ஜோதிடர்கள் அனைவருமே நிச்சயமாக ராகு அல்லது கேது ஒரு கிரக ஆதிக்கத்தில் இருப்பவர்கள் தான். புதன் முதன்மையாக ஜோதிடராக வருவதற்கு காரணமாக இருந்தாலும் இரண்டாம் நிலை உதவும் கிரகமாக ராகு அல்லது கேது இருக்கும்.
இங்கே எந்த கிரகம் வலுவாக அவருக்கு உள்ளதோ அது சார்ந்த நிகழ்வுகள் அவருக்கு பலன் கேட்கும் ஜாதகர்கள் ஜோதிடரை கேட்பார்கள்.
உதாரணமாக ஒரு ஜோதிடருக்கு கேது நன்றாக இருக்கும் பட்சத்தில் அவருக்கு
கர்மம் செய்ய போவதை உணரும் நிலை,
வீட்டில் உள்ள பில்லி சூன்யம் ஏவல் செய்வினை,
ஒருவருக்கு இருக்கும் பூர்வ ஜென்ம சாபம், கடந்த கால துர் சம்பவங்களை உணர்தல்
போன்ற கடந்த கால நிகழ்வுகளை பின்னோக்கிய நிகழ்வுகள் மீதான ஈர்ப்புகள் அதிகமாக கொண்டு இருப்பார். கூடுதலாக அவருக்கு வரும் கேள்விகளும் அது போலான கேள்விகளாகவே ஜாதகங்கள் கேட்பார்கள். இது சார்ந்த ஆய்வுகளை புத்தகங்களை குருவே தேடி அலைவார்கள் #padmahazan
ஒரு ஜோதிடருக்கு ராகு பகவான் நன்றாக இருக்கும் பட்சத்தில் அவருக்கு
எப்போது வேலை கிடைக்கும்,
எப்போது தொழில் லாபம் தரும்,
எப்ப இவர் வெளிநாடு போவார்,
எப்ப இவர் லட்சங்களை கோடிகளை சம்பாதிப்பார்,
எப்போது இவருங்கு இரண்டாம் திருமணம் நடக்கும்,
எப்போது ஆடம்பரமான வீடு வாகனம் யோகம் இருக்கும் என்ற கலியுக தேவைகளே இவருக்கு ஈர்ப்பாக அமையும்.
இவரிடம் இது போன்ற கேள்விகளே அதிகமாக ஜாதகர்களால் கேட்கபடும். இது போன்ற ஆய்வை புத்தகங்களை குருவை தேடி அலைவார்கள் #padmahazan
கேது வலுத்த ஜோதிடர், ஆன்மீக கடவுள் சார்ந்த சடங்குகளை ஊக்குவிப்பவராக இருப்பார்.
ராகு வலுத்த ஜோதிடர் கடவுளை வணங்கு அது போதும் என்று மட்டுபடுத்தும் தன்மை கொண்டவராக இருப்பார்.
கடந்த கால நிகழ்வுகளை புட்டு புட்டு வைப்பவர் கேது, எதிர்கால பலனையே கண்ணாக வைத்து பலன் சொல்பவர் ராகு.
நீங்கள் கொடுப்பதை கொடுங்கள் என்று எதிர்பார்ப்பு இல்லாமல் பலன் சொல்பவர் கேது வலுத்த ஜோதிடர்.
இவ்வளவு கொடுத்தால் பலனை சொல்வேன் என்று எதிர்பார்ப்பை கொண்டவர் ராகு வலுத்த ஜோதிடர்.
இவர்களில் யார் சிறந்தவர்கள் என்பது பலன் கேட்க போகும் ஜாதகரின் இயல்பை பொறுத்தது.
கலியுக வாழ்வை விரும்பும் நபர்களுக்கு ராகு வலுத்த ஜோதிடரும், முன் ஜென்மா கர்மா அறிய ஆவல் கொண்டவர்கள் கேது வலுத்த ஜோதிடரையும் விரும்புவார்கள்.
🤩 #padmahazan 🤩
No comments:
Post a Comment