Sunday, May 28, 2023

கணவன் மனைவி குணம் ஒற்றுமை தரும் ராசிகள்

கணவன் மனைவி குணம் ஒற்றுமை தரும் ராசிகள்

🎯ஆணும் பெண்ணும் கணவன் மனைவியாக வாழ்நாளில் பெரும் பங்கு 20 முதல் 40 ஆண்டுகள் சேர்ந்தே பயணிக்கும் நிலையில், இருவரது குணமும் அவரவர்கள் பிறந்த ராசியின் தன்மை ஏற்ப அமையும்.

🎯கணவன் மனைவி இருவரும் குணத்தால் வேறுபடாமல் இருக்கும் போது அங்கே நல்ல மணவாழ்வை பெறுவார்கள். கணவன் மனைவி இருவரும் குணத்தால் வேறுபடும் போது அங்கே சண்டை பிரச்சனை மன ஒற்றுமை இல்லாத சூழலே இருக்கும். மணவாழ்க்கை போராட்டமாக காணபடும் #padmahazan 

🟢 நட்பு ராசி கணவன் மனைவியாக அமைவது 🟢

🎯கணவன் மனைவி இருவரது ராசியும் நட்பு ராசிகளாக வருவது சிறப்பு, 

அதாவது 

✨️மேஷ ராசி _ கடகம் சிம்மம் தனுசு ராசி குணம் ஒற்றுமை தரும் 

✨️ரிஷப ராசி _ மிதுனம் கன்னி விருச்சிகம் மகரம் கும்பம் ராசி குணம் ஒற்றுமை தரும் 

✨️மிதுன ராசி _ சிம்மம் கன்னி துலாம் கும்ப ராசி குண ஒற்றுமை தரும் 

✨️கடக ராசி _ சிம்மம் விருச்சிகம் மீனம் மேஷ ராசி குணம் ஒற்றுமை தரும் 

✨️சிம்ம ராசி _ கன்னி விருச்சிகம் தனுசு மேஷம் மிதுன ராசி குணம் ஒற்றுமை தரும் 

✨️கன்னி ராசி _ துலாம் மகரம் ரிஷபம் மிதுனம் குண ஒற்றுமை தரும் 

✨️துலாம் ராசி _ விருச்சிகம் மகரம் கும்பம் மேஷம் மிதுனம் குண ஒற்றுமை தரும் 

✨️விருச்சிக ராசி _ தனுசு மீனம் ரிஷபம் கடகம் சிம்மம் குண ஒற்றுமை தரும்

✨️தனுசு ராசி _ மகரம் கும்பம் மீனம் மேஷம் சிம்மம் குண ஒற்றுமை தரும். 

✨️மகர ராசி _ கும்பம் மீனம் ரிஷபம் கன்னி துலாம் குண ஒற்றுமை தரும். 

✨️கும்ப ராசி _ மீனம் ரிஷபம் மிதுனம் துலாம் மீனம் குண ஒற்றுமை தரும்.
மீன ராசி _ மேஷம் கடகம் விருச்சிகம் தனுசு மகர ராசி குண ஒற்றுமை தரும் 

🎯அதாவது கணவன் முடிவுக்கு மனைவியோ , மனைவி முடிவுக்கு கணவனோ ஏற்று கொண்டு , பெரும் வாக்கு வாதம் இல்லாத சூழலை ஏற்படுத்தும். 

🎯இவர்களது எண்ணமும் செயலும் வாழ்க்கை துணை ஏற்று கொள்ளும் விதமாக அமைந்துவிடும். #padmahazan 

🎯குண ஒற்றுமை கொண்ட கணவன் மனைவி வேலை காரணமாக தொழில் காரணமாக பிரிந்து வெவ்வேறு ஊரில் வாழ்ந்தாலும் குணத்தால் நிரந்தர பிரிவு இன்றி வாழ்வதை கணக்கிட இந்த ராசி நிலையை கொண்டு கணக்கிடலாம். 

