🍁 புதன் குரு தொடர்பு 🍁 #hazan
குரு + புதன்
குரு பார்த்த புதன்
சென்ற பதிவில் புதன் சனி தொடர்பிற்கு உண்டான பலன்களை எழுதி இருந்தேன். இந்த பதிவில் புதன் குரு தொடர்பிற்கு உண்டான பலன்களை கீழே சொல்கிறேன்.
🌿புதனோடு குரு இணைவது ,
🌿குருவின் 5 7 9 பார்வையில் புதன் இருப்பது ,
ஆகிய இரண்டு நிலைகளை பற்றி காண்போம்
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
புத்திக்காரகன் புதன் தனக்காரகன் குருவோடு தொடர்பு பெறும் போது,
ஜாதகரது புத்திசாலிதனம் முழுவதும் தனச்சேர்க்கை பற்றியே இருக்கும். சிந்தனை எண்ணம் அனைத்துமே பணம் தனம் சேர்ப்பது , சுய மரியாதை , பிறர் ஜாதகர் மீது வைக்கும் அந்தஸ்து , ஒழுக்கமான வாழ்வை பற்றியே இருக்கும்.
பணம் சேர்க்கும் திட்டங்களை அதிகபடியாக ஜாதகர் போட்டு வைப்பார். #padmahazan
புத்திசாலி தனம் முழுவதும் நல்ல விதமாக யாருக்கும் பாதகமோ கெடுதலோ இல்லாதபடி இருக்கும். சுயநலம் இல்லாத பொதுநலத்துடன் கூடிய புத்திசாலி தனம் ஜாதகரிடம் வெளிப்படும்.
இவர்களுக்கு ஜோதிடம் , பூஜை, ப்ரோகிதம், சாஸ்திரம், இதிகாசம் , புராணம் , கீர்த்தனை , காயத்ரி மந்திரம், உபாசனை போன்றவை எளிதில் கைகூடும், அவற்றின் மீதான ஆர்வமும் கூடுதலாக அமைந்துவிடும். லக்ன ராசிக்கு ஒன்பதாம் பாவகத்தோடு குரு புதன் இணைவது , குருவோ புதனோ 9 அதிபதி ஆக இருந்து இணைந்து விட்டால் கண்டிப்பாக மேலே சொன்ன ஒன்றில் ஆர்வம் அதிகம் இருக்கும்.
ஜாதகரது பேச்சு, எழுத்து , படைப்பாற்றல் அனைத்தும் உயர்நிலை மக்களால் போற்றபடும்,
பேச்சில் தெய்வீகம் , மரியாதையான வார்த்தைகள் வெளிபடும். வாக்கு ஸ்தானம் பாதிக்காத வரை உண்மை மட்டுமே பேசி , பொய் பேசாத குணத்தை கொண்டு இருப்பார். #padmahazan
கோவில் அர்ச்சகர், பூசாரி, கோவில் சம்மந்தப்பட்ட பணி செய்பவர்கள், உயர்நிலை பொறுப்பு வகிப்பவர்கள், ஆலோசனை தரும் நிலையில் உள்ளவர்கள், ஆசிரியர்கள் , வங்கி பணியாளர், வட்டி தொழில் சார்ந்த நண்பர்களை ஜாதகர் பெற்று இருப்பார். நல்ல முறையான நட்பை மரியாதை நிமித்தமாக எளிதில் பெற்றுவிடுவார்கள்.
இவர்களது பேச்சு இயல்பாகவே மற்றவர்களை வாழ்வில் வழிகாட்டும் விதமாகவே இருக்கும், பண்பான வார்த்தைகளால் மற்றவர்களை தன் வசபடுத்தி , தான் சொல்வதை கேட்டால் நல்ல எதிர்காலம் உண்டு என்பதை உணர வைப்பார்கள்.
ஆலோசனை கொடுத்து வழிகாட்டும் விதமாகவே இவர்களது பேச்சும் எழுத்தும் சிந்தனையும் அமையும். #padmahazan
நண்பர்களாலும் , தாய்மாமனாலும் தன பணம் ஆதரவை பெறுபவர்களாக இருப்பார்கள்.
