🍁 அதிர்ஷ்டம் தரும் ஸ்தானம் _ ஐந்தாம் பாவகம் 🍁 #hazan
( நவ கிரகங்களும் 5 இடத்தில் இருப்பதன் முழு விளக்க பதிவு )
🌿ஐந்தாம் இடமானது ஒருவருடைய பூர்வ புண்ணிய ஸ்தானமாகவும் , பூர்வ ஜென்மத்தில் சேர்த்து வைத்த கர்மாவை சுட்டி காட்டும் முதன்மை பாவகம் ஆகும்.
🌿இந்த ஐந்தாம் இடத்தில் நிற்கும் கிரகங்களது ஆதிபத்திய காரகத்துவ வழியான புண்ணியத்தை ஜாதகர் பெற்று இருப்பார்.
🌿ஐந்தில் நிற்கும் அனைத்து கிரகமும் ஜாதகருக்கு குழந்தைகள் வழியான சுப பலனும் காரகத்துவ பலனை முழுமையாக நன்மை தரும் , அல்லது
🌿சில நிலைகளில் குழந்தைகளை பாதித்து அல்லது குழந்தை ஆதரவை பாதித்து ஜாதகருக்கு சுப பலனை மிகுதியாக தரும். நிற்கும் கிரகத்தின் தன்மை பொறுத்து அதை காணலாம். #padmahazan
(பதிவு எழுதி பதிவேற்றம் செய்த நாள் 14. டிசம்பர். 2022)
பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் இடத்தில்
💥5 சூரியன் நிற்க ~ 💥
🌟ஜாதகருக்கு அரசு அரசியல் மீதான ஈடுபாடு அதிகபடியாக வெளிபடும், அரசியல் பற்றிய புரிலை கூடுதலாக பெற்று இருப்பார்,
🌟அரசியல் அரசு அதிகாரம் போன்றவற்றில் அங்கம் வகிப்பதில் ஆர்வம் கொண்டவர்கள்.
🌟அதிகாரத்தில் உள்ளவர்களது ஆதரவும் உதவியும் நட்பும் எளிதாக கிடைத்துவிடும். தலைமை நிலை தரும்.
🌟அரச ஊதியம் , அதிகார பதவி , சன்மானம் போன்றவற்றில் எளிதாக உயர்நிலை பெறுபவர்கள். அது சார்ந்த அதிஷ்டம் உண்டு.
🌟மேஷத்திலோ சிம்மத்திலோ தனுசிலோ சூரியன் இருக்க அந்த பாவகம் ஐந்தாம் இடமாக அமைய மேலே சொன்ன பலன் சரியாக வரும்.
🌟கூடுதலாக சூரியனை குரு பார்த்தால் தந்தை வழி பாட்டனை போல மகன் பிறப்பான். #padmahazan
🌟ஆனால் சூரியனுக்கு சனி பார்வை இணைவு இருக்கவே கூடாது. மொத்தமும் கெடும்.
🌟கௌரவம் அந்தஸ்தை பெரிதாக நினைப்பார்கள்.
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
💥5ல் சந்திரன் நிற்க ~ 💥
🌟தாயார் மீதான பாசம் மித மிஞ்சி இருக்கும்,
🌟சித்தி பெரியம்மா போன்ற உறவுகள் ஜாதகருக்கு வாழ்வில் ஆதரவாக இருப்பார்கள்.
🌟பெண் குழந்தைகளை பெற்று இருக்கும் நிலையில் மகளுக்கு பிடித்த தாய் தந்தையாக ஜாதகர் இருப்பார்.
🌟பிறருக்கு உணவு பரிமாறுவதில் அதிகபடியான ஆர்வம் கொண்டு இருப்பார்.
🌟கற்பனை திறன் அதிகபடியாக இருக்கும், பாசத்தை அதிகபடியாக வெளிபடுத்தும் சுபாவத்தை பெற்று விடுவார்கள். #padmahazan
🌟சுற்றத்தாரால் உறவினரால் ஆதரவு பெறும் அதிர்ஷ்டம் உண்டு.
🌟சந்திரன் இங்கே தேய்பிறை ஆக கூடாது, சனி ராகு இணைவை பெற கூடாது.
