#hazan #கடன் #புதன் #கன்னி
"கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்..." இந்த வரிகளேயே கடன் பெற்றவர்களின் நிலையை எடுத்து காட்டுகிறார் கம்பர்.
கால புருஷ ஆறாமிடத்திற்கு அதிபதி புதன். அங்கே உச்சமாகும் புதன் புத்திசாதுர்யம், பேச்சால் காரியம் சாதிப்பது மாதிரியான வலுவை பெறுவார்.
கடன் வாங்க பேச வேண்டும் என்றாலும், கடனை தரும் வரை பதில் தரவும் புதன் நன்றாக இருக்க வேண்டும். புதன் நன்றாக இருந்து புதன் தசா வந்தால் நிச்சயமாக கடன் இருந்தே இருக்கும். ஜாதகத்தின் வலுவை பொறுத்து ஜாதகருக்கு இடுப்பளவு கடன் இருக்குமா..? கழுத்தளவு கடன் இருக்குமா..? தலைக்கு மேலே கடன் இருக்குமா..? என்று ஜாதகத்தின் பிற அமைப்பை கொண்டு காணலாம்.
கடன் என்றால் பணம் மட்டுமே இல்லை, பிறரது பொருள், வண்டி, ஏதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். #padmahazan
புதன் நட்பு ஆட்சி உச்சம் பெற்றவர்களுக்கு நண்பர்கள் இருப்பார்கள் அவர்களோடு எதையாவது பணம் பொருள் கொடுக்கல் வாங்கலில் ஜாதகர் இருப்பார்.
அதே போல பாடம் கல்வி ஆலோசனை தரும் ஆசிரியர்கள் வழிகாட்டிகளுக்கு எவ்வளவு ஈடுகட்டினாலும் அவர்களிடம் பெற்ற கல்வி அறிவு சார்ந்த கடனை அடைக்கவே முடியாது. #padmahazan
சாதாரண கணக்கு பாடம் சொல்லி கொடுத்த ஆசிரியருக்கு 1000 ரூபாய் கட்டணம் கொடுத்தால் படித்ததை வைத்து CA ஆகி விட்டாலோ அல்லது பெரும் வணிகர் ஆகி விட்டாலோ ஆசிரியரிடம் பெற்ற கடன் கல்விக்கு 1000 ல் ஈடு செய்து நீங்கள் கற்ற கல்வி பெற்ற ஆதாயம் லட்ச கோடி கணக்கில் இருக்கும்.
அதனாலயே புதன் குருவின் வீட்டில் தனுசில் பகையும், மீனத்தில் நீசமும் பெறுவார். குருவிடம் பெற்ற கல்வி கடனை அடைக்க முடியாது என்பதே அதன் அர்த்தம்.
புதன் ஆட்சி உச்சம் நட்பு வலு பெற ஏதாவது கடன் இருக்கவே செய்யும். தசா வந்து ஜாதக பிற அமைப்பு வலு இழக்க பணம் சார்ந்த கடன் இருக்கவே செய்யும்.
( 2020ல் எழுதிய பதிவு. )
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
No comments:
Post a Comment