Saturday, March 25, 2023

நிறைவான தன யோகம் தரும் தர்ம கர்ம லாப ஸ்தானங்கள்

🍁 நிறைவான தன யோகத்தை தரும் தர்ம கர்ம லாப ஸ்தானங்கள் _ 9 10 11 🍁 #hazan 

ஜாதகத்தில் லக்னத்திலிருந்து எண்ணி வரும் 9 10 11 பாவகங்கள் அந்த ஜாதகருக்கு எப்போதும் ஒரு மேம்பட்ட தொழில் நிலை , சுப காரியத்தில் உண்டாகும் தன சேர்க்கை , பொருள் லாபம் ஆகியற்றை தரும். 

இந்த தர்ம கர்ம லாப ஸ்தானங்களான 9 10 11 பாவகங்கள் எப்போதும் ஒர் பிறப்பின் உச்சி வானில் அமையும் பாவகங்களாகும். உச்சி வானில் நிற்கும் பாவக கிரகங்கள் லக்னம் என்னும் ஜாதகருக்கு தொழில் நிலை , பதவி , நீடித்த வருமானம் அதை தொடர்ந்து உண்டாகும் கௌரவம் , இறைபக்தி , முதல்மரியாதை , லாபம் வெற்றியை ஏற்படுத்தி கொடுக்கும். #padmahazan 

தன சேர்க்கையை 2 மிடம் என்னும் தன சேமிப்பு நிலையை  கொடுத்தாலும், அதற்கு வருமானமும் லாபமும் தருவது 10 11 இடங்கள். லாப ஸ்தானத்தின் லாப ஸ்தானம் 9 மிடம் என்னும் பாக்கிய ஸ்தானம். இந்த பாக்கிய ஸ்தானம் தந்தை வழி சொத்து தனம் அந்தஸ்து பெறுவதை குறிப்பிடும். 

9 10 11 அதிபதி இணைந்து 
9 10 11 பாவகங்களில் இருப்பது 

அல்லது 

லக்ன 1 4 7 10 ல் இருப்பது , 

அல்லது

லக்ன 1 5 9 ல் இருப்பது 

போன்ற நிலையில் இவர்களது தசா வருவது , 

லக்ன உபஜெய கேந்திர கோணாதிபதிகள் 9 10 11 இடங்களில் இருப்பது சிறப்பு.

இத்தகைய கிரக இணைவை குரு பார்வை செய்வது சிறப்பான நிறைவான தன யோகத்தை தரும். 

 இந்த கிரகங்கள் 9 10 11 இணைந்து தனி சுக்ரனின் பார்வை பெறுவது சுக வாழ்வும் அதற்கு ஏற்ப செலவுகளுக்கு உண்டான சீரான தன வரவும் கொடுக்கும். 
#padmahazan 

சம்மந்தப்பட்ட தசா புத்தி காலத்தில் ஏற்றத்தை கொடுக்கும். 

6 8 12 அதிபதிகள்  9 10 11 இடங்களில் இருப்பது பணம் பொருளை கொடுத்தாலும் சில சிக்கல்களை தரவும் செய்யும். 

9 10 11 இடங்களில் உள்ள கிரகங்களை சனி பார்வை செய்வது , நீசம் பெறுவது , மறைவு ஸ்தான அதிபதிகளான 6 8 12 அதிபதிகளோடு பரிவர்த்தனையாக இருப்பது சிறப்பு அல்ல. 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851

Thursday, March 23, 2023

செவ்வாய் தோச பாதிப்பு மற்றும் விதிவிலக்கு

🍁 செவ்வாய் தோச பாதிப்பு & விதிவிலக்கு 🍁 #hazan 

ஜோதிடத்தில் ஒரு பக்கம் செவ்வாய் தோசம் என்பது மூல நூல்களில் இல்லாத ஒரு அமைப்பில் சொன்னாலும் , ஒரு பக்கம் செவ்வாய் ஒரு முக்கால் பாவர் ஆகி , தனக்கு ஆகாத சனி மற்றும் ராகு தொடர்பில் அமைந்துவிடும் போது தோச அமைப்பாக சில பாதிப்பை தருவதாகவும் சொல்லபடுகிறது. 


எத்தகைய அமைப்பில் தோசம் பாதிப்பை தரும்..? எந்த அமைப்பில் பாதிக்காது..? வாருங்கள் பார்ப்போம். 

உதாரணத்திற்கு கடக லக்னத்தை எடுத்து கொள்வோம். குறிப்பாக கடக லக்னத்தை எடுத்து கொள்ள காரணம்..? இந்த லக்னத்தின் ராஜ யோகாதிபதி செவ்வாய் என்பதால். ராஜயோகாதிபதியும் கூட சில இடங்களில் காலை வாரிவிடும் சூழலை ஏற்படுத்துவார். 


முதல்நிலை : 

லக்னத்திற்கு நான்கில் துலாத்தில் செவ்வாய் சம வீட்டில் இருப்பது. இந்த நிலையில் செவ்வாய் தனது 10 வீட்டோடு தொடர்பு கொண்டு சுக்ரனின் வீட்டில் இருப்பதோடு , சுக்ரன் கெடாத வரை செவ்வாய் பெரிய அளவில் பாதிப்பை தர மாட்டார். செவ்வாயின் பார்வை 7 ம் வீட்டிற்கு வந்தாலும் செவ்வாய் இருக்கும் ராசி சுக்ரனின் சுப வீடாக அமைவதால் பெரிய பாதிப்புகள் இருக்காது. பாவ கிரகமான செவ்வாய் 10 வீட்டோடு தொடர்பு கொள்வதால் வருமானமும் அதனால் உண்டாகும் வாகன வீடு சார்ந்த மேன்மை தரும். 

விதிவிலக்கு : 

இங்கே வீடு கொடுத்த சுக்ரன் நீசம் பகை கிரகணம் ஆவது அல்லது இந்த செவ்வாய்க்கு சனி பார்வை இணைவு , மிகவும் குறிப்பாக ராகு இணைவு பெறும் போது செவ்வாயின் தசா அல்லது புத்தி காலத்தில் மணவாழ்க்கை பாதிக்கும். 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

இரண்டாம் நிலை : 

லக்னத்திற்கு எட்டில் கும்பத்தில் செவ்வாய் இருப்பது, செவ்வாய் தனக்கு பிடிக்காத சனியின் வீட்டில் பகை வலுவோடு மறைவது சிறப்பு தராது. பகை வீட்டில் உக்கிரமாக செயல்படும் செவ்வாயின் 7 ம் பார்வை நேராக குடும்ப ஸ்தானத்தை பார்த்து குடும்ப வாழ்வில் பிரச்சனை தரும், தொழிலில் உண்டாகும் அவமானமும் கஷ்டமும் வருமான பாதிப்பும் இங்கே குடும்பத்தில் பிரதிபலிக்கும், செவ்வாய் தசா புத்தி காலத்தில் பாதிப்பை தரும். 