🟢 6 8 12 மற்றும் பாதக ராசி துணையாக அமைவது 🟢

🎯உங்கள் ராசிக்கு 6 8 12 ராசிகள் உங்களுக்கு நட்பு ராசியாகவே வந்தாலும் குண ஒற்றுமை கொடுத்தாலும் அதுவே தவறான முடிவை திட்டத்தை கணவராலோ மனைவியாலோ தரும். 

உதாரணமாக, 

✨️கடக ராசிக்கு ஆறாவது ராசி தனுசு நட்பு ராசி , 

✨️மிதுன ராசிக்கு எட்டாவது ராசி மகரம் நட்பு ராசியாக வரும் , 

✨️மேஷ ராசிக்கு 12 ராசி மீனம் வரும் இவர்கள் குணத்தால் ஒற்றுமையாக இருந்தாலும் வாழ்க்கை துணையால் கடன் நோய் மன அழுத்தம் கஷ்டம் விரையம் நஷ்டம் தரும். 

🎯அதே போல கணவரும் மனைவியும் ஏழாவது ராசியாக அமைவது மேஷம் ரிஷபம் துலாம் விருச்சிக ராசியாக அமைவது சிறப்பு. 

🎯கடகம் சிம்மம் ராசிக்கு மகரம் கும்ப ராசி குண ஒற்றுமை தராது. அதே போல ஏழாவது பாதக ராசி ஆக உபய ராசிக்கு மிதுனம் தனுசும் , கன்னிக்கு மீனமும் வரும் இது குண ஒற்றுமை அதிகமாக தராது. 

🎯பெரும்பாலான நிலை கணவன் மனைவி ராசி 3 11 ஆக அமைவது மத்திம சுப பலனை தரும். #padmahazan 

🎯உங்களுடைய ராசிக்கு ஏற்ற ராசி அமையாத சூழலில் , முற்றிலும் மாறுபட்ட குணம் கொண்ட துணை அமைந்தால், உங்களுடைய ஏழாம் அதிபதி வலுக்கும் நிலையில் மாறுபட்ட குணம் கொண்ட துணையோடு சண்டை சச்சரவு பிரச்சனைகளோடு வாழும் சூழலை கிரகங்கள் தரும்.

🎯இந்த ராசி பொருத்தம் கணவன் மனைவி குணத்தை தெரிந்து கொள்ளதானே தவிர , மணவாழ்வை முழுமையாக குறிக்காது. 

🎯கணவன் மனைவி ஜாதகத்தில் வாழ்க்கை துணை குறிக்கும் ஏழாம் அதிபதி நிலை , குடும்ப ஸ்தான நிலை , மற்றும் கணவன் மனைவி இருவருக்குமான தசா புத்தி நடப்பதை பொறுத்தே முழுமையாக மணவாழ்வை கணிக்க இயலும். 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY
 WHATS APP 8300 620 851 

🟢 பின்குறிப்பு 🟢

📢100% அனைவருக்குமே நட்பு ராசியில் இருந்து வாழ்க்கை துணை அமையாது , உங்களில் பலருக்கு வாழ்க்கை துணை குண ஒற்றுமை இல்லாத ராசிகளில்தான் மனைவியோ கணவரோ வந்து இருப்பார் , 

📢காரணம்... ஒருவரது லக்னம் மற்றும் ராசி ஏழாம் பாவகத்தின் சுப வலு 7ல் இருக்கும் கிரக நிலை ஏற்பவே துணையின் ராசி அல்லது லக்னம் அமையும். 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY
 WHATS APP 8300 620 851 

#padmahazan

No comments:

Post a Comment

நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..?

🍁 நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..? 🍁 #hazan  ⚡️ஓர் கிரகம் நீச வீட்டில் ஓர் கிரகம் இருந்தாலே அது ஏதோ ஓர் வகை நீசபங்கம் பெற்று விட்டது முடிவ...