Saturday, November 12, 2022

வெளிநாட்டில் லட்சங்களில் சம்பளம் வாங்க வைக்கும் ராகு தசா

🍁 லட்சத்தில் சம்பளம் வாங்கும் பன்னாட்டு ஐபோன் நிறுவன ஊழியர் ஜாதகம் 🍁

#hazan 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

பலருக்கு கனவாக இருப்பது, உயர்ந்த நிலையில் வேலை என்பதுவாக இருக்கும். அதிகபடியான சம்பளம் என்பதுவாக இருக்கும். இது அனைவருக்கும் கிடைக்குமா..? என்றால் அது பலருக்கு அமைவது இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அப்படி அமைந்த ஜாதகத்தை இந்த பதிவில் காண்போம்.

இந்த ஜாதகர் வெளிநாட்டில் உலக அளவில் தனது பொருட்களை விற்கும் ஒரு electronic device தயாரிப்பு நிறுவனத்தில் வெளிநாட்டிலேயே தங்கி வேலை பார்த்து வருகிறார். இவரது மாத சம்பளம் லட்சங்களை தாண்டும்.


ஜாதகர் பிறந்தது, கடக லக்னம் மேஷ ராசி கிருத்திகை நட்சத்திரம். #padmahazan 

இவரது லக்னாதிபதியான சந்திர பகவான் வளர்பிறையில் எந்த விதமான பாவியர் தொடர்பும் இன்றி தனித்து தனது நண்பரான செவ்வாய் வீட்டில் ஜீவன ஸ்தானத்தில் இருக்கிறார். ஜாதகருக்கு நீடித்த ஜீவனமும் வருமானமும் வேலை பார்க்கும் இடத்தில் தனி கௌரவமும் இருக்கும் என்று தெளிவாகின்றது 

நான் என் பதிவுகளில் மீண்டும் மீண்டும் சொல்லும் லக்னாதிபதி வலுத்தவர்கள் யோக வாழ்வை பெறுபவர்கள். இது போல பாவர் தொடர்பு இன்றி லக்னாதிபதி இருப்பது மிகப்பெரிய யோகம் என்று எழுதி வருகிறேன்.

இவருக்கு லக்னத்தை தனித்த சுக்ரன் பார்த்து லக்னமும் வலு பெறுகிறது. 

இவருக்கு உத்தியோக ஸ்தானத்தில் தன ஸ்தான அதிபதி பரிவர்த்தனை பெற்று 2 6 பரிவர்த்தனையாக சூரியனும் குருவும் தங்களுக்குள் பரிவர்தனை பெறுகின்றனர்.
#padmahazan 

இந்த லக்னத்தின் யோகாதிபதி செவ்வாயும் பாக்கியாதிபதி குருவும் தன ஸ்தானத்தில் ராகுவோடு சேர்க்கை பெறுகின்றனர். பொதுவாகவே குரு செவ்வாய் இருவரும் கடக லக்னத்திற்கு தர்ம கர்மாதிபதி யோகத்தை தருவார்கள். 

ஜாதகருக்கு 2000 ஆண்டில் ஆரம்பித்த ராகு தசா எட்டாமிட கேது சாரம் பெற்று தர்மகர்மாதிபதிகளான குரு செவ் சேர்க்கை பெற்று 2002 முதல் 2020 வரை ராகு தசா நடத்தி உள்ளார்.

ஜாதகரை வெளிநாட்டு பன்னாட்டு நிறுவனத்தில் உயர்ந்த உத்தியோக முன்னேத்தை கொடுத்து இருக்கிறார் இந்த ராகு. 

ராகுவிற்கு வீடுகொடுத்த சூரியனும் பரிவர்த்தனை மூலம் ஆட்சி வலுவோடு 6ல் உத்தியோக ஸ்தானத்தில் உள்ளார். 

இரண்டில் உள்ள குரு பகவான் 6மிடம் 8 மிடத்தை பார்வை செய்வதும், 12ம் அதிபதி புதன் 6ல் இருந்து 2ம் அதிபதி சூரியனோடு இணைந்து 12மிடத்தை பார்த்து வலுபெற வைப்பதும்.
#padmahazan 

 நடப்பில் இருந்த குருவோடு இணைந்த ராகு தசா ஜாதகரை தூர தேசமான வெளிநாட்டில் நல்ல தன பண சேர்க்கையை கொடுத்து உள்ளது.

தற்போது ஜாதகருக்கு குரு தசா நடப்பில் உள்ளது சுக்ர சாரம் பெற்ற குரு 6 8 மிடங்களை பார்த்து பரிவர்த்தனை பெற்று 6மிட சுப பலனை தரும் நிலையில் உள்ளார். குரு தசாவும் வேலை சார்ந்த யோகத்தை தரும்.

கடக லக்னத்தில் பிறந்த ஒருவருக்கு செவ்வாயோடு தொடர்பு பெற்ற எந்த தசாவும் யோகத்தை வழங்கும். கூடுமானவரை ஜாதகனை யோகம் செய்யாமல் போகாது. 

ஜாதகத்தில் லக்னம் லக்னாதிபதி வலுத்து, இந்த லக்னத்திற்கு யோகத்தை தரும் குரு பார்வை பெற்ற சூரிய தசா, அதன் பின் லக்னாதிபதி சந்திர தசா, பின் ராஜயோகாதிபதி செவ்வாய் தசா, அதனை அடுத்த குரு செவ் இணைந்த ராகு தசா, தற்போது பரிவர்த்தனை குரு தசா இவருக்கு லக்னாதிபதியான சந்திரனின் நண்பர்களது தசா அமைப்பு அடுத்தடுத்து இவருக்கு வந்தது யோகம். 
#padmahazan 

மாறாக இங்கே சனி தசா புதன் தசா கேது தசா சுக்ர தசா வந்து இருந்தால் ஜாதகர் இவ்வளவு பெரிய உத்தியோக உயர்நிலை பெற்று இருக்க முடியாது. நல்ல வேலையில் இருந்து இருப்பார் ஆனால் இவ்வளவு பெரிய யோகத்தை பெற்று இருக்க மாட்டார்.

லக்னம் லக்னாதிபதி வலுத்து எங்கேயும் பாவர்களான சனி ராகு செவ் தொடர்பு லக்னம் லக்னாதிபதி பெறாமல் 10 2 6 12 மிடம் வலுபெற்று பெரும் தன பண சேர்க்கை பெற்ற யோக ஜாதகம் இது.

இறுதியாக இந்த ஜாதகர் மேற்கத்திய நாட்டில் ஐபோன் நிறுவனத்தில் டெக்னாலஜி சம்மந்தப்பட்ட வேலையில் உள்ளார்.

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

#padmahazan

No comments:

Post a Comment

நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..?

🍁 நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..? 🍁 #hazan  ⚡️ஓர் கிரகம் நீச வீட்டில் ஓர் கிரகம் இருந்தாலே அது ஏதோ ஓர் வகை நீசபங்கம் பெற்று விட்டது முடிவ...