விதிவிலக்கு : 

இதற்கான ஒரே விதிவிலக்கு குரு வின் பார்வை இணைவை செவ்வாய் பெறுவதே ஆகும்.

இங்கே மற்றொரு சிக்கல் , சந்திரன் செவ்வாயோடு இணைந்தாலோ பார்த்தாலோ , ராசிக்கு 7ல் செவ்வாய் அல்லது ராசியில் செவ்வாய் இருந்து அது கூடுதலாக பாதிப்பை தரும். 

ஒவ்வொரு லக்னத்தை பொறுத்து செவ்வாயின் நிலை ஏற்ப பாதிப்பு கூடவோ குறைவாகவோ குரு பார்வை ஏற்ப மாறுபடும். 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851


Wednesday, March 22, 2023

சுக்ரன் செவ்வாய் சனி தொடர்பு

🍁 சுக்ரன் செவ்வாய் சனி தொடர்பு 🍁 #hazan 

💥சுக்ரன் + சனியோடும் + செவ்வாயோடும் இணைவது, 

💥சுக்ரன் + சனி இணைவில் செவ்வாய் 4 7 8 பார்வை பெறுவது, 

💥சுக்ரன் செவ்வாய் இணைவில் சனி 3 7 10 பார்வை பெறுவது, 

💥சுக்ரனுக்கு சனி 3 7 10 பார்வை மற்றும் செவ்வாய் 4 7 8 பார்வை பெறுவது 

போன்ற 4 நிலைகளில் சுக்ரன் பாவகிரகங்களான சனி மற்றும் செவ்வாய் பார்வை இணைவால் பாதிப்பார். 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

இதனால் ஜாதகருக்கு 

💥நிலம் வாங்கும் போது வில்லங்கமான இடத்தை வாங்கிவிட்டு பின் அதனால் அலைச்சல் படுவது, விற்ற நபரோடு வழக்குகளை சந்திப்பது, 

💥நிலம் வாங்கிய பிறகு சுற்றி உள்ள நிலக்காரர்களோடு வாக்குவாதம் உண்டாவது, 

💥நிலம் சம்பந்தமான சகோதர சகோதரிகள் உண்டான சொத்து பிரச்சனை 

💥சொந்தமாக வீடு கட்டி குடியேறுவதில் தடை அல்லது ஏற்கெனவே கட்டிய பழைய வீட்டை வாங்கி அதில் வசிக்க வேண்டிய சூழல் 

💥வீடு சம்பந்தமான அதிகபடியான பராமரிப்பு செலவுகள் 

💥வாகனங்கள் பயணங்களின் போது விபத்துக்களில் சிக்குவது, அல்லது வாகனங்கள் பழுதுபட்டு செலவு வைப்பது, 

💥முக்கியமான நேரத்தில் வாகனம் பழுதடைந்து விடுவது, 

💥கணவன் மனைவிக்கு இடையேயான கருத்து வேறுபாடு, 

💥வாழ்க்கை துணை வழியிலான ஆதரவு இன்மை, வாழ்க்கை துணையே பிரச்சனையாக இருப்பது, 

💥மனைவி அத்தை மாமியார் மைத்துனி நாத்துனார் போன்ற உறவுகளால் குடும்பத்தில் குழப்பமும் நிம்மதி இழப்பும் வருவது, 

💥மிக அரிதாக சில நிலைகளில் மர்ம ஸ்தானத்தில் அடிவயிற்று உறுப்புகளில் பாதிப்பு அல்லது பாலியல் சம்மந்தப்பட்ட நோய் அல்லது குறைபாடு தருவது போன்ற தீய பலனும், 

💥கட்டுமானம் சார்ந்த பொருட்களை விற்பது, கட்டுமான நிறுவனத்தில் வேலை, நிலம் சார்ந்த சர்வேயர், பொதுப்பணித்துறை வேலை, டென்டர் எடுப்பது, நெருப்பு ஆற்றல் power station உற்பத்தி நிலையங்களில் வேலை, இரும்பு, ceramic, வாகன உற்பத்தி, வாகனம் சம்மந்தப்பட்ட தொழில், குத்துச்சண்டை, பைக் ரேசிங் ஆர்வம் போன்ற தொழில் முறை யோகத்தை தரும். #padmahazan 

💥ஆடம்பர வாழ்வு, மணவாழ்க்கை பாதிப்பை கொடுத்து தொழில் முறை ஏற்றத்தை தரும், 

💥சுக்ரன் சனி மற்றும் செவ்வாயால் பாதிக்கும் நிலையில் குரு பார்வை இணைவை இவர்கள் பெறும் போது, அல்லது வளர்பிறை சந்திரன் இவர்களோடு இணைவது வளர்பிறை சந்திரன் பார்ப்பது போன்ற நிலையில் மேலே சொன்ன கெடுபலன் ஜாதகருக்கு நடக்காது.

💥இத்தகைய சுக்ரன் சனி மற்றும் செவ்வாயோடு பாதித்த நிலையில் இருக்கும் ஜாதகர்கள் சுக்ரனுக்கான கஞ்சனூர் வழிபாடு, வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் சுக்ர வழிபாடு, மகாலெக்ஷ்மி வழிபாடு போன்றவை பாதிப்பை குறைக்க முடியும். #padmahazan 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851

Monday, March 20, 2023

குடும்ப ஸ்தானம் _ 2 ம் பாவகம்

🍁 2ம் இடம் 🍁 #hazan

தனக்கென ஒரு குடும்பம் அமைவது, 

குடும்பம் மீதான பற்றுதல், 

குடும்பத்தால் உண்டாகும் இன்ப துன்பம்

தன சேர்க்கை,

கையில் இருக்கும் சேமிப்பு பணம், 

உடனடி தேவைக்கான பணம், 

முக தோற்றம்

முகப்பொழிவு, 

பல் வரிசை,

வாய் 

நாக்கு 

பேசுதல்,

பேசுவதால் உண்டாக கூடிய நிகழ்வு,  

(சிலர் பேசினால் சாதகமாக முடியும் சிலர் பேசினால் வெட்டு குத்தில் முடியும்) 

பேசும் விதம்

பால பாடம், 

சிறு வயதில் உண்டாக கூடிய படிப்பறிவு, 

கலை மீதான வெளிப்பாடு, 

உணவு பழக்கம் 

உணவு மீதான ஆசை 

கிடைப்பதை சாப்பிடுவாரா..? விரும்பியதை மட்டும் சாப்பிடுவாரா..? 

