Wednesday, March 1, 2023

பாதக மாரக அதிபதிகள்

🍁 பாதகாதிபதி மாரகாதிபதி 🍁 #hazan

பாதகாதிபதி மாரகாதிபதி என்பவை ஜோதிடத்தில் பெரிதுபடுத்தபட்ட விஷயம்.

பாதகாதிபதியும் மாரகாதிபதியும் உண்மையாகவே பெரிய பூதம் தான். ஆனால் அந்த பூதம் எப்போதும் கிளம்பாது , அதுபாட்டுக்கு தூங்கும் , நேரம் வரும் போதுதான் வெளியே வரும். 

எப்போதுமே " பூதம் வந்துடுமோ..? னு பயபட கூடாது. அதாவது பாதகாதிபதியும் மாரகாதிபதியும் உயிரையே எடுத்துவிடுவார்களோ என்ற அளவிற்கு எப்போதும் பயபட தேவையில்லை.

பாதகாதிபதியும் மாரகாதிபதியும் தான் ஒருவரை கடுமையாக பாதித்து மரணத்தை தருவார்கள். ஆனால் அதற்கான தகுந்த நேரம் வர அவர்களே காத்து இருப்பாங்க.

30 வயதிற்குள் எப்படியும் குறைந்தது ஒரு முறையாவது மாரக புத்திகள் வரும், சிலருக்கு இளம் வயதில் மாரக அதிபதி தசாவே நடக்கலாம்.

இளம் வயதில் மாரக தசா வரும் அனைவருமே மரணத்தை அடைவது இல்லை. நல்லாதானே இருக்காங்க. 

காரணம் லக்னாதிபதி வலு. #padmahazan 

உபய லக்னத்திற்கு ஏழாம் அதிபதியே பாதகாதிபதி ஆவார். வாழ்க்கை துணையை குறிக்கும் ஏழாம் அதிபதி பாதகாதிபதி ஆவதால் திருமணம் செய்யாமலேயேவா இருக்காங்க..

உபய லக்னகாரர்களுக்கு ஏழாம் அதிபதியான பாதகாதிபதி புத்தி அல்லது அந்தரத்தில் தான் திருமணம் நடக்கும்.

பாதக மாரக அதிபதி மிக மோசமானவர்கள்தான் ஆனால் எப்போதும் கிடையாது, 

லக்னம் லக்னாதிபதி அஷ்டம அதிபதி வலு ஏற்ப அவர்களது தசா புத்தி ஏற்பதான் பாதிப்பை தருவார்கள். 

இதைபடிப்பவர்களுக்கு தோன்றலாம் , " என்ன என்னமோ சொல்றீங்க புரியலையே " என்பது போலதான் இந்த பாதக மாரக கணக்கே.

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851

No comments:

Post a Comment

நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..?

🍁 நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..? 🍁 #hazan  ⚡️ஓர் கிரகம் நீச வீட்டில் ஓர் கிரகம் இருந்தாலே அது ஏதோ ஓர் வகை நீசபங்கம் பெற்று விட்டது முடிவ...