நவகிரகங்களிலேயே அதிகபடியாக ஜாதகரை புறவாழ்வை விருப்பி வாழ வைப்பது ராகுவே.
ராகுவிற்கு நண்பர்களாக வரும் பொருள் அணி கிரகங்களான சுக்ரன் , புதன், சனி கிரகங்கள் கால புருஷ கர்மம் ( பொருள் ) மற்றும் இன்பம் (காமம்) தரும் திரிகோண ( 2 6 10 & 3 7 11) ராசிகளில் அதிபதிகள், இவர்களை நண்பராக கொண்ட ராகு குணத்தால் இவர்களுக்கு ஏற்றபடி பொருள் இன்பம் சார்ந்த ஆசையை தூண்டும் கிரகம் ஆவார்.
புறவாழ்வு மீதான அளவு கடந்த தூண்டுதலை ஏற்படுத்தி தருபவர் ராகு. சுக வாழ்வு , பெரும் பணம் , ஆடம்பர வாழ்வு, லௌகீக ஆசை , அளவுகடந்த தன சேர்க்கை என்று உணர்வு இல்லாத பொருள் மீதான ஆசைகளை தூண்டுபவர் ராகு.
கேது உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பாராக எடுத்து கொண்டாலும் உறவுகளையும் பந்தங்களையும் கொடுத்து சோதனையை தரும் கேதுவிற்கு மறுமுனை ராகுவோ உணர்வுகளை உறவுகளை விட உயிரற்ற பொருள் மீதான பேராசையை அதிகபடியாக தூண்டும். #padmahazan
ஒருவருடைய ஜாதகத்தில் ராகு நிறைவேறாத ஆசைகளை தற்போது அனுபவிக்க வேண்டும் என்கிற ஆவலை நின்ற பாவக ரீதியாக தருவார்.
ஆசைகளை நோக்கி அலைமோதும் ராகு தனது நண்பர்களது ராசிகளான ரிஷபம் மிதுனம் கன்னி துலாம் மகரம் கும்ப ராசிகளில் இருக்கும் போது தர்மங்களை மீறி நடந்து கொள்ளும், பொருள் ஈட்டும் , ஆசைகளை நோக்கி நகரத்தும் இயல்பை பெற்றுவிடுவார் .
இத்தகைய ராகுவிற்கு நிச்சயமாக கால புருஷ தர்ம நெறிகளை கடைபிடிக்கும் குரு பார்வை அல்லது இணைவோ ராகு பெறுவது சிறப்பு. ஆசையை நோக்கி நகர்த்தும் ராகு கொஞ்சம் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பது, பொருள் இன்ப ஆசைகளை புறந்தள்ளி நேர்மையான வழிகளில் ராகுவின் தசா புத்தி காலத்தில் பயணபட வைப்பார்.
இது ஒரு பொதுவான ராகுவின் குணம் பற்றிய பதிவு. தனிநபர் ஜாதகத்தில் ராகு நிற்கும் ராசி, இணைந்த பார்த்த கிரகங்கள், சாரம் கொடுத்த நட்சத்திர அதிபதி, வீடு கொடுத்த கிரக வலு ஏற்ப ஜாதகர் தனது நிறைவேறாத ஆசையை நோக்கி நகரும் பயணத்தில் வெற்றி பெறுவாரா..? அல்லது தற்போதும் அது நிறை வேறாத ஆசைதானா..? என்பதை புரிந்து கொள்ள இயலும்.
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
#padmahazan
No comments:
Post a Comment