைக்கும்.

#padmahazan



No comments:

Post a Comment

நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..?

🍁 நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..? 🍁 #hazan  ⚡️ஓர் கிரகம் நீச வீட்டில் ஓர் கிரகம் இருந்தாலே அது ஏதோ ஓர் வகை நீசபங்கம் பெற்று விட்டது முடிவ...