Saturday, November 12, 2022

வெளிநாட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் கிரக நிலை

🍁 வெளிநாட்டில் மிக உயர்ந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஜாதக அமைப்பு 🍁 #hazan 



PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

வெளிநாட்டு வாழ்க்கை என்பது சிலரது கனவாக இருக்கும். சிலர் வெளிநாட்டில் இருக்கும் மிக உயர்ந்த கட்டுமானங்களை பார்க்கும் போது அங்கே ஒரு வீடு வாங்க முடியாத என்ற எண்ணம் பல வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு மனதில் தோன்றும் அப்படிபட்ட வெளிநாட்டில் சொந்தமாக மிக உயர்ந்த அடுக்குமாடி குடி இருப்பில் ( highly raised apartments) வீடு வாங்குவதற்கான கிரக அமைப்பை இந்த பதிவில் காண்போம். #padmahazan 

ஒருவருக்கு மறைவு ஸ்தானம் என்னும் எட்டாமிடமும் சுக ஸ்தானம் வீட்டை குறிக்கும் நான்காம் இடமும் சுக்ரனும் சுப தொடர்பில் தங்களுக்குள் தொடர்பு பெறும் போது தூர இடங்களில் தூர தேசங்களில் வீடு சொந்தமாக வாங்க முடியும். 

கீழே கொடுக்கபட்டுள்ள உதாரண ஜாதகத்தை பாருங்கள். 


ஜாதகர் சிம்ம லக்னத்தில் பிறந்துள்ளார்.

8ம் இடமான மீனத்தில் சுக்ரன் உச்ச வலுவில் அதிக ஒளி அமைப்பில் இருந்து, 4ம் அதிபதியான செவ்வாயும் 8ல் தனது நட்பு வீட்டில் உச்ச சுக்ரனோடு இணைந்து உள்ளார்.

இந்த சுக் செவ் இணைவை 8ம் அதிபதி குரு தனது நட்பு வீட்டில் விருச்சிகத்தில் இருந்து 5ம் பார்வையாக இவர்களை பார்க்கிறார்.

மேலும் இங்கே உச்ச சுக்ரன் இணைவிலும் நட்பு பெற்ற குருவின் பார்வையிலும் சிம்ம லக்ன யோகாதிபதி செவ்வாய் அதிக சுபத்துவமாக 8ல் உள்ளார். #padmahazan 

கூடுதலாக இங்கே செவ்வாயும் குருவும் பரிவர்த்தனை அமைப்பில் உள்ளார்கள். மறைமுகமாக குருவும் சுக்ரனும் ஆட்சி பெற்ற யோக நிலை. 

இங்கே உள்ள 4 8 பரிவர்த்தனையும், சுக்ரன் மற்றும் 4ம் அதிபதி செவ்வாய் மறைவு ஸ்தான குருவின் பார்வையில் 8 என்னும் மறைவில் இருப்பது...

இந்த ஜாதகருக்கு வெளிநாட்டில் வருமானத்தை கொடுத்து, சொந்தமாக அடுக்குமாடி குடியிருப்பில் தனக்கு என ஒரு சொந்த வீட்டை கொடுத்தும் உள்ளது.

எவர் ஒருவருக்கு 4 8 சுக்ரன் போன்றவை முழுக்க முழுக்க சுப தொடர்பில் உள்ளதோ அவர்கள் தூர இடங்களில் வீடு வாங்கும் யோகத்தை கிரகங்கள் தரும்.

மேலே குறிப்பிட்ட இந்த கிரகங்கள் சனி பார்வையோ ராகு கேது இணைவோ ஏதும் இல்லாமல் யோக பங்கம் இல்லாத ஒரு அமைப்பில் உன்னதமாக உள்ளது.

நீசம் பகை கிரகணம் இல்லாத சிறப்பான யோகத்திற்கு உதாரணம். 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 
#padmahazan

No comments:

Post a Comment

நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..?

🍁 நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..? 🍁 #hazan  ⚡️ஓர் கிரகம் நீச வீட்டில் ஓர் கிரகம் இருந்தாலே அது ஏதோ ஓர் வகை நீசபங்கம் பெற்று விட்டது முடிவ...