🍁 நிறைவான தன யோகத்தை தரும் தர்ம கர்ம லாப ஸ்தானங்கள் _ 9 10 11 🍁 #hazan
ஜாதகத்தில் லக்னத்திலிருந்து எண்ணி வரும் 9 10 11 பாவகங்கள் அந்த ஜாதகருக்கு எப்போதும் ஒரு மேம்பட்ட தொழில் நிலை , சுப காரியத்தில் உண்டாகும் தன சேர்க்கை , பொருள் லாபம் ஆகியற்றை தரும்.
இந்த தர்ம கர்ம லாப ஸ்தானங்களான 9 10 11 பாவகங்கள் எப்போதும் ஒர் பிறப்பின் உச்சி வானில் அமையும் பாவகங்களாகும். உச்சி வானில் நிற்கும் பாவக கிரகங்கள் லக்னம் என்னும் ஜாதகருக்கு தொழில் நிலை , பதவி , நீடித்த வருமானம் அதை தொடர்ந்து உண்டாகும் கௌரவம் , இறைபக்தி , முதல்மரியாதை , லாபம் வெற்றியை ஏற்படுத்தி கொடுக்கும். #padmahazan
தன சேர்க்கையை 2 மிடம் என்னும் தன சேமிப்பு நிலையை கொடுத்தாலும், அதற்கு வருமானமும் லாபமும் தருவது 10 11 இடங்கள். லாப ஸ்தானத்தின் லாப ஸ்தானம் 9 மிடம் என்னும் பாக்கிய ஸ்தானம். இந்த பாக்கிய ஸ்தானம் தந்தை வழி சொத்து தனம் அந்தஸ்து பெறுவதை குறிப்பிடும்.
9 10 11 அதிபதி இணைந்து
9 10 11 பாவகங்களில் இருப்பது
அல்லது
லக்ன 1 4 7 10 ல் இருப்பது ,
அல்லது
லக்ன 1 5 9 ல் இருப்பது
போன்ற நிலையில் இவர்களது தசா வருவது ,
லக்ன உபஜெய கேந்திர கோணாதிபதிகள் 9 10 11 இடங்களில் இருப்பது சிறப்பு.
இத்தகைய கிரக இணைவை குரு பார்வை செய்வது சிறப்பான நிறைவான தன யோகத்தை தரும்.
இந்த கிரகங்கள் 9 10 11 இணைந்து தனி சுக்ரனின் பார்வை பெறுவது சுக வாழ்வும் அதற்கு ஏற்ப செலவுகளுக்கு உண்டான சீரான தன வரவும் கொடுக்கும்.
#padmahazan
சம்மந்தப்பட்ட தசா புத்தி காலத்தில் ஏற்றத்தை கொடுக்கும்.
6 8 12 அதிபதிகள் 9 10 11 இடங்களில் இருப்பது பணம் பொருளை கொடுத்தாலும் சில சிக்கல்களை தரவும் செய்யும்.
9 10 11 இடங்களில் உள்ள கிரகங்களை சனி பார்வை செய்வது , நீசம் பெறுவது , மறைவு ஸ்தான அதிபதிகளான 6 8 12 அதிபதிகளோடு பரிவர்த்தனையாக இருப்பது சிறப்பு அல்ல.
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
No comments:
Post a Comment