ஒரு கிரகம் உச்சம் பெறுகிறது என்றால் அந்த கிரகம் தான் தர வேண்டிய விஷயத்தை அளவிற்கு அதிகமாக ஜாதகருக்கு கொடுக்க உள்ளது என்பது அர்த்தம். நல்ல பலனோ கெட்ட பலனோ அதிகமாக உச்ச கிரகம் கொடுக்கும். #padmahazan
அப்படி உச்ச வலுபெற்ற கிரகம் தான் தர வேண்டிய உச்ச பலனை கீழ்கண்ட கிரக அமைப்பில் இழக்கும். நீச கிரகத்தோடு மிக நெருக்கமாக இணைவது, ராகு சனி இணைவு பார்வையில் இருப்பது, அமாவசை சந்திரன் இணைவில் இருப்பது, சூரியனால் அஸ்தங்கம் பெற்று இருக்கும் நிலைகளில் உச்சன் தனது உச்சபலனை பிற கிரகங்களால் இழப்பார்கள்.
கீழே உள்ள ஜாதகர் கடக லக்னம் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்து உள்ளார். தற்போது உச்ச சுக்ர தசா நடப்பில், சுக்ரன் உச்சமாக தோன்றினாலும் நீச புதனோடும், அமாவசை நெருங்கும் சந்திரனோடும் ஒரே டிகிரிகுள் இணைந்து உள்ளார். சுக் சந் புத 14° டிகிரியில். சுக்ரன் பாவரான தேய்பிறை சந்திரனாலும், நீச புதனுக்கு நீசபங்கத்தை கொடுத்தும் தனது உச்ச பலத்தை இழக்கிறார்.
ஜாதகருக்கு சுக்ர தசா சாதாரண ஒரு தசாவாக செயல்படுகிறது. உச்ச சுக்ரன் தரும் ஆடம்பர வீடு, வண்டி, பெண்களால் யோகம் போன்றவை நடப்பில் இல்லை. சுக்ரனுக்கு வீடு கொடுத்த குருவும நீசமாகி நீசனுக்கு வக்ர சனி பார்வையில்.
வீடு கொடுத்தவன் நீசமாகி பாவத்துவம் பெற்று, கடும் பாவியான அமாவசை நெருங்கும் சந்திரன் மற்றும் புதனை சுபத்துவமும் நீசபங்கராஜயோகத்தை கொடுத்த சுக்ரன் தனது வலுவை இழந்து உள்ளார்.
இது போன்ற நிலைகளில் உச்ச கிரகங்கள் தனது உச்ச பலனை பிற கிரகங்களால் இழந்து இருக்கும்.
🤩 #padmahazan 🤩 #உச்சன் #உச்சம் #சுக்ரன் #புதன் #சந்திரன்
No comments:
Post a Comment