#hazan #நீசபங்கம் #சந்திரன்
✨ஜோதிடத்தில் சூரிய அடுத்து பூமிக்கு அருகே இருக்கும் ஒளி மூலமாக விளங்குவது சந்திரன்.
✨சந்திரன் சூரியனின் ஒளியினை பிரதிபலிக்கும் தன்மை இருப்பதால் சந்திரன் நின்ற ராசிக்கு கேந்திரத்தில் நிற்கும் கிரகங்கள் வலுபெறும்.
✨சூரிய ஒளியை சந்திரனின் உதவியோடு கிரகங்கள் பெற்று வலுபெறும் நிலை. சரி எல்லா நிலைகளிலும் சந் கேந்திர வலிமையானதா..? நிச்சயமாக இல்லை.
✨முதலில் சந் வலிமையாக இருக்க வேண்டும்.
✨சந்திரன் முழு வட்டத்தில் அரை வட்டம் மேல் இருக்க வேண்டும்.
✨சூரியனின் 4 10 இடத்தில் இருக்க வேண்டும்.
✨பௌர்ணமி அமைப்பில் இருப்பது முதல் தர அமைப்பு சந்திர கேந்திரமாகிவிடும். #padmahazan
✨அதற்கு நேர் எதிராக அமாவாசை நிலைகளில் சந்திரனின் கேந்திரத்திற்கு வலிமை இருக்காது.
✨இந்த மாதிரி நிலைகளில் சந்திரன் கேந்திரத்தில் ஒரு கிரகம் நீசபங்கம் பெறும் என நினைப்பது தவறாக அமையும்.
✨முதலில் ஒளி பொருந்திய சந்திரனே நீசபங்கம் பெற வைக்க முடியும். ஒளி அற்ற மங்கிய சந்திரன் நீசபங்கம் பெற வைக்க முடியாது.
✨மேலும் சந்திரன் பிற பாவர்கள் சனி ராகு சேர்க்கை பார்வை இல்லாமல் இருப்பதும் மிகமிக்கியம். #padmahazan
✨அப்படி வலுஇல்லாத சந்திரன் கேந்திரத்தில் ஒரு கிரகம் நீசபங்கம் பெற்ற மாதிரி செயல்பட்டால் அந்த கிரகம் வேறுவிதமான பலத்தை வேறொரு வழியில் பெற்று இருக்கும். எகா திக் திருக் பலத்தை.
✨நான் பிடித்த முயலிற்கு மூன்று கால் என்று விதிவிலக்கு தெரியாமல் குழம்ப வேண்டாம்.
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
2021 APRIL 9 அன்று எழுதிய பதிவு...
🤩 #Padmahazan 🤩
No comments:
Post a Comment