Saturday, November 12, 2022

சுயநலம் தரும் கிரகங்கள்

🍁 சுய நலம் தரும் கிரகங்கள் 🍁#hazan 

சுயநலம் என்பது தன்னுடைய நலனிற்காக ஒன்றை செய்வது அல்லது தன் நலத்தை மட்டுமே கருத்தில் கொண்டு ஒரு செயலை செய்வது சுற்றி இருப்பவர்கள் பற்றி கவலை படாமல் இருப்பது சுயநலம் 

எவன் எக்கேடு கெட்டா என்ன..? என்பது ஒரு வகை. யாருக்கோ ஏதோ நடக்குது.நமக்கு என்ன? அப்படின்கிறது மற்றொரு வகை. இந்த வித்தியாசம் நன்றாக புரிந்து கொள்வது அவசியம். 

சனி முதன்மை சுயநலமான கிரகம். பிற சுப தொடர்பு இல்லாத வரை அதிகப்படியான சுயநலத்தை தரும். தனக்கு ஆதாயம் வந்தால் மட்டுமே களத்தில் இறங்கி வேலை பார்க்கும் தன்மை தருவது சனி. சுப தொடர்பு பெறும் போது தன் சுயநலத்தை அந்த சுப கிரக வலு ஏற்ப குறைத்து கொள்வார். #padmahazan 

அதனை அடுத்து புதன். புதன் பெயரை பதிவில் பார்த்ததுமே நிறைய பேருக்கு நிச்சயமாக நமட்டு சிரிப்பு வந்து இருக்கும். புதனை பற்றி சொல்லவே வேண்டாம் வியாபாரி தரகர் ஆதாயம் வந்தால் மட்டுமே கைமாற்றி விடுவார். இந்த ஒரு காரகமே போதும். படித்த புத்திசாலியை விட மிக ஆபத்தான ஒரு நபர் யாராகவும் இருக்க முடியாது. புதனை சனி மற்றும் ராகு தொடர்பை ஒரு சேர பெற சுயநலமும் திருட்டு எண்ணமும் மேலோங்கும். 

அதனை அடுத்து சுக்ரன் தான் நன்றாக இருக்கனும் வசதியாக இருக்கனும் என்ற ஒரு விதமான அரை குறை சுயநலம் தருவது சுக்ரன். துணிக்கடை நடத்துபவர்கள் தள்ளுபடி என்ற விதத்தில் விலையை ஏற்றி இறக்கி அடக்கவிலையை விட கூடுதலாக விற்பது சொந்த வீடு வேலை நகை போனறவை மணமக்கள் இடையே சுக்ரன் தரும் அறைகுறை சுயநலம் ஆகும். #padmahazan 

குரு செவ் சூரியன் வளர்பிறை சந்திரன் போன்றவர்களை ஏன் சொல்லவில்லை என்றால் இவர்களுக்கு இயல்பியே பொது நலன் அதிகம் உண்டு. ஏற்ற இறக்கம் இருந்தாலும் பொது நல விரும்பிகளே. 

குரு வழிகாட்டி ஆசிரியர் பொதுநலன் செவ் போலிஸ் ரானுவ வீரர் பொதுநலத்திற்கு தன்னை அர்பணிப்பது. சூரியன் அரசியல் உயர் அதிகாரிகள் அரசியல் உயர் தலைவர்கள் அதிகப்படியான மன அழுத்தத்தை கடந்து அந்த இடத்தில் பொது நலத்திற்காக பணியாற்று வருவார்கள். 

🤩 #padmahazan 🤩 #குரு #சுக்ரன் #புதன் #செவ்வாய் #சூரியன் #சனி

No comments:

Post a Comment

நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..?

🍁 நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..? 🍁 #hazan  ⚡️ஓர் கிரகம் நீச வீட்டில் ஓர் கிரகம் இருந்தாலே அது ஏதோ ஓர் வகை நீசபங்கம் பெற்று விட்டது முடிவ...