Tuesday, May 30, 2023

உபஜெய ஸ்தானங்கள் வலு பெறுதல் நன்மையா...? கெடுதல் தருமா..?

🍁 உபஜெய ஸ்தானங்கள் வலு பெறுதல் நன்மையா...? கெடுதல் தருமா..? 🍁 #hazan

உபஜெய வீடுகளான 3 6 11 இடங்கள் நன்மையும் தீமையும் கலந்த பலனை தரவே செய்யும். பொதுவாக உபஜெய வீடுகள் நன்மை மட்டுமே தரும் என்று நினைக்க கூடாது. 

( 10 இடம் உபஜெய நிலையில் முழு யோகத்தை தர அமைப்பில் இயங்கும் )

சர ஸ்திர உபய லக்னம் ஏற்ப இந்த உபஜெய ஸ்தான சில இடங்களில் கெடுபலனை மாரக பாதக தத்துவத்தை தர செய்யும். 

🟢 3 பாவகம் 🟢

ஸ்திர லக்னங்களான ரிஷபம் சிம்மம் விருச்சிகம் கும்பம் லக்னத்திற்கு 3 பாவகம் மாரக அதிபதியாகி , 3 ம் உபஜெய வீடு சில கெடுபலனை மாரக பலனை கலந்தே தரும்.

அதாவது ரிஷபம் _ சந்திரன் , சிம்மம் _ சுக்ரன் , விருச்சிகம் _ சனி , கும்பம் _ செவ்வாய் மூன்றாம் மாரக ஆதிபத்திய பெற்று நன்மையும் தீமையும் கலந்தே தசா புத்தியில் பலனை தருவார்கள். #padmahazan 

எது மாதிரியாக கெடுபலன்..? உதாரணமாக ரிஷப லக்னத்திற்கு, 3 அதிபதி சந்திரன் மாரக அதிபதி ஆட்சி பெற்றால் , ஜாதகருக்கு இசை , நடனம் , கவிதை , எழுத்து துறை, பத்திரிக்கை , டிராவல்ஸ் , சிறு தூர பயணங்களில் பொருள் பணம் தேடுபவராக்கும் ஆனால் மறுபுறம் சந்திரன் இளைய உடன் பிறப்புகள் வழியாக பல தரப்பட்ட இன்னல்களை மன அழுத்தத்தை தரும். 

ஜாதகர் பைபாஸில் பயணிக்கும் போது சகோதரி அல்லது தாயார் மறுபடி மறுபடி போன் செய்து ஜாதகரை விபத்தில் கூட சிக்க வைப்பார்கள். 

ஸ்திர லக்னங்களுக்கு மூன்றாம் இடம் மாரக தத்துவம் பெறுவதால் உபஜெய நிலையில் கெடுபலன் கலந்தே வரும். இவர்களது லக்னாதிபதி வலுபெற சமாளித்துவிடும் ஆற்றலை தரும். 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY
 WHATS APP 8300 620 851 

🟢 6 பாவகம் 🟢

ஆறாம் பாவகம் எப்போதுமே நற்பலனை தருகிறது என்றால் அங்கே ஓர் கஷ்டபலனையும் காண வேண்டி இருக்கும்.

1). எதிரியை வெல்லும் நிலைக்கு செல்லும் முன் எதிரியால் பல தரப்பட்ட சிக்கலுக்கு ஆளாக வேண்டி இருக்கும். 

2). கடன் பணம் கைக்கு வந்தாலும் அதனால் சிக்கலும் மன அழுத்தமும் தரும். 

எல்லா லக்னத்திற்கும் ஆறாம் இடம் சிக்கலை கொடுத்துதான் பின் நற்பலனை தரும் அந்த நற்பலனும் லக்னாதிபதி வலு ஏற்பதான் அமையும். #padmahazan 

🟢 11 பாவகம் 🟢

சர லக்னத்திற்கு 11 இடம் உபஜெய அமைப்பில் நற்பலனை தந்தாலும் பாதக ஆதிபத்திய நிலையும் கெடுதலை தரும்.

மேஷ லக்னத்திற்கு 11ல் சனி ஆட்சி பெற்றால், ஜாதகருக்கு அளவு கடந்த வெற்றி பண லாபம் முன்னேற்றம் சனி தசா புத்தி காலத்தில் தரும் , கூடவே பொது ஜன மக்களால் வாடிக்கையாளர்களால் வேலையாட்களால் மறுபக்கம் பாதகமும் வந்து சேரும்.

அளவுகடந்த சமுதாய நற்பெயரே ஒருகட்டத்தில் கலங்கத்தை ஏற்படுத்த தொடங்கி விடும் சனி தசா புத்தி காலத்தில். 

பொதுவாக உபஜெய ஸ்தானம் நற்பலனை தரும் என்கிற விதியை சற்று லக்னத்திற்கு ஏற்ப ஆராய்ந்து புரிந்து கொள்வது நல்லது. 

மாரக பாதக தத்துவம் வராத நிலையில் உபஜெய அமைப்பு நற்பலனை நன்றாக தரும்.

உதாரணமாக,

மிதுன லக்னத்திற்கு 3 அதிபதி சூரியன் , 

மகர லக்னத்திற்கு 3 அதிபதி குரு போன்ற அமைப்பு சிறப்பு. 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY
WHATS APP 8300 620 851 

#padmahazan

Sunday, May 28, 2023

கணவன் மனைவி குணம் ஒற்றுமை தரும் ராசிகள்

கணவன் மனைவி குணம் ஒற்றுமை தரும் ராசிகள்

🎯ஆணும் பெண்ணும் கணவன் மனைவியாக வாழ்நாளில் பெரும் பங்கு 20 முதல் 40 ஆண்டுகள் சேர்ந்தே பயணிக்கும் நிலையில், இருவரது குணமும் அவரவர்கள் பிறந்த ராசியின் தன்மை ஏற்ப அமையும்.

🎯கணவன் மனைவி இருவரும் குணத்தால் வேறுபடாமல் இருக்கும் போது அங்கே நல்ல மணவாழ்வை பெறுவார்கள். கணவன் மனைவி இருவரும் குணத்தால் வேறுபடும் போது அங்கே சண்டை பிரச்சனை மன ஒற்றுமை இல்லாத சூழலே இருக்கும். மணவாழ்க்கை போராட்டமாக காணபடும் #padmahazan 

🟢 நட்பு ராசி கணவன் மனைவியாக அமைவது 🟢

🎯கணவன் மனைவி இருவரது ராசியும் நட்பு ராசிகளாக வருவது சிறப்பு, 

அதாவது 

✨️மேஷ ராசி _ கடகம் சிம்மம் தனுசு ராசி குணம் ஒற்றுமை தரும் 

✨️ரிஷப ராசி _ மிதுனம் கன்னி விருச்சிகம் மகரம் கும்பம் ராசி குணம் ஒற்றுமை தரும் 

✨️மிதுன ராசி _ சிம்மம் கன்னி துலாம் கும்ப ராசி குண ஒற்றுமை தரும் 

✨️கடக ராசி _ சிம்மம் விருச்சிகம் மீனம் மேஷ ராசி குணம் ஒற்றுமை தரும் 

✨️சிம்ம ராசி _ கன்னி விருச்சிகம் தனுசு மேஷம் மிதுன ராசி குணம் ஒற்றுமை தரும் 

✨️கன்னி ராசி _ துலாம் மகரம் ரிஷபம் மிதுனம் குண ஒற்றுமை தரும் 

✨️துலாம் ராசி _ விருச்சிகம் மகரம் கும்பம் மேஷம் மிதுனம் குண ஒற்றுமை தரும் 

✨️விருச்சிக ராசி _ தனுசு மீனம் ரிஷபம் கடகம் சிம்மம் குண ஒற்றுமை தரும்

✨️தனுசு ராசி _ மகரம் கும்பம் மீனம் மேஷம் சிம்மம் குண ஒற்றுமை தரும். 

