செவ்வாயும் சனியும் நேருக்கு நேராக ஒருவரை ஒருவர் பார்த்து கொள்வது, இதில் சனி அல்லது செவ்வாய் ஆட்சி உச்சம் போன்று இருப்பது.
செவ்வாயின் 4ம் பார்வையில் சனி இருப்பது, சனியின் 10ம் பார்வையில் செவ்வாய் இருப்பது,
இவர்களது பார்வையில் லக்னாதிபதி இருப்பது, இவர்களது இணைவில் லக்னாதிபதி இருப்பது
லக்னத்தை சனியும் செவ்வாயும் இணைந்தோ பார்த்தோ லக்னத்தை கடுமையாக பாதிப்பது,
இதில் எங்கேயும் குரு பார்வை இணைவு இல்லாமல் இருப்பது,
மன காரகன் சந்திரன் கடுமையாக பாதிக்கபட்டு இருப்பது,
போன்ற நிலையில் வரும் 8 12 மிட பாவத்துவ சனி செவ் கிரக அமைப்பு ஜாதகனை கொடும் செயலை செய்ய வைத்து சிறை செல்ல வைக்கும்.
செவ் ராகுவோடு இணைவதும் பொருந்தும்.
மருத்துவரும் செவ்வாய் தான், கொலை செய்பவரும் செவ்வாய்தான்.
ஒரு உயிரை காப்பாற்ற கையில் அறுவை சிகிச்சை கத்தியை எடுத்தால் அவர் குரு சுக்ர சந்திர தொடர்பு பெற்ற செவ்வாய் மருத்துவர்.
ஒரு உயிரை எடுக்க கையில் ஆயுதங்களை எடுத்தால் அவர் சனி ராகு அமாவசை சந்திரன் தொடர்பு பெற்ற செவ்வாய் கொலைகாரர்.
இது போன்ற நிலையில் பாவத்துவ செவ்வாயாக இருக்கும். அதனால் மருத்துவராக வேண்டியவர் கொலைகாரராக மாற்றியது பாவத்துவ செவ்வாய்.
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
🤩 #padmahazan 🤩
No comments:
Post a Comment