வலது கண் 

வாழ்க்கை துணையின் ஆயுள் 

வாழ்க்கை துணைக்கு வரும் கண்டம் 

வாழ்க்கை துணைக்கு உண்டான திடீர் யோகம் 

தாயார் வழி பெரியம்மா,

மூத்த தாய்மாமன் 

தந்தையால் உண்டாக கூடிய கடன், 

இப்படி பலவற்றை தன்னுள் வைத்து இருப்பது தான் தன பாவகம் என்னும் குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடம்

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

#padmahazan

8ல் மறைந்த குரு

🍁 6 8 தொடர்பில் குரு 🍁 #hazan 

கடந்த சில பதிவுகளில் 6 8 12 சுப கிரக சுப பலனை பற்றி எழுதி உள்ளேன். அதன் தொடர்ச்சியாக இந்த பதிவை நீங்கள் எடுத்து கொள்ளலாம்.

6 8 12 கிரகங்கள் தொடர்பு அனைத்துமே யோகங்களை எளிதாக கொடுத்து விடுவது இல்லை. 6 8 க்கே உரித்தான சில பாதிப்பை தரும் பல கிரக தொடர்பும் உண்டு. 

கீழே கொடுக்கபட்டுள்ள உதாரண கிரக அமைப்பை பாருங்கள்.


கன்னி லக்னம். நடப்பில் குரு தசா..

குரு லக்னத்திற்கு எட்டில் மறைகிறார்... அங்கே நீச பூர்வ புண்ணிய ருண ரோக அதிபதியான சனியோடு இணைகிறார். 8ல் நீச சனியோடு குரு இணைவு. 

கூடுதலாக லக்னத்திற்கு ஆகாத 8 அதிபதி செவ்வாயின் நேர் பார்வையில் குரு உள்ளார்.

6ம் அதிபதி 8ல் , 8 ம் அதிபதி 8 வீட்டை பார்வை செய்கிறார். 

குருவிற்கு நீச சனி மற்றும் அட்டமாதிபதி பாவியான செவ்வாய் தொடர்பில் இருக்க , குரு வாங்கிய நட்சத்திர சாரம், கேதுவின் அஸ்வினி.

சார நாதன் கேதுவிற்கு வீடு கொடுத்த சனி எட்டில் நீசமாகி , அந்த கேதுவிற்கு அட்டமாதிபதியான செவ்வாய் மற்றும் நீச சனி பார்வை. 

குருவிற்கும் சனி செவ்வாய் தொடர்பு , குரு வாங்கிய சார நாதனிற்கும் சனி செவ்வாய் தொடர்பு. 

பலன் சொன்னது : 

" பங்காளி நிலம் சார்ந்த பிரச்சனை உள்ளதா..? சகோதரனால் நில பாதிப்பு வரும் " என்றேன்.

" ஆமாங்க , பங்காளி நில பிரச்சனை உள்ளது, தம்பியும் இதில் முனைப்பு காட்டி வருகிறார் " என்றார். 

" நில பிரச்சனை உண்டு , கவனமும் நிதானமும் அவசியம் " என்றேன். 

தன காரகன் எட்டில் மறைவதால் பணம் சார்ந்த கொடுக்கல் வாங்கலில் கவனமும் வைக்க வேண்டியது அவசியம். 

6 8 12 இட அதிபதிகளது தொடர்பு இங்கே சுப அமைப்பில் இல்லை , பாவியர் களது பாதிப்பில் முழு யோகத்தை தராமல், ஏதாவது சிக்கல்களோடு தூர தேச வெளிநாடு வேலைகளை ஏற்படுத்தி பணபுழக்கத்தை தரும். 

கூடுதலாக இந்த அமைப்பில் ஏழரை அஷ்டம சனி குறுக்கிட்டால் காரியம் கை கூட கூடுதல் முயற்சி தேவைபடும்.

இதே அமைப்பில் செவ்வாயோ சனியோ முழு ராஜயோக கிரகமாக அமைந்தால் அது பெரிய பாதிப்பை தராது. 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

#padmahazan

புத ஆதித்ய யோகம்

🍁 புத ஆதித்ய யோகம் 🍁 #hazan 

மனிதராக பிறந்த 70% ஜாதகர்களுக்கு ஜாதகத்தில் இந்த யோகம் இருக்கும். 

இந்த யோகத்தின் பெயரிலேயே நேரடியாக புதனையும், ஆதித்தன் என்னும் சூரியனையும் இந்த யோகம் குறிப்பிடுகிறது என்று. 

இந்த யோகத்தினை பெறுபவர்கள் படிப்பில் உயர்நிலை அந்தஸ்து, படிப்பால் வாழ்வில் உயர்நிலை பெறுதல், தாய்மாமனின் வழிகாட்டலில் வாழ்வில் முன்னேற்றத்தை பெறுவது, பலரின் முன்னால் கவிச்சக்கரவர்த்தி என்னும் எழுத்து கதை கவிதை நகைச்சுவை புலமையோடு பெரும் மேடை பேச்சாற்றலோடு விளங்குவது, இவர்கள் படித்த படிப்பும் அறிவு திறனும் பிறரிடத்தில் இருந்து இவரை தனியாக காட்டுவது, அறிவு சார்ந்த ஆளுமையால் பலரை வழிநடத்தி செல்வது போன்றவை தருவது இந்த புதாத்திய யோகம். 

மிக முக்கியமாக அரை பாவரான சூரியனுடன் இணையும் புதன் பாவி ஆவார், இத்தகைய அமைப்பில் பாவிகள் கேந்திர வீடுகளான 1 4 7 10 இடங்களில் உண்டாவது மேலே சொன்ன பலனை கூடுதலாக கொடுக்கும். #padmahazan 

பதிவில் தொடக்கதிலேயேசொல்லி இருக்கிறேன், 70% ஜாதகத்தில் இந்த யோகம் இருக்கும் என்று, என்ன காரணம்..? புதனும் சூரியனும் ஒரு சேர பயணித்து ஆண்டில் 70% நாட்கள் இவர்கள் ஒரே அளவாக சூரியனை புதன் அருகிலேயே சுற்றி வருவார். 

அதாவது சூரியனை விட்டு அதிகமாக 3 கட்டங்களை ராசிகளை விட்டு புதன் போகமுடியாது. பெரும்பாலும் சூரியனோடு புதன் ஒரே ராசியில் இருப்பதால் பெரும்பாலானோருக்கு இந்த புதாதித்ய யோகம் வந்துவிடும். #padmahazan 

அப்படி என்றால் படிப்பு புலமை பெற்று அனைவருமே ஏதாவது ஒரு துறையில் பண்டிதர்களாக இருக்க வேண்டுமே ஏன் அப்படி இல்லை..? சராசரி வாழ்வை கொடுப்பது ஏன்..? 

காரணம்... 

1).புதன், சூரியன் இருவரில் ஒருவர் ஆட்சி உச்ச ஸ்தான பலத்தை பெற வேண்டும். 

2). புதன் சூரியனோடு 3 டிகிரிகுள் நெருங்கி இருக்க கூடாது. குறிப்பாக ஒரே நட்சத்திர சாரத்தில் இருக்க கூடாது. 

