Wednesday, November 16, 2022

ரயில்வே அரசு பணிக்கான சூரியன் மற்றும் சனி வலு

🍁 அரசு பணிக்கான சூரியன் வலு 🍁 #hazan 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

நேற்று என் பதிவில் அரசு பணிக்கான கடைநிலை ஊழியராக இருப்பதற்கான சூரியனின் வலு பற்றிய பதிவில் ஒரு உதாரணமாக சிலவற்றை விளக்கி இருந்தேன். 

இன்று ரயில்வே துறையில் அலுவலக பணியில் ஆபிசர் ஆக இருக்க கூடிய ஒரு ஜாதக அமைப்பை உதாரணமாக காண்போம். 

கீழே கொடுக்கபட்டுள்ள கிரக அமைப்பில்...


தனுசு லக்னமும் விருச்சிக ராசியிலும் ஜாதகர் பிறந்து உள்ளார். 

அரசு பணிக்கான காரக கிரகம் ஆட்சி பெற்று லக்னத்தின் பாக்கிய ஸ்தானத்தில் வலுபெற்று உள்ளார்.

கூடுதலாக இங்கே குருவும் இணைந்து சூரியனும் சிம்மமும் கூடுதலாக சுபத்துவபடுத்தபட்ட கிரக நிலையாக உள்ளது.

அதே சிம்ம பாவகம் விருச்சிக ராசிக்கு கர்ம ஸ்தானம் பத்தாம் இடமாகி அங்கே சூரியனும் குருவும்.... #padmahazan 

குறிப்பாக இங்கே குரு அஸ்தங்க படாமல் உள்ளார். தானும் கெடாமல் உள்ளது. 

ராசிக்கு பத்தில் சூரியன் ஆட்சி பெற்று அரசு வேலையை தந்து உள்ளது. 

லக்னத்திற்கு பத்தில் சனி அவருக்கு மிகவும் பிடித்த கன்னி வீட்டில் உள்ளார். 

அந்த சனி பத்தில் இருப்பதாலேயே ஜாதகர் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் அலுவலராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கு சரியாக மத்திம வயதில் தனுசு லக்னத்திற்கு ஆறாம் அதிபதியான வேலையை தரும் சுக்ர தசா வந்ததாலும், சூரியன் நன்றாக இருப்பதாலும், மிக முக்கியமாக லக்னாதிபதி நட்பு வீட்டில் இருந்து குரு தன் வீட்டை தானே பார்த்து லக்னத்தை வலுபடுத்துவதாலும், வேலை கொடுத்து சிறப்பான ஒர் இடத்தில் வைத்து உள்ளது. 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

#padmahazan 

No comments:

Post a Comment

நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..?

🍁 நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..? 🍁 #hazan  ⚡️ஓர் கிரகம் நீச வீட்டில் ஓர் கிரகம் இருந்தாலே அது ஏதோ ஓர் வகை நீசபங்கம் பெற்று விட்டது முடிவ...