ஜோதிடத்தில் சொல்லபட்ட கடுமையான கெடுபலனை தரும் பாவகங்கள் 6 8 12 இடங்கள். ஷோர் மார்க்கெட் போன்ற ஊக வியூக வருமானம், வெளிநாட்டு வாழ்வு போன்ற சுப பலனும், சிறைவாசம் தீராத நோய் உயிர் கண்டம் போன்ற அசுப பலனும் தன்னுள் வைத்து இருப்பதே இந்த 6 8 12 மறைவு ஸ்தானங்கள்.
6 8 12 நல்ல பலனை தருமா..? கெடு பலனை தருமா..? என்பது அவரவர்கள் ஜாதகத்தில் அந்தந்த பாவகங்கள் பெறும் சுபத்துவம் பாவத்துவம் பொறுத்து பலன் அமையும்.
கீழே கொடுக்கபட்டுள்ள ஜாதகத்தை பாருங்கள்.
ஜாதகர் தனுசு லக்னத்தில் பிறந்து உள்ளார். விருச்சிக ராசி அனுச நட்சத்திரம். தற்போது நடப்பில் சூரிய தசா சுக்ர புத்தி.
இவரது ஜாதகத்தில் 8 மிட அதிபதியான சந்திரன் 12மிடத்தில் அமாவசை திதியில் நீசம் பெற்று பின் வீடு கொடுத்த நீச செவ்வாயோடு 8 12 பரிவரத்தனை பெற்று விடுகிறார்.
12மிட நீச செவ்வாய் சனியின் நேரடி பார்வையும், ராகுவோடு நீச இணைவில் இணைந்து நீச சந்திரனோடு பரிவர்த்தனை பெறுகிறார். செவ்வாய் இங்கே கடுமையான பாவத்துவமாக உள்ளார். 12மிடமும் அதன் அதிபதியும் பாவத்துவம் பெறுகிறது
நீச பரிவர்த்தனை பெற்ற சந்திர செவ்வாய் விபரீத ராஜயோகம் என்னும் நிலையிலும் வந்துவிடுகிறார்கள்.
தனுசு லக்ன ஜாதகருக்கு சுக்ர தசா வந்தால் சுக்ரன் ஜாதகனை எங்கே கவிழ்ந்து விடலாம் என்றே நேரம் பார்த்து கொண்டு இருப்பார்.
சுக்ரன் நேரடியாக நீச செவ்வாய், ஆட்சி பெற்ற சனியின் பார்வையில் தசா நடத்தி வருகிறார். சுக்ரனும் பாவத்துவமாக உள்ளார்.
சுக்ர தசா ராகு புத்தி ஜாதகரை வெளிநாட்டிற்கு அழைத்து சென்று சிறு சிறு குற்றங்களை செய்ய வைத்து, ஜாதகரை சிறிது காலம் சிறையில் வைத்து பின் மீண்டும் தாய்நாடு நகர்ந்தி விட்டது.
நடப்பில் இவருக்கு சூரிய தசா சமையல் அடுப்பு சார்ந்த உற்பத்தி தொழிலை செய்ய வைத்து உள்ளது.
அடுத்து வரும் சந்திர தசாவும் தொழில் ஸ்தான அதிபதியான புதனோடு இணைந்து இருப்பதால் அடுப்பு சம்மந்தப்பட்ட தொழிலில் நன்றாக இருப்பார். பெரிய யோகத்தை செய்துவிடாது ஆனாலும் வாழ்வை நகர்த்தி செல்லும் போதுமான வருமானத்தை தொடர்ந்து சந்திர தசா நிச்சயமாக தரும்.
இங்கே 8 12ம் இடம் மற்றும் அதிபதிக் குரு அல்லது சுக்ர பார்வையோ இணைவோ இருந்து இருக்குமானால் ஜாதகர் வெளிநாட்டில் சிறை என்ற நிலை வந்து இருக்காது.
8 12ம் இடங்கள் சுபத்துவமாக குரு சுக்ர தொடர்பை பெறுகிறதோ இல்லையோ நிச்சயமாக சனி செவ் அமாவசை நிலை நீச பாவியர் தொடர்பை இணைவை பரிவர்த்தனையை பெற கூடாது.
சம்மந்தப்பட்ட 6 8 12மிட தசாவில் ஜாதகரை வாட்டி எடுக்கும், தசா வராத வரை ஜாதகர் நன்றாக இருப்பார்.
6 8 12 என்பது இருமுனை கூர் கொண்ட கத்தி போன்ற பாவகங்கள். கொஞ்சம் பாவத்துவமாக மாறினாலும் அது ஜாதகரையே பதம்பார்த்துவிடும்.
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
பின்குறிப்பு : சனி கேது இணைவு சூட்சம வலுத்தானே பின் எப்படி சனி பார்வை இங்கே கெடுதல் தரும் என்றால் கேதுவோடு சனியோ செவ்வாயோ இணைந்து அங்கே செவ்வாய் அல்லது சனி பார்வை இருக்க பாவத்துவமே மேலோங்கி இருக்கும். மாறாக சூட்சம வலு செயல்படாது என்று இவற்றை கோட்பாடாக கொடுத்த திரு. ஜோதிட கலையரசு ஆதித்ய குருஜி பின்னாளில் சூட்சம வலு பற்றி புரிதலை அதிகபடுத்தும் போது சொன்ன நுணுக்கம்.
No comments:
Post a Comment