3). புதன் குறிப்பாக 15 முதல் 25 டிகிரி சூரியனை விட்டு விலகி சேர்க்கை பெற வேண்டும். 

4). புதன் மற்றும் சூரியனுக்கு சனி பார்வை இல்லாமல் இருக்க வேண்டும். சனி ராகு அமாவசை சந்திரன் இவர்களது இணைவும் இருக்கக்கூடாது. 

இந்த விதிகள் அனைத்தும் ஒரு சேர பொருந்தி வரும் ஜாதகத்தில் புத ஆதித்தய யோகம் செயல்படும். 

5). இந்த கிரக அமைப்பு முதன்மையாக சிம்மத்திலும், கன்னியிலும், மிதுனத்திலும், மேஷத்திலும் இருக்கும் போது யோகம் சிறப்பானதாக செயல்படும். #padmahazan 

6).இந்த இணைவை குரு அல்லது சந்திரனின் பார்வையை பெறுவது மேலும் சிறப்பாக தனித்துவங்களை ஜாதகரிடத்தில் மேம்படுத்தி தரும் 

இறுதியாக படிப்பு என்றாலே நான்காம் இடம் மற்றும் ஒன்பதாம் இடங்கள் உதவி இன்றி முழுமை பெறாது, அதனால் புத ஆதித்ய யோகம் சிறப்பாக இருந்தாலும் 4 9 பாவகங்கள் எந்தவித பங்கம் நன்றாக இருக்க வேண்டும். 

லக்னாதிபதி நன்றாக இருந்து, 4 9 பாவகங்கள் வலுஇழக்காமல் மேலே சொன்ன புதன் சூரியனுக்கான கிரக அமைப்பை பெற்றவர்கள் நிச்சயமாக ஏதாவது ஒரு துறையில் நிபுணத்துவமும் மெத்த படித்த அறிவு தனமும் பெற்று துறையில் முதன்மை பெறும் சிறப்பையும் பெறுவார்கள். 

இந்த பதிவை படிக்கும் IT துறை சார்ந்தவர்கள், பல்கலைக்கழக பேராசியர், ஆராய்ச்சி படிப்பை படிப்பவர்கள், நிர்வாக இயக்குனர்கள் பலருக்கு மேமே சொன்ன 6 கிரக அமைப்பு இருக்கும் 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

#padmahazan #புதன் #சூரியன்

Saturday, March 18, 2023

ராகு தரும் ஆசைக்கான பயணம்

🍁 ராகு தரும் ஆசைக்கான பயணம் 🍁 #hazan 

நவகிரகங்களிலேயே அதிகபடியாக ஜாதகரை புறவாழ்வை விருப்பி வாழ வைப்பது ராகுவே. 

ராகுவிற்கு நண்பர்களாக வரும் பொருள் அணி கிரகங்களான சுக்ரன் , புதன், சனி கிரகங்கள் கால புருஷ கர்மம் ( பொருள் ) மற்றும் இன்பம் (காமம்) தரும் திரிகோண ( 2 6 10 & 3 7 11) ராசிகளில் அதிபதிகள், இவர்களை நண்பராக கொண்ட ராகு குணத்தால் இவர்களுக்கு ஏற்றபடி பொருள் இன்பம் சார்ந்த ஆசையை தூண்டும் கிரகம் ஆவார். 

புறவாழ்வு மீதான அளவு கடந்த தூண்டுதலை ஏற்படுத்தி தருபவர் ராகு. சுக வாழ்வு , பெரும் பணம் , ஆடம்பர வாழ்வு, லௌகீக ஆசை , அளவுகடந்த தன சேர்க்கை என்று உணர்வு இல்லாத பொருள் மீதான ஆசைகளை தூண்டுபவர் ராகு. 

கேது உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பாராக எடுத்து கொண்டாலும் உறவுகளையும் பந்தங்களையும் கொடுத்து சோதனையை தரும் கேதுவிற்கு மறுமுனை ராகுவோ உணர்வுகளை உறவுகளை விட உயிரற்ற பொருள் மீதான பேராசையை அதிகபடியாக தூண்டும். #padmahazan 

ஒருவருடைய ஜாதகத்தில் ராகு நிறைவேறாத ஆசைகளை தற்போது அனுபவிக்க வேண்டும் என்கிற ஆவலை நின்ற பாவக ரீதியாக தருவார். 

ஆசைகளை நோக்கி அலைமோதும் ராகு தனது நண்பர்களது ராசிகளான ரிஷபம் மிதுனம் கன்னி துலாம் மகரம் கும்ப ராசிகளில் இருக்கும் போது தர்மங்களை மீறி நடந்து கொள்ளும், பொருள் ஈட்டும் , ஆசைகளை நோக்கி நகரத்தும் இயல்பை பெற்றுவிடுவார் . 

இத்தகைய ராகுவிற்கு நிச்சயமாக கால புருஷ தர்ம நெறிகளை கடைபிடிக்கும் குரு பார்வை அல்லது இணைவோ ராகு பெறுவது சிறப்பு. ஆசையை நோக்கி நகர்த்தும் ராகு கொஞ்சம் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பது, பொருள் இன்ப ஆசைகளை புறந்தள்ளி நேர்மையான வழிகளில் ராகுவின் தசா புத்தி காலத்தில் பயணபட வைப்பார். 

இது ஒரு பொதுவான ராகுவின் குணம் பற்றிய பதிவு. தனிநபர் ஜாதகத்தில் ராகு நிற்கும் ராசி, இணைந்த பார்த்த கிரகங்கள், சாரம் கொடுத்த நட்சத்திர அதிபதி, வீடு கொடுத்த கிரக வலு ஏற்ப ஜாதகர் தனது நிறைவேறாத ஆசையை நோக்கி நகரும் பயணத்தில் வெற்றி பெறுவாரா..? அல்லது தற்போதும் அது நிறை வேறாத ஆசைதானா..? என்பதை புரிந்து கொள்ள இயலும். 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

#padmahazan

Tuesday, March 14, 2023

உங்கள் புதன் எதில் அதிகபடியான அறிவை தர உள்ளார்..?

🍁 உங்கள் புதன் எதில் அதிகபடியான அறிவை தர உள்ளார்..? புதன் தரும் புரிதல் 🍁 #hazan 

புதன் நிற்கும் பாவக ரீதியான அறிவு உங்களுக்கு எப்போதும் மற்றவர்களை விட மேம்பட்டே இருக்கும். 

புதன் ஒருவருக்கு எந்த பாவகத்தில் உள்ளாரோ அங்கே அந்த பாவக ரீதியிலான ஆக்க பூர்வமான புத்திசாலிதனத்தை புதன் தருவார். 

லக்ன புதன்.
ஜாதகர் சாதுர்ய சாலி, அறிவாளி , புத்தியால் தனது அந்தஸ்தை அதிகரித்து கொள்வார். இவர்களது எந்த செயலுமே புத்திசாலி தனம் இருக்கும். 

