Thursday, March 2, 2023

வேலை வாய்ப்பை வாரி வழங்கும் புதன்

🍁 வேலை வாய்ப்பை வாரி வழங்கும் புதன் 🍁 #hazan 

ஜோதிட கணிப்பில் தொழிலை நிர்ணயிக்கும் போது , கண்ணில் மண்ணை தூக்கி போடுவதுதான் இந்த புதனின் வேலையே.

நானும் சில ஜாதகங்களில் பார்த்து வருகிறேன், புதன் ராகுவோடு 3 டிகிரிக்குள் இணைந்து கடுமையான பாவத்துவ அமைப்பில் 8ல் இருப்பார் , வேறு சுப பார்வையோ இருக்காது. 

அல்லது 

சனிக்கு நிகரான அமாவசை சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையே புதன் இணைந்து அந்த புதன் 5ல்  இருப்பார், 

அல்லது

சனியோடு மூன்று டிகிரிக்குள் இணைந்து 3ல்  புதன் இருப்பார் ,

புதனின் நவாம்ச நிலை கூட பெரிய அளவில் சுப வர்க்கமோ சுப இணைவோ இருக்காது. #padmahazan 

அதிகபடியாக வலுபெற்ற கிரகமும் , அதிக சுபத்துவமான கிரகம் , பத்தாம் இட கிரகம் கூட தொழிலை தராமல்,

குறுக்கே உள்ளே புகுந்து புதன் தனது கம்ப்யூட்டர் சார்ந்த வேலையை கொடுத்து இருப்பார். 

சம்மந்தமே இல்லாத இந்த புதன் எப்படி குறுக்க வந்து இப்படி தொழிலை கொடுத்தது என்று ஜாதகரையே யோசிக்க வைக்கிறது புதன்

கெட்டுபோன பாவத்துவ புதன் கூட தனது துறையில் தொழிலை தருவார். ஜாதகங்களில் பார்க்க முடிகிறது.

காரணம்...

அதிகரித்து வரும் இணைய பயன்பாடு , கணினி பயன்பாடு , டெக்னாலஜி வளர்ச்சி.

அதிகபடியாக ஆட்களை தேவைபடும் போது, " அள்ளிபோடு ஆள் தேவைபடுது " என்று புதன் எல்லோரையும் Technology பக்கம் இழுத்துட்டு போகிறார்.

எங்கு தேவை இருக்கிறதோ அங்கே அதிகபடியாக வேலை வாய்ப்பை கிரகங்கள் உருவாக்கிறது. இது காலம் தேசம் யுக்தி வர்த்தமானம் அடங்கும். 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851

No comments:

Post a Comment

நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..?

🍁 நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..? 🍁 #hazan  ⚡️ஓர் கிரகம் நீச வீட்டில் ஓர் கிரகம் இருந்தாலே அது ஏதோ ஓர் வகை நீசபங்கம் பெற்று விட்டது முடிவ...