எந்த லக்னத்திற்கும் 5ம் அதிபதி லக்னாதிபதிக்கு நட்பு கிரகமாகவே இருக்கும். கஷ்டத்தில் நண்பன் உதவுவது போல லக்னாதிபதியின் நட்பு கிரகமான ஐந்தாம் அதிபதி ஜாதகரை காப்பாற்றும் உறுதுணையாகவே இருப்பார்.
ஐந்தாம் அதிபதி ஒருவரது கடந்த ஜென்ம சுப அசுப நிகழ்வு காரணமாக சேர்த்த பூர்வ புண்ணியத்தின் அளவை குறிப்பார்.
முதல் குழந்தை, ஆண் குழந்தையினால் உண்டாகும் ஆதரவு, வாரிசால் உண்டாகும் பெயர் புகழ் ஜாதகருக்கு எவ்வளவு உண்டாகும் என்பதை குறிக்கும் இடம் ஐந்தாம் இடம்.
ஒருவரது சிந்தனை யோசனை எது மாதிரியாக இருக்கும், பிறரை பற்றிய சிந்தனை கெடுதலாக உள்ளதா நல்லபடியாக என்பதை காட்டுவதும் இதே ஐந்தாம் இடம் மற்றும் அதன் அதிபதியே. #padmahazan
பூர்வ புண்ணியத்தில் சேர்த்த சுப பலனாக தற்போதைய வாழ்வில் அதிர்ஷ்டமாக இருக்குமா அல்லது பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு பெறுவாரா என்பதை குறிப்பதும் பூர்வ புண்ணியாதிபதியே.
பொதுவாக ஐந்தில் சுபர்களாக குரு சுக்ரன் புதன் சுபர் சந்திரன் (லக்னத்திற்கு ஏற்ப) ஆட்சி உச்சம் பெறுவது நல்லது. ஆனால் இவர்களோடு சனி ராகு சேர்க்கை பார்வை பெற கூடாது. #padmahazan
அதே சமயம் 5ம் அதிபதி பாவர்களான சனி செவ்வாய் வரும் போது ஆட்சி பெறாமல் வேறு பாவத்தில் உச்சம் பெறுவது அல்லது நட்பு வலுவோடு அமைவது யோகத்தை தரும். சனி செவ் நின்ற வீடடை கெடுப்பார்கள் என்ற விதிபடி ஐந்தாம் இடத்தை கெடுப்பது ஜாதகருக்கு வாழ்வில் போராட்டத்தை தரும்.
ஐந்தில் குரு சுக்ரன் புதன் இணைந்து இருப்பது பார்ப்பது மிக யோகமான குழந்தை பாக்கியமும் அதிர்ஷ்டமும் பெறுவார்கள். #padmahazan
ஐந்தில் சனி செவ் ராகு இணைவது பார்ப்பது போன்ற நிலையில் தாமத குழந்தை பாக்கியம் அல்லது குழந்தைகளால் ஆதரவு இல்லாத நிலை போன்ற பலன்கள் இருக்கும்.
ஐந்தாம் அதிபதி எப்போதும் நீசம் ஆக கூடாது, நீசபங்கம் பெற்றால் ஓரளவு நல்ல பலன் இருக்கும். #padmahazan
அஸ்தங்கம் ராகுவால் கிரகணம் போன்ற நிலையில் இருக்கும் ஐந்தாம் அதிபதி குழந்தை விஷயத்தில் சாதகமற்ற பலனை தருவார்கள்.
5மாதி உச்சம் பெற்றவர்கள் அந்த தசா புத்தி காலத்தில் நன்றாக இருப்பார்கள். நினைத்தது நடக்கும்.
ஐந்தாம் இடம், ஐந்தாம் அதிபதி, குரு என மூன்று நிலையும் ஒரு சேர கெடும் போது குழந்தை பாக்கியம் தடைபடும், இந்த மூன்றும் பலமாக இருக்கும் போது காலத்திலேயே குழந்தை பெற்று அவர்களால் ஆதரவும் பெயர் புகழும் கிடைக்கும்.
🤩 #padmahazan 🤩 #குரு #சுக்ரன் #புதன் #ஐந்தாம்அதிபதி #குழந்தை #பாக்கியம் #சனி #ராகு #கேது
No comments:
Post a Comment