2ல் புதன் பணம் சேமிப்பு சார்ந்த அறிவும் புத்திசாலி தனமும் மற்றவர்களை விட அதிகமாக காணப்படும்.
#padmahazan 

3ல் புதன் பயணம், communication, நற்பெயர் எடுப்பதற்கான புத்திசாலிதனம் மற்றவர்களை விட கூடுதலாக வெளிபடும். 

4 ல் புதன் பள்ளிபடிப்பு , வாகன அறிவு , சுக வாழ்வை பற்றிய புத்திசாலிதனம் அதிகபடியாக வெளிபடும்

5ல் புதன் கவிதை கதை கலை சார்ந்த புரிதலும் புத்திசாலிதனமும் மற்றவர்களை விட அதிகம் வெளிபடும். 

6ல் புதன் வேலை வாய்ப்பு, கடன் வாங்குவது , நோய் காரணம் , எப்போது எதிரிகளை எதிர்கொள்ளுதல் போன்ற அறிவை வெளிபடுத்தும். 

7ல் புதன் மணவாழ்க்கை, நண்பர்கள் அரட்டை அடித்தல் , கூட்டு செயலில் அறிவு நன்றாக வெளிபடும். 

8ல் புதன் மறைபொருள், ஷேர் மார்கெட் , நீண்ட கால முதலீடு, தூர தேச இவற்றில் அறிவு கூடுதலாக வெளிபடும். 

9ல் புதன் கல்லூரி படிப்பு , மூத்தோர் ஆலோசனை , எண்ணியதை நினைத்து முன்னேறும் அறிவு சார்ந்த வெளிபாட்டை தரும்.
#PADMAHAZAN

10ல் புதன் வியாபார நுட்பம் , தொழிலில் புதுமை தருவது, வருமானம் மீதான அறிவை அதிகபடுத்தும்.

11ல் புதன் லாபம் , வெற்றி , முன்னேற்றம் சார்ந்த அறிவை புத்திசாலிதனத்தை வெளிபடுத்தும்.

12ல் புதன் நல்ல தூக்கம் , செலவு குறைத்தல், சுப செலவுகளில் பணத்தை இழத்தல் , வெளிநாடு வாழ்க்கை , வெளியூர் செய்திகள் போன்ற அறிவு சார்ந்த புரிதலை தரும்.

மேலே சொன்ன அமைப்புகளில் புதன் இருந்தாலும் புதன் நீசம் பகை வலு இன்றி நட்பு வீடுகளில் ஆட்சி வீடுகளில் அமைவது சிறப்பு. 

மேலும் தனித்த புதனாக ஒரு பாவகத்தில் இருப்பது தெளிவான நேர்வழியிலான அறிவை பயன்படுத்தும் நிலையை புதன் தரும்

குறிப்பாக ராகு கேது இணைவு , தனக்கு ஒத்து வராத செவ்வாய் இணைவை பெறும் போது புதனின் இயல்புகளை மாற்ற பட்டு தன் இயல்பை இழக்கும்.

குரு பார்வை , சுக்ர இணைவு , சந்திர பார்வை பெற்ற புதனாக இருப்பது நிச்சயமாக மேம்பட்ட அறிவுதேடலை , புதுமையை புதன் இருக்கும் பாவக ரீதியாக தருவார். #padmahazan 

இருவருக்குமே 5ல் புதன் உள்ளது யாருக்கு திறமை மேலோங்கி இருக்கும் என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். 

எவருக்கு புதன் ஸ்தான பலத்தோடு பாவியர் தொடர்பு இன்றி இருக்கிறதோ அவருக்கு கூடுதலாக திறமையை புதன் தருவார். 

பாவி இணைவு பார்வை பெற புதனின் தனிதன்மை ஜாதகரால் அனுபவிக்க இயலாது. 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851

Saturday, March 11, 2023

கல்வி கடனும் வேலை இல்லாத சூழலும் தரும் சனி

🍁 கல்வி கடனும் வேலை இல்லாத சூழலும் 🍁 #hazan 

பலன் சொல்லும் போது பலர் சொல்வது , உங்கள் பதிவை தூங்க போவதற்கு முன்பாக கூட பார்த்து விட்டுதான் தூங்குவேன் , மறந்து கூட தூங்குனது இல்லை என்று சொல்லியவர்களுக்காகவே , 

தினமும் எழுதுவதை பழக்கமாக வைத்து கொண்டு உள்ளேன்.

பகலில் எவ்வளவு வேலை இருந்தாலும் இரவு தூங்குவதற்கு முன் , 

வைதேகி காத்திருந்தாள் பட விஜயகாந்த் 10 மணிக்கு பாடுவதை போல எதையாவது எழுதாமல் நாளை முடிப்பது இல்லை.

பதிவிற்கு வருவோம்... 

சில மாதங்களுக்கு முன்பாக பலன் சொன்ன ஜாதகம்.

" நீங்கள் கல்வி கடனால் தற்போது கஷ்டபட்டு கொண்டு இருக்கீங்க , படித்த படிப்பை முடித்தும் வேலை அமையாமல் , கடனும் அடைக்க இயலாத சூழல் " என்றேன்.

" ஆமாங்க , education loan மறுபக்கம் no salary " என்றார். 

கிரக அமைப்பு... #padmahazan 

துலா லக்னம்.

கல்வி ஸ்தான அதிபதி சனி ஆறில் கடன் ஸ்தானத்தில். 4 6 தொடர்பு. கூடவே சனிக்கு கேது வேறு இணைவு.

ஆறில் சனி கேது இணைவில் தற்போது சனி தசா.

பாவத்துவமான ஆறாம் இடம். வேலை செய்ய ஏதுவாக இல்லை. எல்லா இடத்திலும் ஏமாற்றம் சம்பள தடை தருகிறது.

கூடவே பாவத்துவ ஆறாம் இடம் கடனையும் கொடுத்து கடனால் நிம்மதி இழப்பு மற்றும் உடல் பாதிப்பை தரவும் செய்கிறது ஜாதகருக்கு. 

ரொம்ப கஷ்டமான ஒரு கிரக அமைப்பாக இருந்தது.

