PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
சூரிய சந்திர இரு ஒளி கிரகங்களோடு இருள் சாயா கிரகங்கள் ராகு கேது இணைவது பித்ரு தோசத்தை குறிக்கும்.
1).சூரியன் + ராகு இணைவு,
2).சந்திரன் + ராகு இணைவு,
3).சூரியன் + கேது இணைவு,
4).சந்திரன் + கேது இணைவு,
5). சூரியன்+சந்திரன் +ராகு இணைவு,
6). சூரியன்+சந்திரன்+கேது இணைவு,
போன்றவை இதை குறிக்கும்.
சூரியனின் உண்டாக கூடிய ஒரு மனிதன் தன்னை தானே யார் என்று உணர்தல், தன் திறனை வெளிபடுத்துதல், தந்தை வழி ஆதரவு, தந்தையால் உண்டாக கூடிய சுப நிகழ்வுகள் போன்றவையும்
சந்திரனால் நல்ல மனநிலை, ஆரோக்கியமான உடல்தேகம், நேர்மறையான எண்ணம், நல்ல சாப்பாடு கிடைப்பது, பிறருக்கு நல்ல உணவை கொடுப்பது, தாயாரால் உண்டாகும் ஆதரவு, தாயார் வழியால் உண்டாகும் சுப நிகழ்வுகள் போன்றவையும்
ராகு கேதுக்களோடு சூரிய சந்திர கிரகங்கள் இணைவதால் ஜாதகருக்கு தாமதமாகி கிடைப்பது, அல்லது கிடைக்காமலேயே போவது போன்ற நிலையை தரும்.
அதாவது சூரியன் கெட்டவர்கள் தன்னுள் இருக்கும் திறமையை குணத்தை வெளிபடுத்த முடியாமல் திறன் இருந்தும் முயற்சி முன்னேற்றம் இல்லாமல் இருப்பதும்,
சந்திரன் ராகு கேதுவால் கெட்டவர்கள் குழப்பமான மனதோடு, சாப்பாட்டு பிரச்சனை, தாயார் வழி மன சங்கடங்களை அனுபவிப்பவராக இருப்பார்கள்.
இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் மூதாதையர்களுக்கு, பூர்வ ஜென்மத்தில் பெற்றவருக்கு செய்ய வேண்டிய சுப நிகழ்வுகளை ஆதரவை வளர்த்த பிறகு கொடுக்காத பிள்ளைகளுக்கு இந்த கிரக அமைப்பு கர்மாவின் காரணமாக அமைந்து விடுகிறது.
இந்த இணைவுகள் பெற்றவர்கள் தாய் தந்தைக்கு செய்ய வேண்டிய கடமைகளை ஆதரவுகளை வாழ்நாள் முழுவதும் செய்து வருவதும், மூதாதையர் செய்ய வேண்டிய வழிபாடுகள் செய்வதும் அவசியம்.
எனக்கு சூரிய கேது சேர்க்கை உள்ளது, சந்திரன் ராகு சேர்க்கை உள்ளது என் தாய் தந்தை நன்றாக தான் உள்ளார்கள் என்றால் அது உங்களின் ஆளுமை, மனது சார்ந்த தாக்கத்தை கொடுத்து கொண்டு இருக்கும்.
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
🤩 #padmahazan 🤩
No comments:
Post a Comment