✨️மகர ராசி _ கும்பம் மீனம் ரிஷபம் கன்னி துலாம் குண ஒற்றுமை தரும். 

✨️கும்ப ராசி _ மீனம் ரிஷபம் மிதுனம் துலாம் மீனம் குண ஒற்றுமை தரும்.
மீன ராசி _ மேஷம் கடகம் விருச்சிகம் தனுசு மகர ராசி குண ஒற்றுமை தரும் 

🎯அதாவது கணவன் முடிவுக்கு மனைவியோ , மனைவி முடிவுக்கு கணவனோ ஏற்று கொண்டு , பெரும் வாக்கு வாதம் இல்லாத சூழலை ஏற்படுத்தும். 

🎯இவர்களது எண்ணமும் செயலும் வாழ்க்கை துணை ஏற்று கொள்ளும் விதமாக அமைந்துவிடும். #padmahazan 

🎯குண ஒற்றுமை கொண்ட கணவன் மனைவி வேலை காரணமாக தொழில் காரணமாக பிரிந்து வெவ்வேறு ஊரில் வாழ்ந்தாலும் குணத்தால் நிரந்தர பிரிவு இன்றி வாழ்வதை கணக்கிட இந்த ராசி நிலையை கொண்டு கணக்கிடலாம். 

🟢 6 8 12 மற்றும் பாதக ராசி துணையாக அமைவது 🟢

🎯உங்கள் ராசிக்கு 6 8 12 ராசிகள் உங்களுக்கு நட்பு ராசியாகவே வந்தாலும் குண ஒற்றுமை கொடுத்தாலும் அதுவே தவறான முடிவை திட்டத்தை கணவராலோ மனைவியாலோ தரும். 

உதாரணமாக, 

✨️கடக ராசிக்கு ஆறாவது ராசி தனுசு நட்பு ராசி , 

✨️மிதுன ராசிக்கு எட்டாவது ராசி மகரம் நட்பு ராசியாக வரும் , 

✨️மேஷ ராசிக்கு 12 ராசி மீனம் வரும் இவர்கள் குணத்தால் ஒற்றுமையாக இருந்தாலும் வாழ்க்கை துணையால் கடன் நோய் மன அழுத்தம் கஷ்டம் விரையம் நஷ்டம் தரும். 

🎯அதே போல கணவரும் மனைவியும் ஏழாவது ராசியாக அமைவது மேஷம் ரிஷபம் துலாம் விருச்சிக ராசியாக அமைவது சிறப்பு. 

🎯கடகம் சிம்மம் ராசிக்கு மகரம் கும்ப ராசி குண ஒற்றுமை தராது. அதே போல ஏழாவது பாதக ராசி ஆக உபய ராசிக்கு மிதுனம் தனுசும் , கன்னிக்கு மீனமும் வரும் இது குண ஒற்றுமை அதிகமாக தராது. 

🎯பெரும்பாலான நிலை கணவன் மனைவி ராசி 3 11 ஆக அமைவது மத்திம சுப பலனை தரும். #padmahazan 

🎯உங்களுடைய ராசிக்கு ஏற்ற ராசி அமையாத சூழலில் , முற்றிலும் மாறுபட்ட குணம் கொண்ட துணை அமைந்தால், உங்களுடைய ஏழாம் அதிபதி வலுக்கும் நிலையில் மாறுபட்ட குணம் கொண்ட துணையோடு சண்டை சச்சரவு பிரச்சனைகளோடு வாழும் சூழலை கிரகங்கள் தரும்.

🎯இந்த ராசி பொருத்தம் கணவன் மனைவி குணத்தை தெரிந்து கொள்ளதானே தவிர , மணவாழ்வை முழுமையாக குறிக்காது. 

🎯கணவன் மனைவி ஜாதகத்தில் வாழ்க்கை துணை குறிக்கும் ஏழாம் அதிபதி நிலை , குடும்ப ஸ்தான நிலை , மற்றும் கணவன் மனைவி இருவருக்குமான தசா புத்தி நடப்பதை பொறுத்தே முழுமையாக மணவாழ்வை கணிக்க இயலும். 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY
 WHATS APP 8300 620 851 

🟢 பின்குறிப்பு 🟢

📢100% அனைவருக்குமே நட்பு ராசியில் இருந்து வாழ்க்கை துணை அமையாது , உங்களில் பலருக்கு வாழ்க்கை துணை குண ஒற்றுமை இல்லாத ராசிகளில்தான் மனைவியோ கணவரோ வந்து இருப்பார் , 

📢காரணம்... ஒருவரது லக்னம் மற்றும் ராசி ஏழாம் பாவகத்தின் சுப வலு 7ல் இருக்கும் கிரக நிலை ஏற்பவே துணையின் ராசி அல்லது லக்னம் அமையும். 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY
 WHATS APP 8300 620 851 

#padmahazan

Wednesday, May 24, 2023

சந்திர சுக்ரன் இணைவு

🍁 சந்திரன் சுக்ரன் இணைவு 🍁 

🎯ஜாதகரது மனம் எண்ணம் அதிகபடியாக கலை , ஆடல் , பாடல் , நாடகம் மீது ஆர்வம் தரும். 

🎯ஜாதகர் ஏதோ ஓர் சினிமா நடிகரோ நடிகயோ எழுத்தாளரோ இசையமைப்பாளருக்கோ பயங்கரமான விசிறியாக இருப்பாங்க , உண்மையான fans இவங்கதான். 

🎯இவர்களது மனம் எளிதாக காதல் வயபடும் அல்லது பிரியம் கொண்டவர்கள் மீதான எண்ணம் சிந்தனை அதிகபடியாக மனதில் இருக்கும். 

🎯சந்திரன் சுக்ரன் இணைவு காதல் வழி சில மன கஷ்டங்களை அல்லது புரிந்து கொள்ள முடியாத சில ஈகோ பாதிப்பை தரும் , ஆனாலும் மீண்டும் அதே நபர் மீது காதலோ பிரியமோ கூடவே செய்யும். #padmahazan 

🎯மனம் அதிகபடியாக சினிமா கேளிக்கை ஆடம்பரம் மீது செலவு நேரம் விரையத்தையும் தரும். 

🎯சந்திர சுக்ரன் இணைவில் சுக்ரனோ சந்திரனோ ஆட்சி உச்சம் பெறும் போது முகம் பொழிவாக, அல்லது வசீகரிக்கும் முக தோற்றத்தை , முக பாவனை தந்துவிடும். 

🎯 பெண்கள் அதிகபடியாக உள்ள குடும்பம் அல்லது சொந்தம், வேலை தொழில் இடங்களில் அதிகபடியாக பெண்கள் இருப்பது போன்ற பெரும்பாலான பெண்கள் சார்ந்த சூழலில் வாழ வைக்கும். 

