ஒரு ஜாதகத்தில் லக்னம் மற்றும் ராசிக்கு பத்தாம் இடமான ஜீவன வருமான பாவகத்தோடு தொடர்பு கொள்ளும் கிரகம் அது சார்ந்த தொழில் வழியான வருமானத்தை கொடுத்துவிடும்.
செவ்வாய் பத்தாம் வீட்டோடு தொடர்பு கொள்ளும் போது ஒருவருக்கு கல் மண் கட்டிடம் போன்ற நிலம் சார்ந்த வேலை அல்லது தொழிலை கொடுத்துவிடும்.
ரிஷப லக்னம் கும்ப ராசி.
4ம் வீட்டில் உள்ள செவ்வாய் லக்னத்திற்கு 10 வீடான கும்பத்தை பார்வை செய்து ,
ராசிக்கு பத்தாம் வீடான விருச்சிகத்தையும் பார்வை செய்கிறது,
லக்னம் ராசிக்கு 10 இடத்தோடு செவ்வாய் தொடர்பு கொள்வது சிவில் என்ஜீனியர் சார்ந்த வருமானத்தை கொடுத்து உள்ளது. #padmahazan
இதில் ஒரு குறையும் உள்ளது... என்ன..?
லக்னத்திற்கு ஏழாம் வீட்டை செவ்வாய் பார்த்து , ராசிக்கு ஏழில் செவ்வாய் உள்ளது.
லக்னத்திற்கு ஏழாம் அதிபதி செவ்வாய் தன் வீட்டை தானே பார்த்து வலுபடுத்தினாலும் , பாவகிரகமான செவ்வாய் சில தொந்தரவு பலனையும் ஏழாம் வீட்டின் வழியே தரவே செய்வார்.
லக்ன ராசிக்கு ஏழாம் வீட்டொடு தொடர்பு கொள்ளும் செவ்வாய் தாமத மணவாழ்க்கை அல்லது மணவாழ்வில் முன்கோபம் முரட்டு தனம் கொண்ட சுபாவத்தால் மணவாழ்வை மறுபக்கம் பாதிக்கவும் செய்வார்.
குடும்பம் மணவாழ்க்கையில் நிம்மதியை இழக்க வைத்து மறுபுறம் வருமான ரீதியாக நற்பலனை கொடுக்கும் நிலையில் செவ்வாய் உள்ளார்.
#padmahazan
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
No comments:
Post a Comment