Sunday, December 4, 2022

சந்திர ராகு இணைவு

🍁 சந்திரன் ராகு தொடர்பு 🍁 #hazan 

🌿சந்திரன் ராகு இணைவு 🌿

சென்ற பதிவுகளில் புதன் குரு தொடர்பு , புதன் சனி தொடர்பு பார்த்தோம் , அந்த வரிசையில் சந்திரன் ராகு தொடர்பை பற்றி காண்போம். 

🌟தாயார் மீதான அளவுக்கு அதிகமாக பாசத்தை வெளிபடுத்தும் இயல்பை கொண்டவர்களாக இருப்பார்கள். 

🌟தாயாருக்கு ஒரு கெடுதல் என்றால் தாயை விட இவர்கள் அதிகபடியாக பதறி , தனக்கு அப்படி ஒரு கெடுதல் வந்தால் கூட அவ்வளவு பதற மாட்டாங்க, ஆனால் தாயாருக்கு ஒரு பிரச்சனை என்றால் அதிகபடியாக மனசு கண் என அனைத்தும் கலங்குவார்கள். #padmahazan 

🌟அதிகபடியாக மன குழப்பத்தை பெற்றவர்களாகவும், எளிதில் ஒரு தீர்க்கமான முடிவுகளை எடுக்க முடியாத மனநிலை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். 

🌟மனம் எதிலும் திருப்தி அடையாது, இன்னும் இன்னும் வேண்டும் என்பதை போலான எண்ணம் அலைபாயும், 

🌟" மனம் ஒரு குரங்கு " என்பதை இவர்களது இவர்களது சிந்தனை எண்ணம் குரங்கு கிளைக்கு கிளைக்கு தாவுவதை போல மாற்றி கொண்டே போவார்கள். 

🌟புதுமையான விஷயங்களை உருவாக்கும் எண்ணங்களை எளிதில் பிடிபடும் இவர்களுக்கு, இவர்களது சிந்தனை எப்போதும் இன்றைய கால கட்டத்திற்கு என்பதை விட எதிர்காலத்திற்கு தேவையான முடிவுகளையும் புதுமைகளையும் கொண்டு இருக்கும். 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

🌟இவர்கள் உருவாக்கும் புதிய சிந்தனை பலரால் " ஆஹா..! என்னமா யோசிக்குறாங்க " என்பதை போல ஆச்சர்யபடுத்தும். 

🌟ஒரு எழுத்தாளருக்கோ திரைப்படத்துறையில் பணியாற்றும் நபருக்கோ இருக்கும் போது அங்கே மாறுபட்ட புதுமையான வசனங்களையோ , கதாபத்திர வடிவமைப்போ, அல்லது கேமரா frame works என்னும் video making மாதிரியான நுட்பத்தை வெளிபடுத்தும் எண்ணத்தை தரும். புதனின் வலு ஏற்ப அதை நடைமுறைபடுத்துவார்கள். Art director களுக்கும் இந்த இணைவு பெரும் அளவில் தொழில் சார்ந்த முன்னேற்றதை தரும். 

🌟இவர்களது கதைக்களமும் கதாபாத்திர வடிவமைப்பும் , நுணுக்கமான வேலைபாடுகளை செய்யும் எம்ப்ராய்டரி , modern drawing மாதிரியான விஷயங்களில் படைப்பாற்றல் அதிகபடியாக வெளிபடும். 

🌟அதிகபடியான பயணங்களை விரும்பும் மனதை பெற்றவர்கள், வீட்டில் இருப்பதை விட வெளி இடங்களில் அலைந்து திரிந்து புது புது இடங்களை சுற்றி பார்ப்பதில் அலாதி பிரியம் பெற்றவராக இருப்பார்கள். #padmahazan 

🌟உங்கள் துணைக்கு சந்திர ராகு இணைவு இருந்தால் சண்டை என்று ஒன்று வந்தால் உடனே" வாங்களேன் ஒரு லாங் டிரைவ் போலாம்" அப்படினு கேளுங்க உடனே "அப்படியா ஓகே" என்று சண்டையை மறந்து பயணத்திற்கு கிளம்பிடுவாங்க. (நல்ல ஒரு lead கொடுத்து உள்ளேன் பிடித்து கொள்ளுங்கள்) 

🌟புது புது உணவுகளை உண்பதிலும் , சாப்பாடு மீதான அளவு கடந்த ஆர்வத்தில் அதிகபடியாக சாப்பிட்டு உடல்நலத்தை கெடுத்து கொள்ளும் சுபாவம் பெற்று இருப்பார்கள். 

🌟இவர்களுக்கு எளிதில் புட் பாய்சன் என்னும் உண்ட உணவே விஷமாகி உடல்நலத்தை பாதிக்கும். அதிகபடியான வேதிபொருட்கள் சேர்க்கும் உணவுகளை இவர்கள் தவிர்ப்பது நல்லது. ஆனால் அதைதான் உண்பார்கள். 

🌟தாயார் வழி சொந்தம் உறவுகள் மீது அதிகபடியாக தொடர்பு இருக்கும். குறிப்பாக தாயார் வழி தாத்தா மீது அதிக பாசமாக இருப்பார்கள். 

🌟தாயார் வழி தாத்தா உணவு சார்ந்த தொழில்களான ஹோட்டல் , காய்கறி வியாபாரம், விவசாயம் , தோட்ட பணி, சிற்றுண்டி , கூல் டிரிங்க்ஸ் மாதிரியாக உணவு சாப்பாடு தொழில் அல்லது வேலை செய்பவராக இருக்க கூடும். 

