🍁 8ல் குரு மறையலாமா..? பணத்தை தருவாரா..? ஆண் வாரிசை கெடுப்பாரா..? 🍁 #hazan
கௌரவம் , அந்தஸ்து , சமுதாயத்தில் மதிப்பாக வைத்து இருப்பது, தன பண சேர்க்கை , அபரிவிதமாக பண புழக்கம், கடவுள் பக்தி , இறைவழிபாடு, புண்ணிய காரியங்கள், பூஜை , கடவுள் அனுகிரகம், ஆண் வாரிசு இவற்றை தருபவர் குரு பகவான்.
இத்தகைய குரு பகவான் 8ல் மறையலாமா..? என்றால்
" மறைய கூடாது "
ஒரு இயற்கை சுபரான குரு 8ல் மறைய கூடாது. மறைந்தால் என்ன பலன் இருக்கும் என்பதை கீழே படியுங்கள். #padmahazan
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
தனக்காரகன் குரு எட்டில் மறைய வருமானம் நேரடியாக ஜாதகருக்கு அமையாது, தூர இடங்களில் இடம் பெயர்ந்து பயணம் போய் சம்பாதிக்கும் சூழலை தரும். பிறந்த இடத்தை விட்டு , பூர்வீக இடத்தை விட்டு வேறு ஊருக்கோ , நாட்டிற்க்கோ நகர்த்தி தனம் பணம் தருவார்.
சொந்த ஊரிலே வசிக்கும்படி அமைந்தால் ஜாதகர் தனது வருமானத்தை fixed deposit, சேமிப்பு கணக்கு , mutual fund, தபால் நிலைய சேமிப்பு , மாதிரியான சேமிப்புகளை வைத்து கொள்வார்கள்.
குரு எட்டில் மறைந்து நட்பு ஆட்சி உச்சம் பெற்றவர்கள் மேலே சொன்ன வகையிலான பணச்சேர்க்கை வைத்து இருப்பார்கள்.
பணம் இருக்கும் ஆனால் ஏதாவது ரசீது மாதிரியான பேப்பராக கையில் வைத்து இருப்பது போன்ற நிலையை 8ல் மறைந்த குரு தருவார்.
8ல் குரு மறைந்தவர்களுக்கு , வீடு வண்டி வாகனம் சுக வாழ்விற்கு எந்த குறையும் வராது.
8ல் மறைந்த குரு 9 பார்வையால் சுக ஸ்தானத்தை பார்த்து வலுபடுத்துவார்.
ஜாதகருக்கு வீடு சிறிய அளவில் அமைந்தாலும் அதில் ஒரு சுத்தமும் தெய்வீக பொருட்கள் நிறைந்தபடியும், வாகனம் சார்ந்த நிறைவான பலனும் கிடைக்கும். சொகுசு காரகன் சுக்ரன் சுப அமைப்பில் லக்னத்திற்கு மறையாமல் ஆட்சி உச்சம் பெற்றால் இந்த அமைப்பு வீடு வாகன யோகத்தை கூடுதலாக கொடுத்து விடும். #padmahazan
வீடு வண்டி வாகனம் கல்வி சார்ந்த மேன்மை பலனை ஜாதகர் நல்ல விதமாக பெற்றுவிடுவார்.
பெண்களுக்கு குரு எட்டில் மறைய, பெற்ற மகன் குறிப்பிட்ட வயதுக்கு பிறகு தாயை பிரிந்து வேலை தொழில் காரணமாக வெளிநாடு தூர இடங்களில் சம்பாதித்து தாயாருக்கு அனுப்புவார்கள். மகனுக்கு மறைமுக வருமானம் என்னும் ஷோர் மார்கெட் , சூதாட்டம், போன்றவற்றில் ஆர்வத்தை தரும்.
8ல் குரு மறைந்து நட்பு ஆட்சி உச்சமாக இருந்து தசாவும் வந்துவிட்டது என்றால் கண்டிப்பாக மறைமுக வருமானத்தை குரு தசாவில் தருவார்.
எட்டில் மறைந்த குரு தன பாவகமான குடும்ப ஸ்தானத்தை பார்வையிட்டு குடும்ப வாழ்வில் பிரச்சனை பிரிவு இன்றி நிலையான பணபுழக்கத்தை தருவார்.
