Tuesday, May 30, 2023

உபஜெய ஸ்தானங்கள் வலு பெறுதல் நன்மையா...? கெடுதல் தருமா..?

🍁 உபஜெய ஸ்தானங்கள் வலு பெறுதல் நன்மையா...? கெடுதல் தருமா..? 🍁 #hazan

உபஜெய வீடுகளான 3 6 11 இடங்கள் நன்மையும் தீமையும் கலந்த பலனை தரவே செய்யும். பொதுவாக உபஜெய வீடுகள் நன்மை மட்டுமே தரும் என்று நினைக்க கூடாது. 

( 10 இடம் உபஜெய நிலையில் முழு யோகத்தை தர அமைப்பில் இயங்கும் )

சர ஸ்திர உபய லக்னம் ஏற்ப இந்த உபஜெய ஸ்தான சில இடங்களில் கெடுபலனை மாரக பாதக தத்துவத்தை தர செய்யும். 

🟢 3 பாவகம் 🟢

ஸ்திர லக்னங்களான ரிஷபம் சிம்மம் விருச்சிகம் கும்பம் லக்னத்திற்கு 3 பாவகம் மாரக அதிபதியாகி , 3 ம் உபஜெய வீடு சில கெடுபலனை மாரக பலனை கலந்தே தரும்.

அதாவது ரிஷபம் _ சந்திரன் , சிம்மம் _ சுக்ரன் , விருச்சிகம் _ சனி , கும்பம் _ செவ்வாய் மூன்றாம் மாரக ஆதிபத்திய பெற்று நன்மையும் தீமையும் கலந்தே தசா புத்தியில் பலனை தருவார்கள். #padmahazan 

எது மாதிரியாக கெடுபலன்..? உதாரணமாக ரிஷப லக்னத்திற்கு, 3 அதிபதி சந்திரன் மாரக அதிபதி ஆட்சி பெற்றால் , ஜாதகருக்கு இசை , நடனம் , கவிதை , எழுத்து துறை, பத்திரிக்கை , டிராவல்ஸ் , சிறு தூர பயணங்களில் பொருள் பணம் தேடுபவராக்கும் ஆனால் மறுபுறம் சந்திரன் இளைய உடன் பிறப்புகள் வழியாக பல தரப்பட்ட இன்னல்களை மன அழுத்தத்தை தரும். 

ஜாதகர் பைபாஸில் பயணிக்கும் போது சகோதரி அல்லது தாயார் மறுபடி மறுபடி போன் செய்து ஜாதகரை விபத்தில் கூட சிக்க வைப்பார்கள். 

ஸ்திர லக்னங்களுக்கு மூன்றாம் இடம் மாரக தத்துவம் பெறுவதால் உபஜெய நிலையில் கெடுபலன் கலந்தே வரும். இவர்களது லக்னாதிபதி வலுபெற சமாளித்துவிடும் ஆற்றலை தரும். 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY
 WHATS APP 8300 620 851 

🟢 6 பாவகம் 🟢

ஆறாம் பாவகம் எப்போதுமே நற்பலனை தருகிறது என்றால் அங்கே ஓர் கஷ்டபலனையும் காண வேண்டி இருக்கும்.

1). எதிரியை வெல்லும் நிலைக்கு செல்லும் முன் எதிரியால் பல தரப்பட்ட சிக்கலுக்கு ஆளாக வேண்டி இருக்கும். 

2). கடன் பணம் கைக்கு வந்தாலும் அதனால் சிக்கலும் மன அழுத்தமும் தரும். 

எல்லா லக்னத்திற்கும் ஆறாம் இடம் சிக்கலை கொடுத்துதான் பின் நற்பலனை தரும் அந்த நற்பலனும் லக்னாதிபதி வலு ஏற்பதான் அமையும். #padmahazan 

🟢 11 பாவகம் 🟢

சர லக்னத்திற்கு 11 இடம் உபஜெய அமைப்பில் நற்பலனை தந்தாலும் பாதக ஆதிபத்திய நிலையும் கெடுதலை தரும்.

மேஷ லக்னத்திற்கு 11ல் சனி ஆட்சி பெற்றால், ஜாதகருக்கு அளவு கடந்த வெற்றி பண லாபம் முன்னேற்றம் சனி தசா புத்தி காலத்தில் தரும் , கூடவே பொது ஜன மக்களால் வாடிக்கையாளர்களால் வேலையாட்களால் மறுபக்கம் பாதகமும் வந்து சேரும்.

அளவுகடந்த சமுதாய நற்பெயரே ஒருகட்டத்தில் கலங்கத்தை ஏற்படுத்த தொடங்கி விடும் சனி தசா புத்தி காலத்தில். 

பொதுவாக உபஜெய ஸ்தானம் நற்பலனை தரும் என்கிற விதியை சற்று லக்னத்திற்கு ஏற்ப ஆராய்ந்து புரிந்து கொள்வது நல்லது. 

மாரக பாதக தத்துவம் வராத நிலையில் உபஜெய அமைப்பு நற்பலனை நன்றாக தரும்.

உதாரணமாக,

மிதுன லக்னத்திற்கு 3 அதிபதி சூரியன் , 

மகர லக்னத்திற்கு 3 அதிபதி குரு போன்ற அமைப்பு சிறப்பு. 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY
WHATS APP 8300 620 851 

#padmahazan

No comments:

Post a Comment

நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..?

🍁 நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..? 🍁 #hazan  ⚡️ஓர் கிரகம் நீச வீட்டில் ஓர் கிரகம் இருந்தாலே அது ஏதோ ஓர் வகை நீசபங்கம் பெற்று விட்டது முடிவ...