Thursday, January 9, 2025

நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..?

🍁 நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..? 🍁 #hazan 

⚡️ஓர் கிரகம் நீச வீட்டில் ஓர் கிரகம் இருந்தாலே அது ஏதோ ஓர் வகை நீசபங்கம் பெற்று விட்டது முடிவிற்கு வந்துவிடுவார்கள். 

அது அப்படி அல்ல... 

⚡️ஓர் நீச கிரகம் நீசபங்கம் ஏற்பட தேவையான கிரக நிலைகள் எளிதாக அமைந்துவிடும் , அது சாதாரணமாக அமைப்பு. #padmahazan ஆனால் அதே கிரகம் நீசபங்க ராஜயோகம் பெறுவதற்கான கிரக நிலைகள் மிக அரிதாக நடக்கும்.

⚡️வருட கிரகங்களான குரு சனி போன்றவர்கள் நீசம் பெற்றால் நீசபங்கம் எளிதாக அடையும் ,
நீசபங்க ராஜயோகத்தை அடைவது என்பது எப்போதாவது நடக்கும். 

⚡️நீசபங்கம் என்பது வக்ரம் பெறுவது , வர்கோத்தமம் பெறுவது , பரிவர்த்தனையாக இருப்பது , திக் பலம் பெறுவது , சந்திர கேந்திரத்தில் இருப்பது போன்றவை அடங்கும்.

⚡️நீசபங்க ராஜயோகம் என்பது நீசனுக்கு வீடு கொடுத்த கிரகம் உச்சம் பெறுவது, நீசனோடு உச்சன் இணைவது , #padmahazan நீசன் நின்ற வீட்டு அதிபதி ஆட்சியாக இருப்பது போன்றவை வலுவான நீசபங்க ராஜயோகத்தை செய்யும். 

⚡️நீச குரு சனியோடு பரிவர்த்தனையாக இருக்கும் போது நீசபங்கம்தான் பெறும் இதுவும் இங்கே நம்பக தன்மை அற்ற நிலைதான் குரு பலனில் ஜாதகனை மண்ணை கவ்வ வைப்பார் குருவின் காரகத்துவ ஆதிபத்திய பலனில் பெரும் குறை வெளிபடும் , மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்கிய கதை.

⚡️நீச குருவோடு உச்ச செவ்வாய் இணைவது , நீச குரு வீடு கொடுத்த சனி உச்சம் பெற்றால் அது நீசபங்க ராஜயோகம் பெறும். 

⚡️குரு நீசமாகும் போது எப்போதும் உச்ச செவ்வாய் இணையும் கிரக நிலை ஏற்படாது. #padmahazan அதே போல குரு நீசமாகும் போது எல்லாம் சனி ஆட்சி உச்சமாக இருப்பதும் கிடையாது. 

⚡️இதில் இருந்து பிரித்து புரிந்து கொள்ளலாம்... குரு சனி போன்ற வருட கிரகங்கள் பெரும்பாலும் நீசபங்கத்தை மட்டுமே எளிதாக பெரும் நீசபங்க பங்க ராஜயோகத்தை பெறுவது மிக அரிதான நிகழ்வு ஆகும். 

⚡️சில கிரக நிலை நீசம் பெற்ற கிரகம் எந்த நீசபங்கம் பெறாமல் நீசம் மட்டுமே பெற்று இருக்கும். மனதை தேற்றி கொள்ள கூட ஓர் நீசபங்க விதி கிடைக்காதபடி மற்ற கிரகங்கள் இருக்கும். #padmahazan அப்போது உண்மை ஏற்று கொண்டுதான் ஆகனும். " நீசம் மட்டுமே உள்ளது " என்று. 

⚡️நீசமோ..?
⚡️நீசபங்கமோ..?
⚡️நீசபங்க ராஜ யோகமோ..? 

⚡️எதுவாக இருந்தாலும் அதன் தசா வந்தால் மட்டுமே அதனால் உண்டாகும் நன்மை தீமை முழுமையாக ஜாதகர் அனுபவிப்பார். புத்தி காலத்தில் சிறு சிறு ஏற்ற இறக்கத்தை ஏற்படுத்தும். 

⚡️ அதே போல நீசபங்கம் நீசபங்க ராஜ யோகம் போன்றவை 6 8 12 மறைவு ஸ்தானத்தில் ஏற்படும் போது பலனும் மறைவாக முறையற்ற வழியில் ஜாதகர் பெறுவார். லக்னத்திற்கு கேந்திர கோணத்தில் இருக்கும் நீசபங்கம் நற்பலனை நல்ல வழியில் சிறப்பாக தரும். நன்றாக இருக்கும்.

#padmahazan

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY 
WHATS APP 8300 620 851

No comments:

Post a Comment

நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..?

🍁 நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..? 🍁 #hazan  ⚡️ஓர் கிரகம் நீச வீட்டில் ஓர் கிரகம் இருந்தாலே அது ஏதோ ஓர் வகை நீசபங்கம் பெற்று விட்டது முடிவ...