🍁 களத்திர யோகம் 🍁 #hazan
சில வாரங்களுக்கு முன்பு ஒரு ஜாதகி ஜாதகத்தை அனுப்பி, திருமணம் சார்ந்த கேள்விகளை கேட்டாங்க, அப்போது முதல் இன்று வரை ஞாபகமாக இருந்த காரணத்தால் இந்த ஜாதகத்தை இந்த பதிவில் எழுதுகிறேன்.
( அவங்களது தனிபட்ட கேள்விகள் சார்ந்த எதையும் எழுதாமல் பொதுவான கிரக அமைப்பை பற்றி விளக்குகிறேன் )
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
கிட்டத்தட்ட ஒரு மாத காலம் ஆகி இருக்கும் இந்த ஜாதகத்திற்கு பலன் சொல்லி , இருப்பினும் இந்த கிரக அமைப்பு எனக்கு நல்ல ஞாபகமாக இருக்க காரணம்...
1). லக்னாதிபதி சுக்ரன் வாழ்க்கை துணையை குறிக்கும் ஏழாம் இடத்தில் பாக்கியாதிபதி புதனோடு இணைந்து லாபாதிபதியும் களத்திராதிபதி செவ்வாய் சூரியன் பரிவர்த்தனை.
ஏழாம் இடமான வாழ்க்கை துணையை குறிக்கும் பாவகத்தில் முக்கூட்டு கிரகங்களான சுக்ரன் புதன் சூரியன் இணைந்து இருப்பது யோகம். பாவகிரக பார்வை இன்றி தோசமின்றி ஏழாம் இடம் அமைந்து உள்ளது.
சூரியன் ஒரு பாவகிரகம் ஏழில் உச்சமாக கூடாது இருப்பினும் சுக்ர புதன் இணைவில் சுபத்துவமாக சுபராகி பாவதன்மையை இழக்கிறார்,
2). ஏழாமதிபதி செவ்வாய் நிலை
துலா லக்னத்தை பொறுத்தவரை செவ்வாய் ஏழில் ஆட்சி பெற்றாலோ நான்கில் உச்சமானலோ இரண்டில் ஆட்சி பெற்றாலோ கடுமையான குடும்ப வாழ்வை பாதிப்பார்,
துலா லக்னத்தை பொறுத்தவரை செவ்வாய் 3 11 மிடங்களில் நட்பு வலுவோடு இருப்பது மிகப்பெரிய யோகம்.
ஒரு பாவ கிரகமான செவ்வாய் 3 11 ல் இருப்பது திருமண வாழ்வை துலா லக்னத்திற்கு பாதிக்காது. கூடுதலாக வளர்பிறை சந்திர இணைவில் லாபத்தில் இருப்பது யோகம்.
குடும்ப வீட்டை பார்த்தாலும் வளர்பிறை சந்திர இணைவில் சுப பார்வையாக இரண்டாம் வீட்டை பார்த்து வலுபடுத்துகிறார். 2 மிடத்தை பார்வையோடும், 7மிடத்தோடு பரிவர்த்தனையாகவும் செவ்வாய் சுப அமைப்பாக தொடர்பு கொள்வது சிறப்பு
7 11 சுப பரிவர்த்தனையாக உள்ளது.
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
3). துலா லக்னத்திற்கு கடன் நோய் எதிரியை தரும் கிரகமான குரு 4ம் கேந்திர வீட்டில் நீசமாகி உள்ளார், ஆறில் சனி கேது இணைவில் ஆறாமிடமும் கடுமையாக பாதிக்கிறது,
கடன் நோய் இல்லாத வாழ்வை இது தரும்,
ஒரு ஜாதகத்தில் குரு நீசமாக கூடாது, அதை பற்றி பின்னர் சொல்கிறேன்.
சரிப்பா சரி... இதுக்கெல்லாம் என்ன பலன் அப்படினு நீங்க கேட்பது புரிகிறது...
நல்ல மண வாழ்க்கை அமைந்து கணவர் வழியில் நல்ல முன்னேற்றம், சுப நிகழ்வுகள், சந்தோசமான குடும்ப வாழ்வை வாழ போகும் கிரக அமைப்பு.
திருமணத்திற்கு பிறகு கணவரால் முன்னேற்றம் , கணவருக்கு முன்னேற்றம் , புகுந்த வீட்டில் இவர் வாழ போன பிறகு உண்டாகும் யோகம் அனைத்தையும் இந்த 7 11 பரிவர்த்தனை காட்டுகிறது.
இந்த ஜாதகத்தின் ஒரு குறை...
புத்திர காரகன் நீசமாகி இருப்பதும்,
புத்திர ஸ்தான அதிபதி சனி ஆறில் கேதுவோடு இணைவதும் தான்...
தாமத புத்திர பாக்கியம் அல்லது குழந்தை வழி பிரச்சனைகள் அல்லது ஏதோ ஒரு மன ரீதியாக கஷ்டத்தை பெறுவார். ( அது கணவர் ஜாதகத்தை பொறுத்து கூடுதலாகவோ குறைவாகவோ அமையும். )
ஒரு சராசரியான குடும்ப வாழ்க்கை, கணவரோடு பிரச்சனை இன்றி வாழும் நிலை, குழந்தைகளால் மகிழ்ச்சி என கொடுத்து வைத்த யோகம் உள்ளது.
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
பின் குறிப்பு : 7மிடம் கெட்டு 11 மிடம் வலுத்தால் இருதாரம் உண்டாகும் என்ற விதி இங்கே எடுபடாது ஏழாம் இடத்தில் சனி செவ்வாய் இணைவு பார்வை ராகு கேது இருப்பது அதிபதி செவ்வாய் நீசம் அல்லது மறைந்து கெடுவது போன்ற நிலையில் 7ம் கெட்டு பின் 11 வலுபெற வேண்டும், 7மிடத்தில் பாக்கியாதிபதி புதனும் லக்னாதிபதி சுக்ரன் இணைவது ஏழாம் இடத்தை சுப வலுபெற வைக்கின்றனர். ஒரு தாரம் தான் அமையும்
#padmahazan
No comments:
Post a Comment