அதே நிலையில்
8 ல் மறைந்த குரு சனி இணைவு இருக்க கூடாது,
8ல் உள்ள குருவை 2 6 11 மிடத்தில் இருந்து சனி பார்வை செய்ய கூடாது,
8மிட குருவோடு ராகு இணைய கூடாது,
8மிட குருவோடு தேய்பிறை சந்திரன் இணைய கூடாது.
8ல் மறைந்த குரு நீசம் , பகை , சம வலுவில் இருக்க கூடாது. 8 மிடம் என்பதே லக்னத்திற்கு முழுமையாக மறையும் வலுஇழக்கும் நிலை, அங்கே இன்னும் வலு குறைந்த பகை நீசம் சமம் பெறுவது போதுமான குரு பலம் இல்லாத நிலையில் இருப்பார்..
மேலே சொன்ன சனி ராகு தேய்பிறை சந்திர தொடர்பை பெற குரு பாதிப்பார், தனம் சார்ந்த மனநிம்மதி இழப்பது, துக்கம், போதுமான பண வரவு இல்லாமல் இருப்பது போன்ற பலனை தருவார்.
#padmahazan
குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால்...
மேஷம், கடகம் , சிம்மம், விருச்சிகம் , தனுசு, மீனம் லக்னத்திற்கு குரு 8ல் மறைவது அவ்வளவு சிறப்பு கிடையாது.
மேலே சொன்ன லக்னங்களுக்கு குரு 1 5 9 என்னும் அந்தஸ்து அதிர்ஷ்டம் பாக்கியம் என்னும் வாழ்விற்கு அடிப்படையான மூன்று முக்கிய ஆதிபத்திற்கு அதிபதியாகி வருவதால்,
லக்னத்திற்கு 8ல் மறைவது சிறப்பு கிடையாது,
மேஷம் கடக லக்னத்திற்கு 8ல் குரு மறைய தந்தை வழியான ஆதரவு குறைவுபடும், தந்தை வழியான சொத்து சார்ந்த அனுபவிப்பதில் தடை தரும், திருமணம் போன்ற சுப நிகழ்வு நடப்பது சார்ந்த பாதிப்பை தரும், சூரியன் நிலையை பொறுத்து சூரியன் பாதித்தால் தந்தை சிறு வயதில் பிரிந்து வாழ்வது போன்ற பலனை தருவார்.
விருச்சிகம் , சிம்ம லக்னத்திற்கு 8ல் குரு மறைய குலதெய்வ வழிபாடு சார்ந்த பாதிப்பும், அதிர்ஷ்ட குறைவும், குழந்தைகள் சார்ந்த ஆதரவு குறையும்
இதெல்லாம் பாதித்து, மறைமுக வருமானமான வெளிநாட்டு பணம், சேமிப்பில் வைத்த பணம் சார்ந்த தன புழக்கத்தை எட்டில் மறைந்த குரு தருவார்.
இன்னும் விளங்க சொல்லபோனால் ஐந்தாம் இடம் என்னும் புத்திர ஸ்தானத்தை ராகு கேது நின்று , ஐந்தாம் அதிபதி பகை நீசம் பெற்று, குருவும் எட்டில் மறைந்தால் ஜாதகருக்கு ஆண் வாரிசு இருக்காது அல்லது இருந்தும் நோய் பாதிப்பு, அல்லது ஜாதகர் உடனான பகை பிரச்சனை தந்துவிடும்.
5 மிடம் நன்றாக உள்ளது, ஐந்தாம் அதிபதி நன்றாக உள்ளார் என்னும் நிலையில் சுப பிரிவாக வேலை தொழில் சார்ந்த பிரிவை எட்டில் மறைந்த சுப நிலையில் உள்ள குரு தருவார்.
அதாவது நெருங்கிய ரத்த சொந்தமான குரு பெறும் ஆதிபத்திய உறவையும் , காரக உறவும் ஜாதகருக்கு போதுமான ஆதரவோ , அருகில் இருந்து அனுசரிக்கும் நிலையோ தராமல் குரு தடுத்து, மற்ற உயிரற்ற ஜடவிஷயங்களான நல்ல தனம் பணம் புழங்கத்தை ஜாதகருக்கு கொடுப்பார். #padmahazan
குரு என்னும் சுப கிரகம் 1 5 9 ல் இருப்பவர்கள் கொஞ்சம் கூடுதலாக புண்ணியம் செய்தவர்கள்.
அது என்ன மாதிரியான பலனை அந்த கூடுதல் புண்ணியம் தரும்..? என்பதை அடுத்த பதிவில் தொடர்ந்து எழுதுகிறேன்.
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
No comments:
Post a Comment