Monday, March 20, 2023

புத ஆதித்ய யோகம்

🍁 புத ஆதித்ய யோகம் 🍁 #hazan 

மனிதராக பிறந்த 70% ஜாதகர்களுக்கு ஜாதகத்தில் இந்த யோகம் இருக்கும். 

இந்த யோகத்தின் பெயரிலேயே நேரடியாக புதனையும், ஆதித்தன் என்னும் சூரியனையும் இந்த யோகம் குறிப்பிடுகிறது என்று. 

இந்த யோகத்தினை பெறுபவர்கள் படிப்பில் உயர்நிலை அந்தஸ்து, படிப்பால் வாழ்வில் உயர்நிலை பெறுதல், தாய்மாமனின் வழிகாட்டலில் வாழ்வில் முன்னேற்றத்தை பெறுவது, பலரின் முன்னால் கவிச்சக்கரவர்த்தி என்னும் எழுத்து கதை கவிதை நகைச்சுவை புலமையோடு பெரும் மேடை பேச்சாற்றலோடு விளங்குவது, இவர்கள் படித்த படிப்பும் அறிவு திறனும் பிறரிடத்தில் இருந்து இவரை தனியாக காட்டுவது, அறிவு சார்ந்த ஆளுமையால் பலரை வழிநடத்தி செல்வது போன்றவை தருவது இந்த புதாத்திய யோகம். 

மிக முக்கியமாக அரை பாவரான சூரியனுடன் இணையும் புதன் பாவி ஆவார், இத்தகைய அமைப்பில் பாவிகள் கேந்திர வீடுகளான 1 4 7 10 இடங்களில் உண்டாவது மேலே சொன்ன பலனை கூடுதலாக கொடுக்கும். #padmahazan 

பதிவில் தொடக்கதிலேயேசொல்லி இருக்கிறேன், 70% ஜாதகத்தில் இந்த யோகம் இருக்கும் என்று, என்ன காரணம்..? புதனும் சூரியனும் ஒரு சேர பயணித்து ஆண்டில் 70% நாட்கள் இவர்கள் ஒரே அளவாக சூரியனை புதன் அருகிலேயே சுற்றி வருவார். 

அதாவது சூரியனை விட்டு அதிகமாக 3 கட்டங்களை ராசிகளை விட்டு புதன் போகமுடியாது. பெரும்பாலும் சூரியனோடு புதன் ஒரே ராசியில் இருப்பதால் பெரும்பாலானோருக்கு இந்த புதாதித்ய யோகம் வந்துவிடும். #padmahazan 

அப்படி என்றால் படிப்பு புலமை பெற்று அனைவருமே ஏதாவது ஒரு துறையில் பண்டிதர்களாக இருக்க வேண்டுமே ஏன் அப்படி இல்லை..? சராசரி வாழ்வை கொடுப்பது ஏன்..? 

காரணம்... 

1).புதன், சூரியன் இருவரில் ஒருவர் ஆட்சி உச்ச ஸ்தான பலத்தை பெற வேண்டும். 

2). புதன் சூரியனோடு 3 டிகிரிகுள் நெருங்கி இருக்க கூடாது. குறிப்பாக ஒரே நட்சத்திர சாரத்தில் இருக்க கூடாது. 

3). புதன் குறிப்பாக 15 முதல் 25 டிகிரி சூரியனை விட்டு விலகி சேர்க்கை பெற வேண்டும். 

4). புதன் மற்றும் சூரியனுக்கு சனி பார்வை இல்லாமல் இருக்க வேண்டும். சனி ராகு அமாவசை சந்திரன் இவர்களது இணைவும் இருக்கக்கூடாது. 

இந்த விதிகள் அனைத்தும் ஒரு சேர பொருந்தி வரும் ஜாதகத்தில் புத ஆதித்தய யோகம் செயல்படும். 

5). இந்த கிரக அமைப்பு முதன்மையாக சிம்மத்திலும், கன்னியிலும், மிதுனத்திலும், மேஷத்திலும் இருக்கும் போது யோகம் சிறப்பானதாக செயல்படும். #padmahazan 

6).இந்த இணைவை குரு அல்லது சந்திரனின் பார்வையை பெறுவது மேலும் சிறப்பாக தனித்துவங்களை ஜாதகரிடத்தில் மேம்படுத்தி தரும் 

இறுதியாக படிப்பு என்றாலே நான்காம் இடம் மற்றும் ஒன்பதாம் இடங்கள் உதவி இன்றி முழுமை பெறாது, அதனால் புத ஆதித்ய யோகம் சிறப்பாக இருந்தாலும் 4 9 பாவகங்கள் எந்தவித பங்கம் நன்றாக இருக்க வேண்டும். 

லக்னாதிபதி நன்றாக இருந்து, 4 9 பாவகங்கள் வலுஇழக்காமல் மேலே சொன்ன புதன் சூரியனுக்கான கிரக அமைப்பை பெற்றவர்கள் நிச்சயமாக ஏதாவது ஒரு துறையில் நிபுணத்துவமும் மெத்த படித்த அறிவு தனமும் பெற்று துறையில் முதன்மை பெறும் சிறப்பையும் பெறுவார்கள். 

இந்த பதிவை படிக்கும் IT துறை சார்ந்தவர்கள், பல்கலைக்கழக பேராசியர், ஆராய்ச்சி படிப்பை படிப்பவர்கள், நிர்வாக இயக்குனர்கள் பலருக்கு மேமே சொன்ன 6 கிரக அமைப்பு இருக்கும் 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

#padmahazan #புதன் #சூரியன்

No comments:

Post a Comment

நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..?

🍁 நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..? 🍁 #hazan  ⚡️ஓர் கிரகம் நீச வீட்டில் ஓர் கிரகம் இருந்தாலே அது ஏதோ ஓர் வகை நீசபங்கம் பெற்று விட்டது முடிவ...