🎯சுக்ரன் சந்திர இணைவில் புதன் இணையும் போது கலைத்துறையில் சினிமா, நாடகம், எழுத்து துறை , பத்திரிக்கை துறைகளில் அதீத கற்பனை திறன் படைப்பாற்றலில் சிறப்பாக இருப்பார்கள். #padmahazan 

🎯சந்திர சுக்ரன் இணைவில் சந்திர வளர்பிறை ஆக இருப்பது நன்மை , தேய்பிறை சந்திரன் ஜாதகரை பெருமளவு பாதிக்க செய்வார் , 

🎯சந்திர சுக்ரன் இணைவை சனி பார்வை செய்யவோ ராகு கேது இணைவோ இருக்க கூடாது , தெளிவில்லாத சிந்தனை, சந்தேக குணம் , மணவாழ்வில் பாதிப்பை தரும். 

🎯சூரியனுக்கு 2 மற்றும் 3 ராசிகளில் உண்டாகும் சந்திர சுக்ரன் இணைவு மேலே சொன்ன வழிகளில் நன்மை தரும். 

PADMAHAZAN SRI VISHNU VISHNU WHATS APP 8300 620 851 

#padmahazan

Tuesday, May 23, 2023

கடக லக்னத்திற்கு நீச வக்ர சனி _ மனைவிக்கு ஆரோக்கிய பாதிப்பு

🍁 கடக லக்னத்திற்கு நீச வக்ர சனி _ மனைவிக்கு ஆரோக்கிய பாதிப்பு 🍁 #hazan 

பொதுவாக ஏழாம் அதிபதி நீசம் பெறுவது வாழ்க்கை துணை சார்ந்த பாதிப்பை காட்டும். 

1). வாழ்க்கை துணை உடல்நல பாதிப்பை கொண்டவர், 

அல்லது

2). ஜாதகர் உடனான ஒற்றுமை இல்லாத வேறுபட்ட குணம் கொண்ட வாழ்க்கைல துணை 

அல்லது 

3). நிரந்தர பிரிவாக பிரிந்து வாழ்வது

1969 , 1970 களில் பிறந்த இரு கடக லக்ன ஜாதகங்கள் கிடைத்தன , இரு ஆண் ஜாதகர்களுக்குமே கடக லக்னம் ஆகி ஏழாம் அதிபதியான சனி 10ல் நீசம் வக்ரமும் கூட , 

ஏற்கெனவே என் பதிவுகளில் எழுதி உள்ளேன் , தன் வீட்டை பார்க்கும் பாவ கிரகம் அந்த வீட்டை வலுபடுத்தும் ஆனால் அங்கே பாதிப்பையும் கொடுக்கும். #padmahazan 

இங்கே ஏழாம் அதிபதியான சனி நீசம் பின் வக்ரமும் பெற்று தன் வீட்டை தானே பார்வை செய்து உள்ளார், 

ஓர் ஆணின் மனைவிக்கு வயிற்றில் tumor கட்டி அறுவை சிகிச்சை செய்து மனைவியை காப்பாற்றி உள்ளார் , எப்போது..? ஜாதகரது சனி தசா சுய புத்தியில் , 

மற்றொரு ஆணின் மனைவிக்கு தலையில் tumor கட்டி அறுவை சிகிச்சை செய்து மனைவி நன்றாகி வருகிறார், எப்போது..? ஜாதகரது சனி தசா குரு புத்தியில் , 

ஏழாம் அதிபதி நீசம் பெற்றால் மனைவிக்கு பாதிப்பு , இருப்பினும் தன் வீட்டை பார்வை செய்வதால் மனைவி கூடவே இருக்கனும் ஆனால் பாதித்து பின் நன்றாக இருக்கனும் என்கிற அமைப்பை சனி தருகிறார்.

இதில் மற்றொரு ஒற்றுமை என்ன என்றால் , இரு கடக லக்ன பத்தில் சனி வக்ரமாகி அரசு இயந்திரம் சார்ந்த இரும்பு மெக்கானிக்கல் துறையில் அரசு பணியில் உள்ளார்கள். அதை மற்றொரு பதிவில் நேரம் இருக்கும் போது விளக்குகிறேன். 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851

Sunday, May 21, 2023

புதன் தரும் டெக்னாலஜி மொபைல் சாப்ட்வேர் வருமானம்

புதன் தரும் டெக்னாலஜி & மொபைல் & software வருமானம் யாருக்கு அமையும்..❓️

🎯 புத்திசாலிதனமும் டெக்னாலஜி சாதனங்கள் சம்மந்தப்பட்ட தொழில் அல்லது வேலை தருபவர் புதன். 

🎯 புதனை குறிக்கும் mobile phone , printer , desktop, memory card , mouse , USB cable, keyboard, software, coding , networking gadgets , satellite systems சார்ந்த தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு சார்ந்த கிரகம். 

🎯 எவர் ஒருவருக்கு புதன் தொழில் வருமான நிலைகளான 2 10 இடங்களோடு மற்றும் இந்த அதிபதிகளோடு தொடர்பு கொள்கிறதோ அவர்கள் மேலே சொன்ன பொருட்கள் வழியில் வருமானத்தை ஏற்படுத்தி கொள்வார்கள். 

🎯 அதே சமயம் technology and communications சார்ந்த துணைநிலை கிரகமாக ராகுவை எடுத்து கொள்ள வேண்டும். #padmahazan 

🎯 ராகுவே ஓரிடத்தில் உட்கார்ந்து கொண்டு உலகம் முழுவதும் e commerce, இணைய வர்த்தகம் , தரவு ( data ) களை கொண்டு consumer தேவையானவற்றை கொண்டு சேர்க்கும் data analysis போன்ற துறைகளுக்கு சொந்த காரர். 

🎯இந்தியாவில் நிறுவனம் தொடங்கி , மேற்கு உலக நாடுகளில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களின் order பெற்று இங்கே உற்பத்தி அதாவது programming, software ஏற்படுத்தி அதை விற்பது போன்றவற்றை தருபவர் ராகு . 

🎯இவர்களோடு கூடுதலாக சனியும் தொடர்பு கொள்ளும் போது, 

Circuit boards repair works , hardware replacement work , போன்ற technician வேலைகளை தொழில் அமைப்புகளோடு தரும். #padmahazan 

🎯புதன் மற்றும் ராகு லக்னத்திற்கு மற்றும் ராசிக்கு 2 6 4 10 இடங்களில் நேரடி தொடர்பு பெறும் போது நீடித்த , நிலையான வருமானத்தை ஏற்படுத்தி தரும். 

🎯புதன் நேரடியாக ஆட்சி உச்சம் நட்பு வீடுகளில் வலுபெற்று சந்திர கேந்திர நிலையில் இருப்பதும் டெக்னாலஜி மொபைல் மென்பொருள் சார்ந்த வருமானத்தை ஏற்படுத்தி தரும். 

🎯 சந்து தெருவில் 10 × 10 கடையில் மொபைல் சார்ஜர் , headphone , மற்றும் mobile service கடை நடத்துவதற்கும் , ஜெராக்ஸ் கடை , browsing centre நடத்துவதற்கும் புதன் லக்ன ராசிக்கு 2 4 10 இடங்களோடு நட்பு ஆட்சி உச்ச நிலையில் இருப்பதை பார்க்க முடிகிறது. 

🎯தனுசு கன்னி லக்ன ராசியினர் மொபைல் டெக்னாலஜி software துறையில் இயல்பாகவே ஆர்வம் கொண்டு இருப்பார்கள். 

🎯தொழில் எல்லாம் சரிங்க பணம் எவ்வளவு வரும்..? என்ற உங்கள் கேள்விக்கான பதில் , 

🎯சம்மந்தப்பட்ட ஜாதகத்தில் நடக்கும் யோக தசா மற்றும் பண புழக்க ஸ்தானம் வலு ஏற்ப வருமானம் அமைந்துவிடும். 

