நான் தினமும் நடந்து போகும் தெரு வழியே அடிக்கடி ஒரு மனநலம் பாதித்த நபரை காண்பேன். வயது 60 ற்கு மேல் இருக்கும். சிறு சிறு ஓட்டை கொண்ட அழுக்கு உடை, குளிக்காத முகம், உடலில் ஆங்காங்கே மண் ஒட்டி இருக்கும். ஒரு காலை இழந்து, முட்டிக்கு கீழே பிளாஸ்டிக் கட்டை காலில் நடந்து வருவார்.
அடிக்கடி ரோட்டில் என்னை யூனிபார்மில் பார்க்கும் அவர் சொல்வது , " வேலை பார்க்கும் போது கவனமாக பார்க்க வேண்டும், be carefull.." ,
மற்றொரு நாள் சொல்வார் " அந்த வேலையை யாரோ முடிக்காமல் வி்ட்டு விட்டு போய் விட்டார், நீங்க கொஞ்சம் முடிச்சிடுங்க.." ,
மற்றொரு நாள் " உங்களுக்கு நல்ல compliment இருக்கு keep it up..."
இப்படி ஆங்கிலமும் தமிழும் கலந்து ஒரு உயர் அதிகாரி போல, ரோட்டில் போகும் என்னிடம் ரோட்டு ஒரத்தில் உட்கார்ந்து கொண்டு சொல்வார். நான் கவனிக்காத மாதிரியே நகர்வேன்.
பலநாட்களுக்கு பிறகு அவரை பற்றி அந்த தெருவை சேர்ந்த முதியவர்கள் பேசும் போது சில விஷயங்களை கவனித்தேன்.
ரயில்வேயில் பணிபுரிந்த அதிகாரியாம் அவர், வேலையை விட்டு பணி ஓய்வு பிறகு வரும் பென்ஷன் மட்டுமே முப்பதாயிரம் மேலே இருக்குமாம்.
பணி ஓய்வு ஆகி சில ஆண்டுகள் இருக்கும் அல்லது காலை இழந்து வேதனையில் மனநலம் பாதித்து இருக்கும். இன்றுவரை அவர் அதே ரயில்வேயில் பணியாற்றும் மனநிலையே உள்ளார். மனம் அதே நிலையில் வாழ்கிறது. இன்னும் தன்னை ஒரு அதிகாரியாக உணர்ந்து தனி உலகில் வாழ்கிறார்.
கிழிந்த உடை, குளிக்காத உடல், ஊனமுள்ள உடல், பிறர் சொல்வதை புரியாது யாசகம் பெறும் நிலை, இரும்பு சார்ந்த பணி, பித்து பிடித்தல் என்னும் மனநல பாதிப்பு இவை அனைத்துமே சனி தரும் பலன்கள்.
அனைவருக்குமே சனி இந்த பலனை தருவாரா..? என்றால் நிச்சயமாக இல்லை.
1).எவர் ஒருவருக்கு லக்னம் லக்னாதிபதி சனியின் இணைவு, பார்வை பெற்று கெட்டு,
2). சிந்தனை பாவகம் என்னும் 5 மிடமும் அதிபதியும் சனி பார்வை இணைவில் கெட்டு,
3). மனகாரன் மனநிலையை குறிக்கும் சந்திரனும் சனி பார்வை இணைவால் பாதிக்கும் நிலையில்
மேலே சொன்ன மூன்று நிலையும் ஒரு சேர கெட்டு சனி தசாவோ, அல்லது லக்னாதிபதி ஐந்தாம் அதிபதி சந்திரன் இவர்களது தசா நடந்தால் அவர்கள் சனியின் பிடியில் பித்து நிலை என்றும் மனநிலை பாதித்த நபராக மாறுவார்கள்.
அடுத்தடுத்த இதே தசா வந்தால் வாழ்நாள் முழுவதும் இதே போன்ற நிலையில் வாழ வேண்டிய சூழலை சனி தருவார்.
சனி பிடியில் இவர்களது தற்போதைய நடைமுறை வாழ்வை ஏற்றுகொள்ளும் நிலையை இழப்பார்கள்.
மேலே சொன்ன நபருக்கும் இந்த அமைப்பு இருக்கும்.
கர்மாவின் அடிப்படையிலான பிறப்பில் ஒவ்வொருவருமே ஏதோ ஒரு வகையில் பாதித்து இருப்பார்கள்.
#padmahazan
No comments:
Post a Comment