🌟சந்திர ராகு இணைவு கடகம் அல்லது லக்னத்திற்கு நான்காம் வீட்டில் இருக்கும் போது தாயார் வழி சொத்து சேரும். இங்கே சந்திரன் தேய்பிறை ஆக கூடாது. 

🌟இதே இணைவு ராகு தேய்பிறை சந்திரனோடு இணைந்தாலோ அல்லது ராகு சந்திர இணைவு மகரம்,கும்பம், விருச்சிகம், மேஷத்தில் இருக்கும் போது அதிகபடியான பய உணர்வை தரும், 

🌟தெனாலி பட கமலை போல கரண்ட் என்றாலும் பயம், கரண்ட் போன பிறகான இருட்டு என்றாலும் பயம், இருட்டில் இருக்கும் சுவர் என்றாலும் பயம் , சுவற்றில் தெரியும் முகம் என்றாலும் பயம்... ?! 

சுவற்றில் எப்படிங்க முகம் தெரியும், இவர்களுக்கு தெரியும். #padmahazan 

🌟சந்திர ராகு இணைவு பெற்றவர்கள் அமானுஷ்யம் மாந்திரீக சார்ந்த தேவையற்ற பயமும் , பயத்தை தொடந்து உண்டாகும் மன குழப்பமும் அதிகபடியான பாதிப்பை உண்டு பண்ணும். 

🌟அதிகபடியாக over thinking இருக்கும். அதனாலேயே பிரச்சனைகளை ஊதி பெருதுபடுத்தும் குணம் வெளிபடும். 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

🌟இல்லாத ஒன்றை இருப்பதாக நினைத்து கொண்டு அதிகபடியாக மன நிம்மதியை இழப்பது இவர்களது வழக்கமான அன்றாட நிகழ்வாக இருக்கும். 

🌟நீர் சார்ந்த பாதிப்பை அதிகபடியாக அடிக்கடி இவர்கள் பெற்றுவிடுவார்கள். 

🌟அடிக்கடி உண்டாகும் ஜலதோசம் , தலையில் நீர்கோர்த்து கொள்வது , தீராத மார்பு சளி, சுவாச பிரச்சனை , பின்னாளில் உண்டாகும் ஆஸ்துமா, சைனஸ் போன்றவை இந்த இணைவு ஆறாம் இடத்தோடு தொடர்பு கொள்ள தரும். 

🌟இந்த இணைவில் நல்லதும் உண்டு , கெட்டதும் உண்டு. 

💥மேலே சொன்ன சந்திர ராகு இணைவில் சந்திரனது வளர்பிறை தேய்பிறை நிலையை பொறுத்தும், சந்திரனது ஆட்சி உச்சம் நீசத்தை பொறுத்தும் , பலனில் சிறு சிறு மாற்றம் தரும், ஒரு சிலருக்கு இதில் ஓரிரு பலன் பொருந்தாது. 

உதாரணமாக 

💥வளர்பிறை சந்திரன் உச்சமாகி ரிஷபத்தில் ராகுவோடு இணையும் போது மேலே சொன்ன நல்ல பலன்கள் அதிகபடியாகவும் , 

💥தேய்பிறை சந்திரனாக விருச்சிகத்தில் நீசமாகி ராகுவோடு இணையும் போது மேலே சொன்ன கெடுபலன்கள் அதிகபடியாகவும் ஜாதகரிடம் வெளிபடும். 

🌟சந்திர ராகு இணைவை பெற்றவர்கள் திருவண்ணாமலை கிரிவலம் போவது , பௌர்ணமி நாட்களில் பார்வதி தேவியை வணங்குவது போன்றவை பாதிப்பில் இருந்து விலக்கும். 

🌟அமானுஷ்யம் மாந்திரீகம் சார்ந்த எதையும் படிக்கவோ கேட்கவோ கூடாது, மாறாக மன அமைதி தரும் புத்தகங்களையும் இதிகாசங்களையும் படிக்கலாம். #padmahazan 

அல்லது 

" வாழும் காலம் யாவுமே…
தாயின் பாதம் சொர்க்கமே…
வேதம் நான்கும் சொன்னதே…
அதை நான் அறிவேனே… 
அம்மா என்னும் மந்திரமே…
அகிலம் யாவும் ஆள்கிறதே… " 

" நூறு சாமிகள் இருந்தாலும்
அம்மா உன்னைப்போல் ஆகிடுமா
கோடி கோடியாய் கொடுத்தாலும்
நீ தந்த அன்பு கிடைத்திடுமா 

ரத்தத்தை நான்
தந்தாலுமே உன் தியாகத்துக்கு ஈடாகுமா
நான் பட்டக் கடன்
தீா்ப்பேன் என்றால் ஓா் ஜென்மம் போதாதம்மா
நடமாடும் கோயில் நீதானே " 

🌟மாதிரியான தாயார் பாடல்களை கேட்கும் போது உங்களுக்கு மன நிம்மதி கண்டிப்பாக வந்துவிடும். 

🌟இன்னும் சொல்ல போனால் சந்திர ராகு இணைவை பெற்ற பலரது caller tune , ring tone இதுவாகதான் இருக்கும். 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851

No comments:

Post a Comment

நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..?

🍁 நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..? 🍁 #hazan  ⚡️ஓர் கிரகம் நீச வீட்டில் ஓர் கிரகம் இருந்தாலே அது ஏதோ ஓர் வகை நீசபங்கம் பெற்று விட்டது முடிவ...