இந்த பதிவு சிலருக்கு புரியாமல் இருக்கலாம் முரண்பாடாக இருக்கலாம் அப்படி இருந்தால் அடுத்த பதிவிற்கு நீங்கள் போகலாம்.
சனிபகவான் காரக ரீதியாக பிரச்சனை தரும் முதன்மை பாவகிரகம்.
சனி பகவான் பிற சுப கிரகங்களால் பார்க்க அல்லது சேர்க்கை பெற தன் சுப இயல்பு மாற்றி தன் தரும் கெடுபலனை குறைத்தோ அல்லது முழுமையாக தராமலோ இருப்பார்.
சனி பகவானை அவருக்கு அருகில் இருக்கும் முதன்மை சுபரான வலுவான குரு பகவானே முழுமையாக சுப தன்மைக்கு கொண்டுவர முடியும். #padmahazan
சுக் பகவான் சூரியனோடு உள்வட்ட கிரகத்தில் ஒருவரான சுக் ஜோதிடத்தில் கடைசி நிலையில் வெகு தொலைவில் இருக்கும் சனி பகவானால் முழுமையாக சுப தன்மை தர இயலாது. இருவருக்கும் இடையேயான தூரம் வெகு தொலைவு.
குருவால் தரும் சுப அளவைவிட சுக்ரனோடு இணைந்த சனி பகுதி அளவே சுப தன்மை பெற்று தன் சுய இயல்பை மாற்றி கொள்வார்.
சனி பகவானிற்கு தனக்கு அருகிலேயே இருக்கும் குருவோடு இணைவது பார்க்கபடுவது மட்டுமே முழு அளவான சுப தொடர்பாக சனிபகவானிற்கு இருக்கும். #padmahazan
வலுப்பெற்ற சனி பகவானோடு வலுபெற்ற சுக் இணைந்தாலும் சனியின் காரக பலனே அங்கு காணப்படும். சுக்ரனால் கட்டுபடுத்த மட்டுமே முடியும் மாறாக முழுமையாக சனி பகவானை நல்ல அமைப்பிற்கு மாற்ற முடியாது. சுக்ரனால் பார்க்கபடும் சனிக்கு இப்பதிவு பொருந்தாது.
குரு பகவானால் சனி பெறும் சுப நிலையே முதன்மையானதாக இருக்கும்.
🤩 #padmahazan 🤩
No comments:
Post a Comment