Tuesday, February 22, 2022

அடிமைபடுத்தும் ஆறாமிட கிரக பலன்

 🍁 6ல் நின்ற கிரக பலன் 🍁 #hazan 


ஜோதிடத்தில் ஜாதகருக்கு ஆகாத ஒரு பாவகம் இந்த 6ம் இடம். 


அடிமை ஸ்தானம் ஆறாம் இடம். 


ஒருவரை அடிமைப்படுத்தி வாழ வைப்பதும், பிறருக்கு அடி பணிய வைத்து, ஏதோ ஒரு நிர்பந்தத்தின் காரணமாக ஓடுங்கி இருக்க வைக்கும் பாவகம் இந்த ஆறாம் பாவகம். 



ஒரு கம்பெனியில் காலை 9 மணி்க்கு உள்ளே சென்று 1 மணிக்கு சாப்பிட்டு மாலை 5 மணிக்கு கிளம்பும் அந்த விதிமுறைகளை பின்பற்றி நடக்கும் வேலையை தரும் பாவகம், manager க்கு அடங்கி நடக்க வைக்கும் பாவகம், மேனேஜராக இருந்தால் அங்கே இருக்கும் project டை முடிக்க முடிக்க சொல்ல வேண்டும் என்ற சுதந்திரமற்ற நிலையை தரும் பாவகம், 


பங்காளிகளை குறிக்கும் பாவகம், அவர்கள் வழி சண்டைகளை அடிதடிகளை குறிக்கும் பாவகம். 


லக்னம் என்னும் ஜாதகனின் இயல்பு குணததை முடக்கி ஒரு காட்டுபாடுக்குள் வைக்கும் இந்த ஆறாம் பாவகம். #padmahazan 


ஆறில் நின்ற கிரகங்கள் ஜாதகனை அடிமைபடுத்தும். எப்படி பார்ப்போம்... 


6ல் சூரியன் எனில் தந்தைக்கு அல்லது மூத்த மகனுக்கு பயந்து நடுங்கி ஒடுங்கி இருக்கும் சூழல் இருக்கும். தந்தை சொல்வதை மறுக்க முடியாமல் செயல்பட வேண்டிய சூழல் தரும். அரசு ஊழியராக மேல் அதிகாரிகளுக்கு கீழ் கட்டுபட்டு நடக்க வைக்கும். சிலநிலைகளில் அரசுக்கும் உங்களுக்கு எதிரான வழக்குகளை சந்திக்க வேண்டி இருக்கும். 



6ல் சந்திரன் எனில் தாயாருக்கு நீங்கள் அடிமை, வயதில் மூத்த மதிக்கதக்க தாயாரை போன்ற பெண்கள் உங்களை அதிகாரபடுத்துவார்கள். 


6ல் செவ்வாய் எனில் சகோதரனுக்கு நீங்கள் அடிமை, நிலம் சார்ந்த விஷயத்தை மனதில் வைத்து கொண்டு நீங்களே நிலம் சார்ந்த விஷயத்தில் அடிமையாகிவிடுவீர்கள். அதிகமாக நிலம் சேர்க்க வேண்டும் என்ற எண்ணமும் அடிமைபடுத்தும் ஜாதகனை. 


6ல் புதன் எனில் நண்பர்கள் தாய்மாமன் மைத்துனன் போன்றவர்களைக்கு அடிமையாகிவிடுவீர்கள். இவர்கள் சொன்னால் மறுத்து பேசாமல் சொல்வதை கேட்பீர்கள். படிப்பு அறிவு சார்ந்த இடங்களில் அடிமையாகிவிடுவார். 


6ல் சுக்ரன் எனில் மனைவி  எதிர்பாலின நட்பு பெண்களுக்கு ஜாதகர் அடிமைபடுவார், பெண்கள் சொல்வதை கேட்டு நடப்பது இவர்களது குணமாகி போகும். சுக்ரன் ஜாதகனை ஆடம்பரம் வீடு வண்டி சார்த்த அடிமைபடுத்தும். 


6ல் குரு எனில் பெற்ற ஆண் பிள்ளைகள், ஆசிரியர்கள், குருமார்கள், பணம் தனம் கௌரவம் சாஸ்திரம் சம்பிரதாயம் போன்றவற்றிற்கு அடியைமாகிவிடுவார். #padmahazan 


6ல் சனி எனில் உத்தியோகம் உழைப்பு குடிபழக்கம் சார்ந்த விஷயங்களில் ஜாதகர் அடிமையாகிவிடுவார் 


6ல் கேது எனில் ஆன்மீக நாட்டத்தில் , கடவுள் பக்தி, மூதாதையர்கள், புராண இதிகாசங்கள் இவர்களது அடிமையாக்கி ஜாதகனை அழகு பார்க்கும் கேது. 


6ல் ராகு எனில் பேராசை, எதிலும் திருப்தியற்ற வேண்டும் வேண்டும் என்ற மோகம் ஜாதகனை வாட்டும். 


பொதுவாக ஆறில் கிரகங்கள் இல்லாமல் இருப்பது நல்லது. ஆறில் கூடும் கிரகங்கள் இவை எல்லாம் கொடுத்தாலும் அவற்றால் ஜாதகர் நன்மை பெற முடியாமல் தவிக்கவிடுவார்கள். 


6ல் சூரியன் தந்தைக்கு நீங்கள் அடிமையாகி தந்தைக்கு உதவினாலும் தந்தை உங்களுக்கு எதிராக செயல்படுவார், உங்களது மீதான அக்கறை இல்லாமல் இருக்கும். அதான் ஆறாமிடம். 


மேலே சொன்ன பாவகத்தோடு காரக ஆதிபத்தியத்தை கலந்து பலனை துல்லியமாக காணலாம். 


மேலும் சில வேறு கிரக சேர்க்கை அமைப்பு காரணமாக பலனில் சிறு சிறு மாற்றமும் இருக்கும். 


#padmahazan 




No comments:

Post a Comment

நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..?

🍁 நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..? 🍁 #hazan  ⚡️ஓர் கிரகம் நீச வீட்டில் ஓர் கிரகம் இருந்தாலே அது ஏதோ ஓர் வகை நீசபங்கம் பெற்று விட்டது முடிவ...