Saturday, November 12, 2022

உடல் ஆரோக்கியத்தை தரும் கிரக அமைப்புகள்

🍁 உடல் ஆரோக்கியத்தை தரும் கிரக அமைப்புகள் 🍁 #hazan 

மனிதராக பிறந்த அனைவருமே ஆசைபடுவது திடமான உடல் நோய் நொடி இல்லாத குறைபாடு பாதிக்காத வலுவான உடல் நலம். அனைவருக்கும் அப்படி அமைந்து விடுகிறதா என்றால் இல்லை. 

அவரவர்கள் பிறந்த ஜாதகத்தின் கிரக நிலை ஏற்ப உடல் ஆரோக்கியமும் நோய் தாக்கமும் அமையும். 

ஆரோக்கியமான உடல் பெறுவதற்கு முதலில் லக்னாதிபதி வலுபெற வேண்டும். 

லக்னாதிபதி கிரகம் ஆட்சி உச்சம் நட்பு வலுவோடு லக்ன கேந்திர கோணத்தில் குரு சுக்ர புதன் பார்வை இணைவோடு இருக்க வேண்டும். #padmahazan 

இதற்கு விதி விலக்கு இணைந்த அந்த குருவோ சுக்ரனோ புதனோ ஆறாமதிபதி எட்டாமதிபதி ஆகவும் வரகூடாது. அவர்களே உடல் நலத்தை கெடுப்பார்கள். 

ஆத்ம காரகன் சூரியனும், கட்டுமஸ்தான உடலை தரும் செவ்வாய் பகவானும் ஜாதகத்தில் வலுபெற்று சனி பார்வை ராகு இணைவு இல்லாமல் இருக்க வேண்டும். #padmahazan 

இதறகான விதிவிலக்கு இவர்களும் 6 8ம் அதிபதியாக செவ்வாய் சூரியன் வந்தால் அங்கேயே ஆட்சி பெற கூடாது நோயை தந்து வாட்டி எடுப்பார்கள். வேறு பாவகத்தில் நட்பு வலுவோடு இருக்க வேண்டும். 

மிகவும் முக்கியமாக லக்னத்தில் பாவர்கள் இல்லாமல் இருப்பதும் ஆரோக்கியமான உடலை தரும். 

ஆரோக்கியமான உடலை பெற லக்னம் லக்னாதிபதி சூரியன் செவ்வாய் பாவிகளான சனி ராகு தொடர்பு பெறாமல் இருக்க வேண்டும் என்பதை போல தலைகீழாக நோய் கொண்ட உடலிற்கு இவர்கள் சனி ராகுவால் பாதித்து இருப்பார்கள். 

6 8 இடம் சம்மந்தப்பட்ட தசா புத்தி காலத்தில் ஒருவருக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கும். 

இன்னும் பல விதிகளும் விதி விலக்குகளும் உள்ளது அடுத்தடுத்த பதிவுகளில் எழுதுகிறேன்.

#padmahazan #லக்னம் #லக்னாதிபதி #சூரியன் #செவ்வாய்

No comments:

Post a Comment

நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..?

🍁 நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..? 🍁 #hazan  ⚡️ஓர் கிரகம் நீச வீட்டில் ஓர் கிரகம் இருந்தாலே அது ஏதோ ஓர் வகை நீசபங்கம் பெற்று விட்டது முடிவ...