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851

சுக்ரன் சில குறிப்புகள்

சுக்ரன் லக்னத்திற்கும் ராசிக்கும் கேந்திர கோணமாக அமைந்து பத்தாம் அதிபதி தொடர்பில் இருக்க வாகன யோகத்தில் வருமானத்தை அமைந்து தருவார்சுக்ரன் 

கேளிக்கை கிரகம் , எளிதாக ஒருவரை ஆடல் பாடல் மூழ்கும் வசியத்தை கொடுப்பவர்.
#padmahazan

பெண்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் ஆணிற்கு சுக்ரன் அதிகபடியான வலுவில்
இருப்பார்.
#padmahazan

பார்வையால் வசியபடுத்துவது சுக்ரன். 
பேசியே வசியப்படுத்துவது புதன்.
#padmahazan

எதிர்பாலின ஈர்ப்பை தன் பக்கம் திருப்புவதற்கும் காரக கிரகம் சுக்ரன். 
#padmahazan

கருப்பாக இருந்தாலும் கலையாக தெரியும் பார்வை ஈர்ப்பை தருவது வலுத்த சுக்ரன்.
#padmahazan

சுக்ரன் காற்று ராசிகளில் வலுவாக இருப்பார். நறுமணம் சுக்ரனின் காரகத்துவம். ஆகாய விமானமும் கூட.
#padmahazan

புள்ளி விபர புலி _ புதன்
Statistics, economics, business management, பணத்தோடு தொடர்புடைய படிப்பை தருவது புதன் குரு
#padmahazan

Tuesday, March 7, 2023

நட்சத்திர சார பலன்

🍁 நட்சத்திர சார பலன் 🍁 #hazan 

பாரம்பரிய ஜோதிடத்தில் ஒரு கிரகம் தனது பலனை 100% நிறைவாக தருமா..? அல்லது 60% குறைவாக தருமா..? வெறும் 20% போன போகுது என்று ஆறுதல் பரிசை போல பலன தருமா..? என்பதை நிர்ணயிப்பது

1). ராசி கட்டத்தில் கிரகம் பெறும் வலு , பிற கிரக இணைவு , பிற பார்வை.

2). நட்சத்திரம் கொடுத்த கிரக ஆதிபத்தியம் மற்றும் நட்சத்திர அதிபதி நின்ற பாவகம்.

3). வீடு கொடுத்த கிரக வலு. 

4). நவாம்சத்தில் எந்த வர்க்கத்தில் எந்த கிரக தொடர்பில் உள்ளது என்பதை பொறுத்து பலன் தரும்.

மேலே சொன்ன 4 நிலையும் நன்றாக இருக்க 100% சுப பலனை நன்றாக தரும். 

மேலே சொன்ன ஒவ்வொரு நிலையும் குறைய குறைய 20% ஆக குறையும், பலனும் குறைவாக கிடைக்கும். #padmahazan 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 


***********************

கீழே கொடுக்கபட்டுள்ள உதாரண கிரக அமைப்பை பாருங்கள்...

மீன லக்னம் , மூன்றில் குரு, 


குரு தசா லக்னாதிபதி தசாவாக அமைவதால் , நல்ல முயற்சி அதற்கு ஏற்ப காரிய வெற்றி லாபம் முன்னேற்றம் , தந்தை வழி ஆதரவு அல்லது நினைத்ததை அடையும் கடவுள் அனுக்கிரகம் , தொழில் கூட்டாளி நண்பர்கள் வாழ்க்கை துணை வழி ஆதரவை சிறப்பாக தரும்.

ஆனாலும் நட்சத்திர நிலை பொறுத்தே பலனின் தன்மை அமையும், 

குரு அவிட்டம் நட்சத்திரம் பெற்று , அதாவது விரையத்தில் ஆட்சி பெற்ற செவ்வாயின் சாரத்தில் உள்ளார்.

விரையாதிபதியான செவ்வாய் உடன் தன ஸ்தான அதிபதி விரையத்தில் இணைவு பெறுகிறார். 

குருவிற்கு நட்சத்திர கொடுத்த செவ்வாய் ஆகாத ஆதிபத்தியத்தில் ஆட்சி பெற்று தன ஸ்தான அதிபதியால் பாதிக்கபட்ட நிலை. 

குரு தசா மேலே சொன்ன நற்பலனை தந்தாலும் விரைய சாரம் அந்த பலனின் உண்டான சுப பலனான பணமும் பொருளும் கடன் அல்லது மருத்துவ அல்லது நஷ்ட கணக்கில் செல்லும். விரையாதிபதி சாரமும் பார்வையும் இங்கே முழுமையாக பாதிக்கும். 

அதாவது கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத சூழல் மாதிரியான பலனை தரும்.


இதே குரு நவாம்சத்தில் சனியோடு இணைந்து விருச்சிக அமைப்பில் இருப்பார். இதுவும் சிறப்பான ஒன்றாக அமையாது. 

அதாவது விரையாதிபதி செவ்வாயின் நவாம்ச வீட்டில் அதே விரையத்தில் வர்கோத்தமமான சனியோடு நவாம்ச இணைவில் குரு வருவார். 

இதை படிக்க படிக்க படிப்பவர்களில் பெரும்பாலானோருக்கு தலை சுற்றும். 

சில நாட்களுக்கு முன்பு வந்த ஜாதகம். குரு தசா அப்படி ஒன்றும் பெரிதாக பலன் தரவில்லை, தொழில் செய்தும் வருமான தடை.

பதிவு புரியாதவர்கள் மீண்டும் மீண்டும் படியுங்கள் புரியவரும்.

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

●●●●●●●●●●●●●

என்னுடைய பதிவுகளில் 99% நட்சத்திர சார விளக்கத்தை எழுதுவது இல்லை, காரணம் புரிய வைப்பது கொஞ்சம் கடினம் , எழுத எழுத பதிவு நீளும், படிப்பவர்களுக்கு ஓர் விதமான அழுப்பும் , புரியாத விரக்தியும் படிப்பவர்களுக்கு ஏற்படும். 

அதன் காரணமாகவே நட்சத்திர சார நவாம்ச நிலைகளை விளக்குவது கிடையாது. 

பலன் எடுக்கும் போது கணக்கில் வைத்து கொள்வதோடு சரி. பதிவுகளில் எழுதுவதை தவிர்த்து வருகிறேன். 

என்னுடைய கணிப்பும் நடப்பும் பதிவுகளில் வந்தவர்களது கணிப்பு சரியாக அமையும் காரணமும் இந்த நட்சத்திர சார நவாம்ச நிலை அடங்கும்.

பாரம்பரிய ஜோதிடத்தின் அடிப்படைகளில் ஒன்று சாரநாதன். பதிவுகளில் எழுதுவது இல்லை அதை பற்றி மற்றபடி அதில் பெரும் பங்கு பலன் சொல்வதிலும் நடப்பில் கிரக தசா பலன் நடைபெறுவதையும் காண முடியும். 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

#padmahazan

Friday, March 3, 2023

புதன் தன்மை குணங்கள்

🍁 புதனின் தன்மைகள் #hazan 🍁

நவகிரகங்களில் புத்திசாலிதனம் சாதுர்யத்தன்மை கொண்டவர் புதன்.

இவர் ஜாதகத்தில் வலுவாக இருக்கும் பட்சத்தில் அவரது தசா புத்தி நடக்கும்போது அல்லது புதனின் ராசி மற்றும் லக்னங்களில் பிறந்தவங்க புதன் நன்றாக இருக்கும் போது...

