Wednesday, March 22, 2023

சுக்ரன் செவ்வாய் சனி தொடர்பு

🍁 சுக்ரன் செவ்வாய் சனி தொடர்பு 🍁 #hazan 

💥சுக்ரன் + சனியோடும் + செவ்வாயோடும் இணைவது, 

💥சுக்ரன் + சனி இணைவில் செவ்வாய் 4 7 8 பார்வை பெறுவது, 

💥சுக்ரன் செவ்வாய் இணைவில் சனி 3 7 10 பார்வை பெறுவது, 

💥சுக்ரனுக்கு சனி 3 7 10 பார்வை மற்றும் செவ்வாய் 4 7 8 பார்வை பெறுவது 

போன்ற 4 நிலைகளில் சுக்ரன் பாவகிரகங்களான சனி மற்றும் செவ்வாய் பார்வை இணைவால் பாதிப்பார். 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

இதனால் ஜாதகருக்கு 

💥நிலம் வாங்கும் போது வில்லங்கமான இடத்தை வாங்கிவிட்டு பின் அதனால் அலைச்சல் படுவது, விற்ற நபரோடு வழக்குகளை சந்திப்பது, 

💥நிலம் வாங்கிய பிறகு சுற்றி உள்ள நிலக்காரர்களோடு வாக்குவாதம் உண்டாவது, 

💥நிலம் சம்பந்தமான சகோதர சகோதரிகள் உண்டான சொத்து பிரச்சனை 

💥சொந்தமாக வீடு கட்டி குடியேறுவதில் தடை அல்லது ஏற்கெனவே கட்டிய பழைய வீட்டை வாங்கி அதில் வசிக்க வேண்டிய சூழல் 

💥வீடு சம்பந்தமான அதிகபடியான பராமரிப்பு செலவுகள் 

💥வாகனங்கள் பயணங்களின் போது விபத்துக்களில் சிக்குவது, அல்லது வாகனங்கள் பழுதுபட்டு செலவு வைப்பது, 

💥முக்கியமான நேரத்தில் வாகனம் பழுதடைந்து விடுவது, 

💥கணவன் மனைவிக்கு இடையேயான கருத்து வேறுபாடு, 

💥வாழ்க்கை துணை வழியிலான ஆதரவு இன்மை, வாழ்க்கை துணையே பிரச்சனையாக இருப்பது, 

💥மனைவி அத்தை மாமியார் மைத்துனி நாத்துனார் போன்ற உறவுகளால் குடும்பத்தில் குழப்பமும் நிம்மதி இழப்பும் வருவது, 

💥மிக அரிதாக சில நிலைகளில் மர்ம ஸ்தானத்தில் அடிவயிற்று உறுப்புகளில் பாதிப்பு அல்லது பாலியல் சம்மந்தப்பட்ட நோய் அல்லது குறைபாடு தருவது போன்ற தீய பலனும், 

💥கட்டுமானம் சார்ந்த பொருட்களை விற்பது, கட்டுமான நிறுவனத்தில் வேலை, நிலம் சார்ந்த சர்வேயர், பொதுப்பணித்துறை வேலை, டென்டர் எடுப்பது, நெருப்பு ஆற்றல் power station உற்பத்தி நிலையங்களில் வேலை, இரும்பு, ceramic, வாகன உற்பத்தி, வாகனம் சம்மந்தப்பட்ட தொழில், குத்துச்சண்டை, பைக் ரேசிங் ஆர்வம் போன்ற தொழில் முறை யோகத்தை தரும். #padmahazan 

💥ஆடம்பர வாழ்வு, மணவாழ்க்கை பாதிப்பை கொடுத்து தொழில் முறை ஏற்றத்தை தரும், 

💥சுக்ரன் சனி மற்றும் செவ்வாயால் பாதிக்கும் நிலையில் குரு பார்வை இணைவை இவர்கள் பெறும் போது, அல்லது வளர்பிறை சந்திரன் இவர்களோடு இணைவது வளர்பிறை சந்திரன் பார்ப்பது போன்ற நிலையில் மேலே சொன்ன கெடுபலன் ஜாதகருக்கு நடக்காது.

💥இத்தகைய சுக்ரன் சனி மற்றும் செவ்வாயோடு பாதித்த நிலையில் இருக்கும் ஜாதகர்கள் சுக்ரனுக்கான கஞ்சனூர் வழிபாடு, வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் சுக்ர வழிபாடு, மகாலெக்ஷ்மி வழிபாடு போன்றவை பாதிப்பை குறைக்க முடியும். #padmahazan 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851

No comments:

Post a Comment

நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..?

🍁 நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..? 🍁 #hazan  ⚡️ஓர் கிரகம் நீச வீட்டில் ஓர் கிரகம் இருந்தாலே அது ஏதோ ஓர் வகை நீசபங்கம் பெற்று விட்டது முடிவ...