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
💥5 செவ்வாய் நிற்க ~ 💥
🌟சகோதரனை பற்றிய எண்ணமும் அக்கறையும் அதிகபடியாக இருக்கும்.
🌟நில சேர்க்கை பாட்டன் வழி அமையும் பட்சத்தில் அது இவரது மகனிற்கு சேரும் விதமான பூர்வீக சொத்தாக நிலைக்கும். நிலம் சார்ந்த அதிர்ஷ்டம் உண்டு
🌟மருத்துவர்கள் காவலர்கள் வழியான ஆதரவு மேம்பட்டு காணப்படும்.
🌟விளையாட்டு மீதான ஆர்வமும் ஈடுபாடும் அதிகபடியாக வெளிபடும்.
🌟இவர்கள் நிலம் சேர்க்கை எளிதாக அமைந்துவிடும், நிலங்கள் மீதான பிரியம் அதிகம்.
🌟சில இடங்களில் சொத்து தகராறு கொடுத்து ஜாதகரை மூர்க்க குணத்தை காட்டி விடும்.
🌟ஆண் வாரிசை இவர்களால் அடக்க முடியாது, பேச்சை கேட்காது இருப்பார்கள். #padmahazan
🌟பெண் குழந்தை ஆக இருக்கும் பட்சத்தில் ஆண் போன்ற வாழ்வில் எதிர்த்து போராடும் குணத்தை வெளிபடுத்தும்.
🌟சண்டை , மல்யுத்தம் , தற்காப்பு கலைகளில் நுட்பங்களை சேர்த்து அறிந்து வைப்பவர்கள்.
🌟அதாவது ஸ்கெட்ச் போட்டு தூக்குறவங்க இவங்கதான்.
🌟செவ்வாய் இங்கே சனி பார்வை ராகு இணைவை பெற கூடாது
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
💥5ல் புதன் இருக்க ~ 💥
🌟ஜாதகருக்கு நற்சிந்தனை அதிகபடியாக இருக்கும், நல்லெண்ணம் மேலோங்கி
🌟நண்பர்களை அதிகபடியாக கொண்டு இருப்பார்கள்.
🌟மனதிற்கு பிடித்த நண்பராக மற்றவர்களுக்கு இவர்கள் இருப்பார்கள்.
🌟நண்பர்களால் முன்னேற்றமும் ஆதரவையும் பெறுபவர்கள்.
🌟தாய்மாமன் வழியான ஆதரவை பெற்றவர்கள், அவரது செயலில் மேன்மை பெறுவார்கள்.
🌟பத்திரிக்கை , மீடியா , ஜோதிடம் , எழுத்தாளர்களது நட்பை பெற்றவர்கள். #padmahazan
🌟உயர்படிப்பு மீதான ஆர்வமும் ஈடுபாடும் அதிகபடியான இருக்கும்.
🌟மற்றவர்களை விட விரைவாக கணித திறமை கற்கும் திறனை பெற்றவர்கள்.
🌟படித்தவர் என்று பிறரால் புகழப்படும் நிலையை பெறுவார்கள்.
🌟வாரிசுகள் மெத்த படித்தவராகவோ நல்ல வியாபாரியாகவோ இருப்பார்கள்.
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
💥5ல் குரு இருக்க ~ 💥
🌟குல தெய்வ அனுகிரகம் மேலோங்கி இருக்கும் ஜாதகருக்கு,
🌟தந்தை வழி பாட்டன் குல பெருமை கௌரவம் நன்றாக அமைந்து விடும்.
🌟கோவில் திருப்பணி தொண்டு பணி செய்து சேர்த்து புண்ணியம் ஜாதகருக்கு இருக்கும். திருப்பணி வழிபாடு சார்ந்த அதிர்ஷ்டம் உண்டு
🌟பிறருக்கு வழிகாட்டும் ஆசிரியர், குரு நாதர் , போதகர்கள் உடனான ஆதரவு அவர்களது நட்பும் முன்னேற்றமும் கொடுக்கும்.
🌟பரம்பரை சொத்து இவர்களது முதன்மையாக வருமானத்தை தரும். #padmahazan
🌟ஆண் வாரிசுகளால் பெயரும் புகழும் நீடித்த தன யோகமும் கொடுக்கும் , பலருக்கு ஆண் வாரிசு தனித்து இயங்கும் குணம் பெறுவதால் ஜாதகரோடு ஒத்து போகாது. நல்ல குணம் கொண்ட ஆண் வாரிசு உண்டாகும் ஆயினும் ஜாதகருக்கு சில மன கஷ்டங்களை தரும்.
