தற்போது கொஞ்சம் பரபரப்பாக முன்பை விட அதிக எண்ணிக்கையிலான ஜாதகங்களை பலன் சொல்லி வருவதால் சில கிரக அமைப்பை நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது.
திருமணம் ஆகவில்லை எப்போது நடக்கும்..? குழந்தை பாக்கியம் எப்போது கிடைக்கும்..? மணவாழ்க்கை பிரிவு எப்போது சரியாகும்..? என்ற கேள்வியை ஜாதகர் கேட்ட உடனே ஜாதகத்தில் குருவைதான் தேடுவேன். குரு பின்வரும் நிலைகளில் இருப்பார்....
1). 1980 ஆண்டுகளில் கன்னி ராசியில் நடந்த குரு சனி இணைவு. ஜாதகருக்கு 40 வயதாலும் திருமணம் சந்ததி விருத்தி குழந்தை விஷயத்தில் தடை தந்து இருக்கும்.
2). 1983 ஆண்டுகளில் துலாத்தில் சனி உச்சமாகி தனுசில் இருக்கும் குருவை தனது மூன்றாம் பார்வையில் கிடுக்குபிடியாக பார்த்து இருப்பார் சனி. இந்த சேர்க்கை கூட அவ்வளவு மோசமானது இல்லை. குரு ஆட்சியாகி இருப்பதால் தர வேண்டியதை சிறு குறையோடு தந்து இருப்பார்.
3). 1985 ஆண்டுகளில் குரு மகரத்தில் நீசமாகி பின் விருச்சிக சனியின் மூன்றாம் பார்வையில் இருப்பது மேலே சொன்னதை விட சற்று கூடுதலான ஆகாத அமைப்பில் இருக்கும்.
இந்த மூன்று நிலைகளில் லக்னத்திற்கு ஐந்து ஏழாம் இட வலுவிற்கு ஏற்ப சில ஜாதகர்களுக்கு இன்றளவும் தசா புத்தி ஏற்ப பிரச்சனை ஆக இருப்பது இந்த குரு சனி தொடர்பாக இருக்கும்.
தாமத திருமணம் குழந்தை பாக்கியம் அல்லது மணவாழ்க்கை பிரச்சனை தருவது இந்த சேர்க்கை பெற்றவர்களே. அதே சமயம் செய்யும் தொழிலில் அளவு கடந்த மேன்மை பெறுபவர்களும் இதே கிரக சேர்க்கை பெற்றவர்களே.
ஒன்று இருந்தால் ஒன்று இருக்காது. அதுதான் வாழ்க்கை.
#padmahazan #குரு #சனி #மகரம் #துலாம்
No comments:
Post a Comment