கடந்த சில பதிவுகளில் 6 8 12 சுப கிரக சுப பலனை பற்றி எழுதி உள்ளேன். அதன் தொடர்ச்சியாக இந்த பதிவை நீங்கள் எடுத்து கொள்ளலாம்.
6 8 12 கிரகங்கள் தொடர்பு அனைத்துமே யோகங்களை எளிதாக கொடுத்து விடுவது இல்லை. 6 8 க்கே உரித்தான சில பாதிப்பை தரும் பல கிரக தொடர்பும் உண்டு.
கீழே கொடுக்கபட்டுள்ள உதாரண கிரக அமைப்பை பாருங்கள்.
கன்னி லக்னம். நடப்பில் குரு தசா..
குரு லக்னத்திற்கு எட்டில் மறைகிறார்... அங்கே நீச பூர்வ புண்ணிய ருண ரோக அதிபதியான சனியோடு இணைகிறார். 8ல் நீச சனியோடு குரு இணைவு.
கூடுதலாக லக்னத்திற்கு ஆகாத 8 அதிபதி செவ்வாயின் நேர் பார்வையில் குரு உள்ளார்.
6ம் அதிபதி 8ல் , 8 ம் அதிபதி 8 வீட்டை பார்வை செய்கிறார்.
குருவிற்கு நீச சனி மற்றும் அட்டமாதிபதி பாவியான செவ்வாய் தொடர்பில் இருக்க , குரு வாங்கிய நட்சத்திர சாரம், கேதுவின் அஸ்வினி.
சார நாதன் கேதுவிற்கு வீடு கொடுத்த சனி எட்டில் நீசமாகி , அந்த கேதுவிற்கு அட்டமாதிபதியான செவ்வாய் மற்றும் நீச சனி பார்வை.
குருவிற்கும் சனி செவ்வாய் தொடர்பு , குரு வாங்கிய சார நாதனிற்கும் சனி செவ்வாய் தொடர்பு.
பலன் சொன்னது :
" பங்காளி நிலம் சார்ந்த பிரச்சனை உள்ளதா..? சகோதரனால் நில பாதிப்பு வரும் " என்றேன்.
" ஆமாங்க , பங்காளி நில பிரச்சனை உள்ளது, தம்பியும் இதில் முனைப்பு காட்டி வருகிறார் " என்றார்.
" நில பிரச்சனை உண்டு , கவனமும் நிதானமும் அவசியம் " என்றேன்.
தன காரகன் எட்டில் மறைவதால் பணம் சார்ந்த கொடுக்கல் வாங்கலில் கவனமும் வைக்க வேண்டியது அவசியம்.
6 8 12 இட அதிபதிகளது தொடர்பு இங்கே சுப அமைப்பில் இல்லை , பாவியர் களது பாதிப்பில் முழு யோகத்தை தராமல், ஏதாவது சிக்கல்களோடு தூர தேச வெளிநாடு வேலைகளை ஏற்படுத்தி பணபுழக்கத்தை தரும்.
கூடுதலாக இந்த அமைப்பில் ஏழரை அஷ்டம சனி குறுக்கிட்டால் காரியம் கை கூட கூடுதல் முயற்சி தேவைபடும்.
இதே அமைப்பில் செவ்வாயோ சனியோ முழு ராஜயோக கிரகமாக அமைந்தால் அது பெரிய பாதிப்பை தராது.
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
#padmahazan
No comments:
Post a Comment