🎯புதன் வலுபெற்று லக்னமும் பத்தாம் இடமும் அதிகபடியாக வலுபெற்று உத்தியோக பாவகமான ஆறாம் இடமும் வலுபெற்று விடும் நிலையில் பெரிய பன்னாட்டு நிறுவனங்களான Amazon, Wal-Mart, Facebook , wipro போன்ற நிறுவனங்களில் பணியாற்றும் லட்சங்களில் வருமானம் பெறும் சூழலை தரும் , இதற்கு கூடுதலாக பரதேச வெளிநாட்டு வாழ்வை குறிக்கும் 12 இடம் வலுபெற வேண்டும். 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

#padmahazan

Saturday, May 20, 2023

ஏழாம் பாவகமும் மணவாழ்வும்

🍁 " ஏழாம் இடம் " 🍁#hazan 

ஏழாம் பாவகத்தை அதிபதியை முதல் துணை என்று சொல்றாங்க... அது சரிதான். 

ஆனாலும் அதையும் தாண்டி பலர் கவனிக்கபடாத சிலரால் புரிந்து கொண்ட சில மர்மங்களும் ஏழாம் இடத்தில் உண்டு. 

11 மிடம் வலுத்து விட்டது இரு தாரம் உண்டு என்று மேலோட்டமாக கணிக்கும் பலர், 7 மிடத்தை கண்டு கொள்வதே...

எத்தனை திருமணம் நடந்தாலும் ஏழாம் இடம் தாக்கம் பிற நிலைகளில் வெளிபடும் , 

ஏழாம் இடத்தை ஓரம் கட்டவே முடியாது, லக்னத்தின் எதிர்முனை ஏழாம் இடம்.

எதிர் பாலின ஈர்ப்பு , சமரசம் அனைத்தும் ஏழாம் இடமே குறிக்கும்.

இரண்டாவது மனைவி கணவர் வந்தாலும் அவர்களும் எதிர் பாலினம் தானே..? சப்தம ஸ்தானம் பங்கு அங்கே உள்ளது.

இதை பலரும் கவனிப்பது இல்லை, 

11 வலுத்து இரண்டாம் துணை வந்தாலும் அவங்க எப்படி இருப்பாங்க..? உங்களுக்கும் அவர்களுக்குமான சமரசம் எப்படி இருக்கும்...? என்பதை என்னவோ ஏழாம் இடமே குறிக்கும் . 

ஏழாம் பாவகம் வாழ்க்கை துணை யை பற்றி குறிப்பிட்டாலும் , 

ஏழாம் பாவகத்தோடு தொடர்பு பெற்ற 3 பாவகமும் , ஏழாம் பாவகத்தோடு தொடர்பு பெற்ற 9 பாவகமும் , ஏழாம் பாவகத்தோடு தொடர்பு பெற்ற 4 பாவகமும், 

ஊரைக்கூட்டி சொந்த பந்தம் சூழ திருமணம் நடைபெறுமா..? 

கோவிலில் எளிமையாக ஆடம்பரம் இன்றி திருமணம் நடைபெறுமா..? 

யாருக்கும் தெரியாமலேயே வேறு ஊரில் போய் திருமணம் நடைபெறுமா..? 

அல்லது திருமணமே முயற்சியும் கொடுப்பினையும் இன்றி நடைபெறாமல் போகுமா..? என்பதை 

மற்றபிற 3 4 9 பாவக தொடர்பை வைத்து பலன் கூறலாம். 

உங்களது முயற்சிதான் (3) உங்களது வாழ்க்கை துணை பெறும் கொடுப்பினை ( 9 ) ... 

லக்னத்தின் மூன்று ஒன்பதாம் பாவகமும் பாவக அதிபதியும் நன்றாக அமைவது சிறப்பு. 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHAT'S APP 8300 620 851

#padmahazan

கணிப்பும் நடப்பும்

🍁 கணிப்பும் நடப்பும் 🍁 #hazan 

கடந்த வருடம் பலன் சொன்ன ஜாதகம்... இன்று தொடர்பு கொண்டு சொன்னபடி நடந்துள்ளதாக கூறினார் ஜாதகர்... 

 " ஜோதிடர்கள் பலரும் வீடு கட்டும் யோகம் இல்லை என்று கூறி வந்தார்கள், நீங்கள் ஒருவர் மட்டுமே 2023 ஆண்டில் பூர்வீக நிலத்தில் வீடு கட்டுவீங்க என்று சொன்னீங்க , அதே போல நடந்து வருகிறது " என்றார் ஜாதகர்... 

ஜாதகருக்கு நடப்பில் சுக்ர தசா , ராகு புத்தி... 

யோகாதிபதியான சுக்ர தசாவில் 3மிட ராகு புத்தி , லக்னத்திற்கு ஆகாத செவ்வாய் பார்த்த ராகு. 

நீச லாபாதிபதியோடு இணைந்த ராகு மறுபக்கம் அஷ்டம செவ்வாய் பார்வை பெற்று இருந்தாலும், இங்கே சுக்ர தசா ராகு புத்தி வீடு யோகமே தரும் என்பது கணிப்பாக இருந்தது. 

சஷ்டஷ்டக சுக்ர ராகு நிலை என்பது கூட இங்கே பெரிய காரிய தடையை தராது என்றுதான் கணித்தேன். 

நடப்பில் அது சரியாக வந்துள்ளது.... 

விதிகள் பல மாற்றும் விதிவிலக்கு ஜோதிடத்தில் பல உள்ளன. அறிந்து ஆராய்வது மேன்மை. 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

#padmahazan

நேர்வலு கிரக பலன்

🍁 நேர்வலு கிரகம் 🍁

கிரகங்கள் அனைவருக்கும் பொதுவான நிலையில் தான் உள்ளது , ஒருவருக்கு யோகமும் மற்றவருக்கு கெடுபலனும் தருவதன் காரணம்தான் என்ன..? 

சுக்ரன் பகை/ சம வீடான தனுசில் இருக்கும் ஒருவர்தான் தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார். அவருக்கு சுக்ரன் ஆட்சியோ உச்சமோ கிடையாது. சாதாரண பகை வீட்டு சுக்ரன் தான். ஆனாலும் பல மொழிகளில் தலைவா என்று கத்த கூட்டத்தை திரட்டு ஆடம்பர வாழ்வை தந்தது , பகை பெற்ற சுக்ரன்.

பல படங்களை தமிழக அளவில் வெளியிடும் சினிமா அரசியல் இளைய புள்ளிக்கு குரு பகை வீட்டில்தான் உள்ளார். குரு ஆட்சியோ உச்சமோ கிடையாது. சாதாரண பகை வீட்டில் குரு உள்ளார்.

தனிபட்ட அளவில் பெரும் கோடிகளில் பணம் வட்டிக்கு விடும் ஒரு பைனான்சியர் ஜாதகத்தில் குரு பகை வீட்டில்தான் உள்ளார். 

ஏன் இந்த வேறுபாடு..? 

கிரகத்தின் நேர்வலு என்பதை விட நுணுக்கமான அவற்றின் அந்த கிரக இருப்புதான் இங்கே மிக முக்கியமானது.

எந்த பாவகத்தில் அந்த கிரகம் உள்ளது, பாவக முனையோடு எத்தனை எத்தனை தொலைவில் தொடர்பு கொள்கிறது, பிற பாவ கிரக தொடர்பு இல்லாமல் இருக்கிறதா..? இவை தான் அடி நாதமே தவிர , 

ஆட்சி உச்சமா இருக்கு யோகம்தான் என்பதில் ஜோதிடம் இல்லை... 