1).பச்சை நிறம் = பச்சை நிறத்தில் துணி வீட்டின் சுவர்களின் நிறம் வண்டி வாகனங்களை வாங்குவாங்க. பச்சை நிறத்தை அதிகமாக விரும்புவாங்க. புதனின் அம்சமான ஜோதிடர்கள் அதிகமாக பச்சை நிற சட்டைபோட்டு இருப்பாங்க. #padmahazan 

2).விஷ்னு பக்தன் = புதன் நன்றாக இருந்து அவரின் தாக்கம் ஜாதகரிடம் வெளிபட்டால் அவர் நிச்சயமாக விஷ்னுவின் பக்தனாக இருப்பார். விஷ்னுவே எல்லாம் என்று இருப்பார். பெயரில் விஷ்னு இருப்பார். அல்லது இவர் பிறரை விஷ்னு பெயர் வைத்து கூப்பிடுவார்.

3).இளமையான தோற்றம் = லக்னம் ராசியோடு புதன் தொடர்பு பெற்று இருக்கும் நிலையில் பிறகிரக தொடர்பு இல்லாத வரை ஜாதகர் குழந்தை மாதிரியான முக தோற்றம் இருக்கும். என்னபா எவ்வளவு வயசானாலும் பார்க்க சின்ன பையனாவே இருக்காங்கரேனு சொல்லுற மாதிரி ஜாதகரை வைத்து இருப்பார் புதன். உதாரணமாக காமெடி நடிகர் விவேக் மாதிரி இருப்பாங்க. #padmahazan 

4).படிப்பு அல்லது புத்தக பிரியராக இருப்பார் : எப்போதும் எதையாவது புதிதாக படித்து தெரிந்துகொண்டே இருக்கும் தன்மையை தருபவர் புதன்.

5). கதை ஆசிரியர் வித்துவான் = தன்னோட புத்தி கொண்டு பல விஷயங்களின் வழியாக தன்னை நிலைநாட்டும் தன்மை. வித்தைகளை மட்டுமே கொண்டு வளர்ச்சி அடைவது போன்ற நிலையை புதன் ஜாதகருக்கு தருவார்.

புதனின் நட்சத்திரம் ராசியில் பிறந்தவர்கள். ஜனனகால ஜாதகத்தில் புதன் வலுத்து தசா புத்தி நடக்கும்போது இவை அதிகமாக ஜாதகரிடம் வெளிப்படும்

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 
🤩 #padmahazan 🤩

சனி சுபத்துவம் தரும் சுக்ரன்

☂️சனிபகவான் சுக்ரனால் பெறும் சுப நிலை ☂️ #hazan

இந்த பதிவு சிலருக்கு புரியாமல் இருக்கலாம் முரண்பாடாக இருக்கலாம் அப்படி இருந்தால் அடுத்த பதிவிற்கு நீங்கள் போகலாம்.

சனிபகவான் காரக ரீதியாக பிரச்சனை தரும் முதன்மை பாவகிரகம்.

சனி பகவான் பிற சுப கிரகங்களால் பார்க்க அல்லது சேர்க்கை பெற தன் சுப இயல்பு மாற்றி தன் தரும் கெடுபலனை குறைத்தோ அல்லது முழுமையாக தராமலோ இருப்பார்.

சனி பகவானை அவருக்கு அருகில் இருக்கும் முதன்மை சுபரான வலுவான குரு பகவானே முழுமையாக சுப தன்மைக்கு கொண்டுவர முடியும். #padmahazan 

 சுக் பகவான் சூரியனோடு உள்வட்ட கிரகத்தில் ஒருவரான சுக் ஜோதிடத்தில் கடைசி நிலையில் வெகு தொலைவில் இருக்கும் சனி பகவானால் முழுமையாக சுப தன்மை தர இயலாது. இருவருக்கும் இடையேயான தூரம் வெகு தொலைவு.

குருவால் தரும் சுப அளவைவிட சுக்ரனோடு இணைந்த சனி பகுதி அளவே சுப தன்மை பெற்று தன் சுய இயல்பை மாற்றி கொள்வார். 

சனி பகவானிற்கு தனக்கு அருகிலேயே இருக்கும் குருவோடு இணைவது பார்க்கபடுவது மட்டுமே முழு அளவான சுப தொடர்பாக சனிபகவானிற்கு இருக்கும். #padmahazan 

வலுப்பெற்ற சனி பகவானோடு வலுபெற்ற சுக் இணைந்தாலும் சனியின் காரக பலனே அங்கு காணப்படும். சுக்ரனால் கட்டுபடுத்த மட்டுமே முடியும் மாறாக முழுமையாக சனி பகவானை நல்ல அமைப்பிற்கு மாற்ற முடியாது. சுக்ரனால் பார்க்கபடும் சனிக்கு இப்பதிவு பொருந்தாது.

குரு பகவானால் சனி பெறும் சுப நிலையே முதன்மையானதாக இருக்கும். 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

🤩 #padmahazan 🤩

கடனை தரும் புதன்

🍁 கடனை தரும் புதன் 🍁

#hazan #கடன் #புதன் #கன்னி 

"கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்..." இந்த வரிகளேயே கடன் பெற்றவர்களின் நிலையை எடுத்து காட்டுகிறார் கம்பர்.

கால புருஷ ஆறாமிடத்திற்கு அதிபதி புதன். அங்கே உச்சமாகும் புதன் புத்திசாதுர்யம், பேச்சால் காரியம் சாதிப்பது மாதிரியான வலுவை பெறுவார்.

கடன் வாங்க பேச வேண்டும் என்றாலும், கடனை தரும் வரை பதில் தரவும் புதன் நன்றாக இருக்க வேண்டும். புதன் நன்றாக இருந்து புதன் தசா வந்தால் நிச்சயமாக கடன் இருந்தே இருக்கும். ஜாதகத்தின் வலுவை பொறுத்து ஜாதகருக்கு இடுப்பளவு கடன் இருக்குமா..? கழுத்தளவு கடன் இருக்குமா..? தலைக்கு மேலே கடன் இருக்குமா..? என்று ஜாதகத்தின் பிற அமைப்பை கொண்டு காணலாம்.

கடன் என்றால் பணம் மட்டுமே இல்லை, பிறரது பொருள், வண்டி, ஏதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். #padmahazan 

புதன் நட்பு ஆட்சி உச்சம் பெற்றவர்களுக்கு நண்பர்கள் இருப்பார்கள் அவர்களோடு எதையாவது பணம் பொருள் கொடுக்கல் வாங்கலில் ஜாதகர் இருப்பார்.

