Saturday, November 12, 2022

லாப ஸ்தானத்தில் லக்னாதிபதி நிலை

🍁 லாப ஸ்தானத்தில் லக்னாதிபதி நிலை 🍁 #hazan #லக்னாதிபதி #ஸ்தானம் #லாபம்

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

ஜோதிடத்தில் பொதுவாக லாப ஸ்தானத்தில் கிரகங்கள் நிற்பது யோகமென்று சொன்னாலும் லக்னாதிபதி லாப ஸ்தானமான 11ல் நிற்பது பெரும்பாலான லக்னத்திற்கு லக்னாதிபதி வலுஇழந்த நிலையில் இருப்பார். 

மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் போன்ற லக்னத்திற்கு லக்னாதிபதி லாப ஸ்தானத்தில் பகை அல்லது சம வலுவில் இருப்பார்.

 மீன லக்னத்திற்கு லக்னாதிபதி 11ல் நீசமடைவார். ரிஷபம் மற்றும் கடக லக்னத்திற்கு லக்னாதிபதி 11ல் உச்சமடைவார்கள். ரிஷபத்திற்கு 11ல் உச்சமடைவது யோகம். கடகத்திற்கு லக்னாதிபதி பாதக வீட்டில் உச்சமாவதும் சுப பலனில் சற்று கெடுதலும் உண்டு.

ரிஷப லக்னத்தை தவிர பிற லக்னங்களுக்கு லக்னாதிபதி 11ல் நிற்பது பகை அல்லது சமம் பெறுவது லக்னாதிபதி வலுஇழந்த அமைப்பை பெறுவதையே குறிக்கும். லக்னம் பாவர்களால் பாதிக்க லக்னம் பொழிவு இழந்து அந்தஸ்து குறைவு நடுத்தரமான வாழ்க்கை அமைத்துவிடும்.

இருப்பினும் லக்னாதிபதி லாபத்தில் பகை அல்லது சமம் இருப்பதால் ஒரளவு லாபம் முன்னேற்றம் வளர்ச்சி கொடுக்கும்.

இதில் ஒரு விதிவிலக்காக ஒருவர் தொழில் அல்லது வேறு விதமான நிலையில் நல்ல லாபம் வளர்ச்சி முன்னேற்றம் அடைகிறார் அவருக்கு லக்னாதிபதி 11ல் பகை பெற்று தானே உள்ளார் என்று பார்த்தால் அவருக்கு லக்னாதிபதி 11ல் பகை அல்லது சம வலுவில் இருந்தாலும் வலுத்த குரு சுக்ரன் அல்லது தனித்த புதன் பார்வை , வளர்பிறை சந்திரன் பௌர்ணமி சந்திரன் மற்றும் ஒளிபொருந்திய தேய்பிறை சந்திரன் பார்வை இணைவு அதிகமாக பெற்று திருக் பலம் என்ற சுப பார்வை பெற்று வலுபெற்ற நிலையில் இருப்பார். #padmahazan 

மேலும் லக்னாதிபதியாகும் சூரியனோ செவ்வாயோ திக் பலத்தை விட்டு விலகும் பலத்தோடு கூடிய திருக் பலத்தோடு சுப அமைப்பில் லாபத்தில் நின்று இருப்பதும் தசா நடத்துவதும் யோகமான அமைப்பாகும். 

சுப பார்வை சுப இணைவு இல்லாத லாபத்தில் நின்ற லக்னாதிபதியை விட பூர்வ புண்ணிய அதிர்ஷ்டம் ஸ்தானமான ஐந்தில் நட்பு வலுவோடு லாபத்தை பார்க்கும் லக்னாதிபதி நிலை நன்றாக இருக்கும். 

2021 April 22 ல் எழுதிய பதிவு.

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851

🤩 #padmahazan 🤩

No comments:

Post a Comment

நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..?

🍁 நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..? 🍁 #hazan  ⚡️ஓர் கிரகம் நீச வீட்டில் ஓர் கிரகம் இருந்தாலே அது ஏதோ ஓர் வகை நீசபங்கம் பெற்று விட்டது முடிவ...