புதன் நிற்கும் பாவக ரீதியான அறிவு உங்களுக்கு எப்போதும் மற்றவர்களை விட மேம்பட்டே இருக்கும்.
புதன் ஒருவருக்கு எந்த பாவகத்தில் உள்ளாரோ அங்கே அந்த பாவக ரீதியிலான ஆக்க பூர்வமான புத்திசாலிதனத்தை புதன் தருவார்.
லக்ன புதன்.
ஜாதகர் சாதுர்ய சாலி, அறிவாளி , புத்தியால் தனது அந்தஸ்தை அதிகரித்து கொள்வார். இவர்களது எந்த செயலுமே புத்திசாலி தனம் இருக்கும்.
2ல் புதன் பணம் சேமிப்பு சார்ந்த அறிவும் புத்திசாலி தனமும் மற்றவர்களை விட அதிகமாக காணப்படும்.
#padmahazan
3ல் புதன் பயணம், communication, நற்பெயர் எடுப்பதற்கான புத்திசாலிதனம் மற்றவர்களை விட கூடுதலாக வெளிபடும்.
4 ல் புதன் பள்ளிபடிப்பு , வாகன அறிவு , சுக வாழ்வை பற்றிய புத்திசாலிதனம் அதிகபடியாக வெளிபடும்
5ல் புதன் கவிதை கதை கலை சார்ந்த புரிதலும் புத்திசாலிதனமும் மற்றவர்களை விட அதிகம் வெளிபடும்.
6ல் புதன் வேலை வாய்ப்பு, கடன் வாங்குவது , நோய் காரணம் , எப்போது எதிரிகளை எதிர்கொள்ளுதல் போன்ற அறிவை வெளிபடுத்தும்.
7ல் புதன் மணவாழ்க்கை, நண்பர்கள் அரட்டை அடித்தல் , கூட்டு செயலில் அறிவு நன்றாக வெளிபடும்.
8ல் புதன் மறைபொருள், ஷேர் மார்கெட் , நீண்ட கால முதலீடு, தூர தேச இவற்றில் அறிவு கூடுதலாக வெளிபடும்.
9ல் புதன் கல்லூரி படிப்பு , மூத்தோர் ஆலோசனை , எண்ணியதை நினைத்து முன்னேறும் அறிவு சார்ந்த வெளிபாட்டை தரும்.
#PADMAHAZAN
10ல் புதன் வியாபார நுட்பம் , தொழிலில் புதுமை தருவது, வருமானம் மீதான அறிவை அதிகபடுத்தும்.
11ல் புதன் லாபம் , வெற்றி , முன்னேற்றம் சார்ந்த அறிவை புத்திசாலிதனத்தை வெளிபடுத்தும்.
12ல் புதன் நல்ல தூக்கம் , செலவு குறைத்தல், சுப செலவுகளில் பணத்தை இழத்தல் , வெளிநாடு வாழ்க்கை , வெளியூர் செய்திகள் போன்ற அறிவு சார்ந்த புரிதலை தரும்.
மேலே சொன்ன அமைப்புகளில் புதன் இருந்தாலும் புதன் நீசம் பகை வலு இன்றி நட்பு வீடுகளில் ஆட்சி வீடுகளில் அமைவது சிறப்பு.
மேலும் தனித்த புதனாக ஒரு பாவகத்தில் இருப்பது தெளிவான நேர்வழியிலான அறிவை பயன்படுத்தும் நிலையை புதன் தரும்
குறிப்பாக ராகு கேது இணைவு , தனக்கு ஒத்து வராத செவ்வாய் இணைவை பெறும் போது புதனின் இயல்புகளை மாற்ற பட்டு தன் இயல்பை இழக்கும்.
குரு பார்வை , சுக்ர இணைவு , சந்திர பார்வை பெற்ற புதனாக இருப்பது நிச்சயமாக மேம்பட்ட அறிவுதேடலை , புதுமையை புதன் இருக்கும் பாவக ரீதியாக தருவார். #padmahazan
இருவருக்குமே 5ல் புதன் உள்ளது யாருக்கு திறமை மேலோங்கி இருக்கும் என்ற கேள்வி உங்களுக்கு வரலாம்.
எவருக்கு புதன் ஸ்தான பலத்தோடு பாவியர் தொடர்பு இன்றி இருக்கிறதோ அவருக்கு கூடுதலாக திறமையை புதன் தருவார்.
பாவி இணைவு பார்வை பெற புதனின் தனிதன்மை ஜாதகரால் அனுபவிக்க இயலாது.
No comments:
Post a Comment