கிரகங்கள் அனைவருக்கும் பொதுவான நிலையில் தான் உள்ளது , ஒருவருக்கு யோகமும் மற்றவருக்கு கெடுபலனும் தருவதன் காரணம்தான் என்ன..?
சுக்ரன் பகை/ சம வீடான தனுசில் இருக்கும் ஒருவர்தான் தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார். அவருக்கு சுக்ரன் ஆட்சியோ உச்சமோ கிடையாது. சாதாரண பகை வீட்டு சுக்ரன் தான். ஆனாலும் பல மொழிகளில் தலைவா என்று கத்த கூட்டத்தை திரட்டு ஆடம்பர வாழ்வை தந்தது , பகை பெற்ற சுக்ரன்.
பல படங்களை தமிழக அளவில் வெளியிடும் சினிமா அரசியல் இளைய புள்ளிக்கு குரு பகை வீட்டில்தான் உள்ளார். குரு ஆட்சியோ உச்சமோ கிடையாது. சாதாரண பகை வீட்டில் குரு உள்ளார்.
தனிபட்ட அளவில் பெரும் கோடிகளில் பணம் வட்டிக்கு விடும் ஒரு பைனான்சியர் ஜாதகத்தில் குரு பகை வீட்டில்தான் உள்ளார்.
ஏன் இந்த வேறுபாடு..?
கிரகத்தின் நேர்வலு என்பதை விட நுணுக்கமான அவற்றின் அந்த கிரக இருப்புதான் இங்கே மிக முக்கியமானது.
எந்த பாவகத்தில் அந்த கிரகம் உள்ளது, பாவக முனையோடு எத்தனை எத்தனை தொலைவில் தொடர்பு கொள்கிறது, பிற பாவ கிரக தொடர்பு இல்லாமல் இருக்கிறதா..? இவை தான் அடி நாதமே தவிர ,
ஆட்சி உச்சமா இருக்கு யோகம்தான் என்பதில் ஜோதிடம் இல்லை...
ஒரு நடிகருக்கு சுக்ரன் உச்சம் சூரியன் உச்சம் சனி உச்சம் குரு உச்சம் 20 வருடம் சக்க போடு போட்டார் ஆனால் வருடம் போனதும் ஓரம்கட்டபட்டு விட்டார். Troll material ஆகி விட்டார்.
ஆட்சி உச்சம் என்பது மேலோட்டமாக நன்றாக இருப்பதாக காட்டி கொண்டாலும் , அந்த ஆட்சி உச்ச பலனை முழுமையாக அனுபவிக்க அந்த கிரகத்தை ஒட்டியே செயல்படும் பாவகங்கள் நன்றாக அமைய வேண்டும்.
லக்னம் 2 10 11 எல்லாம் கெட்டு போய் குரு மட்டும் உச்சம் அந்த ஜாதகருக்கு தினமும் பணம் தடை இல்லாமல் வரும் ஆனால் கோடிஸ்வரர் ஆகிடாது.
சுக்ரன் உச்சமாகி விட்டார் ஆனால் 12 இடம் சுத்தமாக கெட்டால் அழகான பெண்ணை தருவார் சுக்ரன் ஆனால் சுகம் இருக்காதே..? பகலின் மோகிணி போல இருப்பவள் இரவில் பிசாசு போல தெரிவாளே...
ஆட்சி உச்சம் மாயையில் சிக்கிவிடாதீங்க , பகை சம வீட்டு கிரகம் கூட நன்றாக இருந்தால் தசா நன்றாக வந்தார் போதும் பலனை தரும்.
அதற்கு எல்லாம் முதலில் லக்னமும் லக்னாதிபதியும் வலுவாக இருக்க வேண்டும்...
#padmahazan
No comments:
Post a Comment