ஒரு நடிகருக்கு சுக்ரன் உச்சம் சூரியன் உச்சம் சனி உச்சம் குரு உச்சம் 20 வருடம் சக்க போடு போட்டார் ஆனால் வருடம் போனதும் ஓரம்கட்டபட்டு விட்டார். Troll material ஆகி விட்டார். 

ஆட்சி உச்சம் என்பது மேலோட்டமாக நன்றாக இருப்பதாக காட்டி கொண்டாலும் , அந்த ஆட்சி உச்ச பலனை முழுமையாக அனுபவிக்க அந்த கிரகத்தை ஒட்டியே செயல்படும் பாவகங்கள் நன்றாக அமைய வேண்டும். 

லக்னம் 2 10 11 எல்லாம் கெட்டு போய் குரு மட்டும் உச்சம் அந்த ஜாதகருக்கு தினமும் பணம் தடை இல்லாமல் வரும் ஆனால் கோடிஸ்வரர் ஆகிடாது.

சுக்ரன் உச்சமாகி விட்டார் ஆனால் 12 இடம் சுத்தமாக கெட்டால் அழகான பெண்ணை தருவார் சுக்ரன் ஆனால் சுகம் இருக்காதே..? பகலின் மோகிணி போல இருப்பவள் இரவில் பிசாசு போல தெரிவாளே... 

ஆட்சி உச்சம் மாயையில் சிக்கிவிடாதீங்க , பகை சம வீட்டு கிரகம் கூட நன்றாக இருந்தால் தசா நன்றாக வந்தார் போதும் பலனை தரும். 

அதற்கு எல்லாம் முதலில் லக்னமும் லக்னாதிபதியும் வலுவாக இருக்க வேண்டும்... 

#padmahazan

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851

ஏழில் கேது

🍁 ஏழில் கேது 🍁 #hazan 

ஏழில் கேது என்பது ஏழாம் வீட்டை பலவீனபடுத்தும் நிலை கிடையாது. மாறாக அந்த வீடு சில இயல்புகளை பிரதிபலிக்கும். 

1). வாழ்க்கை துணை வழியில் ஆதரவுகளை எதிர்பாக்கவே கூடாது, அமைந்தால் கிடைத்தால் சரி , நீங்களா எதையும் ஆசைபட கூடாது

2). பெரும்பாலும் உங்களை சோதிக்கும் , உங்கள் மீதான விமர்சனம் அல்லது குறையை சுட்டிகாட்டும்.

3). " இருக்கு ஆனா இல்ல " என்பதை போலான ஒரு மணவாழ்க்கை தரும் , அன்னோன்யம் ரெமான்ஸ் எல்லாமே இப்படிதான் , இருக்கு ஆனா இல்ல... 

4). எப்பவும் விலகி போக தோன்ற வைக்கும் , மண வாழ்வில் ஓர் பிடிப்பை தராது , ஆமா இங்க புருஷன்னு / பொண்டாட்டி ஒருத்தவங்க இருந்தாங்களே..? என்ன ஆனாங்க அப்படிங்கிற ஒரு விதமான தன்மை வெளிபடுத்தும். 

5). வாழ்க்கை துணை இடம் இருந்து ஓர் அக்கறை வெளிபடாது , அக்கறை வெளிபட்டால் வெகு விரைவில் ஏதோ சம்பவம் நடக்க போகுது னு அர்த்தம். 

இப்போதைக்கு இது போதும்... 

ஏழாம் வீட்டு அதிபதி , ஏழாமிட கேதுவோடு இணைந்த பார்த்த கிரகம் பொறுத்து இது கூடவோ குறையவோ அமையும்.

#padmahazan 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851

மண வாழ்வை பாதிக்கும் ராகு

🍁 மண வாழ்க்கை பாதிப்பு 🍁 #hazan

ஜாதகத்தில் மணவாழ்க்கை பற்றி காண 2 4 7 8 12 என பல்வேறு காரக ஆதிபத்திய ஆராய்ந்ததாலும் , மண வாழ்க்கை வாழ்க்கைதுணை பற்றிய நுணுக்கமான பலன்களை காண்பிப்பது ஏழாம் இடமே. 

ஏழாம் இடமும் அதிபதியும் வலுபெறும் போது , நல்ல மணவாழ்வை ஏற்படுத்தி கொடுக்கும். ( கேந்திராதிபத்திய தோசமாக இல்லாத வரை ) 

கீழே கொடுக்கபட்டுள்ள உதாரண ஜாதக கிரக அமைப்பை பாருங்கள். 


வாழ்க்கை துணையை குறிக்கும் ஏழில் ராகு உள்ளார் , ராகுவிற்கு வீடு கொடுத்த செவ்வாய் நீசமாகி உள்ளார் , கூடுதலாக ராகுவிற்கு மூலத்திரிகோண சனி வலுபெற்ற பத்தாம் பார்வை ராகுக்கு உள்ளது.

ஏழாம் அதிபதி நீசமாகி , ஏழில் பாவியான ராகு இருக்க , அந்த ராகுவை சனி பார்வையிடுவது கொடுமையான அமைப்பாக உள்ளது.

இதன் பலன் ~ 

1). வாழ்க்கை துணை குணம் கெட்டவராக இருப்பார் , அல்லது ஜாதகரிடம் ஒத்துழைத்து போகும் சுபாவம் இல்லாதவராக இருப்பார். 

2). வாழ்க்கை துணை எளிதாக பிரிந்து செல்லவோ அல்லது ஜாதகர் மீதான அக்கறை இல்லாதவராகவோ இருப்பார். 

3). மணவாழ்வில் நிம்மதியை இழக்கும் செயல்களை குற்றம் , தேவையற்ற கண்டிப்பு , போராட்ட குணம் , ஈகோ போன்ற பல விதமான பாதிப்பை கொடுத்து வரும் நிலையில் இருக்கும். 

மற்ற பிற பாவக நிலை ஏற்ப பிரிவு நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ அல்லது மறுமணமோ நடைபெற வைக்கும். இந்த ஏழாமிட சனி செவ்வாய் தொடர்பை பெற்ற ராகு.

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

#padmahazan

சிவில் என்ஜீனியருக்கான கிரக அமைப்பு

🍁 சிவில் என்ஜீனியருக்கான கிரக அமைப்பு 🍁 #hazan 

ஒரு ஜாதகத்தில் லக்னம் மற்றும் ராசிக்கு பத்தாம் இடமான ஜீவன வருமான பாவகத்தோடு தொடர்பு கொள்ளும் கிரகம் அது சார்ந்த தொழில் வழியான வருமானத்தை கொடுத்துவிடும். 

செவ்வாய் பத்தாம் வீட்டோடு தொடர்பு கொள்ளும் போது ஒருவருக்கு கல் மண் கட்டிடம் போன்ற நிலம் சார்ந்த வேலை அல்லது தொழிலை கொடுத்துவிடும். 

கீழே கொடுக்கபட்டுள்ள உதாரண ஜாதக கிரக அமைப்பை பாருங்கள். 

ரிஷப லக்னம் கும்ப ராசி. 