அதே போல பாடம் கல்வி ஆலோசனை தரும் ஆசிரியர்கள் வழிகாட்டிகளுக்கு எவ்வளவு ஈடுகட்டினாலும் அவர்களிடம் பெற்ற கல்வி அறிவு சார்ந்த கடனை அடைக்கவே முடியாது. #padmahazan 

சாதாரண கணக்கு பாடம் சொல்லி கொடுத்த ஆசிரியருக்கு 1000 ரூபாய் கட்டணம் கொடுத்தால் படித்ததை வைத்து CA ஆகி விட்டாலோ அல்லது பெரும் வணிகர் ஆகி விட்டாலோ ஆசிரியரிடம் பெற்ற கடன் கல்விக்கு 1000 ல் ஈடு செய்து நீங்கள் கற்ற கல்வி பெற்ற ஆதாயம் லட்ச கோடி கணக்கில் இருக்கும்.

அதனாலயே புதன் குருவின் வீட்டில் தனுசில் பகையும், மீனத்தில் நீசமும் பெறுவார். குருவிடம் பெற்ற கல்வி கடனை அடைக்க முடியாது என்பதே அதன் அர்த்தம். 

புதன் ஆட்சி உச்சம் நட்பு வலு பெற ஏதாவது கடன் இருக்கவே செய்யும். தசா வந்து ஜாதக பிற அமைப்பு வலு இழக்க பணம் சார்ந்த கடன் இருக்கவே செய்யும். 

( 2020ல் எழுதிய பதிவு. )

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

🤩 #padmahazan 🤩

Thursday, March 2, 2023

வேலை வாய்ப்பை வாரி வழங்கும் புதன்

🍁 வேலை வாய்ப்பை வாரி வழங்கும் புதன் 🍁 #hazan 

ஜோதிட கணிப்பில் தொழிலை நிர்ணயிக்கும் போது , கண்ணில் மண்ணை தூக்கி போடுவதுதான் இந்த புதனின் வேலையே.

நானும் சில ஜாதகங்களில் பார்த்து வருகிறேன், புதன் ராகுவோடு 3 டிகிரிக்குள் இணைந்து கடுமையான பாவத்துவ அமைப்பில் 8ல் இருப்பார் , வேறு சுப பார்வையோ இருக்காது. 

அல்லது 

சனிக்கு நிகரான அமாவசை சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையே புதன் இணைந்து அந்த புதன் 5ல்  இருப்பார், 

அல்லது

சனியோடு மூன்று டிகிரிக்குள் இணைந்து 3ல்  புதன் இருப்பார் ,

புதனின் நவாம்ச நிலை கூட பெரிய அளவில் சுப வர்க்கமோ சுப இணைவோ இருக்காது. #padmahazan 

அதிகபடியாக வலுபெற்ற கிரகமும் , அதிக சுபத்துவமான கிரகம் , பத்தாம் இட கிரகம் கூட தொழிலை தராமல்,

குறுக்கே உள்ளே புகுந்து புதன் தனது கம்ப்யூட்டர் சார்ந்த வேலையை கொடுத்து இருப்பார். 

சம்மந்தமே இல்லாத இந்த புதன் எப்படி குறுக்க வந்து இப்படி தொழிலை கொடுத்தது என்று ஜாதகரையே யோசிக்க வைக்கிறது புதன்

கெட்டுபோன பாவத்துவ புதன் கூட தனது துறையில் தொழிலை தருவார். ஜாதகங்களில் பார்க்க முடிகிறது.

காரணம்...

அதிகரித்து வரும் இணைய பயன்பாடு , கணினி பயன்பாடு , டெக்னாலஜி வளர்ச்சி.

அதிகபடியாக ஆட்களை தேவைபடும் போது, " அள்ளிபோடு ஆள் தேவைபடுது " என்று புதன் எல்லோரையும் Technology பக்கம் இழுத்துட்டு போகிறார்.

எங்கு தேவை இருக்கிறதோ அங்கே அதிகபடியாக வேலை வாய்ப்பை கிரகங்கள் உருவாக்கிறது. இது காலம் தேசம் யுக்தி வர்த்தமானம் அடங்கும். 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851

Wednesday, March 1, 2023

பாதக மாரக அதிபதிகள்

🍁 பாதகாதிபதி மாரகாதிபதி 🍁 #hazan

பாதகாதிபதி மாரகாதிபதி என்பவை ஜோதிடத்தில் பெரிதுபடுத்தபட்ட விஷயம்.

பாதகாதிபதியும் மாரகாதிபதியும் உண்மையாகவே பெரிய பூதம் தான். ஆனால் அந்த பூதம் எப்போதும் கிளம்பாது , அதுபாட்டுக்கு தூங்கும் , நேரம் வரும் போதுதான் வெளியே வரும். 

எப்போதுமே " பூதம் வந்துடுமோ..? னு பயபட கூடாது. அதாவது பாதகாதிபதியும் மாரகாதிபதியும் உயிரையே எடுத்துவிடுவார்களோ என்ற அளவிற்கு எப்போதும் பயபட தேவையில்லை.

பாதகாதிபதியும் மாரகாதிபதியும் தான் ஒருவரை கடுமையாக பாதித்து மரணத்தை தருவார்கள். ஆனால் அதற்கான தகுந்த நேரம் வர அவர்களே காத்து இருப்பாங்க.

30 வயதிற்குள் எப்படியும் குறைந்தது ஒரு முறையாவது மாரக புத்திகள் வரும், சிலருக்கு இளம் வயதில் மாரக அதிபதி தசாவே நடக்கலாம்.

இளம் வயதில் மாரக தசா வரும் அனைவருமே மரணத்தை அடைவது இல்லை. நல்லாதானே இருக்காங்க. 

காரணம் லக்னாதிபதி வலு. #padmahazan 

உபய லக்னத்திற்கு ஏழாம் அதிபதியே பாதகாதிபதி ஆவார். வாழ்க்கை துணையை குறிக்கும் ஏழாம் அதிபதி பாதகாதிபதி ஆவதால் திருமணம் செய்யாமலேயேவா இருக்காங்க..

உபய லக்னகாரர்களுக்கு ஏழாம் அதிபதியான பாதகாதிபதி புத்தி அல்லது அந்தரத்தில் தான் திருமணம் நடக்கும்.

பாதக மாரக அதிபதி மிக மோசமானவர்கள்தான் ஆனால் எப்போதும் கிடையாது, 

லக்னம் லக்னாதிபதி அஷ்டம அதிபதி வலு ஏற்ப அவர்களது தசா புத்தி ஏற்பதான் பாதிப்பை தருவார்கள். 

இதைபடிப்பவர்களுக்கு தோன்றலாம் , " என்ன என்னமோ சொல்றீங்க புரியலையே " என்பது போலதான் இந்த பாதக மாரக கணக்கே.

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851

நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..?

🍁 நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..? 🍁 #hazan  ⚡️ஓர் கிரகம் நீச வீட்டில் ஓர் கிரகம் இருந்தாலே அது ஏதோ ஓர் வகை நீசபங்கம் பெற்று விட்டது முடிவ...