வியாபார ரீதியிலான வர்த்தகம் நியாயமானதாக அமைத்து கொள்வார்கள், மற்றவர்களது பணம் எனக்கு எதற்கு..? என்று நியாயமான வியாபார யுக்தியை கையாண்டு, நல்ல வாடிக்கையாளர் பெற்று தொழில் வர்த்தக ரீதியாக நல்ல பெயரினை எடுப்பார்கள்.
வங்கி சார்ந்த money management, audit, account, financial management, business guidance, சார்ந்த படிப்பில் ஆர்வமாக இருப்பார்கள்.
பள்ளி கல்லூரி அனைத்திலும் ஆசிரியர்களுக்கு பிடித்த மாணவ மணியாக விளங்குவார்கள் , படிப்பில் கெட்டியாக அதிகபடியான புரிதலை பிறர் துணையின்றி புரிந்து கொள்வார்கள். #padmahazan
சிலருக்கு ஜோதிடம் , மந்திர சாஸ்திரம், உபாசனை போன்றவற்றை பிறருக்கு கற்று கொடுக்கும் நிலையும் தரும்
🌿 புதன் குருவால் பார்க்கபடுவது 🌿
புதனோடு குரு இணைவதை விட , குருவால் பார்க்கபட்ட புதன் மேம்பட்ட பலனை தருவார்,
இவர்களது படைப்பாற்றல் , பேச்சு திறன் பலரால் எளிதில் அங்கீகரிக்கப்படும்,
இவர்களது படிப்பு , எதிர்காலம் சார்ந்த தன சேர்க்கை மீதான தெளிவான திட்டத்தை போட்டு வைத்து கொண்டே வாழ்வில் பணம் சேமிப்பார்கள்.
வரவு செலவு கணக்குகளை நேர்த்தியாக கையாண்டு, ஒரு பைசா கூட எங்கே போகிறது வருகிறது என்று கவனிப்பார்கள். கஞ்ச தன்மை வெளிபடாது , ஆயினும் பணம் சார்ந்த நிர்வாகம் சிறப்பாக இருக்கும். #padmahazan
இவர்கள் பேசும் போது பிறர் , கேட்பவர்கள் வயதில் மூத்தவராகவே இருந்தாலும் மற்றவர்கள் ஏற்று கொள்வார்கள். இவர்கள் சொன்னால் சரியாக இருக்கும் என்ற பேச்சுக்கு மரியாதை கிடைக்கும்.
ஒரு கடுமையான சண்டைக்காரரிடம் கூட பேசி தன் கருத்தை புரிய வைத்துவிடுவதில் வல்லவர்கள் புதன் குரு தொடர்பு பெற்றவர்கள்.
புத்தக வாசிப்பு, புத்தகம் சேமித்து வைப்பது, புத்தகங்களுக்கு அதிகபடியாக செலவு செய்வது, புத்தகங்களை பிறருக்கு தானமாக கொடுப்பது, புத்தகங்கள் மீதான மரியாதை அதிகபடியாக கொண்டு இருப்பார்கள்.
கடவுளுக்கு நிகரான பக்தியை இவர்கள் படிப்பு, வாசிப்பு, படைப்பாற்றலுக்கு தருவார்கள்.
இன்னும் விளக்கமாக சொல்லபோனால் புத்திசாலி தனமும் படிப்பும் தரும் சரஸ்வதி புதனும் , தனத்தை தரும் லெக்ஷ்மி குருவும் இணைந்து இருப்பது, சரஸ்வதியும் லெக்ஷ்மி இணைந்து ஜாதகருக்கு அருள் தருவதை போல சிறப்பான பலனை தரும். #padmahazan
முழுச்சுபரான குருவும் , சுபரோடு இணைந்த போது சுபராகும் புதனும் இணையும் போது,
குரு மற்றும் புதன் இருவருமே மேம்பட்ட , படிப்பு புத்திசாலிதனம் வியாபாரம் வழியாக உண்டாகும் தனபண சேர்க்கை கௌரவம் அனைத்தும் சுபமாக அமையும் யோகத்தை தருவார்கள்.
💥💥💥💥💥💥🙂🙂🙂💥💥💥💥💥💥💥
சென்ற புதன் சனி தொடர்பு பற்றிய பதிவு என் ஐடியில் இருக்கும் , படிக்க விருப்பம் உள்ளவர்கள் அவற்றை படித்து கொள்ளலாம்...
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
No comments:
Post a Comment