Saturday, November 12, 2022

மூன்றாம் பாவகம் தரும் தொழில் வேலை

🍁 மூன்றாம் பாவகம் தரும் தொழில் வேலை 🍁 #hazan 

மூன்றாம் இடம் _ லக்னத்தில் இருந்து மூன்றாவது ராசியாக வரும் பாவகம். இந்த மூன்றாம் பாவகம் மிதுன ராசியின் இயல்பை வெளிபடுத்தும் பாவகம். பேசுவதை கருத்தை பரிமாறுவதை சிறுதூர பயணத்தை தரும் பாவகம்

ஒருவர் மற்றொருவரிடம் பேசுதல் விஷயங்களை பொருட்களை பரிமாரிகொள்ளுதல் போன்றவற்றை வெளிபடுத்தும் பாவகம்.

தற்போதைய அவசரமான ஓடி கொண்டே இருக்கும் உலகில் பலர் இந்த மூன்றாம் பாவக தொடர்பில் தொழிலை வேலையை செய்து வருகின்றனர்.

தபால்காரர்கள், கொரியரை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சென்று சேர்ப்பவர், உணவு பொருட்களை வீடு வீடாக சென்று டெலிவரி கொடுப்பவர், #padmahazan 

ரேடியோ, DTH, Telephone, mobile phone, wifi gatgets, நெட்வொர்கிங் போன்ற நிறுவனங்களில் பொருட்களை பயனாளர்களிடம் கொண்டு சேர்ப்பது போன்ற தொழிலை செய்பவர்கள்,

மேடை பேச்சு, நடிப்பு, நகைச்சுவை, பாடல், இசை போன்றவற்றை செய்து மக்கள் மத்தியில் பெயர் புகழை பெறுபவர்கள், 

செய்திதாள் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள், அச்சக பணி, பிரிண்டிங், கீபோர்ட் போன்ற விரல்களின் உதவியோடு பணி கொண்டவர்கள், ஊர் ஊராக பணத்தை கொடுத்து பைனான்ஸ் தொழிலில் பணத்தை அலைந்து திரும்ப பெறுபவர்களும். #padmahazan 

 3 இடத்தோடு 2 10ம் இடத்தோடு தொடர்பு பெற்று சுப தொடர்போடு தசா புத்தி நடக்கும் போது தொழிலாக அமைத்து கொள்வார்கள்.

தினமும் 60 கிலோ மீட்டர் வாகனத்தில் பயணப்படுவதும் , இருந்த 10×10 அறையில் ஊர் முழுக்க ரேடியோ வழியாக பலரிடம் நிகழ்ச்சி தொகுப்பாளராக புகழ் பெற்று இருப்பவரும் இதே மூன்றாம் பாவகமே தரும் தொழில்களாகும்.

மூன்றாம் பாவகம் பகுதி 2 தகவல் பரிமாற்றம்

ஒருவரது ஜாதகத்தில் லக்னத்திற்கு மூன்றாவது ராசி ஜாதகர் பிறரோடு கொண்டு இருக்கும் தகவல் பரிமாற்றம், பிறரோடு பேசும் போது அவரது சுபாவம், பொருட்களை கொடுத்து வாங்குவது போன்றவற்றை குறிக்கும் பாவகம். 

இருவரோ மூவரோ பேசி கொள்வது வாக்கு ஸ்தானம். ஒருவர் சொல்ல ஒரு குழுவோ மக்கள் கூட்டமோ கேட்கிறது என்றால் அது மூன்றாம் பாவகத்தில் வரும். #padmahazan 

ஒருவர் அலுவலகத்திலோ அல்லது தொழிலிலோ அல்லது கூட்டு தொழிலிலோ அங்கு இருக்கும் நபர்களோடு எந்த விதமான முறையில் தகவலை பரிமாற்றம் செய்து கொள்வார் என்பதை காட்டும் பாவகம். 

சிலர் ஒரு விஷயத்தை மற்றொருவருக்கு சொன்னால் அதனால் அவருக்கே பிரச்சனை வரும். சாதாரண விஷயத்திற்கு ஊரே கூடி ஜாதகரை ஒரு வழி செய்து விடுவார்கள். #padmahazan 

சிலர் எவ்வளவு பெரிய விஷயத்தை பலருக்கு மத்தியில் பேசினாலும் யாரும் வம்புக்கு வரமாட்டார்கள். நாசுக்காக சொல்லிவிட்டு பகையை பெறாமல் கருத்தை பரிமாற்றி கொள்வார்கள். அதை குறிப்பது இதே மூன்றாம் பாவகம். 

மூன்றில் குரு சுக் புதன் வளர்பிறை சந்திரன் போன்ற முழுக்க முழுக்க சுப கிரக தொடர்பு பெறும் போது அவர்கள் கருத்து பரிமாற்றம் பலரை சென்று சேரும். பிறர் அதை கேட்டு பாராட்டும் பெறுவார்கள். பண்பாக சொல்லி பலர் மனதை ஆள்வார்கள். 

ராகு சனி செவ் போன்ற பாவர்களால் மூன்றாம் இடம் பாதிக்கும் போது ஜாதகர் பரிமாற்றும் விஷயம் ஜாதகருக்கே பிரச்சனையாக வரும். தைரியமாக தடாலடியாக சொல்வார்கள் ஆனால் பின் விளைவு கடுமையாக இருக்கும். #padmahazan 

3ம் அதிபதி 6 8ல் இருப்பது 6 8 அதிபதி 3ல் இருப்பது குறிப்பாக பாவராகி இருப்பது கருத்தால் கலவரத்தை உருவாக்கி இவரும் பாதிக்கபடுவார். 

மேடை பேச்சாளர்கள்,அரசியல் பிரமுகர்கள், தொழில் நடத்தும் பெரும் வணிகர்கள் ஜாதகத்தில் மூன்றாம் அதிபதியும் பாவகமும் சுப கிரக தொடர்பில் இருக்கும். குறிப்பாக 4 7 10 5 9 அதிபதி பாவக தொடர்பில் இருப்பார்கள். மூன்றாம் இடத்தில் சுக்ரன் புதன் குரு ஆட்சி உச்சம் அல்லது நட்பு நிலையிலான பலத்தோடு இருப்பது யோகம். இவர்களது பார்வை 9 இடத்தை பார்த்து மேலும் வளர்க்கும். 

லக்னாதிபதி வலுபெற்று மூன்றாம் இடமும் அதிபதியும் வலுபெற்றவர்கள் சமுதாயத்தில் மதிக்கும் நபராகவும் இவர்களது கருத்து பரிமாற்றம் சமுதாயத்தில் குறிப்பிட்ட அதிர்வலையை உண்டாக்கும் ஆற்றலும் பெற்று இருக்கும். 

#padmahazan #கருத்து #பரிமாற்றம்

Padmahazan SRI VISHNU ASTROLOGY. 
WHATS APP 8300 620 851 

🤩 #padmahazan 🤩

No comments:

Post a Comment

நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..?

🍁 நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..? 🍁 #hazan  ⚡️ஓர் கிரகம் நீச வீட்டில் ஓர் கிரகம் இருந்தாலே அது ஏதோ ஓர் வகை நீசபங்கம் பெற்று விட்டது முடிவ...