4ம் வீட்டில் உள்ள செவ்வாய் லக்னத்திற்கு 10 வீடான கும்பத்தை பார்வை செய்து , 

ராசிக்கு பத்தாம் வீடான விருச்சிகத்தையும் பார்வை செய்கிறது, 

லக்னம் ராசிக்கு 10 இடத்தோடு செவ்வாய் தொடர்பு கொள்வது சிவில் என்ஜீனியர் சார்ந்த வருமானத்தை கொடுத்து உள்ளது. #padmahazan 

இதில் ஒரு குறையும் உள்ளது... என்ன..? 

லக்னத்திற்கு ஏழாம் வீட்டை செவ்வாய் பார்த்து , ராசிக்கு ஏழில் செவ்வாய் உள்ளது. 

லக்னத்திற்கு ஏழாம் அதிபதி செவ்வாய் தன் வீட்டை தானே பார்த்து வலுபடுத்தினாலும் , பாவகிரகமான செவ்வாய் சில தொந்தரவு பலனையும் ஏழாம் வீட்டின் வழியே தரவே செய்வார். 

லக்ன ராசிக்கு ஏழாம் வீட்டொடு தொடர்பு கொள்ளும் செவ்வாய் தாமத மணவாழ்க்கை அல்லது மணவாழ்வில் முன்கோபம் முரட்டு தனம் கொண்ட சுபாவத்தால் மணவாழ்வை மறுபக்கம் பாதிக்கவும் செய்வார். 

குடும்பம் மணவாழ்க்கையில் நிம்மதியை இழக்க வைத்து மறுபுறம் வருமான ரீதியாக நற்பலனை கொடுக்கும் நிலையில் செவ்வாய் உள்ளார். 

#padmahazan 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851

Friday, May 5, 2023

சனி தசா புத்தி பலன் & குண மாற்றம்

🍁 சனி தசா & புத்தி தரும் பலன் & உங்களது குணம் மாற்றம் 🍁 #hazan 

பதிவை முழுமையாக skip பண்ணாம படித்து அறிந்து கொள்ளுங்கள். 

🍂 சனி வந்தாலே இருக்கும் நிலையில் ஓர் மாற்றத்தை சனி தருவார், கோட்சார ஏழரை அஷ்டம சனியாக இருந்தாலும் சரி , ஜாதகப்படி சனி தசா அல்லது சனி புத்தி இருந்தாலும் சரி , உங்களது குணமும் வருமான சூழலும் மாற்றம் உண்டாக்கும். 

🍂 சனி தசா அல்லது புத்தி காலத்தில் அவர்களுடைய ஜாதகத்தில் சனி பெறும் வலு ஏற்ப பலன்களும் குணங்களும் கீழே உள்ளபடி மாற்றத்தை தரும்... 

🍂 நட்பு ஆட்சி உச்சம் மற்றும் வக்ர பெற்ற சனி உழைக்கும் எண்ணத்தை ஒருவருக்கு தருவார் , அல்லது விரும்பம் இல்லாத அதிகபடியாக உடல் உழைப்பை போட்டு பணம் சேர்க்கும் சூழலை தருவார். 

🍂சனி வக்ர கதியில் இருக்கும் போது சனி தசா புத்தி காலத்தில் தொழில் மீதான அதிகபடியான ஆசை கொடுத்து பின் அதில் நிலையில்லாதபடி , விருப்பபட்ட படி தொழில் அமையாத எண்ணத்தை கொடுத்து பின் தொழில் மாற்றத்தை தரும். #padmahazan 

 🍂வேலை , தொழில் , வருமானம் , இது சார்ந்த மக்கள் தொடர்பை சனி ஏற்படுத்தி கொடுப்பார், சனி தசா புத்தி முடியும் வரை இவற்றை சுற்றியே உங்களது வாழ்க்கை நகரும். சாமானிய மக்கள் , நடுத்தர வர்க்க மக்களை சனி அதிகபடியாக உங்களுக்கு தொழில் வேலை நிமித்தமாக அறிமுகபடுத்துவார். 

🍂பெண் ஒருவர் வேலை அல்லது தொழில் செய்யும் நிலையில் இவர்களுக்கு வரும் சனி புத்தி அல்லது சனி தசா தொழிலா குடும்பமா என்கிற போராட்டத்தை சனி தருவார். 

🍂குடும்பத்திற்கு நேரம் ஒதுக்க முடியாது , குடும்பத்திற்கு நேரம் ஒதுக்கினால் , வருமானம் பாதிப்பு அல்லது மன அழுத்தம் தரும் விதமான சிக்கலை தரும். 

🍂வருமானம் தொழில் வேலை கவனித்தால் குடும்பம் பற்றிய கவலை மனதில் தோன்றும். #padmahazan 

🍂வேலை அல்லது தொழில் செய்யும் பெண்ணிற்கு சனி தசா அல்லது சனி புத்தி சிறு மன கஷ்டத்தை தரவே செய்யும். 

🍂 மந்த தன்மை , தாமதமாக ஒரு செயலை முடிக்கும் தன்மை , கொஞ்சம் சுத்தம் இல்லாத சூழலில் வேலை தொழில் வீடு இருப்பது , சுகாதாரமற்ற இடங்களில் வசிப்பது , உடல் சுத்தம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய சிந்தனை இன்றி வேறு தொழில் வருமானம் வேலை சூழலில் மாட்டி கொள்வது போன்ற பலனை தரும். 

🍂பலருக்கு சனி தசா அல்லது புத்தி காலம் அதிகபடியாக உடல் உழைப்பில் உடல் பலவீனபடுவது , அதிகபடியாக சோம்பல் தந்து அதுவே காரிய தடையை தரவும் கூடும். 

🍂சனி தசா புத்தி காலத்தில் உங்களுக்கு அதிகபடியாக பணத்தை தொழில் முன்னேற்றத்தை அல்லது வேலை சம்பளத்தை தரும் நிலையில் அது உங்களது மனதையும் உடல்நலத்தையும் உங்களுக்கும் மற்றவர்களுக்கான உறவுகளையும் பாதித்து தான் தரும். 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

💥💥💥 இது ஒரு பொதுவான சனி பற்றிய தகவல்தான். பெரும்பாலான நிலையில் இது பலருக்கு பொருந்தும். ஜாதகத்தில் சனி பெறும் நட்சத்திர சாரம் பிற கிரக இணைவு பார்வை பொறுத்து குறிப்பாக குரு பார்வை இணைவு இந்த கெடுபலன்களை மாற்றும். 💥💥💥

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851

Tuesday, May 2, 2023

சொன்னபடி நடக்கும் கணிப்பும் நடப்பும்

நம்மிடம் பலன் கேட்ட ஜாதகர்கள் பலன் சொன்னபடி நடந்துள்ள விபரங்களை எனக்கு தெரியப்படுத்தி தருணங்கள்... 









பாழங்கிணற்றை அசுத்தமாக்கியதால் பாடாய்படுத்தும் கேது

🍁 பாழங்கிணற்றை அசுத்தமாக்கியதால்  பாடாய்படுத்தும் கேது 🍁 #hazan 

ஆழ்துளை , குறுகலான அகலம் குறைவான கிணறுகளை குறிப்பது கேது பகவான். 

கேதுபகவான் நீர் ராசிகளான கடகம் விருச்சிகம் மீனத்தில் இருக்க பிறந்தவர்களது நிலத்தில் இருக்கும் அல்லது தோண்டும் கிணறுகள் அதிகபடியான நீரை கொண்டு ஊற்றெடுக்கும் கிணறாக அமைந்து இருக்கும். 

இன்று பலர் வீடுகளில் கிணறுகளை மேலே மூடி , மோட்டார் பம்ப் மட்டுமே கிணற்றில் நீரை இறைக்கிறது. 

