நவகிரகங்களில் புத்திசாலிதனம் சாதுர்யத்தன்மை கொண்டவர் புதன்.
இவர் ஜாதகத்தில் வலுவாக இருக்கும் பட்சத்தில் அவரது தசா புத்தி நடக்கும்போது அல்லது புதனின் ராசி மற்றும் லக்னங்களில் பிறந்தவங்க புதன் நன்றாக இருக்கும் போது...
1).பச்சை நிறம் = பச்சை நிறத்தில் துணி வீட்டின் சுவர்களின் நிறம் வண்டி வாகனங்களை வாங்குவாங்க. பச்சை நிறத்தை அதிகமாக விரும்புவாங்க. புதனின் அம்சமான ஜோதிடர்கள் அதிகமாக பச்சை நிற சட்டைபோட்டு இருப்பாங்க. #padmahazan
2).விஷ்னு பக்தன் = புதன் நன்றாக இருந்து அவரின் தாக்கம் ஜாதகரிடம் வெளிபட்டால் அவர் நிச்சயமாக விஷ்னுவின் பக்தனாக இருப்பார். விஷ்னுவே எல்லாம் என்று இருப்பார். பெயரில் விஷ்னு இருப்பார். அல்லது இவர் பிறரை விஷ்னு பெயர் வைத்து கூப்பிடுவார்.
3).இளமையான தோற்றம் = லக்னம் ராசியோடு புதன் தொடர்பு பெற்று இருக்கும் நிலையில் பிறகிரக தொடர்பு இல்லாத வரை ஜாதகர் குழந்தை மாதிரியான முக தோற்றம் இருக்கும். என்னபா எவ்வளவு வயசானாலும் பார்க்க சின்ன பையனாவே இருக்காங்கரேனு சொல்லுற மாதிரி ஜாதகரை வைத்து இருப்பார் புதன். உதாரணமாக காமெடி நடிகர் விவேக் மாதிரி இருப்பாங்க. #padmahazan
4).படிப்பு அல்லது புத்தக பிரியராக இருப்பார் : எப்போதும் எதையாவது புதிதாக படித்து தெரிந்துகொண்டே இருக்கும் தன்மையை தருபவர் புதன்.
5). கதை ஆசிரியர் வித்துவான் = தன்னோட புத்தி கொண்டு பல விஷயங்களின் வழியாக தன்னை நிலைநாட்டும் தன்மை. வித்தைகளை மட்டுமே கொண்டு வளர்ச்சி அடைவது போன்ற நிலையை புதன் ஜாதகருக்கு தருவார்.
புதனின் நட்சத்திரம் ராசியில் பிறந்தவர்கள். ஜனனகால ஜாதகத்தில் புதன் வலுத்து தசா புத்தி நடக்கும்போது இவை அதிகமாக ஜாதகரிடம் வெளிப்படும்
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
🤩 #padmahazan 🤩
No comments:
Post a Comment