Tuesday, March 7, 2023

நட்சத்திர சார பலன்

🍁 நட்சத்திர சார பலன் 🍁 #hazan 

பாரம்பரிய ஜோதிடத்தில் ஒரு கிரகம் தனது பலனை 100% நிறைவாக தருமா..? அல்லது 60% குறைவாக தருமா..? வெறும் 20% போன போகுது என்று ஆறுதல் பரிசை போல பலன தருமா..? என்பதை நிர்ணயிப்பது

1). ராசி கட்டத்தில் கிரகம் பெறும் வலு , பிற கிரக இணைவு , பிற பார்வை.

2). நட்சத்திரம் கொடுத்த கிரக ஆதிபத்தியம் மற்றும் நட்சத்திர அதிபதி நின்ற பாவகம்.

3). வீடு கொடுத்த கிரக வலு. 

4). நவாம்சத்தில் எந்த வர்க்கத்தில் எந்த கிரக தொடர்பில் உள்ளது என்பதை பொறுத்து பலன் தரும்.

மேலே சொன்ன 4 நிலையும் நன்றாக இருக்க 100% சுப பலனை நன்றாக தரும். 

மேலே சொன்ன ஒவ்வொரு நிலையும் குறைய குறைய 20% ஆக குறையும், பலனும் குறைவாக கிடைக்கும். #padmahazan 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 


***********************

கீழே கொடுக்கபட்டுள்ள உதாரண கிரக அமைப்பை பாருங்கள்...

மீன லக்னம் , மூன்றில் குரு, 


குரு தசா லக்னாதிபதி தசாவாக அமைவதால் , நல்ல முயற்சி அதற்கு ஏற்ப காரிய வெற்றி லாபம் முன்னேற்றம் , தந்தை வழி ஆதரவு அல்லது நினைத்ததை அடையும் கடவுள் அனுக்கிரகம் , தொழில் கூட்டாளி நண்பர்கள் வாழ்க்கை துணை வழி ஆதரவை சிறப்பாக தரும்.

ஆனாலும் நட்சத்திர நிலை பொறுத்தே பலனின் தன்மை அமையும், 

குரு அவிட்டம் நட்சத்திரம் பெற்று , அதாவது விரையத்தில் ஆட்சி பெற்ற செவ்வாயின் சாரத்தில் உள்ளார்.

விரையாதிபதியான செவ்வாய் உடன் தன ஸ்தான அதிபதி விரையத்தில் இணைவு பெறுகிறார். 

குருவிற்கு நட்சத்திர கொடுத்த செவ்வாய் ஆகாத ஆதிபத்தியத்தில் ஆட்சி பெற்று தன ஸ்தான அதிபதியால் பாதிக்கபட்ட நிலை. 

குரு தசா மேலே சொன்ன நற்பலனை தந்தாலும் விரைய சாரம் அந்த பலனின் உண்டான சுப பலனான பணமும் பொருளும் கடன் அல்லது மருத்துவ அல்லது நஷ்ட கணக்கில் செல்லும். விரையாதிபதி சாரமும் பார்வையும் இங்கே முழுமையாக பாதிக்கும். 

அதாவது கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத சூழல் மாதிரியான பலனை தரும்.


இதே குரு நவாம்சத்தில் சனியோடு இணைந்து விருச்சிக அமைப்பில் இருப்பார். இதுவும் சிறப்பான ஒன்றாக அமையாது. 

அதாவது விரையாதிபதி செவ்வாயின் நவாம்ச வீட்டில் அதே விரையத்தில் வர்கோத்தமமான சனியோடு நவாம்ச இணைவில் குரு வருவார். 

இதை படிக்க படிக்க படிப்பவர்களில் பெரும்பாலானோருக்கு தலை சுற்றும். 

சில நாட்களுக்கு முன்பு வந்த ஜாதகம். குரு தசா அப்படி ஒன்றும் பெரிதாக பலன் தரவில்லை, தொழில் செய்தும் வருமான தடை.

பதிவு புரியாதவர்கள் மீண்டும் மீண்டும் படியுங்கள் புரியவரும்.

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

●●●●●●●●●●●●●

என்னுடைய பதிவுகளில் 99% நட்சத்திர சார விளக்கத்தை எழுதுவது இல்லை, காரணம் புரிய வைப்பது கொஞ்சம் கடினம் , எழுத எழுத பதிவு நீளும், படிப்பவர்களுக்கு ஓர் விதமான அழுப்பும் , புரியாத விரக்தியும் படிப்பவர்களுக்கு ஏற்படும். 

அதன் காரணமாகவே நட்சத்திர சார நவாம்ச நிலைகளை விளக்குவது கிடையாது. 

பலன் எடுக்கும் போது கணக்கில் வைத்து கொள்வதோடு சரி. பதிவுகளில் எழுதுவதை தவிர்த்து வருகிறேன். 

என்னுடைய கணிப்பும் நடப்பும் பதிவுகளில் வந்தவர்களது கணிப்பு சரியாக அமையும் காரணமும் இந்த நட்சத்திர சார நவாம்ச நிலை அடங்கும்.

பாரம்பரிய ஜோதிடத்தின் அடிப்படைகளில் ஒன்று சாரநாதன். பதிவுகளில் எழுதுவது இல்லை அதை பற்றி மற்றபடி அதில் பெரும் பங்கு பலன் சொல்வதிலும் நடப்பில் கிரக தசா பலன் நடைபெறுவதையும் காண முடியும். 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

#padmahazan

No comments:

Post a Comment

நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..?

🍁 நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..? 🍁 #hazan  ⚡️ஓர் கிரகம் நீச வீட்டில் ஓர் கிரகம் இருந்தாலே அது ஏதோ ஓர் வகை நீசபங்கம் பெற்று விட்டது முடிவ...