கேதுவிற்கு நீர் கிரகமான சந்திரன் மற்றும் சுக்ரனின் இணைவை , பார்வை பெறும் போது சுத்தமாக தெளிந்த நன்னீர் கிணற்றை தரும். #padmahazan 

அதற்கு முக்கியமாக தோட்டம் அதை சுற்றிய கிணற்றை குறிக்கும் 4 பாவகமும் சுப வலுவில் அமைவது அவசியம். 

கேதுவோடு சனி இணைவது ,
கேதுவின் மீது சனி பார்வை இருப்பது,
கேது சனியின் வீடுகளில் இருக்கும் போது, 

கிணற்று நீர் தெளிவில்லாத , அசுத்தமான நீரை கொண்டு இருக்கும், 

அல்லது 

வற்றி போன கிணற்றை மூடாமல் விட்டு அது பாதாளத்திற்கு செல்லும் வழி போல கரப்பான் பூச்சி இன்னும் பிற நச்சு பூச்சிகள் வாழும் கூடாரமாக கூடும். 

சனி கேது இணைவு பெற்றவர்கள் பல 90kids ஜாதகத்தில் வீட்டில் வற்றிபோன கிணற்றை drainage ஆக மாற்றி விட்டதையும் கேட்கும் போது சொல்கிறார்கள். 

கேது என்பதை தடை கிரகம் , எதையும் நீக்கிவிடும் , பிரித்து விடும் , விலக்கி வைக்கும். 

பாழடைந்த கிணற்றை மூடாமல் அதை மேலும் அதில் குப்பை, சாக்கடை நீர் ஊற்றி drainage system ஆக பயன்படுத்தினால் 

சனி கேது தொடர்பை உங்கள் ஜாதகத்தில் தூண்டி விடும், 

சனி கேது தொடர்பு பெற்ற பாவகம் உங்களுக்கு பாதிப்பை தர போகும் அளவை அதிகரிக்கும், 

சனி கேது நின்ற உறவுகளை உங்களுக்கு பெரும் பிரச்சனையாக்கும், 

தீர்வு: 

1). பாழடைந்த கிணறு உங்களுக்கு சொந்தமான , உங்களுக்கு பாத்தியபட்ட இடத்தில் இருந்தால் அதை மேலும் தூர் வாரி ஊற்று எடுக்க வையுங்கள். 

2). தூர் வாரினாலும் வருவது அசுத்தமான நீர் , உப்பு நீர் என்றால் வீடு  இடிக்கும் போது கிடைக்கும் கான்க்ரீட் அல்லது மண்  கொண்டு கிணற்றை முடிவிடுங்கள். கேதுவினால் உண்டாகும் பாதிப்பை இது முழுமையாக குறைக்கும். 

3). அந்த அளவிற்கு செலவு செய்ய பணம் இல்லை என்றால் ஒரு மூடி கொண்டு கிணற்றை மூடி விடுங்கள், பாதிப்பை ஓரளவு குறைக்கும். 

4). பயன் இல்லாத கிணற்றை குப்பை , கழிவு நீர் கொட்டும் drainage ஆக பயன்படுத்துவது சனி கேது ஆதிக்கத்தை உங்களுக்கு கொடுக்கும். அது பின்னாளில் உங்கள் சந்ததி ஜாதகத்திலும் தொடரும். 

5). காரிய தடை , சுப நிகழ்வு தடை , சுக போக வாழ்வை அனுபவிக்க முடியாத,  கேது நின்ற பாவக இரத்த உறவினால் உண்டாகும் இழப்பு பாதிப்பை தூண்டும். 

" இப்படி கூட இருக்குமா..? "  என்று சிலர் நினைக்கலாம், 

சுக்ரனை வலுபெற்ற ஒருவர் வீட்டில் வெள்ளி பொருட்களை பயன்படுத்துவதும் , குரு வலுபெற்ற ஒருவர் தங்கம் அதிகபடியாக அணிந்து கொள்வதை பார்க்கும் நீங்களே... 

பாழடைந்த கிணற்றை வீட்டில் வைத்துள்ள ஒருவரது ஜாதகத்தை வாங்கி பாருங்கள், 

சனி கேது தொடர்பு ஜாதகத்தில் இருக்கும். 

சனி கேது தொடர்பு என்பது பலதரப்பட்ட பாவ கர்மாவை குறிக்கும், அதில் ஒரு அறிகுறிதான் பாழடைந்த கிணறு , 

சனி கேது தொடர்பு உள்ளது ஆனால் எனக்கு பாழடைந்த கிணறு இல்லை என்று சொல்பவர்களுக்கு வேறு உதாரணத்தை மற்றொரு பதிவில் தருகிறேன்


PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 
#padmahazan 

கருத்து வேறுபாடு பல தந்தாலும் பிரிவை தராத கிரக அமைப்பு

🍁 பலதரப்பட்ட கருத்து வேறுபாடு இருந்தாலும் பிரிவு தராத கிரக அமைப்பு 🍁 #hazan 

மணவாழ்வில் பல தரப்பட்ட கருத்து வேறுபாடு, பிரச்சனை , இருந்தாலும் பிரிவு இல்லாமல், குடும்ப வாழ்வை கொண்டு செல்லும் கிரக அமைப்பு எப்படி இருக்கும்..? வாங்க பார்க்கலாம்



 

ரிஷப லக்னம், துலா ராசி. 

வாழ்க்கை துணையை குறிக்கும் ஏழாம் வீட்டில் லக்னத்திற்கு ஏழில் ஆகாத 8 அதிபதி குரு , அஷ்டமாதிபதி ஏழாம் வீட்டில் இருப்பது நிச்சயமாக மன கஷ்டத்தை தரும். குணத்தாலும் செயலாகும் மாறுபாடு கொண்ட துணையை தரும். 

ராசிக்கு ஏழின் செவ்வாய் சுக்ர இணைவில் சுப தொடர்பில் உச்சமாகி அவர் தனது பார்வையில் ராசிக்கு ஏழாம் வீட்டை பார்வை செய்கிறார். ராசிக்கு ஏழாம் வீட்டை வலுபடுத்துகிறார்.

இருப்பினும் ராசியில் உச்சமாகும் சனி ராசிக்கு ஏழாம் வீட்டை பலவீனபடுத்துகிறார். 

ராசிக்கு ஏழாம் வீட்டை செவ்வாய் பார்த்து வலுப்படுத்த மறுபக்கம் சனி பலவீனபடுத்துகிறார். 

இங்கே சுக்ரன் சனி பாதகாதிபதியும் ஆறாம் அதிபதியும் பரிவர்த்தனையாக உள்ளார்கள்.

லக்ன ராசிக்கு ஏழாம் வீட்டை குருவும் , உச்ச சனியும் பாதிக்கும் நிலையில் , லக்ன ராசிக்கு ஏழாம் அதிபதியான செவ்வாய் உச்சமாகி இரண்டு நிலைகளையும் சரிகட்ட பார்க்கிறார். மணவாழ்வை நீட்டிக்கும் நிலையை செவ்வாய் தருகிறார். #padmahazan 

வாழ்க்கை துணை உண்டு ஆனால் அவரால் பல கஷ்டங்களை தரும் , கருத்து மோதலை தரும் , ஆனால் அத்தனை அமைப்புகளையும் சகித்து கொண்டு அனுசரித்து போகும் சூழலையும் இதே கிரக அமைப்புகள் உருவாக்கும். 

