Thursday, September 1, 2022

கன்னி லக்னம் ராசி குணம்

 ❄🌟🍁கன்னி ராசி அல்லது லக்னம் பொதுவான குணம் 🍁🌟❄ #hazan 


💥12 ராசிகளுக்கும் தனித்தனியே ஒவ்வொரு குறிப்பிட்ட குணம் கொண்டு இருப்பார்கள். 


💥ஒரே ராசி அல்லது லக்னத்தில் பிறந்தவர்கள் தங்களுக்குள் உண்டாக புரிதல் அதிகபடியாக இருக்கும் காரணம் அவர்களது பொதுவான குணம் ஓரளவுக்கு ஒற்றுமையாக இருக்கும். 


💥அப்படியான கன்னி ராசி அல்லது லக்னத்தில் பிறந்தவர்களது பொதுவான குணத்தை இந்த பதிவில் காண்போம்.


🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉


🌟புதனின் குணத்தை வெளிபடுத்தும் கன்னியில் பிறந்தவர்கள் 


🌟இயல்பிலேயே கூச்ச சுபாவம் கொண்டவர்கள், புதிய நபர்களோடு பேசும் போது அவர்களை நம்புவதிலும் தனது சுய விபரங்களை தருவதிலும் கவனமாக இருப்பார்கள். 


🌟பேசும் போதே பிறரை எளிதாக எடை போட்டு கொண்டு அதற்கு ஏற்ப பேசி காரியத்தை முடிப்பவர்கள், 


🌟பேசும் போது சாதுர்யமாக பேசி எந்தவிதமான சிக்கலில் மாட்டி கொள்ளாமல் இருக்க பார்ப்பார்கள். 


🌟நண்பர்களுக்கு அதிகபடியான முக்கியத்துவம் தருவார்கள். நண்பர்களை தேர்வு செய்வதிலும் அவர்கள் மீதான நம்பக தன்மை ஏற்ப நட்பு கொள்வார்கள். #padmahazan 


🌟உண்மையான நண்பர்களுக்காக உறுதுணையாக இருந்து கடைசி வரை நட்பை வளர்த்து கொள்வார்கள். 


🌟யாரையும் ஏமாற்றினால் இவர்களுக்கு பிடிக்காது, ஆனால் எதிரிகளை சாதுர்யமாக பேசி மறைமுகமாக கவிழ்க்கவும் செய்வார்கள். 


PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 


🌟தன்னை சுற்றி நடக்கும் சகல நிகழ்வுகளையும் உன்னிப்பாக கவனித்து யார் யார் எப்படி என்று தெளிவாக மனதில் நிறுத்தி கொள்வார்கள். 


🌟வேலை தொழில் அனைத்திலும் இவர்களுக்கு என தனியென ஒரு நுட்பத்தை கண்டுபிடித்து அல்லது மற்றவர்களை விட வித்தியாசமான அனுகுமுறையில் முன்னேற்றத்தை உருவாக்கி கொள்வார்கள். 


🌟தன்னை சுற்றி நடக்கும் நிகழ்வு, சூழல், நபர்களுக்கு ஏற்ப பேசியும் நடந்தும் செயலினை தனக்கு சாதகமாக மாற்றி கொள்வார்கள். #padmahazan 


🌟நேரடியாக வாக்குவாதம் அடிதடி சண்டை விஷயங்களில் ஈடுபடுவதை முடிந்தவரை தவிர்க்கவே பார்ப்பார்கள். உதவிக்கு நண்பர்களை வைத்து கொண்டு எப்போதும் பிறரோடு மோதுவார்கள். 


🌟எதிரிகளுக்கு இடையே கலகத்தை ஏற்படுத்தி அவர்களுக்குள் அடித்து கொள்ள வைத்து விடும் ஆளுமை பெற்றவர்கள். 


🌟செய்தி வாசிப்பது, புத்தக படிப்பு , செய்தி கேட்பது, தகவல் பரிமாற்றம் சார்ந்தவற்றில் ஆர்வம் அதிகமாக கொண்டு இருந்து, அன்றைய காலகட்ட நிகழ்வுகளை தெரிந்து கொள்வார்கள். 


🌟பிறர் பேசவிட்டு அதிலிருந்து நுணுக்கங்களை உன்னிப்பாக கவனித்து தெரிந்து கொள்வார்கள். 


🌟பொறுமையான பேச்சில் பிறரை கவரும் விதமாக வார்த்தை பயன்படுத்தி சுற்றி இருப்பவர்களை கவரும் திறமை அதிகபடியாக பெற்றவர்கள். #padmahazan 


🌟கஷ்டபட்டு உழைப்பதை விட புத்தியை பயன்படுத்தி உட்கார்ந்த இடத்தில் இருந்தே சம்பாதிப்பதை அதிகபடியாக விரும்புவாங்க.


🌟படிப்பாலேயே சமுதாயம் முன்னேற்றம் பெரும் என்று படிப்பு சார்ந்த விழிப்புணர்வு, பிறருக்கு படிப்பால் உண்டாகும் மேன்மை எடுத்து சொல்லி படிக்க சொல்வார்கள். 


🌟தான் படிக்காவிட்டாலும் வரும் தலைமுறையாவது படிக்கனும் என்ற கொள்கை கொண்டவர்கள். 


⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐


❄❄❄கன்னி லக்னம் மற்றும் ராசியில் பிறந்தவர்கள் சீர்காழி அருகே உள்ள திருவெண்காடு புதன் ஸ்தலம் சென்று வாழ்வில் மேன்மை நிலையை அடைய வழிபாட்டு செய்யலாம்.❄❄❄ 


⛔⛔⛔மேலே சொன்னவை பொதுவான குணம். அவரவர்கள் சுய ஜாதகத்தில் லக்னம் மற்றும் ராசியோடு தொடர்பு கொண்ட பிற கிரகத்தின் இயல்பு ஏற்ப குணத்தில் சில மாற்றங்களை கொண்டு இருக்கும். ⛔ ⛔⛔


PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 


#padmahazan

No comments:

Post a Comment

நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..?

🍁 நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..? 🍁 #hazan  ⚡️ஓர் கிரகம் நீச வீட்டில் ஓர் கிரகம் இருந்தாலே அது ஏதோ ஓர் வகை நீசபங்கம் பெற்று விட்டது முடிவ...