Tuesday, May 2, 2023

பாழங்கிணற்றை அசுத்தமாக்கியதால் பாடாய்படுத்தும் கேது

🍁 பாழங்கிணற்றை அசுத்தமாக்கியதால்  பாடாய்படுத்தும் கேது 🍁 #hazan 

ஆழ்துளை , குறுகலான அகலம் குறைவான கிணறுகளை குறிப்பது கேது பகவான். 

கேதுபகவான் நீர் ராசிகளான கடகம் விருச்சிகம் மீனத்தில் இருக்க பிறந்தவர்களது நிலத்தில் இருக்கும் அல்லது தோண்டும் கிணறுகள் அதிகபடியான நீரை கொண்டு ஊற்றெடுக்கும் கிணறாக அமைந்து இருக்கும். 

இன்று பலர் வீடுகளில் கிணறுகளை மேலே மூடி , மோட்டார் பம்ப் மட்டுமே கிணற்றில் நீரை இறைக்கிறது. 

கேதுவிற்கு நீர் கிரகமான சந்திரன் மற்றும் சுக்ரனின் இணைவை , பார்வை பெறும் போது சுத்தமாக தெளிந்த நன்னீர் கிணற்றை தரும். #padmahazan 

அதற்கு முக்கியமாக தோட்டம் அதை சுற்றிய கிணற்றை குறிக்கும் 4 பாவகமும் சுப வலுவில் அமைவது அவசியம். 

கேதுவோடு சனி இணைவது ,
கேதுவின் மீது சனி பார்வை இருப்பது,
கேது சனியின் வீடுகளில் இருக்கும் போது, 

கிணற்று நீர் தெளிவில்லாத , அசுத்தமான நீரை கொண்டு இருக்கும், 

அல்லது 

வற்றி போன கிணற்றை மூடாமல் விட்டு அது பாதாளத்திற்கு செல்லும் வழி போல கரப்பான் பூச்சி இன்னும் பிற நச்சு பூச்சிகள் வாழும் கூடாரமாக கூடும். 

சனி கேது இணைவு பெற்றவர்கள் பல 90kids ஜாதகத்தில் வீட்டில் வற்றிபோன கிணற்றை drainage ஆக மாற்றி விட்டதையும் கேட்கும் போது சொல்கிறார்கள். 

கேது என்பதை தடை கிரகம் , எதையும் நீக்கிவிடும் , பிரித்து விடும் , விலக்கி வைக்கும். 

பாழடைந்த கிணற்றை மூடாமல் அதை மேலும் அதில் குப்பை, சாக்கடை நீர் ஊற்றி drainage system ஆக பயன்படுத்தினால் 

சனி கேது தொடர்பை உங்கள் ஜாதகத்தில் தூண்டி விடும், 

சனி கேது தொடர்பு பெற்ற பாவகம் உங்களுக்கு பாதிப்பை தர போகும் அளவை அதிகரிக்கும், 

சனி கேது நின்ற உறவுகளை உங்களுக்கு பெரும் பிரச்சனையாக்கும், 

தீர்வு: 

1). பாழடைந்த கிணறு உங்களுக்கு சொந்தமான , உங்களுக்கு பாத்தியபட்ட இடத்தில் இருந்தால் அதை மேலும் தூர் வாரி ஊற்று எடுக்க வையுங்கள். 

2). தூர் வாரினாலும் வருவது அசுத்தமான நீர் , உப்பு நீர் என்றால் வீடு  இடிக்கும் போது கிடைக்கும் கான்க்ரீட் அல்லது மண்  கொண்டு கிணற்றை முடிவிடுங்கள். கேதுவினால் உண்டாகும் பாதிப்பை இது முழுமையாக குறைக்கும். 

3). அந்த அளவிற்கு செலவு செய்ய பணம் இல்லை என்றால் ஒரு மூடி கொண்டு கிணற்றை மூடி விடுங்கள், பாதிப்பை ஓரளவு குறைக்கும். 

4). பயன் இல்லாத கிணற்றை குப்பை , கழிவு நீர் கொட்டும் drainage ஆக பயன்படுத்துவது சனி கேது ஆதிக்கத்தை உங்களுக்கு கொடுக்கும். அது பின்னாளில் உங்கள் சந்ததி ஜாதகத்திலும் தொடரும். 

5). காரிய தடை , சுப நிகழ்வு தடை , சுக போக வாழ்வை அனுபவிக்க முடியாத,  கேது நின்ற பாவக இரத்த உறவினால் உண்டாகும் இழப்பு பாதிப்பை தூண்டும். 

" இப்படி கூட இருக்குமா..? "  என்று சிலர் நினைக்கலாம், 

சுக்ரனை வலுபெற்ற ஒருவர் வீட்டில் வெள்ளி பொருட்களை பயன்படுத்துவதும் , குரு வலுபெற்ற ஒருவர் தங்கம் அதிகபடியாக அணிந்து கொள்வதை பார்க்கும் நீங்களே... 

பாழடைந்த கிணற்றை வீட்டில் வைத்துள்ள ஒருவரது ஜாதகத்தை வாங்கி பாருங்கள், 

சனி கேது தொடர்பு ஜாதகத்தில் இருக்கும். 

சனி கேது தொடர்பு என்பது பலதரப்பட்ட பாவ கர்மாவை குறிக்கும், அதில் ஒரு அறிகுறிதான் பாழடைந்த கிணறு , 

சனி கேது தொடர்பு உள்ளது ஆனால் எனக்கு பாழடைந்த கிணறு இல்லை என்று சொல்பவர்களுக்கு வேறு உதாரணத்தை மற்றொரு பதிவில் தருகிறேன்


PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 
#padmahazan 

No comments:

Post a Comment

நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..?

🍁 நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..? 🍁 #hazan  ⚡️ஓர் கிரகம் நீச வீட்டில் ஓர் கிரகம் இருந்தாலே அது ஏதோ ஓர் வகை நீசபங்கம் பெற்று விட்டது முடிவ...