PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
புதனின் மிதுன கன்னி லக்னம் பிறப்பவர்கள்,
மிதுன கன்னி ராசி பிறப்பவர்கள்,
புதனின் ஆயில்யம் கேட்டை ரேவதி நட்சத்திரங்களில் பிறந்தவர்கள்,
புதனின் ஆயில்யம் கேட்டை ரேவதி லக்ன புள்ளியை பெற்றவர்கள்,
புதன் லக்ன ராசிக்கு கேந்திர கோணத்தில் வலுவாக ஆட்சி உச்சம் நட்பு நீசபங்கம் நீசபங்கராஜயோகம் ,
புதனின் ஆயில்யம் கேட்டை ரேவதித்தில் கிரகங்கள் நின்று தசா புத்தி நடத்தும் நிலையில்...
ஒருவருக்கு விஷ்ணு அவதாரங்கள் மீதான அளவு கடந்த பக்தியும் அன்பும் வெளிபடும்.
இதில் எவ்வளவுக்கு எவ்வளவு அவர் ஜாதகத்தில் புதன் தொடர்பில் உள்ளதோ அவ்வளவுக்கு விஷ்ணு பக்தனாக ஜாதகர் இருப்பார்.
உதாரணமாக ஒருவர் விருச்சிக லக்னத்தில் பிறந்து கேட்டை நட்சத்திரத்தில் லக்னம் நின்று, ராசி மீனத்தில் ரேவதியில் நின்று, புதன் லாப ஸ்தானத்தில் உச்சமாகிட,
லக்ன புள்ளி மற்றும் நட்சத்திரம் இரண்டும் புதனின் ரேவதி கேட்டை யில் இருக்கும்.
புதன் ராசிக்கு ஏழில் புதன் உச்சமாகி, லக்னத்திற்கு ஐந்தை பார்ப்பார்.
இந்த ஜாதகர் நிச்சயமாக விஷ்ணு பக்தராக இருப்பார்.
இதே அமைப்பில் ஒன்பதில் குரு ஆயில்யம் நட்சத்திரத்தில் நின்று தசா வந்தால் ஜாதகர் விஷ்ணு ஆலயங்களில் அர்ச்சகர், கோவில் பணியில் இருப்பவர், அல்லது புதிய விஷ்ணு ஆலய திறப்பது அது சார்ந்த சேவை செய்வது போன்ற நிலையை தரும்.
புதன் _ கணிதன்_ முக்காலத்தை உணர்பவன்_கிருஷ்ணர் _ மஹா விஷ்ணு
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
🤩 #padmahazan 🤩
No comments:
Post a Comment