கடந்த முறை பங்குசந்தையில் லாபத்தை பெறும் கிரக அமைப்பை பற்றி எழுதிய பதிவில் அதே பங்கு சந்தையால் நஷ்டமடையும் ஜாதகத்தையும் எழுதுங்க அப்படி என்று பலர் கேட்டு இருந்தீர்கள். இதோ...
பங்கு சந்தையில் லாபத்தை பெறுவதற்கு 8 12 6 பாவகங்கள் சுப அமைப்பில் தொடர்பு பெற்று சம்மந்தப்பட்ட தசா நடக்கும் போது லாபத்தை பெறலாம். இங்கே 8 12 6 என்ற பாவகங்களில் ஒன்று பாதிக்கும் போது பங்கு சந்தை லாபத்தை தராமல் பெரும் வீழ்ச்சியை தந்து போகும். உதாரண ஜாதகத்தை பாருங்கள்.
இந்த ஜாதகர் மீன லக்னத்தில் பிறந்து லக்னாதிபதியான குரு ஆறில் நட்பு வலுவோடு மறைந்து , 12ல் சஷ்டி திதி அவிட்ட சந்திரன் இருவரும் நேருக்கு நேராக பார்த்து 6 12 பாவகங்களை வலுபடுத்துகின்றனர்.
#padmahazan
அதே சமயம் பங்கு சந்தைக்கு முக்கியமான 8ம் பாவகத்தை ஆட்சி வக்ரம் பெற்ற சனியும், ஆட்சி பெற்ற செவ்வாயும் ஒரு சேர பார்த்து எட்டாம் இடத்தை வலுஇழக்க வைக்கின்றனர். செவ்வாய்க்கு இங்கே குரு பார்வை இருந்தாலும் அது பங்கு சந்தை ஆர்வத்தை கொடுக்கிறது ஆனால் சனி பார்வை இங்கே 8ல் இருக்க கூடாது. 8ம் இடம் கெட்டு 6 12 வலுத்த அமைப்பில் உள்ளது.
நடப்பில் இவருக்கு குரு தசா நடக்கிறது. லக்னாதிபதி ஆறில் இருக்கும் 8ம் அதிபதி சுக்ர சாரத்தில் 12 பாவகத்தோடு தொடர்பில் உள்ளார். புத்தி நாதன் விரைய நஷ்ட பாவகத்தில் உள்ளார். 8 12 தொடர்பு கொண்டதால் வெளிநாட்டில் வாழ்ந்து வருகிறார். #padmahazan
குரு தசா சந்திர புத்தியில் இவருக்கு பங்கு சந்தை வீழ்ச்சியால் 10 கோடி கடனை கொடுத்து இருந்தது. தற்போது செவ்வாய் புத்தி இவருக்கு கடுமையான பண நெருக்கடியை தந்து கொண்டு உள்ளது. அடுத்து ஜென்ம சனியும் வர உள்ளது.
பங்கு சந்தை என்பது "இருமுனை கூர் கொண்ட கத்தி" . கையாளுவது சவாலான விஷயம். தசா புத்தி கிரக அமைப்பு நன்றாக இருக்கும் பட்சத்தில் யோகமாக இருக்கும்.
#padmahazan #குரு #சந்திரன் #சூரியன் #சுக்ரன் #சனி #செவ்வாய் #பங்குசந்தை #கடன்
No comments:
Post a Comment