🍁 புதன் சனி தொடர்பு 🍁 #hazan
சனி புதன் இணைவு
சனியின் 3 10 பார்வையில் புதனை இருப்பது,
புதன் சனியை பார்ப்பது, போன்றவற்றிற்கான பலனை பதிவில் காண்போம்.
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
🌿புதன் சனி இணைவு 🌿
புத்திக்காரகன் புதனும் , கர்ம காரகன் சனியும் நேரடியாக இணைவில் இருக்கும் போது,
ஜாதகரது புத்திசாலிதனம் நிதானத்தை பெற்றுவிடும், மற்றவர்களை விட மெதுவான முடிவுகளை எடுப்பது , கணித திறன் , படிப்பு போன்றவற்றில் ஜாதகர் நிதானத்தையும் பொறுமையையும் கையாளுவார்.
புதன் சனி இணைவை பெற்றவர்கள் கற்பூரம் போல உடனே புரிந்து கொள்ள முடியாமல் போகும் ஆனால் படித்தவற்றை எளிதில் மறக்கமாட்டார்கள். #padmahazan
இவர்களுக்கு படிப்பறிவை விட அனுபவ அறிவு அதிகபடியாக செயல்படும்.
அன்றாடம் நடக்கும் அனுபவங்களில் இருந்து நிச்சயமாக ஒன்றை கற்று கொள்வார்கள்.
நடக்கும் எந்த ஓர் நிகழ்விலும் அனுபவத்தை சேர்த்து வைப்பார்கள். அதன் மூலம் பிறருக்கு பல வழிகாட்டல்களை தருவார்கள்.
புதன் சனி இணைவை பெற்றவர்கள் தம்பி இதை பண்ணுப்பா... எனக்கு இப்படிதான் நடந்தது , நான் இப்படிதான் இந்த வேலையை முடித்தேன் என்று தனக்கு நடப்பதை வைத்து மற்றவர்களுக்கு ஒரு வாய்ப்பை கொடுப்பார்கள்.
நிதானமான படித்தாலும் , கருத்தை அர்த்தத்தை முழுமையாக புரிந்து கொண்டு வருவார்கள்.
உங்கள் குழந்தைகளுக்கு புதன் சனி இணைவு இருந்தால் , மற்ற குழந்தைகளை படிக்கவில்லையே என்ற ஓப்பிட்டு பார்க்க கூடாது, புதன் சனி இணைவு என்றாலே படிப்பது, படிப்பு சார்ந்த வேலைகளை தாமதமாக முடிப்பார்கள். அவர்களிடத்தில் வேகத்தை எதிர்பார்க்க கூடாது.
தாவரவியல், வேளாண்மை படிப்பு, புவியியல், இயந்திரவியல் , பௌதிகம் (இயற்பியல்) , நவீன வேளாண்மை படிப்பு , மகசூல் சார்ந்த ஆராய்ச்சி படிப்பு , political science, economics சார்ந்த படிப்பில் ஆர்வம் இருக்கும்.
வேறு துறையில் இருந்தாலும் கூட மேலே சொன்னவற்றில் தனிபட்ட ஆர்வம் எப்போதும் இருக்கும்.
நிதானத்தை வெளிபடுத்தி பல கோணங்களில் யோசித்து திறமையை காட்டும் கேரம் போர்ட் , செஸ் போர்டு போன்ற விளையாட்டுகளில் அபாரமான நுணுக்கங்களை கற்று வைத்து இருப்பார்கள்.
இவரது பேச்சும், எழுத்தும் கதை கவிதைகள் போன்றவை வெகுஜன மக்களால் உடனடியாக ஏற்று கொள்ள கூடிய விதமாக இருக்கும் , மக்களால் ஆதரிக்க படும் விதமாக அமையும்.
புதன் சனி இணைவை பெற்றவர்கள் பொய்யை கூட நம்பவைத்துவிடும் கில்லாடிகள். #padmahazan
வாழ்விலும் இவர்களது செயல்பாடுகள் இது போல நுணுக்கங்களான முடிவுகளை நிதானமான கையாண்டு வெற்றி பெறுவார்கள்.
இவர்கள் சொந்தமாக தொழில் நடத்தும் சூழல் உண்டாகும் போது அதில் புதுமைகளை கொண்டுவருவாங்க,
வருமானம் சார்ந்த முடிவுகளில் மற்றவர்களை விட வித்தியாசமான சிந்தனை பெற்று இருப்பார்கள்.
தன்னை விட வயதில் மூத்த நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவதில் அதிக விருப்பம் கொண்டு இருப்பார்கள்.
இவர்களது நட்புக்கள் பெரும்பாலும் தொழில் வருமானம் சார்ந்து இருக்கும், நட்பில் பேசும் போதும் இதையே அதிகபடியாக பேசுவார்கள்.
🌿அடுத்ததாக புதனை சனி பார்ப்பதற்கான பலனை காண்போம்.🌿
சனியின் 3 10 பார்வை புதன் மீது இருப்பது என்பது சரியான நல்ல பலனை தராது.
இங்கே புதனின் செயல்பாடுகள் சனி பார்வையால் முடக்கபடும்.
பார்க்கும் சனியின் வலு ஏற்ப படிப்பில் தடை அல்லது படிப்பு மீதான ஆர்வம் இன்மை, போதுமான நினைவுபடுத்தும் திறன் இன்றி மறந்து போகும் நிலை தரும்.
தாய்மாமன் நண்பர்களால் மன அழுத்தம் உண்டாவது, இவர்களால் ஜாதகரது படிப்பும் சிந்தனையும் பாதிக்கபட்டு இருப்பது,
பேப்பர் சம்மந்தப்பட்ட documents, check, DD , ரசீது சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வருவது போன்ற பலன் நடக்கும்.
சிலருக்கு பேச்சில் உறுதி இல்லாமல் , பயந்து பயந்து பேசும் விதமான படபடப்பு தனத்தை கொடுத்துவிடும்.
🌿சனியும் புதனும் நேருக்கு நேராக பார்த்து கொள்ளும் நிலையில் ...🌿
ஜாதகரது பேச்சு சிந்தனை அனைத்தும் சனி கட்டுபடுத்துவார், இங்கே சனி வக்ரமாக தான் புதனை பார்ப்பார்,
ஜாதகரது பேச்சு, படைப்பாற்றல் , சிந்தனை , புத்திசாலி தனம் அனைத்தும் தன்னுடைய சுய தேவையை பூர்த்தி செய்து கொள்ளும் விதமாகவே இருக்கும்.
#padmahazan
அளவுக்கு அதிகபடியான சாதுர்ய பேச்சு , சூட்சம எண்ணத்தை கொடுத்து மற்றவர்களை விட இவரது பேச்சும் புத்தியும் மற்றவர்களை விட தனித்துவமாக வெளிபடும்.
தொழில் வருமான ரீதியாக பலரது நட்பு கிடைக்கும்,
இவர்களது பேச்சு வாடிக்கையாளரையும் சக வியாபாரிகளையும் கவர்ந்து இழுக்கும்.
படிக்கும் பட்டபடிப்பை விட சொந்த தொழில் வருமானத்திற்கு இது மிகவும் ஏற்ற கிரக நிலை.
சிலருக்கு மிக அரிதாக காது , தொண்டை , கழுத்து , நரம்பு மண்டலம் சார்ந்த குறைபாடு அல்லது பாதிப்பை தந்துவிடும். #padmahazan
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
No comments:
Post a Comment