🌟கோவில் சம்மந்தப்பட்ட பயணங்கள் , தான தர்மம் , கடவுள் தொண்டு செய்வது போன்ற இறை நம்பிக்கை மிகுதியாக இருக்கும்.
🌟" சேவை பண்றதுக்குனே பிறந்தவன்டா இந்த ஸ்நேக் பாபு " என்பதை போன்ற குணம் ஜாதகருக்கும் மகனிற்கும் இந்த ஐந்தாம் இட குரு தருவார்.
🌟இங்கே குருவிற்கு சனி பார்வை இணைவு கூடாது , குரு தோசம் பெற்றுவிடும்.
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
💥5ல் சுக்ரன் இருக்க ~ 💥
🌟பெண்களுக்கு பிடித்தவர் ஜாதகர், பெண்களால் போற்றபடுபவர் ஜாதகர்.
🌟பெண்களால் விரும்பபடும் " ஜெமினி கணேசன் " இவர்கள்தான்.
🌟இவர்களுக்கு வாழ்க்கை துணை மீதான பற்றுதல் அதிகம் இருக்கும்.
🌟தன்னை சுற்றி இருக்கும் பெண்களை கண்ணும் கருத்துமாக பார்த்து கொள்ளும் பரந்த குணம் கொண்டவர்கள்.
🌟இங்கே இருக்கும் சுக்ரனிற்கு சனி ராகு தொடர்பு இருந்தால் பெண்களால் அவ பெயர் வந்துவிடும்.
🌟வாகன யோகமும் ஆடம்பர சொகுசு வாழ்வில் எளிதாக இவர்களுக்கு அமைந்துவிடும்.
வாகனத்தால் லாபமும் , ஆடம்பரத்தை அனுபவித்து வாழும் அதிர்ஷ்டம் உண்டு #padmahazan
🌟ஒன்றிற்கு மேற்பட்ட காதலோ , எதிர்பாலின ஆசையோ கொடுக்கும்.
🌟குல தெய்வ வழிபாடுகள் மேன்மை பெறும்.
🌟பெரும்பாலான நிலையில் பெண் குழந்தை தரும் கிரக அமைப்பு.
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
💥5ல் சனி இருக்க ~ 💥
🌟குழந்தை பாக்கியம் தடைபடும் அல்லது தாமதமாக பெண் குழந்தை பிறக்கும் ,
🌟ஆண் வாரிசு ஜாதகரை மதிக்காமல் , குறை சொல்லியே தந்தையை தாயை மனம் நோக வைக்கும். கஷ்டத்தை காட்டும்.
🌟தொழில் வழி யோகத்தை சிறப்பாக தரும்.
🌟தொட்ட தொழிலில் மேம்பட்ட முன்னேற்றத்தை தரும்.
🌟வாடிக்கையாளர் மத்தியில் நற்பெயரை கொடுக்கும்.
🌟பொதுமக்கள் இடையே நற்பெயர் எடுக்கும் தொழில் அதிபர் , நிறுவன தலைவர், அரசியல் ஊராட்சி மாவட்ட பதவிகள் பெறுவதற்கு உதவும் அமைப்பு. #பத்மஹாசன்
🌟பிளாஸ்டிக் இரும்பு எண்ணெய் மெஷின்கள் மாதிரியான வியாபாரம் தொழில் வேலை முன்னேற்றம் தரும் அதிர்ஷ்டம் தரும்
🌟இங்கே இருக்கும் சனிக்கு குரு பார்வை இணைவை பெற்றுவிடுவது சனிக்கு சிறப்பு.
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
💥5ல் ராகு இருக்க ~ 💥
🌟அதிகபடியான தொழில் லாபத்தை , வருமானத்தை தரும்.
🌟திடீர் அதிர்ஷ்டம் என்னும் லாட்டரி, சீட்டு ஆட்டம், கசினோ, ஸ்பெகுலேஷன் , ஊக வணிகம் , பங்கு சந்தை போன்ற அதிர்ஷ்டவசமாக கிடைக்கும் பெரும் பணத்தை தரும். கொடுத்து கெடுக்கும் விதமாக பின்னர் ஜாதகரை பாதிக்கும்.