சனி மற்றும் செவ்வாய் இருவரது இணைவு பரிவர்த்தனையாக சுக்ரன் தொடர்பு கொள்வதால்  

மஹாலெக்ஷ்மி , காலபைரவர் , ஆஞ்சநேயர் , மற்றும் முருக பெருமான் வழிபாடு பாதிப்பை குறைக்கும். 

பின்குறிப்பு : 

இது தனி ஜாதகத்தின் முழு கிரக அமைப்பு தசா புத்தி ஏற்ப எடுக்கும் பலன்கள், நட்சத்திர பலனும் இதில் அடங்கும். 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

#padmahazan

ஆசைகளை அடைய எதுவும் செய்ய தூண்டும் சுக்ர தசா மற்றும் ராகு தசா

🍁 பிறரை அலட்சியபடுத்தி ஆசையை அடைய வைக்கும் ராகு தசா மற்றும் சுக்ர தசா 🍁 #hazan 

 🍂 இளம் வயதில் வரும் சுக்ர தசாவும் ராகு தசாவும் ஒருவரை பெரிய அளவில் எதிர்கால வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும் , பிறர் கூறும் அறிவுரை , சுய கௌரவம் விட்டு நினைத்ததை முடிக்கும் குணத்தை சுக்ர அல்லது ராகு தசா தரும். 

🍂ராகு மற்றும் சுக்ரன் இந்த இரண்டு கிரகமும் மற்றவர்கள் சொல்வதை பொருட்படுத்தாத குணத்தை அதிகபடியாகவே வெளிப்படுத்தும். 

ராகு தசா அல்லது சுக்ர தசா நடப்பவர்களிடம் இதை நாம் வெளிப்படையாக பார்க்கலாம். 

🍂ஒரு படிக்கும் வயதுடைய சிறு வயதில் வரும் ராகு, படிப்பில் நாட்டம் குறைவு, டெக்னாலஜி ஈர்ப்பு , computer editing போன்ற படிப்பில் திசை திருப்பும். படிப்பு வாழ்க்கை மீதான பிறர் சொல்லும் அறிவுரை ஆலோசனை கேட்கமாட்டார்கள். #padmahazan 

🍂ஆசைபட்ட செயலை அல்லது விருப்பமான படிப்பை சேர்ந்தெடுப்பதிலேயே கவனமாக இருப்பார்கள். நடைபெறும் ராகு கொஞ்சம் கெடுபலனை தரும் நிலையில் இருந்தால் பின்னாளில் சுய ஆசையே அவர்களது எதிர்காலத்தை பாதிக்கும் விதமாக அமைந்து விடும், 

🍂பல 90 kids civil engineering போன்ற படிப்பை அவர்களது அவயோக ராகு 6 8 அதிபதியான செவ்வாய் தொடர்பில் பெறும் போது ஆசைபட்டு படித்து பின்னாளில் வேலை வாய்ப்பை இழந்து அதே ராகு தசா கஷ்டபடுத்துவதை பார்க்க முடிகிறது. 

🍂அதே படிக்கும் வயதில் வரும் சுக்ர தசா சினிமா , காதல் , காமம் , நண்பர்களோடு அதிகபடியான நேரம் செலவிடுவது போன்ற வழிகளில் படிப்பில் திசை திருப்பும். 

🍂இதே தசாக்கள் மத்திம வயதில் 30 முதல் 50 வயதில் வரும் போது , சுக்ரன் அல்லது ராகு நல்ல நிலையில் இருக்கும் போது அதிகபடியான பணம் சேர்ப்பது , ஆடம்பர செலவுகளில் பணத்தை விரையம் செய்வது , வீடு கட்ட வேண்டும் , கார் வாங்க வேண்டும் என்கிற ஓடி ஓடி பணம் சேர்ப்பதில் கவனத்தை தரும். குடும்பத்தை கவனிக்க வேண்டும் சுற்றி உள்ளவர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்கிற எண்ணத்தை சுக்ரன் அல்லது ராகு தசா தராது. #padmahazan 

🍂இதே சுக்ரன் அல்லது ராகு அவயோக அமைப்பில் உள்ள போது பெண்கள் வழிகளில் அவபெயர் , வீண் விரையங்களில் உண்டாகும் கடன் , தீய பழக்க வழக்கங்களில் உண்டாகும் உடல் பாதிப்பு , புகை பழக்கம் , மாதிரியான வகையில் மற்றவர்கள் சொல்வதை பொருட்படுத்தவே மாட்டார்கள். தன்னையும் தன்னை சுற்றி உள்ளவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவார்கள். 

🍂சுக்ரனோ ராகுவோ தசா நடத்தும் போது தரும் பணம் , பொருள், காமம், அனைத்துமே பிறர் என்ன சொல்வார்கள் , பிறர் என்ன நினைப்பார்கள் என்கிற எண்ணத்தை ஜாதகருக்கு தராது. 

🍂நமக்கு என்ன வேணும் என்கிற ஆசையை மட்டுமே சுக்ரன் அல்லது ராகு தசா தூண்டும். அதை நோக்கிய பயணத்தை தரும். காரணம் சுக்ரனும் ராகுவும் ஆசை கிரகங்கள் , பொருள் காமம் மீதான ஈர்ப்பை பெற்ற கிரகங்கள். 

🍂பலன் சொல்லும் போது ஜாதகரது பெற்றோரோ அல்லது வாழ்க்கை துணையோ ஜாதகர் எதை சொன்னாலும் கேட்பதே இல்லை என்கிற விஷயத்தை சொல்லும் போது, #padmahazan 

தசா புத்தியை கவனித்தால் , 

💥சுக்ர தசா நடக்கும், 

💥ராகு தசா நடக்கும் , அல்லது 

💥ராகு அல்லது சுக்ர புத்தி நடக்கும், 

அல்லது 

💥சுக்ர தசா வில் ராகு புத்தி நடக்கும்,
💥ராகு தசா வில் சுக்ர புத்தி நடக்கும். 

சுக்ரன் அல்லது ராகு தசா புத்தி நடத்தும் நிலையில் , இந்த கிரகங்கள், 

1) குருவின் வீடுகளான தனுசு மீனத்தில் சுக்ரன் அல்லது ராகு இருப்பது, 

2). குருவின் இணைவில் சுக்ரன் அல்லது ராகு தசா புத்தி நடத்துவது, 

3). குரு பார்வையில் சுக்ரன் அல்லது ராகு தசா புத்தி நடத்தும் போது , 

✔️✔️✔️

💐பிறர் சொல்லும் ஆலோசனை, அறிவுரை , சமுதாயத்தில் பெறும் நன்மதிப்பு, கௌரவம் மீதான கவனத்தை ஜாதகர் பெறுவார்.

💐கூடுதலாக லக்னாதிபதி மற்றும் பூர்வ புண்ணிய பாக்கிய ஸ்தான அதிபதிகள் குரு பகவான் வலுக்கும் போது , அதாவது 1 5 9 மற்றும் குரு வலுக்கும் போது இளம் வயதில் வரும் இந்த தசாக்களை பெரிய பாதிப்பு இன்றி கடக்க முடியும். 

இவர்கள் மஹா லெக்ஷ்மி வழிபாடு , துர்கை அம்மன் வழிபாடு போன்றவை பாதிப்பை குறைக்கும். 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

#padmahazan

நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..?

🍁 நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..? 🍁 #hazan  ⚡️ஓர் கிரகம் நீச வீட்டில் ஓர் கிரகம் இருந்தாலே அது ஏதோ ஓர் வகை நீசபங்கம் பெற்று விட்டது முடிவ...