ஜோதிடத்தில் ஒரு பக்கம் செவ்வாய் தோசம் என்பது மூல நூல்களில் இல்லாத ஒரு அமைப்பில் சொன்னாலும் , ஒரு பக்கம் செவ்வாய் ஒரு முக்கால் பாவர் ஆகி , தனக்கு ஆகாத சனி மற்றும் ராகு தொடர்பில் அமைந்துவிடும் போது தோச அமைப்பாக சில பாதிப்பை தருவதாகவும் சொல்லபடுகிறது.
எத்தகைய அமைப்பில் தோசம் பாதிப்பை தரும்..? எந்த அமைப்பில் பாதிக்காது..? வாருங்கள் பார்ப்போம்.
உதாரணத்திற்கு கடக லக்னத்தை எடுத்து கொள்வோம். குறிப்பாக கடக லக்னத்தை எடுத்து கொள்ள காரணம்..? இந்த லக்னத்தின் ராஜ யோகாதிபதி செவ்வாய் என்பதால். ராஜயோகாதிபதியும் கூட சில இடங்களில் காலை வாரிவிடும் சூழலை ஏற்படுத்துவார்.
முதல்நிலை :
லக்னத்திற்கு நான்கில் துலாத்தில் செவ்வாய் சம வீட்டில் இருப்பது. இந்த நிலையில் செவ்வாய் தனது 10 வீட்டோடு தொடர்பு கொண்டு சுக்ரனின் வீட்டில் இருப்பதோடு , சுக்ரன் கெடாத வரை செவ்வாய் பெரிய அளவில் பாதிப்பை தர மாட்டார். செவ்வாயின் பார்வை 7 ம் வீட்டிற்கு வந்தாலும் செவ்வாய் இருக்கும் ராசி சுக்ரனின் சுப வீடாக அமைவதால் பெரிய பாதிப்புகள் இருக்காது. பாவ கிரகமான செவ்வாய் 10 வீட்டோடு தொடர்பு கொள்வதால் வருமானமும் அதனால் உண்டாகும் வாகன வீடு சார்ந்த மேன்மை தரும்.
விதிவிலக்கு :
இங்கே வீடு கொடுத்த சுக்ரன் நீசம் பகை கிரகணம் ஆவது அல்லது இந்த செவ்வாய்க்கு சனி பார்வை இணைவு , மிகவும் குறிப்பாக ராகு இணைவு பெறும் போது செவ்வாயின் தசா அல்லது புத்தி காலத்தில் மணவாழ்க்கை பாதிக்கும்.
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
இரண்டாம் நிலை :
லக்னத்திற்கு எட்டில் கும்பத்தில் செவ்வாய் இருப்பது, செவ்வாய் தனக்கு பிடிக்காத சனியின் வீட்டில் பகை வலுவோடு மறைவது சிறப்பு தராது. பகை வீட்டில் உக்கிரமாக செயல்படும் செவ்வாயின் 7 ம் பார்வை நேராக குடும்ப ஸ்தானத்தை பார்த்து குடும்ப வாழ்வில் பிரச்சனை தரும், தொழிலில் உண்டாகும் அவமானமும் கஷ்டமும் வருமான பாதிப்பும் இங்கே குடும்பத்தில் பிரதிபலிக்கும், செவ்வாய் தசா புத்தி காலத்தில் பாதிப்பை தரும்.
விதிவிலக்கு :
இதற்கான ஒரே விதிவிலக்கு குரு வின் பார்வை இணைவை செவ்வாய் பெறுவதே ஆகும்.
இங்கே மற்றொரு சிக்கல் , சந்திரன் செவ்வாயோடு இணைந்தாலோ பார்த்தாலோ , ராசிக்கு 7ல் செவ்வாய் அல்லது ராசியில் செவ்வாய் இருந்து அது கூடுதலாக பாதிப்பை தரும்.
ஒவ்வொரு லக்னத்தை பொறுத்து செவ்வாயின் நிலை ஏற்ப பாதிப்பு கூடவோ குறைவாகவோ குரு பார்வை ஏற்ப மாறுபடும்.
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
No comments:
Post a Comment