🌟பூர்வீக குல பெருமை ஏதாவது ஒரு வழியில் பாதித்து இருக்கும்,
🌟தாமத புத்திர பாக்கியம் தரும் அல்லது பெண்குழந்தைகளை இரண்டிற்கு மேலே கொடுக்கும்.
🌟தந்திரமாக சம்பாதிக்கும் சாதுர்ய எண்ணத்தை சிந்தனையை தரும்.
🌟மற்றவர்களை விட மேலான தந்திர எண்ணங்களை ஜாதகர் பெற்று விடுவார்.
🌟இங்கே இருக்கும் ராகு சுக்ரன் குரு பார்வை இணைவை பெற்று ராகு இருப்பது மேஷம் ரிஷபம் கடகம் கன்னி மகரம் தனுசு ராசியாக ஆக இருப்பது சுப பலனை மேன்மை ஆக தரும்.
🌟இந்த ராகுவிற்கு சனி இணைவு பார்வை இருக்கே இருக்க கூடாது. அத்தனையும் பாதிக்கும்.
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
💥5ல் கேது இருக்க ~ 💥
🌟முழுமையான ஆன்மீக எண்ணங்களை ஜாதகர் பெறுவார்,
🌟மோட்சம், கர்மா , வாழ்வின் புரிதலை அதிகபடியாக பெற்று விடுவார்கள்.
🌟ஒன்றும் நிலை இல்லாத உலகில் எதற்கு இவர்கள் ஓடி ஓடி பொருள் சேர்க்கிறார்கள் என்பதை உணர்ந்தவர்கள். #பத்மஹாசன்
🌟தாமத புத்திர பாக்கியம் அல்லது குழந்தைகளால் ஆதரவு இன்றி வாழ்வது போன்ற நிலையை தரும்.
🌟குழந்தைகள் இருந்தாலும் பிற்கால வாழ்வில் அவர்களை நம்பி வாழாமல் இருப்பதை போன்ற எண்ணத்தை கொடுத்து விடும்.
🌟உபநிஷதம், புராணம் , இதிகாசம் , கடவுள் புராணம் , போன்றவற்றில் அதீத ஈடுபாட்டை தரும்.
🌟பிற்கால வாழ்வை ஆன்மீகம் , தொண்டு, வழிகளில் கொண்டு செல்ல ஆர்வபடுவார்கள்.
🌟இங்கே இருக்கும் கேது கன்னி விருச்சிகம் கும்ப தனுசு கேதுவாக இருந்து குரு பார்வை இணைவை பெறுவது சிறப்பு.
🌟இந்த ஐந்தாமிட கேதுவிற்கு சனி பார்வை இணைவு இருக்கவே கூடாது. தோசம் கொண்ட அமைப்பு ஆகும். #padmahazan
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
💥பின்குறிப்பு: 💥
🌿மேலே சொன்ன 5 ல் இருக்கும், குரு சூரியன் செவ்வாய் ஐந்தாம் இடத்தில் உச்சம் ஆக கூடாது. நீசமும் பெற்றுவிட கூடாது. இவர்கள் நட்பு சம வலுவோடு ஐந்தில் இருப்பது நன்மை.
🌿புதன் சுக்ரன் வளர்பிறை சந்திரன் ஐந்தில் ஆட்சி ஆகவோ உச்சமாகவோ தாராளமாக இருக்கலாம். பாதிப்பு இல்லை. #padmahazan
🌿சனி ஐந்தில் உச்சமோ ஆட்சியோ ஆக கூடாது. 3 6 11 இடத்தில் சனி இருப்பதே நல்லது.
🌿ராகு கேது ஐந்தில் இருந்தால் வீடு கொடுத்த அதிபதி நட்பு ஆட்சி உச்சம் பெற்றுவிடுவது சிறப்பு
( மேலே எழுதிய பலன்கள் அனைவருக்கும் அப்படியே பொருந்தாது, சில ஜோதிட குறிப்புகள் அவரவர் ஜாதகப்படி நடப்பு தசா ஏற்ப மாறலாம் )
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY ASTROLOGY APP 8300 620 851
No comments:
Post a Comment